Showing posts with label Celebration. Show all posts
Showing posts with label Celebration. Show all posts

Wednesday, July 15, 2009

பதிவர்களை வாழ்த்துங்கள்

சென்னையில் ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனிக்கிழமை தமிழ் ஸ்டுடியோ.காம் நடத்தும் குறும்பட விழாவில் இந்த மாதம் கேபிள் சங்கரின் குறும்படமான Accident திரையிடப்படுவதாக அறிந்ததும் நானும் அண்ணன் மணிஜியும் ஆர்வமாக சென்றோம். இது இவர்கள் நடத்தும் பத்தாவது குறும்பட விழா.



இலக்கிய பகுதியில் சிறப்பு விருந்தினராக எழுத்தாளர் பிரபஞ்சன் கலந்து கொண்டார். அருமையான பல கருத்துகளையும் உலக சினிமாக்களை பற்றியும் தனக்கே உரிய பாணியில் மிகவும் ரசிக்கதக்க வகையில் கூறினார். உலக சினிமா ஆர்வலனான எனக்கு மிகவும் பயனுள்ளதாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது. இந்த மாத சிறந்த பதிவருக்கான விருது
தோழி தமிழ்நதி அவர்களுக்கு வழங்கப்பட்டது. அவருக்கும் என் இனிய வாழ்த்துகள்.


பிறகு "நிலமெல்லாம் இரத்தம்" "குண்டன்" " ஆக்சிடன்ட்" ஆகிய மூன்று குறும்படங்கள் திரையிடப்பட்டது.

நிலமெல்லாம் இரத்தம்: ஈழத்தமிழர்களின் வாழ்க்கையை பிரதிபலித்து நெஞ்சை உருக்கிய ஒரு குறும்படம்.

குண்டன்: தன் காதலிக்கும் பெண்ணிற்காக இளைஞன் ஒருவன் உடல் இளைக்க படும் அவஸ்தைகளை கொண்ட நகைச்சுவை குறும்படம்.

ஆக்சிடன்ட்: இரு சக்கர வாகன ஒட்டிகள் தலைகவசம் அணிய வேண்டியதின் அவசியத்தை வலியுறுத்தும் குறும்படம். சஸ்பென்ஸ் திரில்லர் போல அருமையாக இருந்தது.


மூன்று குறும்பட இயக்குநர்களுக்கும் விருதுகள் வழங்கபட்டன. விருதை வழங்கியவர் அணமையில் விகடன் டாக்கீஸால் வெளியான ”வால்மீகி” திரைப்பட இயக்குநர் திரு. அனந்த நாராயணன். அனைவருக்கும் வாழ்த்துகள்.





அருமை நண்பர் கேபிள் சங்கரை அனைத்து பதிவர்கள் சார்பிலும் வாழ்த்துகிறேன். முன்பே சொன்னது போல இது எனக்கே கிடைத்த விருதாக எண்ணி மகிழ்கிறேன்.


இந்த விழாவை பல சிரமங்களுகிடையில் சிறந்த முறையில் நடத்தும் நண்பர்கள் அருணுக்கும் குணாவிற்கும் எனது வாழ்த்துகள் என்றும் உண்டு.





அகன்அமர்ந்து ஈதலின் நன்றே முகனமர்ந்து
இன்சொலன் ஆகப் பெறின்.




A pleasant word with beaming smile's preferred,

Even to gifts with liberal heart conferred.

Sweet speech, with a cheerful countenance is better than a gift made with a joyous mind.
டிஸ்கி: பின்னூட்டங்களில் வரிந்து கட்டி கொண்டு வசவு பாடுவதை விட்டு விடுவோம். வாழ்த்துவோம். வாருங்கள்.