Thursday, December 31, 2009

புத்தக கண்காட்சியும் பதிவர் சந்திப்பும்...


நேற்று புத்தக கண்காட்சி துவக்க விழாவிற்கு சென்று விட வேண்டும் என்று எண்ணியிருந்தேன். கூட்டம் அதிகமாக இருக்குமா என்று நினைத்து அதிஷாவுக்கு போன் போட்டேன். அவரோ அண்ணே.. அசைன்மெண்ட் விஷயாமாக திண்டுக்கல் அருகே இருக்கேன்ன்னு பல்பு போட்டார்.இன்று எப்படியாவது போக வேண்டுமென்று எண்ணி சென்றும் விட்டேன். இந்த முறை புத்தக ஸ்டால்களின் அளவுகளை குறைத்து நடக்க நிறைய இடம் விட்டிருக்கிறார்கள்.முதலில் ஈர்த்தது விகடன் தான். ஏற்கனவே குறித்து வைத்திருந்த நண்பர் ரவிபிரகாஷ் அவர்களின் மொழியாக்கத்தில் வெளியான இரண்டு நூல்களும் (Stay Hungry Stay Foolish & A Diplomat Reveals) நூல்களும் இன்ன பிற புதிய விகடன் வெளீயிடுகளையும் வாங்கி கொண்டு மேய்ந்து கொண்டிருந்தேன்.பதிவர்களின் புத்தகங்களை வெளியிட்டுள்ள வம்சியை தேடினேன். அய்யனாரின் புத்தகங்களை வாங்க ஆவலாய் சென்றேன். சில இன்னும் வரவில்லையாம். ஸ்டால்காரர் சனிக்கிழமை அனைத்தும் கிடைக்கும் என்றார். விஸ்வாமித்திரன் மற்றும் கிடைத்த புத்தகங்களை வாங்கி கொண்டு கிழக்கு பக்கமாய் சென்றேன்.பள்ளி கூட பருவத்தில் வரலாறு ரொம்ப பிடிக்கும். அது மீண்டும் சில மாதங்களாய் தொற்றி கொண்டு வருகிறது. முகிலின் செங்கிஸ்கான், யூதர்கள் மற்றும் மைசூர் மகாராஜா படித்ததிலிருந்து நிறைய வரலாறு படிக்க வேண்டும் என்று ஆவல் அதிகரித்திருக்கிறது. {அப்போ படிச்சிருந்தா மார்க்காவது வந்திருக்கும்}புதிய வெளீயிடான முகலாயர்களை (விலை 250/-) வாங்கினேன். முகிலின் அடுத்த பிரம்மாண்டமான படைப்பு அகம் புறம் அந்தப்புரம் இன்னும் அரங்கேறவில்லையாம். புகைப்படத்திலேயே தலையணை சைஸில் தெரிகிறது. (1392 பக்கங்கள்) வாங்க வேண்டிய லிஸ்டில் இருக்கிறது.

கிழக்கில் இன்னும் நிறைய புத்தகங்கள் வெளியிட்டு இருக்கிறார்கள். கமலின் வாழ்க்கை வரலாறு அட்டை படமே அசத்தல். உடனே வாங்கி விட்டேன்.


பா. தீனதயாளன் எழுத்து நடை எனக்கு மிகவும் பிடிக்கும். சின்னப்பா தேவரின் வாழ்க்கை வரலாறு புத்தகத்தை விழுந்து விழுந்து சிரித்து படித்திருக்கிறேன்.காலச்சுவடு பதிப்பகத்தில் சிலவற்றை வாங்கினேன். அடுத்து உயிர்மை பதிப்பகத்தில் எஸ்.ரா, சாருவின் புத்தங்கள் சிலவற்றை வாங்கி கொண்டு இருக்கும் போது இருவர் அருகில் வந்து நீங்கதானே butterfly Surya ..? என்றதும் ஒரு அளவில்லாத மகிழ்ச்சி.ராஜகோபாலும் (எறும்பு) ஷங்கர் (பலாப்பட்டறை) யும் அறிமுகப்படுத்தி கொண்டவுடன் ஈரோடு சந்திப்பு பற்றி தொடங்கி பல விஷயங்களை பேசி கொண்டே சுற்றி திரிந்தோம். முருகன் சேதி சொல்லிட்டாரோ என்னவோ..?? திடீரென்று உண்மைதமிழன் வந்து சேர்ந்தார். சிறிது நேரத்தில் லக்கியும் வந்ததும் மகிழ்ச்சி அதிகரிக்க மீண்டும் ஒரு ரவுண்ட் அடித்து கொண்டிருந்தோம். எழுத்தாளர் பா.ராகவனை சந்தித்ததும் கால் வலி தீர ஒரிடத்தில் அமர்ந்து சில பயனுள்ள புத்தகங்கள் பற்றியும் பதிவர்கள் பற்றியும் ராகவனுடன் பேசி விட்டு அங்கிருந்து கிளம்பினோம்.


உண்மைதமிழன் திரு. முக்தா சீனிவாசனை அறிமுகம் செய்தார். நண்பர் கிருஷ்ண்பிரபு வின் பதிவுகளிலிருந்தும் அவரது மின்னஞ்சலில் அனுப்பிய புத்தக குறிப்புகளையும் எடுத்து செல்ல மறந்து விட்ட படியாலும் பர்ஸ் காலியானதாலும் நண்பர்களை சந்தித்த மனநிறைவோடு வீடு நோக்கி பயணமானேன்.அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
டிஸ்கி 1 : சில புகைப்படங்கள் துளசி டீச்சர் பதிவிலிருந்து சுட்டது.டிஸ்கி2: பா.ராகவன் உண்மைதமிழனுக்கு அளித்த அட்வைஸ் இங்கே.

Thursday, December 24, 2009

நத்தார் வாழ்த்துகள்
பகைவரையும் நேசி என்றுரைத்த


எங்கள் பரமபிதாவே ..


நீ பிறந்த நாளில்


பக்கத்து வீட்டுகாரரையாவது


நேசிக்க முயற்ச்சிக்கிறோம்!

Monday, December 21, 2009

ஈரோடு சங்கமம் தொகுப்பு

ஈரோடு சங்கமம் பற்றி சென்னை வந்ததும் கடுமையான வேலைப்பளுவால் எழுத முடியவில்லை. சங்கமம் ஒரு திருவிழா என்று ஆரம்பித்து நடந்தது என்ன..? நான் அடிச்சா தாங்கமாட்ட,யாரோ சூனியம் வைச்சிட்டாங்கன்னு பல தலைப்புல எழுதி அசத்திடாங்க.தனிப்பதிவுகளை மட்டும் எடுத்து அனைத்து இடுகைக்களின் லிங்க் கொடுத்துள்ளேன். நண்பர்களுக்கு படிக்க உதவியாய் இருக்கும் என்று நினைக்கிறேன். யாருடைய பதிவாது விடுபட்டிருந்தால் பின்னூட்டத்தில் கூறுங்கள். இணைத்து விடலாம்.விழாவில் பேச வாய்ப்பளித்த கதிர் அவர்களுக்கும் மற்றும் விழா ஏற்பாடு செய்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றி.. நன்றி.. நன்றி..


நிகழ்வுக்கு அழைத்து சென்ற அப்துல்லா அண்ணனிற்கும் சக பயணிகள் அண்ணன் தண்டோரோ, அருமை நண்பர் கேபிள்ஜி, my dear அகநாழிகை வாசு தேவனுக்கும் நன்றிகள் பல.பல வருடங்க்ள் கழித்து கல்லூரி நண்பர்க்ளை சந்தித்ததை போன்று என்றும் நினைவில் நிற்கும் அற்புத நிகழ்வாய் அமைந்தது.
பதிவுகளின் சுட்டி பட்டியல்

ஈரோடு கதிர்
நன்றி! நன்றி!! நன்றி!!!சி @ பாலாசி நன்றி நவிலல்மைக் முனுசாமி நான் அடிச்ச தாங்கமாட்டபாமரன் பக்கங்கள் ஒரு சாதனை தொகுப்புபாமரன் பக்கங்கள் சில ஒலித்தொகுப்புகள்பழமைபேசி குறுந்தகவல்பழமைபேசி நன்றியுடன்பழமைபேசி மேலதிகப்படங்கள்வால்பையன் வாழ்த்துவனங்களுக்கும் திட்டுனவுங்களுக்கும்வால்பையன் எனக்கு யாரோ சூனியம் வச்சிடாங்க
செந்தில் வேலன்
நடந்தது என்ன..??செந்தில் வேலன் அனானிகள், அட்சென்ஸ், கருத்து சுதந்திரம்கார்த்திகை பாண்டியன் இனிதே நடைபெற்ற ஈரோடு சங்கமம்சங்கவி அட்டகாசமான ஆரம்பம்சஞ்சய்காந்தி சந்திப்பு இட்லிவடை போட்டோபரிசல்காரன் சபாஷ் ஈரோடுT.V. ராதாகிருஷ்ணன்
ஈரோடு திருவிழாவி. என். தங்கமணி
பதிவர்களின் கடமைகளும் பொறுப்புகளும்Will To Live ரம்யா
டிசம்பர் 20 - ஈரோட்டில் பதிவர் - வாசகர் சந்திப்புசுமஜ்லா
பதிவர் சந்திப்பில் நான் பேசியவைலதானந்த்
ஈரோடு பதிவர் சங்கமம் சில விமர்சனங்கள்ஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம்
பதிவர் லதானந்த் கவனத்திற்கு
ஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம்
சண்முகராஜ் அவர்களிடமிருந்து வந்த மின்மடல்...


Friday, December 18, 2009

வேட்டைக்காரன் - திரை விமர்சனம்
மாஸ் மசாலா என்ற வட்டத்தை விட்டு வெளியில் வர முடியாத அல்லது விருப்பமில்லாத விஜய்யின் மற்றுமொரு வழக்கமான மசாலா வேட்டை இந்த வேட்டைக்காரன்.கதைப்படி ரவி என்கிற போலீஸ் ரவி (விஜய்) ஒரு தூத்துக்குடி பையன். ப்ளஸ்டூவை நான்காவது அட்டம்டில் தாண்டும் சராசரி மாணவரான அவருக்கு, பெரிய லட்சியம் ஒன்று உண்டு. அது தனது ஆதர்ஸ நாயகனான தேவராஜ் ஐபிஎஸ் (ஸ்ரீஹரி) மாதிரி பெரிய போலீஸ் ஆ...பீஸர் ஆவது.
தன் முயற்சியில் சற்றும் மனம் தளராமல் சென்னையில் கல்லூரியில் சேர்ந்து படிக்க ரயிலேறுகிறார். அப்போதுதான் அனுஷ்காவைச் சந்திக்கிறார்.
வழக்கம்போல அந்தக் கணத்திலேயே விஜய்யின் கனவு நாயகியாகி விடும் அனுஷ்கா, வழக்கம் போல டூயட்டெல்லாம் பாடி ஓய்கிறார்.அப்போதுதான், செல்லா என்ற மோசமான வில்லனைச் சந்திக்கிறார் விஜய். அழகான பெண்ணைப் பார்த்த கணத்தில் படுக்கைக்குத் தூக்கிச் செல்லும் சைக்கோ கேரக்டர் இந்த செல்லா. தன் வகுப்புத் தோழி ஒருத்திக்கு இந்த சோகம் நிகழ, நாயகன் விஜய் பொங்கியெழுந்து போட்டுப் புரட்டியெடுத்து கொன்று விடுகிறார் செல்லாவை.இந்த செல்லாவின் அப்பா வேதநாயகம் (சலீம் கவுஸ்) பெரிய டான். மகனைக் கொன்ற விஜய்யை போட்டுத் தள்ள போலீஸ் அதிகாரி சாயாஜி ஷிண்டேக்கு அஸைன்மெண்ட் தருகிறார். ஆனால் அதை உதாசீனப்படுத்தும் சாயாஜி, 'நீயென்ன பெரிய மந்திரியா, எனக்கு உத்தரவு போட' என திருப்பிக் கேட்க, அப்போதே மகன் கொலையை மறந்து, மந்திரியாகும் வெறியில் அரசியல் காய் நகர்த்துகிறார் வேதநாயகம்.ஒரு கட்டத்தில் விஜய்யின் ஆதர்ச நாயகனான தேவராஜ் ஐபிஎஸ், இந்த வேதநாயகத்தால் பாதிக்கப்பட்டு கண் பார்வை போய், வேலையையும் இழக்கிறார். விஜய்யின் கோபம் இப்போது இன்னும் பல மடங்கு பெருக, வில்லனை வேட்டையாட புறப்படுகிறார்... (ஹை... டைட்டிலுக்கு காரணம் கண்டுபிடிச்சிட்டோம்)வேதநாயகத்தை அழிக்கிறார்...இதிலென்ன புதுசா இருக்கு என்கிறீர்களா... இந்தக் கேள்வி விஜய் அண்ட் கோவுக்கு போக வேண்டியது. எனவே படத்தில் கலைஞர்களின் பங்களிப்பைப் பார்க்கலாம். கஷ்டப்பட்டு நடிக்க விஜய்க்கு இதில் ஒன்றுமில்லை. காமெடி என்ற பெயரில் ஏதோ செய்கிறார். சத்தியமாக சிரிப்பு வரவில்லை. அதுக்குதான் வடிவேலு, சந்தானம் போல நிறை இருக்கிறார்களே... இவருக்கு ஏன் இந்த வேலை என்று தெரியவில்லை.கவுண்டரை காப்பியடித்தார் சந்தானம். இப்போது சந்தானத்தை காப்பியடிக்கிறார் இந்தப் படத்தில் விஜய்யுடன் ஒட்டிக் கொண்டே வரும் ஸ்ரீநாத். சகிக்கலை!


படத்தில் அட பரவாயில்லையே என்று சொல்ல வைப்பவர் ஸ்ரீஹரி என்ற தெலுங்கு பார்ட்டி. இவர்தான் தேவராஜ் எனும் நல்ல போலீசாக வருகிறார். ஆனால் கொடுமை என்னவெனில், இதே கேரக்டரை நாம் தரணியின் தில் படத்தில் பார்த்து விட்டோம் (இயக்குநர் தரணியின் உதவியாளர்தான் வேட்டைக்காரன் இயக்குநர் பாபு சிவன்!). அனுஷ்கா அம்சமாக இருக்கிறார். அவரிடமிருந்து நமது ரசிகர்கள் எதிர்ப்பார்ப்பது நிச்சயம் நடிப்பை அல்ல என்று நன்றாகத் தெரிந்து கொண்டு, தனது அழகால் அசரடித்து விட்டுப் போகிறார்.முதல் பாதியில் காட்சிகள் பழசாக இருந்தாலும் உட்கார்ந்து பார்க்க முடிகிறது. இரண்டாம் பாதியில் ரொம்ப்பக் கஷ்டம்! கோபிநாத்தின் ஒளிப்பதிவில் பெரிய சாகஸங்கள் எதுவும் இல்லை. விஜய் ஆண்டனி... பாடல்களைக் கேட்ட பிறகு, அவரிடம் 'ஏன் இந்த கொல வெறி' என்றுதான் கேட்கத் தோன்றுகிறது. அப்படி ஒரு அதிவேகம்.நல்ல ஸ்கிரிப்ட் என்றால், ஏற்கெனவே ஹிட்டான படங்களின் சீன்களை உருவி புதுசாக உருவாக்குவதுதான் என யாரோ தவறாக சொல்லிவைத்திருக்கிறார்கள் போல, இயக்குநர் பாபு சிவனிடம்.


படத்தில் விஜய் ஆண்டனியின் பாடலில் நிக்காம ஓடு ஓடு ஓடு என்று ஒரு வரி அடிக்கடி வருகிறது. அனேகமாக படத்தைப் பார்த்து விட்டு வரும் ரசிகர்கள் இந்த வரியை தங்கள் நண்பர்களிடம் சொல்லக் கூடும்!!டிஸ்கி: சத்தியமா படம் பார்க்கவில்லை. அவ்வளவு தைரியமும் இல்லை.


விமர்சனம் நன்றி: தட்ஸ்தமிழ்.காம்.

Thursday, December 17, 2009

உலகெங்கும் தெரியப்போகும் வார்த்தை
டைடானிக் படத்தின் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூனின் அடுத்த பிரமாண்டமான படம் தயாராகிவிட்டது.12 ஆண்டுகள் ஜேம்ஸ் கேமரூன் பெரும் பொருட்செலவு மற்றும் ஆராய்ச்சி செய்து உருவாக்கியுள்ள படம் 'அவதார்'.


நாளை உலகமெங்கும் வெளியாகிறது.இந்தப் படம் இந்தியாவில் மட்டும் 700 பிரிண்டுகளுடன், தமிழ், இந்தி, தெலுங்கு மற்றும் ஆங்கிலத்தில் வெளியாகிறது.ரூ. 1200 கோடி செலவில் தயாராகியுள்ள இந்த அவதார், இதுவரை உலகில் வெளியான அனைத்து கிராபிக்ஸ் படங்களையும் விட மிகச் சிறந்த படம் என்று 'டைம்' பத்திரிகை பாராட்டியுள்ளது.இந்தப் படத்துக்காக தனி கிரகம் ஒன்றையே உருவாக்கினார்களாம் கேமரூன் மற்றும் குழுவினர். அதில் வித்தியாசமான விலங்குகள், மரங்கள் போன்ற தோற்றங்களை உருவாக்கி அவற்றைத்தான் முப்பரிமாணத்தில் அவதாரமடுக்க வைத்துள்ளனர்.உயிரற்ற பொருட்களையும், அசைவுகளுடன் உயிரோட்டமாகக் காட்டும் புதிய தொழில்நுட்பத்தின் துணையுடன் உருவாக்கப்பட்டுள்ளது.ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் நிறுவனத்தினர் இந்தப் படத்தை இந்தியாவில் வெளியிடுகின்றனர். இதுகுறித்து அந்நிறுவனத்தின் சிஇஓ விஜய் சிங் கூறுகையில், "அவதார் படத்துக்கு இந்தியாவில் பெரும் எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. இந்தியாவில் இதுவரை எந்த ஹாலிவுட் படத்துக்கும் இந்த அளவு கிராண்டான ரிலீஸ் இருந்ததில்லை என்று வியக்கும் வகையில் அவதார் படத்தை வெளியிடப் போகிறோம்" என்றார்.
தமிழில் நேரடியாக வெளியாகும் முதல் ஹாலிவுட் '3 டி' படம் என்ற பெருமையைப் பெறுகிறது அவதார்.உலகம் முழுக்க வரும் டிசம்பர் 18ம் தேதி 2 டி மற்றும் 3 டி வடிவங்களில் வெளியாகும் அவதார், தமிழில் மட்டும் 100 பிரிண்டுகளுடன் வருகிறது.


தமிழகம் முழுக்க சத்யம் சினிமா வெளியிடுகிறது. இதுகுறித்து அதன் இயக்குநர் ஸ்வரூப் ரெட்டி கூறுகையில்,இந்த பத்தாண்டு காலத்தில் உலகம் பெரிதும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்தது இந்தப் படத்துக்காகத்தான்.


டிஜிட்டல் '3 டி' வடிவத்தில் வெளியாகும் இந்தப் படம் பெரிய வரலாறு படைக்கும் என நம்புகிறோம்" என்றார்.இந்தப் படத்தின் மூலம் 'அவதார்' என்ற இந்திய வார்த்தை உலகெங்கும் தெரிந்த வார்த்தையாகப் போகிறது.
டிஸ்கி: நாளை தமிழ் சினிமா உலகில் வேறு ஒரு அதிர்வும் நிகழ போகிறது. புயல் அபாயம் காரணமாக விபரம் தெரிந்தவர்கள் பின்னூட்டத்தில் சொல்லலாம்.
செய்தி நன்றி: தட்ஸ் தமிழ்.

Monday, December 7, 2009

இயக்குநர் சேரனுடன் ...நான்..

மூன்று வாரங்களுக்கு முன் இயக்குநர் சேரனிடமிருந்து ஒரு அலைபேசி அழைப்பு. எனது உலக சினிமா வலைப்பூ பற்றி ஆர்வமாக பேசி மகிழ்ச்சியும் வாழ்த்தும் தெரிவித்தார். எனக்கும் அளவற்ற மகிழ்ச்சி. பின்பு அடிக்கடி பேசியும் பகிர்ந்தும் கொண்டிருந்தார்.
இன்று நேரில் சந்திக்க அழைக்கவும் செய்தார். சந்தித்தேன். முதலில் கேரள உலக திரைப்பட விழாவில் தேர்வாளராக நியமிக்க பட்டுள்ளதற்கு வாழ்த்து தெரிவித்தேன். பின்னர் தமிழ் வணிக சினிமா, உலக சினிமா, இன்றைய சமூக சூழல், வலைப்பூக்கள், பிளாக்கர்ஸ் அவரது அடுத்த படைப்பு என்று ஒரு நீண்ட உரையாடல். அருமையான மாலை பொழுதாய் அமைந்தது.
தமிழ் சினிமாவின் அசுர வளர்ச்சியும் ஆனால் அது மொத்தம் வணிகம் சார்ந்ததாய் மாறி வருவதை குறிப்பிட்டார். உலக திரைப்படங்கள் மீதும் குறிப்பாக இரானிய திரைப்படங்கள் மீது அவருக்கு உள்ள ஆர்வமும் மதிப்பும் அளவற்றது. மஜித் மஜிதி, கிம் கி டக் பற்றி வியந்து பேசியதுடன் கொரிய திரைபப்டஙகளின் தொழி நுட்பங்களை சிலாகித்தார். கேரள திரைப்பட விழாவில் பங்கு பெறும் உலக படங்கள் குறித்து பல குறிப்புகளை கூறி அசத்தினார்.
பின்னர் வலைப்பூக்கள் பற்றி பேச ஆரம்பித்ததும் அவர் டென்ஷன் ஆகி விடுவாரோ..? என்று எனக்கு கொஞ்சம் உள்ளூற உதறல். ஆனால் மிக அமைதியாக அனைத்து வலைப்பூக்கள் பற்றி நிறைய பேசினார். எண்ணற்ற பிளாக்கர்கள் உருவாகி வருவது மகிழ்ச்சி என்றாலும் கட்டற்ற சுதந்திரத்தினால் சில வலைப்பூக்களால் சிலருக்கு வலிப்பூக்களாகியிருக்கிறது என்பது அவரது பேச்சில் தெரிந்தது. எப்படியிருந்தாலும் வலைப்பதிவர்களை சந்திக்க ஆர்வமாய் இருப்பதாக தெரிவித்தார்.
தற்போது கேரள திரைப்படவிழாவிற்கு செல்வதாக சொன்னதால் புது வருடத்தில் {ஜனவரியில்} நேரம் ஒதுக்குமாறும் நமது மாபெரும் தமிழ் வலைப்பதிவர்கள் மாநாட்டில் { பதிவர் சந்திப்பை தான் ஒரு பில்டப்பா மாநாடுன்னு சொல்றேன்} பங்கு கொள்ள வேண்டும என்று அனைத்து பதிவர்கள் சார்பாக அனுமதி கோரியுள்ளேன். விரைவில் நல்ல செய்தி வரும். காத்திருப்போம்.
அனைத்திற்கும் நன்றியும்
வாழ்த்தும் தெரிவித்து விடைபெற்றேன். பல நாள் பழகிய நண்பரை போல வாசல் வரை வந்து வழியனுப்பி மகிழவும் நெகிழவும் செய்து விட்டார்.