
நிஷா (அம்புஜம்) பிரபல நடிகை. அவரை மாதவன் (மதனகோபால்) என்கிற பணக்கார வாலிபர் காதலிக்கிறார். நடிகையானதால் மதனுக்கு சந்தேகம். காதல் ஒரிடத்தில் ஊடலாக நிஷா பாரீஸ் பயணம். நிஷாவை வேவு பார்க்க ரிடையர்டு மேஜர் மன்னார் (கமல்) பாரிஸ் செல்கிறார்.
நிஷா தனது டென்ஷனை குறைக்கவும் கவலையை மறக்கவும் பாரீஸில் ஒரு சொகுசு கப்பல் பயணம். கதை அங்கேயே ஆரம்பித்து உட்கார்ந்து, நகர்ந்து ஓடி களைத்து மறுபடியும் ஓடி சுபத்தில் முடிகிறது.
பிரும்மாண்ட கப்பலில் உடன் பயணிக்கும் சங்கீதா அவருடன் இரண்டு சுட்டிகள், ஒரு மலையாள தம்பதியினர் என்று குறைந்த பாத்திரங்கள் அவர்களையே சுற்றி சுற்றி வருவதால் முதல் பாதி கொஞ்சம் சோர்வு. இடைவேளைக்கு பிறகு ஆங்காங்கே பளிச் சிரிப்புகள், வசன வெடிகள், இன்டலெக்சுவல் டயலாக்குகள் என்று கமல் தானே முயன்று அடித்திருக்கிறார்.
மிகையில்லாத மாதவன் நடிப்பு, சங்கீதாவின் துள்ளலான வசனங்கள் ப்ள்ஸ். ஆனால் டீமில் கிரேஸி மோகன் இல்லாதிருப்பது பெரிய மைனஸ்.
ஒளிப்பதிவு மனுஷ்நந்தன். {எழுத்தாளர் ஞானி அவர்களின் மகன்} அருமையான ஒளிப்பதிவு. கொடைக்கானல் அழகையும் பாரீஸின் தெருக்களையும் கப்பலின் மிரும்மாண்டத்தையும் அழகாக காட்டுகிறார். பல ஷாட்டுகள் கண்களை கவருகின்றன.
இசை தேவிஸ்ரீ பிரசாத். ஒரு பாட்டுடன் அந்த BGM மட்டுமே எனக்கு பிடித்திருந்தது.
வெட்டு குத்து, கார் சேஸிங், பரட்டை தலை, அழுக்கு லுங்கி (கிராமத்து படத்துக்கு அது ரொம்ப முக்கியம்) என்று வித்தியாசமான படமில்லை.
மிகப்பெரிய எதிர்பார்ப்பு, ஒவர் பில்ட் அப், மூளைச்சலவை விளம்பரம் இல்லாத ஒரு ரொமான்டிக் காமெடி படம் என்று சொல்லலாம். ஆனால் அம்பின் வேகத்தை கூட்டியிருந்தால் இலக்கை அடைந்திருக்கும்.
8 comments:
பிரிவியு பார்துட்டீன்களோ? சுருக்கமான & சரியான விமர்சனம் ம்ம் படம் ஊத்திக்கும்னு தோணுது
நிறைவான சிறிய விமர்சனம்.
கட்டாயம் பார்க்கணும். டெல்லில ரிலீஸாயிருக்கானு தெரியல.
நன்றி மோகன் குமார்.
படம் ஒடுமான்னு தெரியலை. But a feel good movie.
நன்றி KANA VARO.
நன்றி விக்கி. உங்களுக்கு கட்டாயம் பிடிக்கும். லவ் ஸ்டோரி... :)
May this New Year bring newly found prosperity, love, happiness and delight in your life.
Hi,
Your profile
Not best... but not like the rest ...!
I like it much ;)
Post a Comment