



"தி கிளாசிக்" கொரிய படத்திலிருந்து கொஞ்சம் சுட்டு “சிக்குபுக்கு” வை உருவாக்கியிருக்கிறார்கள். அப்பாவின் நிறைவேறாத காதல் மகனுக்கு நிறைவேறியதா என்பதை அரத பழசான டைரியின் பிளாஷ்பேக் துணையோடு கதையை நகர்த்த எப்படியோ பாடுபட்டிருக்கிறார் இயக்குநர்..
1985 காரைக்குடி, 2010 லண்டன்னு மாறி மாறி காட்சியமைப்புகள். இரண்டிலும் ஆர்யாவேதான். (கைவச்ச சட்டை போட்டு கிராப் வச்சா டபுள் ஆக்ஷனாம்!!! நம்புங்கப்பா) லண்டனில் பிற்ந்து வளர்ந்த ஜீனியர் ஆர்யா ஜப்தி செய்யப்போற தன் அப்பாவின் சொத்தான சொந்த வீட்டை மீட்டெடுக்க காரைக்குடிக்கும் சொந்த வேலையா ஷ்ரேயா மதுரைக்கும் லண்டனிலிருந்து ஒரே விமானத்தில் வருகிறார்கள். பெங்களுர் (பெங்களூரூன்னு சொல்லணுமா? சரி ரைட்டு ) விமான நிலையத்தில் விமான ஊழியர்கள் ஸ்டிரைக்கால் ஊர் போய் செல்ல முடியவில்லை. இருவரும் கணவன் மனைவியாக வேற யாருக்காகவோ பதியப்பட்ட டிக்கெட்டில் பயணிக்கிறார்கள். இடையில் டிக்கெட் செக்கிங்.. கெட் அவுட்.. அப்புறம் லாரி, கார், சைக்கிள் என்று பயணத்தை தொடருகிறார்கள். பயணம் முடிவதற்குள் காதலிப்பார்கள் என்று மூணாம் கிளாஸ் படிக்கும் என் தம்பி மகளுக்கே புரிந்து விட்டது. உஙகளுக்கு புரியாதா..? ஆனால் அந்த காதல் நிறைவேறியதா என்பதே மீதிக்கதை. நடுநடுவே பல நாடுகளில் டூயட் வேறு. தமிழ் படமாச்சே சத்தியமா லாஜிக்கெல்லாம் பார்க்க கூடாது.
சரி கதைக்கு வருவோம்.
1985 கதை:
ஆர்யாவின் தாத்தா ஜாதி காரணமாக காதலுக்கு தடை விதிக்கிறார். ஆனால் ஆர்யா காதலியை ஸ்டேஷனுக்கு வரசொல்லி விட்டு காத்திருக்கிறார். ஆனால் காதலி வரவில்லை. போலிஸ் டிரைனிங் போகிறார். டிரெனிங்கில் ஒரு நண்பன். அவன் வேறுயாருமல்ல. ஆர்யாவின் காதலியின் மாமன் மகன். அவளை பத்து வய்திலிருந்தே காதலிக்கிறானாம். (பத்து வயசிலியே காதலிக்க சொல்லி கொடுத்துங்க!!!!!!! ) அவன் தற்கொலைக்கு முயற்சிக்க (ஆமாம். காதல் இல்லாட்டி தற்கொலைதானே தீர்வு - உபயம் தினத்தந்தி செய்தியா :( :( முடியலை) நண்பனுக்காக காதலை விட்டு கொடுக்கிறார் சீனியர் ஆர்யா.
ரவிச்சந்திரன் (சீனியர் ஆர்யாவின் தாத்தா) சுகுமாரி, பட்டாபி, பாண்டு, மனோபாலா இவர்கள் எல்லாம் பிளாஷ்பேக் கதையில் வந்து போகிறார்கள். 1985 கதையானாலும் சந்தானம் லேட்டஸ்ட் ஸ்டைலில் காமெடி பண்ண முயற்சித்திருக்கிறார். Again No Logic Plz.. அதுவும் எடுபடவில்லை.
2010 கதை: மேலே சொன்னதே போதும். இது கூட ஜீன்ஸ் போட்ட ஆர்யா, ஷர்ட் போட்ட ஷ்ரேயான்னு சொல்றதை தவிர வேற எதுவுமில்லை.
புதுமுக நடிகையாம் பிரீத்திகாவை விட ஒரே ஒரு டிரெயின் சீனில் வந்து போகும் “சன் டிவி” அம்முவே தேவலாம். மருந்து கூட உணர்வுகள் காட்டாமல் நடித்திருக்கிறார். வெள்ளை தோல் மட்டுமே நடிகையின் இலக்கணம்ன்னு தமிழ் பட இயக்குநர்கள் ஏன் தான் முடிவு பண்றாங்கன்னு இத்தனை சினிமா பார்த்த எனக்கு தான் இன்னும் புரியவே மாட்டேங்கிறது.
சரியான திரைக்கதையும் நல்ல காமெடி டிராக்கும் இருந்திருந்தால் கலகலப்பான குடும்ப படமாக இருந்திருக்கும் ஆனால் உயிரோட்டமில்லாத ஹீரோயின்கள் நடிப்பு, டிராவல் இல்லாத திரைக்கதை, ஒட்டாத இசை என்று பட்டியல் நீளுகிறது. ஒளிப்பதிவாளர் ஆர்.பி. குருதேவ் மட்டுமே தன் பணியை சிறப்பாக செய்திருக்கிறார்.
சிக்கு புக்கு - Sorry to say பஞ்சரான வண்டி
6 comments:
TEST..
CHIKU PUKU .. MOKAI CINEMA :)
Welcome back Surya
ha ha ha .. same blood boss.. nice review...
ஹா வாங்க.. ரொம்ப நாளா கானோம்.. நல்ல விமர்சனம்..
http://rameshspot.blogspot.com/2010/12/blog-post_04.html
அருமை
Post a Comment