Wednesday, July 15, 2009

பதிவர்களை வாழ்த்துங்கள்

சென்னையில் ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனிக்கிழமை தமிழ் ஸ்டுடியோ.காம் நடத்தும் குறும்பட விழாவில் இந்த மாதம் கேபிள் சங்கரின் குறும்படமான Accident திரையிடப்படுவதாக அறிந்ததும் நானும் அண்ணன் மணிஜியும் ஆர்வமாக சென்றோம். இது இவர்கள் நடத்தும் பத்தாவது குறும்பட விழா.இலக்கிய பகுதியில் சிறப்பு விருந்தினராக எழுத்தாளர் பிரபஞ்சன் கலந்து கொண்டார். அருமையான பல கருத்துகளையும் உலக சினிமாக்களை பற்றியும் தனக்கே உரிய பாணியில் மிகவும் ரசிக்கதக்க வகையில் கூறினார். உலக சினிமா ஆர்வலனான எனக்கு மிகவும் பயனுள்ளதாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது. இந்த மாத சிறந்த பதிவருக்கான விருது
தோழி தமிழ்நதி அவர்களுக்கு வழங்கப்பட்டது. அவருக்கும் என் இனிய வாழ்த்துகள்.


பிறகு "நிலமெல்லாம் இரத்தம்" "குண்டன்" " ஆக்சிடன்ட்" ஆகிய மூன்று குறும்படங்கள் திரையிடப்பட்டது.

நிலமெல்லாம் இரத்தம்: ஈழத்தமிழர்களின் வாழ்க்கையை பிரதிபலித்து நெஞ்சை உருக்கிய ஒரு குறும்படம்.

குண்டன்: தன் காதலிக்கும் பெண்ணிற்காக இளைஞன் ஒருவன் உடல் இளைக்க படும் அவஸ்தைகளை கொண்ட நகைச்சுவை குறும்படம்.

ஆக்சிடன்ட்: இரு சக்கர வாகன ஒட்டிகள் தலைகவசம் அணிய வேண்டியதின் அவசியத்தை வலியுறுத்தும் குறும்படம். சஸ்பென்ஸ் திரில்லர் போல அருமையாக இருந்தது.


மூன்று குறும்பட இயக்குநர்களுக்கும் விருதுகள் வழங்கபட்டன. விருதை வழங்கியவர் அணமையில் விகடன் டாக்கீஸால் வெளியான ”வால்மீகி” திரைப்பட இயக்குநர் திரு. அனந்த நாராயணன். அனைவருக்கும் வாழ்த்துகள்.

அருமை நண்பர் கேபிள் சங்கரை அனைத்து பதிவர்கள் சார்பிலும் வாழ்த்துகிறேன். முன்பே சொன்னது போல இது எனக்கே கிடைத்த விருதாக எண்ணி மகிழ்கிறேன்.


இந்த விழாவை பல சிரமங்களுகிடையில் சிறந்த முறையில் நடத்தும் நண்பர்கள் அருணுக்கும் குணாவிற்கும் எனது வாழ்த்துகள் என்றும் உண்டு.

அகன்அமர்ந்து ஈதலின் நன்றே முகனமர்ந்து
இன்சொலன் ஆகப் பெறின்.
A pleasant word with beaming smile's preferred,

Even to gifts with liberal heart conferred.

Sweet speech, with a cheerful countenance is better than a gift made with a joyous mind.
டிஸ்கி: பின்னூட்டங்களில் வரிந்து கட்டி கொண்டு வசவு பாடுவதை விட்டு விடுவோம். வாழ்த்துவோம். வாருங்கள்.

38 comments:

வண்ணத்துபூச்சியார் said...

TEST... WISHES..

ஆபிரகாம் said...

அனைவருக்கும் வாழ்த்துக்கள்
அந்த குறும்படங்கள் எங்காவது பதிவேற்றம் செய்யப் பட்டுள்ளனவா??

பகலவன் பிரமீளா said...

பதிவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

வண்ணத்துபூச்சியார் said...

வாழ்த்திற்கு நன்றி ஆபிரகாம்.

பதிவேற்றம் செய்யப்டவில்லை என்று தான் நினைக்கிறேன். இருப்பின் அதன் சுட்டியையும் பதிவில் இணைக்கிறேன்.

வண்ணத்துபூச்சியார் said...

வருகைக்கும் வாழ்த்திற்கும் முதலில் நன்றி..

பகலவன் பிரமீளா..?? என்ன நண்பா சிபியாரே...ஏனிந்த பெயர் மாற்றம்..??

T.V.Radhakrishnan said...

அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

வண்ணத்துபூச்சியார் said...

வள்ளுவன் புகழை வலையெழுதும் நண்பரே... வந்து வாழ்த்திய திரு. ராதாகிருஷ்ணனே..

நன்றிகள் பல..

சந்ரு said...

கேபிள் சங்கருக்கும், தமிழ்நதி அவர்களுக்கும் என் இனிய வாழ்த்துக்கள்.

நட்புடன் ஜமால் said...

வாழ்த்துகள்!.

கீதா சாம்பசிவம் said...

பங்கு பெற்ற விருது பெற்ற அனைவருக்கும் இனிய நல்வாழ்த்துகள். இதை வெளியிட்ட உங்களுக்கும் சேர்த்து! :D

உயிரோடை said...

விருது பெற்ற அனைவர்க்கும் வாழ்த்துகள்

பிரியமுடன்.........வசந்த் said...

வாழ்த்துக்கள் நம்ம தலைமை பதிவர்களுக்கு.....

தமிழ்நதி said...

உலக சினிமா குறித்த உங்கள் வலைப்பதிவில் பின்னூட்டம் இடுவது சிரமமாக இருக்கிறது. aborted என்று வந்து மறைகிறது. அன்றைய நிகழ்ச்சிக்கு நீங்கள் வந்திருந்தீர்களா? நான் பார்க்கவில்லையே... நீங்கள் சி.அழகப்பன்தானே? அல்லது இது வேறு வண்ணத்துப்பூச்சியா? தயவுசெய்து தெளிவுபடுத்தவும். வாழ்த்துக்கு நன்றி நண்பரே.

கலையரசன் said...

கேபிளாருக்கு வாழ்த்துக்கள்...
வண்ணத்துபூச்சியாருக்கு நன்றிகள்...

Cable Sankar said...

நன்றி வண்ணத்துபூச்சியாரே..

புதுகைத் தென்றல் said...

மனமார்ந்த வாழ்த்துக்கள்

குப்பன்_யாஹூ said...

best wishes and thanks to the bloggers who organises and who participates.

நேசமித்ரன் said...

வண்ணத்துபூச்சியாரே
பாரிஜாத மலராக இருந்தாலும் சரி தேனெடுத்து பகிரும் உங்கள் பதிவுகள்
சொக்க வைக்கின்றன. விருது பெற்ற பதிவர்களுக்கு இருதயம் நிரம்பிய சொற்களால் ஈர வாழ்த்துக்கள்

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

பரிசுகள் பெற்ற அனைவரையும் வாழ்த்துகிறேன்..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[தமிழ்நதி said...
அன்றைய நிகழ்ச்சிக்கு நீங்கள் வந்திருந்தீர்களா? நான் பார்க்கவில்லையே... நீங்கள் சி.அழகப்பன்தானே? அல்லது இது வேறு வண்ணத்துப்பூச்சியா? தயவுசெய்து தெளிவுபடுத்தவும்.]]]

சுத்தம்..!

சி.அழகப்பன் மாதிரியா இருக்கிறார் பூச்சியார்..!

பூச்சியாரே உடனே மேக்கப்பை கலைத்து சுய உருவத்திற்கு வரவும்..!

மேடத்துக்கே உங்களை அடையாளம் தெரியாம போயிருச்சு.

ஹா.. ஹா.. ஹா..!

வண்ணத்துபூச்சியார் said...

நன்றி சந்ரு.

நன்றி ஜமால்.

நன்றி கீதா மேடம்.

நன்றி லா.

வண்ணத்துபூச்சியார் said...

நன்றி தமிழ்நதி.

உலக சினிமா வலையில் பின்னூட்டம் இடுவதில் சிரமமா..? தெரியவில்லை. சரிபார்க்கிறேன். விழாவிற்கு வந்திருந்தேன். நான் சி.அழகப்பன் இல்லை. தங்களுக்கு தனி மின்னஞ்சல் அனுப்பியுள்ளேன்.

வண்ணத்துபூச்சியார் said...

நன்றி கலையரசன்.

நன்றி கேபிள்.

நன்றி புதுகை.

நன்றி குப்பன் யாஹீ.

வண்ணத்துபூச்சியார் said...

கவிதையாய் வாழ்த்திய நேசமித்ரனுக்கு , நேசத்துடனும் பாசத்துடனும் நன்றி..

சந்தனமுல்லை said...

விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்

அமிர்தவர்ஷினி அம்மா said...

விருதுகள் பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்

இதைப் புகைப்படங்களோடு பகிர்ந்து கொண்ட உங்களுக்கு நன்றி

வண்ணத்துபூச்சியார் said...

நண்பர் உ.தமிழா..நன்றி..

நான் மேக்கப்பை போடுவதில்லையே..??

தங்களுக்கு தெரியாதா..?

என்ன சிரிப்பு..????

வண்ணத்துபூச்சியார் said...

நன்றி சந்தன முல்லை.

நன்றி அமி அம்மா.

தமிழ் பிரியன் said...

அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

வண்ணத்துபூச்சியார் said...

நன்றி தமிழ் பிரியன். (அழகான பெயர் )

குடந்தை அன்புமணி said...

விருதுபெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்.

ஹாலிவுட் பாலா said...

பரிசு வாங்கின.. ‘யூத்’துக்கு வாழ்த்துகள்! :) அதை சொன்ன பூச்சிக்கு நன்றிகள்! :) :)

வண்ணத்துபூச்சியார் said...

நன்றி குடந்தை அன்புமணி. நலமா..??

வண்ணத்துபூச்சியார் said...

நன்றி பாலா. என்ன கிண்டலா.?? அவர் என்றுமே "யூத்துதான்"

Deepa said...

விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
பகிர்ந்த உங்களுக்கு மிக்க் நன்றி.

வண்ணத்துபூச்சியார் said...

நன்றி தீபா.

Muniappan Pakkangal said...

I envy you Surya,you are having chances to mingle with like minded people.

வண்ணத்துபூச்சியார் said...

நன்றி டாக்டர். What I can say for this..?? I can say "Thank God".