Thursday, December 31, 2009

புத்தக கண்காட்சியும் பதிவர் சந்திப்பும்...


நேற்று புத்தக கண்காட்சி துவக்க விழாவிற்கு சென்று விட வேண்டும் என்று எண்ணியிருந்தேன். கூட்டம் அதிகமாக இருக்குமா என்று நினைத்து அதிஷாவுக்கு போன் போட்டேன். அவரோ அண்ணே.. அசைன்மெண்ட் விஷயாமாக திண்டுக்கல் அருகே இருக்கேன்ன்னு பல்பு போட்டார்.இன்று எப்படியாவது போக வேண்டுமென்று எண்ணி சென்றும் விட்டேன். இந்த முறை புத்தக ஸ்டால்களின் அளவுகளை குறைத்து நடக்க நிறைய இடம் விட்டிருக்கிறார்கள்.முதலில் ஈர்த்தது விகடன் தான். ஏற்கனவே குறித்து வைத்திருந்த நண்பர் ரவிபிரகாஷ் அவர்களின் மொழியாக்கத்தில் வெளியான இரண்டு நூல்களும் (Stay Hungry Stay Foolish & A Diplomat Reveals) நூல்களும் இன்ன பிற புதிய விகடன் வெளீயிடுகளையும் வாங்கி கொண்டு மேய்ந்து கொண்டிருந்தேன்.பதிவர்களின் புத்தகங்களை வெளியிட்டுள்ள வம்சியை தேடினேன். அய்யனாரின் புத்தகங்களை வாங்க ஆவலாய் சென்றேன். சில இன்னும் வரவில்லையாம். ஸ்டால்காரர் சனிக்கிழமை அனைத்தும் கிடைக்கும் என்றார். விஸ்வாமித்திரன் மற்றும் கிடைத்த புத்தகங்களை வாங்கி கொண்டு கிழக்கு பக்கமாய் சென்றேன்.பள்ளி கூட பருவத்தில் வரலாறு ரொம்ப பிடிக்கும். அது மீண்டும் சில மாதங்களாய் தொற்றி கொண்டு வருகிறது. முகிலின் செங்கிஸ்கான், யூதர்கள் மற்றும் மைசூர் மகாராஜா படித்ததிலிருந்து நிறைய வரலாறு படிக்க வேண்டும் என்று ஆவல் அதிகரித்திருக்கிறது. {அப்போ படிச்சிருந்தா மார்க்காவது வந்திருக்கும்}புதிய வெளீயிடான முகலாயர்களை (விலை 250/-) வாங்கினேன். முகிலின் அடுத்த பிரம்மாண்டமான படைப்பு அகம் புறம் அந்தப்புரம் இன்னும் அரங்கேறவில்லையாம். புகைப்படத்திலேயே தலையணை சைஸில் தெரிகிறது. (1392 பக்கங்கள்) வாங்க வேண்டிய லிஸ்டில் இருக்கிறது.

கிழக்கில் இன்னும் நிறைய புத்தகங்கள் வெளியிட்டு இருக்கிறார்கள். கமலின் வாழ்க்கை வரலாறு அட்டை படமே அசத்தல். உடனே வாங்கி விட்டேன்.


பா. தீனதயாளன் எழுத்து நடை எனக்கு மிகவும் பிடிக்கும். சின்னப்பா தேவரின் வாழ்க்கை வரலாறு புத்தகத்தை விழுந்து விழுந்து சிரித்து படித்திருக்கிறேன்.காலச்சுவடு பதிப்பகத்தில் சிலவற்றை வாங்கினேன். அடுத்து உயிர்மை பதிப்பகத்தில் எஸ்.ரா, சாருவின் புத்தங்கள் சிலவற்றை வாங்கி கொண்டு இருக்கும் போது இருவர் அருகில் வந்து நீங்கதானே butterfly Surya ..? என்றதும் ஒரு அளவில்லாத மகிழ்ச்சி.ராஜகோபாலும் (எறும்பு) ஷங்கர் (பலாப்பட்டறை) யும் அறிமுகப்படுத்தி கொண்டவுடன் ஈரோடு சந்திப்பு பற்றி தொடங்கி பல விஷயங்களை பேசி கொண்டே சுற்றி திரிந்தோம். முருகன் சேதி சொல்லிட்டாரோ என்னவோ..?? திடீரென்று உண்மைதமிழன் வந்து சேர்ந்தார். சிறிது நேரத்தில் லக்கியும் வந்ததும் மகிழ்ச்சி அதிகரிக்க மீண்டும் ஒரு ரவுண்ட் அடித்து கொண்டிருந்தோம். எழுத்தாளர் பா.ராகவனை சந்தித்ததும் கால் வலி தீர ஒரிடத்தில் அமர்ந்து சில பயனுள்ள புத்தகங்கள் பற்றியும் பதிவர்கள் பற்றியும் ராகவனுடன் பேசி விட்டு அங்கிருந்து கிளம்பினோம்.


உண்மைதமிழன் திரு. முக்தா சீனிவாசனை அறிமுகம் செய்தார். நண்பர் கிருஷ்ண்பிரபு வின் பதிவுகளிலிருந்தும் அவரது மின்னஞ்சலில் அனுப்பிய புத்தக குறிப்புகளையும் எடுத்து செல்ல மறந்து விட்ட படியாலும் பர்ஸ் காலியானதாலும் நண்பர்களை சந்தித்த மனநிறைவோடு வீடு நோக்கி பயணமானேன்.அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
டிஸ்கி 1 : சில புகைப்படங்கள் துளசி டீச்சர் பதிவிலிருந்து சுட்டது.டிஸ்கி2: பா.ராகவன் உண்மைதமிழனுக்கு அளித்த அட்வைஸ் இங்கே.

Thursday, December 24, 2009

நத்தார் வாழ்த்துகள்
பகைவரையும் நேசி என்றுரைத்த


எங்கள் பரமபிதாவே ..


நீ பிறந்த நாளில்


பக்கத்து வீட்டுகாரரையாவது


நேசிக்க முயற்ச்சிக்கிறோம்!

Monday, December 21, 2009

ஈரோடு சங்கமம் தொகுப்பு

ஈரோடு சங்கமம் பற்றி சென்னை வந்ததும் கடுமையான வேலைப்பளுவால் எழுத முடியவில்லை. சங்கமம் ஒரு திருவிழா என்று ஆரம்பித்து நடந்தது என்ன..? நான் அடிச்சா தாங்கமாட்ட,யாரோ சூனியம் வைச்சிட்டாங்கன்னு பல தலைப்புல எழுதி அசத்திடாங்க.தனிப்பதிவுகளை மட்டும் எடுத்து அனைத்து இடுகைக்களின் லிங்க் கொடுத்துள்ளேன். நண்பர்களுக்கு படிக்க உதவியாய் இருக்கும் என்று நினைக்கிறேன். யாருடைய பதிவாது விடுபட்டிருந்தால் பின்னூட்டத்தில் கூறுங்கள். இணைத்து விடலாம்.விழாவில் பேச வாய்ப்பளித்த கதிர் அவர்களுக்கும் மற்றும் விழா ஏற்பாடு செய்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றி.. நன்றி.. நன்றி..


நிகழ்வுக்கு அழைத்து சென்ற அப்துல்லா அண்ணனிற்கும் சக பயணிகள் அண்ணன் தண்டோரோ, அருமை நண்பர் கேபிள்ஜி, my dear அகநாழிகை வாசு தேவனுக்கும் நன்றிகள் பல.பல வருடங்க்ள் கழித்து கல்லூரி நண்பர்க்ளை சந்தித்ததை போன்று என்றும் நினைவில் நிற்கும் அற்புத நிகழ்வாய் அமைந்தது.
பதிவுகளின் சுட்டி பட்டியல்

ஈரோடு கதிர்
நன்றி! நன்றி!! நன்றி!!!சி @ பாலாசி நன்றி நவிலல்மைக் முனுசாமி நான் அடிச்ச தாங்கமாட்டபாமரன் பக்கங்கள் ஒரு சாதனை தொகுப்புபாமரன் பக்கங்கள் சில ஒலித்தொகுப்புகள்பழமைபேசி குறுந்தகவல்பழமைபேசி நன்றியுடன்பழமைபேசி மேலதிகப்படங்கள்வால்பையன் வாழ்த்துவனங்களுக்கும் திட்டுனவுங்களுக்கும்வால்பையன் எனக்கு யாரோ சூனியம் வச்சிடாங்க
செந்தில் வேலன்
நடந்தது என்ன..??செந்தில் வேலன் அனானிகள், அட்சென்ஸ், கருத்து சுதந்திரம்கார்த்திகை பாண்டியன் இனிதே நடைபெற்ற ஈரோடு சங்கமம்சங்கவி அட்டகாசமான ஆரம்பம்சஞ்சய்காந்தி சந்திப்பு இட்லிவடை போட்டோபரிசல்காரன் சபாஷ் ஈரோடுT.V. ராதாகிருஷ்ணன்
ஈரோடு திருவிழாவி. என். தங்கமணி
பதிவர்களின் கடமைகளும் பொறுப்புகளும்Will To Live ரம்யா
டிசம்பர் 20 - ஈரோட்டில் பதிவர் - வாசகர் சந்திப்புசுமஜ்லா
பதிவர் சந்திப்பில் நான் பேசியவைலதானந்த்
ஈரோடு பதிவர் சங்கமம் சில விமர்சனங்கள்ஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம்
பதிவர் லதானந்த் கவனத்திற்கு
ஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம்
சண்முகராஜ் அவர்களிடமிருந்து வந்த மின்மடல்...


Friday, December 18, 2009

வேட்டைக்காரன் - திரை விமர்சனம்
மாஸ் மசாலா என்ற வட்டத்தை விட்டு வெளியில் வர முடியாத அல்லது விருப்பமில்லாத விஜய்யின் மற்றுமொரு வழக்கமான மசாலா வேட்டை இந்த வேட்டைக்காரன்.கதைப்படி ரவி என்கிற போலீஸ் ரவி (விஜய்) ஒரு தூத்துக்குடி பையன். ப்ளஸ்டூவை நான்காவது அட்டம்டில் தாண்டும் சராசரி மாணவரான அவருக்கு, பெரிய லட்சியம் ஒன்று உண்டு. அது தனது ஆதர்ஸ நாயகனான தேவராஜ் ஐபிஎஸ் (ஸ்ரீஹரி) மாதிரி பெரிய போலீஸ் ஆ...பீஸர் ஆவது.
தன் முயற்சியில் சற்றும் மனம் தளராமல் சென்னையில் கல்லூரியில் சேர்ந்து படிக்க ரயிலேறுகிறார். அப்போதுதான் அனுஷ்காவைச் சந்திக்கிறார்.
வழக்கம்போல அந்தக் கணத்திலேயே விஜய்யின் கனவு நாயகியாகி விடும் அனுஷ்கா, வழக்கம் போல டூயட்டெல்லாம் பாடி ஓய்கிறார்.அப்போதுதான், செல்லா என்ற மோசமான வில்லனைச் சந்திக்கிறார் விஜய். அழகான பெண்ணைப் பார்த்த கணத்தில் படுக்கைக்குத் தூக்கிச் செல்லும் சைக்கோ கேரக்டர் இந்த செல்லா. தன் வகுப்புத் தோழி ஒருத்திக்கு இந்த சோகம் நிகழ, நாயகன் விஜய் பொங்கியெழுந்து போட்டுப் புரட்டியெடுத்து கொன்று விடுகிறார் செல்லாவை.இந்த செல்லாவின் அப்பா வேதநாயகம் (சலீம் கவுஸ்) பெரிய டான். மகனைக் கொன்ற விஜய்யை போட்டுத் தள்ள போலீஸ் அதிகாரி சாயாஜி ஷிண்டேக்கு அஸைன்மெண்ட் தருகிறார். ஆனால் அதை உதாசீனப்படுத்தும் சாயாஜி, 'நீயென்ன பெரிய மந்திரியா, எனக்கு உத்தரவு போட' என திருப்பிக் கேட்க, அப்போதே மகன் கொலையை மறந்து, மந்திரியாகும் வெறியில் அரசியல் காய் நகர்த்துகிறார் வேதநாயகம்.ஒரு கட்டத்தில் விஜய்யின் ஆதர்ச நாயகனான தேவராஜ் ஐபிஎஸ், இந்த வேதநாயகத்தால் பாதிக்கப்பட்டு கண் பார்வை போய், வேலையையும் இழக்கிறார். விஜய்யின் கோபம் இப்போது இன்னும் பல மடங்கு பெருக, வில்லனை வேட்டையாட புறப்படுகிறார்... (ஹை... டைட்டிலுக்கு காரணம் கண்டுபிடிச்சிட்டோம்)வேதநாயகத்தை அழிக்கிறார்...இதிலென்ன புதுசா இருக்கு என்கிறீர்களா... இந்தக் கேள்வி விஜய் அண்ட் கோவுக்கு போக வேண்டியது. எனவே படத்தில் கலைஞர்களின் பங்களிப்பைப் பார்க்கலாம். கஷ்டப்பட்டு நடிக்க விஜய்க்கு இதில் ஒன்றுமில்லை. காமெடி என்ற பெயரில் ஏதோ செய்கிறார். சத்தியமாக சிரிப்பு வரவில்லை. அதுக்குதான் வடிவேலு, சந்தானம் போல நிறை இருக்கிறார்களே... இவருக்கு ஏன் இந்த வேலை என்று தெரியவில்லை.கவுண்டரை காப்பியடித்தார் சந்தானம். இப்போது சந்தானத்தை காப்பியடிக்கிறார் இந்தப் படத்தில் விஜய்யுடன் ஒட்டிக் கொண்டே வரும் ஸ்ரீநாத். சகிக்கலை!


படத்தில் அட பரவாயில்லையே என்று சொல்ல வைப்பவர் ஸ்ரீஹரி என்ற தெலுங்கு பார்ட்டி. இவர்தான் தேவராஜ் எனும் நல்ல போலீசாக வருகிறார். ஆனால் கொடுமை என்னவெனில், இதே கேரக்டரை நாம் தரணியின் தில் படத்தில் பார்த்து விட்டோம் (இயக்குநர் தரணியின் உதவியாளர்தான் வேட்டைக்காரன் இயக்குநர் பாபு சிவன்!). அனுஷ்கா அம்சமாக இருக்கிறார். அவரிடமிருந்து நமது ரசிகர்கள் எதிர்ப்பார்ப்பது நிச்சயம் நடிப்பை அல்ல என்று நன்றாகத் தெரிந்து கொண்டு, தனது அழகால் அசரடித்து விட்டுப் போகிறார்.முதல் பாதியில் காட்சிகள் பழசாக இருந்தாலும் உட்கார்ந்து பார்க்க முடிகிறது. இரண்டாம் பாதியில் ரொம்ப்பக் கஷ்டம்! கோபிநாத்தின் ஒளிப்பதிவில் பெரிய சாகஸங்கள் எதுவும் இல்லை. விஜய் ஆண்டனி... பாடல்களைக் கேட்ட பிறகு, அவரிடம் 'ஏன் இந்த கொல வெறி' என்றுதான் கேட்கத் தோன்றுகிறது. அப்படி ஒரு அதிவேகம்.நல்ல ஸ்கிரிப்ட் என்றால், ஏற்கெனவே ஹிட்டான படங்களின் சீன்களை உருவி புதுசாக உருவாக்குவதுதான் என யாரோ தவறாக சொல்லிவைத்திருக்கிறார்கள் போல, இயக்குநர் பாபு சிவனிடம்.


படத்தில் விஜய் ஆண்டனியின் பாடலில் நிக்காம ஓடு ஓடு ஓடு என்று ஒரு வரி அடிக்கடி வருகிறது. அனேகமாக படத்தைப் பார்த்து விட்டு வரும் ரசிகர்கள் இந்த வரியை தங்கள் நண்பர்களிடம் சொல்லக் கூடும்!!டிஸ்கி: சத்தியமா படம் பார்க்கவில்லை. அவ்வளவு தைரியமும் இல்லை.


விமர்சனம் நன்றி: தட்ஸ்தமிழ்.காம்.

Thursday, December 17, 2009

உலகெங்கும் தெரியப்போகும் வார்த்தை
டைடானிக் படத்தின் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூனின் அடுத்த பிரமாண்டமான படம் தயாராகிவிட்டது.12 ஆண்டுகள் ஜேம்ஸ் கேமரூன் பெரும் பொருட்செலவு மற்றும் ஆராய்ச்சி செய்து உருவாக்கியுள்ள படம் 'அவதார்'.


நாளை உலகமெங்கும் வெளியாகிறது.இந்தப் படம் இந்தியாவில் மட்டும் 700 பிரிண்டுகளுடன், தமிழ், இந்தி, தெலுங்கு மற்றும் ஆங்கிலத்தில் வெளியாகிறது.ரூ. 1200 கோடி செலவில் தயாராகியுள்ள இந்த அவதார், இதுவரை உலகில் வெளியான அனைத்து கிராபிக்ஸ் படங்களையும் விட மிகச் சிறந்த படம் என்று 'டைம்' பத்திரிகை பாராட்டியுள்ளது.இந்தப் படத்துக்காக தனி கிரகம் ஒன்றையே உருவாக்கினார்களாம் கேமரூன் மற்றும் குழுவினர். அதில் வித்தியாசமான விலங்குகள், மரங்கள் போன்ற தோற்றங்களை உருவாக்கி அவற்றைத்தான் முப்பரிமாணத்தில் அவதாரமடுக்க வைத்துள்ளனர்.உயிரற்ற பொருட்களையும், அசைவுகளுடன் உயிரோட்டமாகக் காட்டும் புதிய தொழில்நுட்பத்தின் துணையுடன் உருவாக்கப்பட்டுள்ளது.ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் நிறுவனத்தினர் இந்தப் படத்தை இந்தியாவில் வெளியிடுகின்றனர். இதுகுறித்து அந்நிறுவனத்தின் சிஇஓ விஜய் சிங் கூறுகையில், "அவதார் படத்துக்கு இந்தியாவில் பெரும் எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. இந்தியாவில் இதுவரை எந்த ஹாலிவுட் படத்துக்கும் இந்த அளவு கிராண்டான ரிலீஸ் இருந்ததில்லை என்று வியக்கும் வகையில் அவதார் படத்தை வெளியிடப் போகிறோம்" என்றார்.
தமிழில் நேரடியாக வெளியாகும் முதல் ஹாலிவுட் '3 டி' படம் என்ற பெருமையைப் பெறுகிறது அவதார்.உலகம் முழுக்க வரும் டிசம்பர் 18ம் தேதி 2 டி மற்றும் 3 டி வடிவங்களில் வெளியாகும் அவதார், தமிழில் மட்டும் 100 பிரிண்டுகளுடன் வருகிறது.


தமிழகம் முழுக்க சத்யம் சினிமா வெளியிடுகிறது. இதுகுறித்து அதன் இயக்குநர் ஸ்வரூப் ரெட்டி கூறுகையில்,இந்த பத்தாண்டு காலத்தில் உலகம் பெரிதும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்தது இந்தப் படத்துக்காகத்தான்.


டிஜிட்டல் '3 டி' வடிவத்தில் வெளியாகும் இந்தப் படம் பெரிய வரலாறு படைக்கும் என நம்புகிறோம்" என்றார்.இந்தப் படத்தின் மூலம் 'அவதார்' என்ற இந்திய வார்த்தை உலகெங்கும் தெரிந்த வார்த்தையாகப் போகிறது.
டிஸ்கி: நாளை தமிழ் சினிமா உலகில் வேறு ஒரு அதிர்வும் நிகழ போகிறது. புயல் அபாயம் காரணமாக விபரம் தெரிந்தவர்கள் பின்னூட்டத்தில் சொல்லலாம்.
செய்தி நன்றி: தட்ஸ் தமிழ்.

Monday, December 7, 2009

இயக்குநர் சேரனுடன் ...நான்..

மூன்று வாரங்களுக்கு முன் இயக்குநர் சேரனிடமிருந்து ஒரு அலைபேசி அழைப்பு. எனது உலக சினிமா வலைப்பூ பற்றி ஆர்வமாக பேசி மகிழ்ச்சியும் வாழ்த்தும் தெரிவித்தார். எனக்கும் அளவற்ற மகிழ்ச்சி. பின்பு அடிக்கடி பேசியும் பகிர்ந்தும் கொண்டிருந்தார்.
இன்று நேரில் சந்திக்க அழைக்கவும் செய்தார். சந்தித்தேன். முதலில் கேரள உலக திரைப்பட விழாவில் தேர்வாளராக நியமிக்க பட்டுள்ளதற்கு வாழ்த்து தெரிவித்தேன். பின்னர் தமிழ் வணிக சினிமா, உலக சினிமா, இன்றைய சமூக சூழல், வலைப்பூக்கள், பிளாக்கர்ஸ் அவரது அடுத்த படைப்பு என்று ஒரு நீண்ட உரையாடல். அருமையான மாலை பொழுதாய் அமைந்தது.
தமிழ் சினிமாவின் அசுர வளர்ச்சியும் ஆனால் அது மொத்தம் வணிகம் சார்ந்ததாய் மாறி வருவதை குறிப்பிட்டார். உலக திரைப்படங்கள் மீதும் குறிப்பாக இரானிய திரைப்படங்கள் மீது அவருக்கு உள்ள ஆர்வமும் மதிப்பும் அளவற்றது. மஜித் மஜிதி, கிம் கி டக் பற்றி வியந்து பேசியதுடன் கொரிய திரைபப்டஙகளின் தொழி நுட்பங்களை சிலாகித்தார். கேரள திரைப்பட விழாவில் பங்கு பெறும் உலக படங்கள் குறித்து பல குறிப்புகளை கூறி அசத்தினார்.
பின்னர் வலைப்பூக்கள் பற்றி பேச ஆரம்பித்ததும் அவர் டென்ஷன் ஆகி விடுவாரோ..? என்று எனக்கு கொஞ்சம் உள்ளூற உதறல். ஆனால் மிக அமைதியாக அனைத்து வலைப்பூக்கள் பற்றி நிறைய பேசினார். எண்ணற்ற பிளாக்கர்கள் உருவாகி வருவது மகிழ்ச்சி என்றாலும் கட்டற்ற சுதந்திரத்தினால் சில வலைப்பூக்களால் சிலருக்கு வலிப்பூக்களாகியிருக்கிறது என்பது அவரது பேச்சில் தெரிந்தது. எப்படியிருந்தாலும் வலைப்பதிவர்களை சந்திக்க ஆர்வமாய் இருப்பதாக தெரிவித்தார்.
தற்போது கேரள திரைப்படவிழாவிற்கு செல்வதாக சொன்னதால் புது வருடத்தில் {ஜனவரியில்} நேரம் ஒதுக்குமாறும் நமது மாபெரும் தமிழ் வலைப்பதிவர்கள் மாநாட்டில் { பதிவர் சந்திப்பை தான் ஒரு பில்டப்பா மாநாடுன்னு சொல்றேன்} பங்கு கொள்ள வேண்டும என்று அனைத்து பதிவர்கள் சார்பாக அனுமதி கோரியுள்ளேன். விரைவில் நல்ல செய்தி வரும். காத்திருப்போம்.
அனைத்திற்கும் நன்றியும்
வாழ்த்தும் தெரிவித்து விடைபெற்றேன். பல நாள் பழகிய நண்பரை போல வாசல் வரை வந்து வழியனுப்பி மகிழவும் நெகிழவும் செய்து விட்டார்.


Monday, November 23, 2009

வாழ்த்துகள் பாண்டிராஜ்
"பசங்க' திரைப்படத்துக்காக சர்வதேச அளவிலான சிறந்த இயக்குநருக்கான (தங்க யானை விருது) விருதை பெற்றார் இயக்குநர் பாண்டிராஜ்.ஹைதராபாத்தில் கடந்த வாரம் தொடங்கி நடைபெற்ற சர்வதேச குழந்தைகள் திரைப்பட விழாவில் 20 நாடுகளைச் சேர்ந்த 70 திரைப்படங்கள் திரையிடப்பட்டன. இந்த பட விழாவில் தமிழில் உருவாகி பெரும் வெற்றி பெற்ற "பசங்க' திரைப்படம் "கிட்ஸ்' என்ற பெயரில் திரையிடப்பட்டது.


இயக்குநர் சசிகுமாரின் தயாரிப்பில், இயக்குநர் சேரனின் உதவியாளர் பாண்டிராஜ் இப்படத்தை இயக்கி இருந்தார். இப்படம் குழந்தைகளின் உலகத்தை தனி பாணியில் படம் பிடித்துக் காட்டியிருந்தது. திரைப்பட விழாவின் இறுதி நாளான வெள்ளிக்கிழமை (அக்-20) விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது இதில் சிறந்த குழந்தைகள் பட இயக்குநராக பாண்டிராஜ் தேர்வு செய்யப்பட்டார்.


அவருக்கான விருதை (தங்க யானை விருது) பிரபல இந்தி நடிகை ஜூகி சாவ்லா வழங்கினார்.
விழாவில் படத்தைப் பார்த்த பார்வையாளர்கள் மட்டுமல்ல, நடுவர்களும் பாராட்டினார்களாம். சிறந்த ஆசியப் படங்கள் பிரிவில் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.


"முதல் படத்திலேயே சர்வதேச விருது வாங்கிய அனுபவம் மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. இதற்கு காரணமாக இருந்த சசிகுமாருக்குதான் முதல் நன்றி. இந்தப் படத்தின் உருவாக்கத்துக்கு காரணமாக இருந்த அவருக்கும் இந்த விருதில் பங்குண்டு. சர்வதேச சினிமா ஜாம்பவான்கள் இருந்த அந்த சினிமா மேடையில் சிறந்த இயக்குநருக்கான விருது பெற்றதை எனக்கு கிடைத்த பெரிய கௌரவமாக நினைக்கிறேன்.'' என்றார் இயக்குநர் பாண்டிராஜ்.இயக்குநர் நண்பர் பாண்டிராஜ் இன்னும் பல சாதனைகள் படைக்க வாழ்த்துக்கள்...

Monday, October 5, 2009

இணைய நண்பர்களுக்கு எச்சரிக்கைஇணைய நண்பர்களுக்கு ஒர் எச்சரிக்கை என்று நேற்று மின்னஞ்சலில் வந்த செய்தி.WARNING!

If you belong to FaceBook, Twitter, MySpace - any gathering place online.

DO NOT accept a friend request from Christopher Butterfield.

He is a Hacker.

Warn your friends list! If even ONE of your friends adds him as their friend, he will hack into your computer's ID and address.


PLEASE TELL EVERYONE!மேலும் விபரங்களுக்கு இங்கே பார்க்கவும்.


இது உண்மையா அல்லது வதந்தியா..?? விபரம் தெரிந்தவர்கள் பின்னூட்டத்தில் சொல்லவும்.

Thursday, October 1, 2009

செட்டி நாட்டு சினிமா
உலக சினிமா பார்க்க ஆரம்பித்த பிறகு கதைகள் படிக்கும் ஆர்வம் மிகவும் குறைந்து போனது. கதைகள் என்ன..?? வாசிக்கும் அனுபவமும் கூடத்தான்.


உடல் நிலை குறைவாக இருந்த அருமை நண்பர் உண்மைத்தமிழனை சந்திக்க போன போது இத படிச்சு பாருங்க.. நல்லாயிருக்கும் என்று சொல்லி பதிவர் சுப்பையா வாத்தியார் எழுதிய “செட்டி நாட்டு மண் வாசனைக் கதைகள்” புத்தகத்தை பரிந்துரைத்தார்.முதலில் ஒரு கதையை படித்து பார்ப்போம் என்று ஆரம்மித்தவுடன் விறு விறுப்பு பற்றி கொண்டது. எளிய நடை, சிறந்த திறனாய்வு, சிரிக்கவும் சிந்திக்கவும் யதார்த்தமான எழுத்துகள் என அனைத்தும் அற்புதமாய் இருந்தது.
மொத்தம் 160 பக்கங்களில் 20 கதைகள். அனைத்தும் நகரத்தார் வாழ்கையின் பின்னணியில் எழுதப்பட்டது.நகரத்தார் வீட்டு நிகழ்ச்சிகள், நடை முறைகள், பேச்சு வழக்குகள், அவர்களின் வாழ்வின் நிறை குறைகள் எல்லாம் நன்கு வெளிப்பட்டு ஒரு சிறந்த வாசிப்பு அனுபவத்தை கொடுத்தது. குறிப்பாக கவியரசர் கண்ணதாசனின் பொருத்தமான பாடல்களை ஆங்காங்கே இட்டு அழகு செய்திருக்கிறார் நூலாசிரியர்.நகரத்தார் பின்னணியில் எழுதப்பட்டாலும் கதைகள் வெவ்வேறு ஊர்களில் நடைபெற்ற வண்ணம் ஒன்றுகொன்று மிகவும் வித்தியாசமாய் தனித்தன்மையுடன் விறு விறுக்க வைக்கிறது. ஹைதாராபாத்தில் நிகழும் ஒர் கதையில் பேகம் பஜார், சுல்தான் பஜார், கோட்டி, கொத்த பெண்டையா கடை, புல்லா ரெட்டி ரஸமலாய் என்று ஹைதாராபாத்தின் முக்கிய பகுதிகளையும் புகழ் பெற்ற கடைகளையும் சிலாகித்து எழுதியதை படித்தவுடன் என் மூன்று வருட அருமையான ஹைதை வாழ்க்கையில் சிறிது நேரம் மூழ்கி போனேன்.ஒவ்வொரு கதையிலும் வேறு வேறு ஊர்கள், நிகழ்வுகள், வாழ்க்கை பற்றிய புரிதல்கள் என்று தனது பாணியில் கலக்கியிருக்கிறார். பல ஊர்களுக்கு அவர் சென்ற போது ஏற்பட்ட அனுபவங்களா.? அல்லது அங்கு வாழ்ந்த உறவு தொடர்புகளின் ஈடுபாடா..?? அப்படிதான் இருக்கும் என நினைக்கிறேன். அவ்வளவு யதார்த்தமாக சொல்லியிருக்கிறார். ஆசிரியரின் கூர்ந்த அவதானிப்பு அதை எழுத்தில் சொல்லிய விதமும் மிக அருமையாய் இருக்கிறது. அவர் நன்கறிந்த ஜோசியத்தையும் விட்டு வைக்கவில்லை. ஒரு கதையில் முழுமையாகவும் சிலவற்றில் சிறிது சிறிதாயும் சொல்லி வியக்க வைத்துள்ளார்.
”தந்தி மீனி ஆச்சி” என்ற சிறு கதையில் ஆச்சியை “தில்லான மோகனாம்பாள்” படத்தில் வரும மனோரமாவாகவும் ஆயா வீடு சிறுகதையில் ஆயாவை பாதகாணிகை படத்தில் வரும் M.V ராஜம்மாவாகவும், தீபாவளி பற்றிய ஒரு சிறுகதையில் நாயகியை சினேகாவும் சித்தரிக்க ஆரம்பித்தவுடன் படிக்கும் போதே நமது கற்பனையுடன் அந்தந்த கதாபாத்திரங்கள் காட்சியாய் மனதிரையில் ஒடச்செய்து நல்ல உத்தியை கையாண்டவிதம் ஒரு செட்டி நாட்டு சினிமாவை பார்த்த உணர்வை தந்தது. மண் வாசனை மட்டுமல்ல நல்ல மனித வாசனைகளின் அற்புத தொகுப்பாய் இருக்கிறது.

ஆனந்த விகடன் பாணியில் கதைகளுக்கு ஏற்ப சில ஒவியங்களை இட்டிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் என்பது எனது அபிப்பிராயம். அடுத்த தொகுப்பிற்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்.

சிறுகதை ஆர்வமுள்ளவர்கள் வாசிப்பு அனுபவம் உள்ள அனைவரும் விரும்பி படிக்கவேண்டிய அருமையான புத்தகம்.


நூல் விபரம்:

ஆசிரியர்: SP.VR. சுப்பையா

பக்கங்கள் : 160

விலை : ரூபாய் 75

வெளியீடு: உமையாள் பதிப்பகம்

பழைய எண் 94 : புது எண் 14

சொர்ணாம்பிகா லே அவுட், ராம் நகர்

கோயம்புத்தூர் - 641 009.

அலைபேசி : 94430-56624

சென்னையில் புத்தகம் கிடைக்குமிடங்கள்

உமா பதிப்பகம்

18 / 171, பவளக்காரத் தெரு

மண்ணடி

சென்னை - 600001

தொலைபேசி எண்-25215363

குமரன் பதிப்பகம்

19, கண்ணதாசன் சாலை

தி.நகர் சென்னை-600017

தொலைபேசி எண் - 24353742

Friday, September 25, 2009

பதிவர்களுக்காக பாப்கார்ன்


நர்சிம்:

ஒரு நாள் கம்பரும் சோழ மன்னரும் மாலை நேரத்தில் சோலையில் உலாவி கொண்டிருந்தார்கள்.

ஒடிக்கொண்டிருந்த ஆற்றுநீர் காலில் படும்படியாக இருவரும் நீரின் ஓரமாகவே நடந்து செல்லும் போது கம்பருக்கு தாகம் எடுத்தது. உடனே அவர் குனிந்து அந்த தெள்ளிய நீரை அள்ளி இரண்டு வாய் குடித்தார். இதை கண்டதும் மன்னருக்கு குஷி வந்து விட்டது. கம்பரை மட்டம் தட்ட சரியான சந்தர்ப்பம் என எண்ணி “ கம்பரே ! என் காலில் விழுந்த நீரைத்தானே உண்டீர்’? என்றார்.


உடன் சற்றும் யோசிக்காத கம்பர் பட்டென்று “நீரே வந்து காலில் விழுந்தால் நான் என்ன செய்வது”? என்றார்.

மன்னர்.. அமைதியாக வெட்கப்பட்டு தலை குனிந்தார்
.


=========================================================

லக்கிலுக் & அதிஷாபத்திரிகையுலகில் புதிய அடி எடுத்து வைத்திருக்கும் நண்பர்கள் அதிஷாவுக்கும் லக்கிக்கும் அனைத்து பதிவர்கள் சார்பிலும் என் மனதார வாழ்த்துகள். இந்த புதிய தலைமுறை ஜெயிக்கட்டும்.
என்னதான் பதிவுலகில் சில அறிவு ஜீவிகள் கமலை தீட்டி தீர்தாலும் அவரது ஐம்பது ஆண்டு கால சாதனைகளை வியந்து “தி சண்டே இந்தியன்” கமலின் பிரத்யேக பேட்டி 50 Q + 50 A பாணியில் கொடுத்திருக்கிறது.

10 ரூபாய்தான். நிறைய செய்திகள். நல்லாயிருக்கு. வாங்கி படியுங்கள்.

வாங்க முடியாத வெளியூர் / வெளிநாடு நண்பர்கள் இங்கே கிளிக்குங்க.

மவுஸால பக்கத்தை திருப்பி படிக்கலாம். அழகா இருக்கு.


=============================================================

கேபிள் சங்கர்:தொலைதூர கப்பலில் பயணிக்கும் பிரிட்டீஷ் மாலுமிகளுக்கு தினமும் காலை உணவு மதிய உணவு இரண்டுமே பழைய ரொட்டியும் தண்ணீரும் தான். சில சமயம் மட்டுமே ஒயின் அளிக்கப்படும்.

அதிர்ஷ்டம் இருந்தால் சில நாட்களில் மட்டும் மூன்றாவது தடவையாக சிறிது மாமிசத்துடன் சதுரமான தட்டில் வைத்து உணவு அளிக்கப்படும். தட்டின் வடிவத்தால் அதை ஸ்கொயர் மீல் என்றார்கள். அதுவும் ஒருவருக்கு தேவையான அளவில் போதுமானதாக இருக்கும். Three squares என்பது தினமும் மூன்று வேளை கலந்து கட்டி அடிப்பது. அதை நணபர் நல்லா செய்வார். அந்த நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு.

==================================

உண்மைத்தமிழன்


பல நூறு ஆண்டுகளுக்கு முன் செயின்ட் அகஸ்டின் ரோமுக்கு மத விஷயமாக செயிண்ட் அம்ப்ரோஸ் என்பவரை அனுப்பினார். அவருடைய பழக்கம் வாரத்தில் சில நாட்கள் உபவாசம் இருப்பது. ஆனால் ரோமிலோ வேறு நாட்களில் உபவாசம் இருந்தனர். அம்ப்ரோஸ் குழப்பமானார். உடனே செயிண்ட் அகஸ்டினை தொடர்பு கொண்டார். அகஸ்டின் கூறிய அறிவுரை தான் “ரோமில் இருக்கும் போது ரோமாபுரியினர் செய்வது போல் செய்” என்பது இன்றும் வழக்கத்தில் இருக்கும் சொல்லாகும். அண்ணன் உண்மைதமிழனும் அடிக்கடி சரியாக சாப்பிடுவதில்லை. ஊரோடு ஒத்துபோவதுமில்லை சின்ன பதிவும் எழுதுவதில்லை என்பது தான் என் சிறிய வருத்தம்.

=====================================================

தண்டோரா:காக்டெயில் என்பது அண்ணன் தண்டோராவிற்கு மட்டுமல்ல நம் அனைவருக்கும் தெரியும். ஆனால் இந்த பெயர் என்படி வந்தது. கி.மு 3000 ஆண்டிலேயே காக்டெயில் இருந்திருக்கிறது. ஈராக்கிற்கும் ஈரானிற்கும் இடையில் டைக்ரீஸ் ஆற்றின் கரைக்கு அடியில் டெர்ரகோடா பானைகள் அகழ்வாய்ச்சியாளர்களால் ஒரு சமயம் கண்டுபிடிக்கபட்டது. அப்பானைகளில் புளிக்கவைத்த பார்லி, தேன், ஆப்பிள்களின் சுவடுகளும் கண்டெடுக்கப்பது. So, பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மனிதன் சும்மா கலக்கி அடித்திருக்கிறான். டாஸ்மாக்கெல்லாம் சும்மா ஜீஜிபி தான்.


===============================================

டாக்டர் தேவன்மாயம்:டாக்டர் தேவன் மட்டுமல்ல அனைத்து மருத்துவர்களும் எழுத படும் மருந்து சீட்டில் Rx என்று பார்த்திருப்பீர்கள். இது என்ன Rx..??

உயிர் காக்கும் மருத்துவம் தொழில் மட்டுமல்லாது கடவுளுக்கு நிகரானவர்களாக மருத்துவர்களை ஜீபிடர் கடவுளுக்கு பாவித்தனர் பண்டைய ரோமானியர்கள்.

R என்பது லத்தீன் சொல்லான recipre என்பதிலிருந்து வருகிறது. அதாவது இதை பரிந்துரைக்கிறேன் எடுத்து கொள்ளலாம் எனபதாகும். சின்ன x கடவுளின் அரசர் அதை ஏற்பதற்கான குறீயீடு. அதாவது அந்த ஜீபிடர் கடவுளே மருத்து சீட்டை எழுதுவதாகும் அவரின் கருணையோடு நோய் குணமாகும் என்பது அவர்களது ஐதீகம்.இது இன்று வரை தொடர்ந்தும் வருகிறது.
மதுரையில் சந்தித்த டாக்டர் தேவன் பழகுவதற்கும் இனிமையானவர். தொலைபேசியிலும் அடிக்கடி பேசுவார். ஆனால் டாக்டர் தேவன் பின்னூட்டத்தை மருத்து சீட்டில் எழுதாமல் இருக்கணும் அதுதான் என் பயம்.


நீங்கள் ஆதரவளித்தால் பதிவர்களுக்கான பாப்கார்ன் தொடரும்.

Thursday, September 17, 2009

உன்னை போல் ஒருவன்20 வருடமாக விடாது கடைபிடித்து வரும் First Day.. First Show.. விரதம் கலைந்து விடுமோ என்று பயந்திருந்தேன். நல்ல வேளை ரசிகர் மன்ற சிறப்பு காட்சியில் பார்க்கும் வாய்ப்பு முதல் நாள் இரவே கிடைத்தது. நானும் நண்பர் தண்டோராவும் சென்றிருந்தோம்.


வெட்னஸ்டே இந்தி படத்தின் ரீமேக் என்றாலும் என் மதிப்பிற்குரிய கமல் + மோகன்லால் என்ற புதிய கூட்டணியால் ஆவல் அதிகமாகியது.


தீவிரவாதத்தை ஒரு சாதாரண குடிமகன் எப்படி எதிர்க்க முடியும் என்ற கருத்தை முன்னிறுத்தி படம் நகர ஆரம்பிக்கிறது.


“உங்க சிட்டியில ஆறு இடத்தில RDX வெடிகுண்டு வெச்சிருக்கேன்” என்ற போன் கால் வந்ததும் நகர கமிஷனரான மோகன்லால் என்ற அற்புத நடிகரின் நடிப்பும் படம் பார்ப்பவர்களுக்கு விறு விறுப்பும் ஆரம்பமாகிறது.


குண்டு வெடித்ததா..?? எதற்காக ஒருவன் குண்டு வைக்கிறான்..?? அவன் தீவிரவாதியா..?? அவன் பெயரென்ன..?? அவனது கோரிக்கைகள் என்ன..? அவை நிறைவேறியதா..?? என்பதற்கு தியேட்டரில் படத்தை கண்டிப்பாக பாருங்கள்.


Quick points (In nutshell)


  • மோகன்லாலின் அற்புத நடிப்பு

  • இரா.முருகன் வசனம்

  • துணை நடிகர்கள் தேர்வு (குறிப்பாக இரண்டு காவல் துறை அதிகாரிகள்)

  • ஓளிப்பதிவு

  • ரொம்ப அலட்டாத ஆனால் ஆழமான நடிப்பில் கமல்

  • விறுவிறுப்பான திரைக்கதை

  • படத்தின் நீளம் (மொத்தம் 50 +50 நிமிடங்கள் மட்டுமே.. அப்பாடா இதை தான் ரொம்ப நாளா எதிர்பார்திருந்தேன்)


எனக்கு பட்ட குறைகள்:

  • பாடல்கள் இல்லை (வெச்சிருந்தாலும் மோசமாயிருக்கும்)
  • பின்னணி இசையில் ஸ்ருதி இன்னும் கொஞ்சம் மிரட்டியிருக்காலாம்.
  • முதல்வர் என்றால் நமது முதல்வர் குரலாகத்தான் இருக்க வேண்டுமா.?

இவையெல்லாம் Trifling தான். (அதுக்கு தான் சின்ன font)

உன்னை போல் ஒருவன் = Just watch and simply enjoy..

Monday, August 17, 2009

பாப்கார்ன் ஆகஸ்டு 16 - 30


அமெரிக்காவுக்கு உண்டு..இந்தியாவுக்கு இல்லை..

வரி ஏய்ப்பு செய்து சுவிஸ் வங்கிகளில் கறுப்பு பணம் போட்டு வைத்துள்ள அமெரிக்கர்களின் பட்டியலை அந்த நாட்டிடம் தர சுவிஸ் நாட்டின் முன்னணி வங்கியான யுபிஎஸ் ஒப்புக்கொண்டுள்ளது.

சுவிஸ் வங்கிகளில் கறுப்பு பணத்தை முடக்கி வைத்துள்ள இந்தியர்களின் பெயர் விவரத்தை வெளியிட முடியாது என்று அந் நாட்டு வங்கிகள் கூட்டமைப்பு திட்டவட்டமாகக் மறுத்து விட்டது. இந்திய அரசு தனது நாட்டு டெலிபோன் டைரக்டரியை எங்களிடம் தந்து, அதில் உள்ளவர்களின் பெயரில் ரகசிய கணக்கு இருக்கிறதா என்று கேட்கலாம் என்று நினைத்தால், அது நடக்காது. அதை சுவிஸ் நாட்டு சட்டமும் அனுமதிக்காது.எனவே, ரகசிய கணக்கு வைத்துள்ளவர்களின் பட்டியலை கேட்டு இந்தியா எங்களை அணுக வேண்டாம் என்று முகத்தில் அடித்தார்போலக் கூறியுள்ளது சுவிஸ்.


எனக்கென்னவோ அவங்களே இப்படி சொன்னாங்களா..?? இல்ல இதுல வேற எதுவும் உள்குத்து இருக்குமோன்னு தோணுது.. உங்களுக்கு என்ன தோணுதுன்னு சொல்லுங்க....*********************************************************************

இசையில் தொடங்குதம்மா..

மேஸ்ட்ரோவின் அற்புதை இசையில் உருவான பண்டிட் அஜய் சக்ரவர்த்தியின் இனிமையான குரலில் பல முறை கேட்டு சிலாகித்திருக்கிறேன். நேற்று எதோ ஒரு டிவி சேனலில் ஹே ராம் படத்தின் இந்த பாடலை கேட்டதும் பாடும் ஆபிஸில் கலக்கிய திவ்யாவின் நினைப்பு வந்து விட்டது. யூடியுப்பில் தேடி திவ்யாவின் குரலில் அந்த மெலோடியை பல முறை கேட்டேன். கேட்காதவர்கள் கேட்டு பாருங்கள்..ஒரு ஆண் குரலில் வந்தப் பாடலை எடுத்துக்கொண்டு , அதுவும் கடினமான பாடலை ரசித்துப்பாடிய விதம் கொள்ளை அழகு.... இந்த பாடல் முடிந்ததும் நடுவர்களின் அதுவும் கிருஷ் சொன்ன வார்த்தைகள்.. வாவ்...

இந்த போட்டிக்கு பிறகு திவ்யாவின் குரலை வேறெங்கும் கேட்க முடியவில்லை..?? எங்கே திவ்யா...???********************************************************************

இன்று ஒரு தகவல்

பதிவர் மோகன் என்பவரது மோகனச்சாரல் என்ற வலைப்பூவில் பார்த்தேன். இது முக்கியமான மற்றும் மிகவும் பயனுள்ள தகவல். இப்பொழுது இரத்தம் பெறுவது மிகவும் எளிது, இதற்க்கு நீங்கள் செய்யவேண்டியது என்னவெனில் உங்கள் அலைபெசியிலிருந்து "BLOOD" டைப் செய்து 96000 97000 என்ற எண்ணுக்கு அனுப்பவும்.


உதாரணமாக "BLOOD B+" .


உடனே ஒரு இரத்த கொடையாளர் உங்களை தொடர்பு கொள்வார்.


********************************************************************


ஈ மெயிலில் வந்த SMS Jokes.


புது செல்லு...
புது நம்பரு...

கொழப்பறே சந்துரு!
அடிக்கடி நம்பர் மாத்தி, இம்சை கொடுக்கறதை நிறுத்துடா!
=========================
அவுட்கோயிங் போகல...
இன்கமிங் வரல...

மெஸேஜும் கிடக்கல...
செல்போன் சரியில்லனு புலம்பறத நிறுத்திட்டு..

ரீசார்ஜ் பண்ணு பேபி
========================

கசட தபற வல்லினம்.
ஙஞண நமன மெல்லினம்.
யரல வழள இடையினம்.
நீ போதையில் பேசும் "போழாழேய்" எந்த மொழியினம்?
==========================


ராம்: நான் கலெக்டர் ஆகணும்!
சீதா: நான் டாக்டர் ஆவேன்!

ப்ரீத்தி: நான் நல்ல அம்மா ஆவேன்!

கார்த்தி: ப்ரீத்திக்கு நான் கியாரண்டி
=================================


தீவிரவாதி: உன் பெயர் என்ன?
விஜயகாந்த்: சிம்மா! நரசிம்மா!
தீவிரவாதி: ப்ரீபெய்டு சிம்மா? போஸ்ட் பெய்டு சிம்மா?

****************************************************************************

அடேங்கப்பா... அமி மைக்கேல்..


இங்கிலாந்தில் உள்ள ரியல் எஸ்டேட் நிறுவனம் ஒன்றில் ஏஜெண்டாக பணிபுரிபவர் அமி மைக்கேல் இவரது தற்போதைய வயது 32 இவர் தனது பதினேழாவது வயதில் தொடங்கி இது வரை ஆயிரம் ஆண்களுடன் `செக்ஸ்' வேலையில் ஈடுபட்டுள்ளார்.


Over To Ami

நான் 17-வது வயதில் கல்லூரியில் தொழில் நுட்ப படிப்பு படித்துக் கொண்டிருக்கும் போது `மெக் டொனால்டு' என்ற நிறுவனத்திற்கு வேலைக்கு சென்றேன். அங்குள்ள ஊழியர்கள் என் அழகை பார்த்து கிறங்கினர். எல்லோருமே என்னை அடைய துடித்தார்கள். என்னால் வேலை செய்யவே முடிய வில்லை. இதனால் அவர்களை சமாதானப்படுத்துவது என்று முடிவெடுத்தேன். முதலில் நிறுவன மானேஜரை அழைத்து அவருடன் உல்லாசமாக இருந்தேன். நான் சந்தித்த முதல் அந்தரங்க ஆள் அவர்தான். இதன் பிறகு பல ஊழியர்களுடனும் உல்லாச மாக இருந்தேன்.
அங்குள்ள பியூனுக்கு கூட என்னை விட்டு வைக்க மனமில்லை. அந்த ஆளையும் திருப்தி செய்தேன். இதன் பிறகு நான் ஏராளமான ஆண்களை வேலை நிமித்தமாக சந்திக்க வேண்டியது இருந்தது.ரியல் எஸ்டேட் நிறுவன ஏஜெண்டான நான் வாடிக்கையாளர்களை அழைத்துக்கொண்டு வீடு, மற்றும் நிலங்களை காட்ட செல்வேன். எனது காரியங்களை எளிதாக சாதித்துக்கொள்ள அவர்களை `செக்ஸ்'க்கு அழைப்பேன்.


என் அழகில் மயங்கி யாரும் `நோ' சொன்னதில்லை. விலைக்கு வாங்க இருக்கும் வீட்டில் கூட நான் அவர் களுடன் உல்லாசமாக இருந்துள்ளேன்.
இதற்கெல்லாம் பகல், இரவு தனி இடம் என்று நான் பார்த்ததில்லை. எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் நான் தயாராக இருப்பேன்.


எனக்கு துணைக்காக ஒரு பாய் பிரண்ட் வைத்துள்ளேன். திட காத்திரமாக இருக்கும் அவன் பிரச்சினை வந்தால் அடித்து, தூக்கி விடுவான்.
இதுவரை ஆயிரம் பேரை கண்டதால் இது பற்றி வெளியே சொல்லியுள்ளேன். என் பணி தொடர்ந்து நடக்கும். இந்த விஷயத்தில் நான் புதிய சாதனை படைக்க போகிறேன் என்று கூறியுள்ளார்.


என்ன சாதனை...??????டிஸ்கி: அமி மைக்கேலை பற்றி ஒரு கவிதை எழுதுமாறு அண்ணன் தண்டோரா என்ற மணிஜியை அன்புடன் கேட்டு கொள்கிறேன்.

Friday, August 14, 2009

ஆகஸ்டு 15

அன்று { 1947 }ன்று { 2009}
அனைவருக்கும் சுதந்திரதின நல்வாழ்த்துகள்

Monday, August 3, 2009

பாப்கார்ன் ஆகஸ்டு 1 - 15


ஆகஸ்டு மாதத்தின் முதல் ஞாயிறு Friendship Day எக்கசக்க SMS கள், ஈமெயில்கள் வந்து மொபைலும் ஜி மெயிலும் ஆக்கிரமித்துள்ளன. நல்லவேளை சனிக்கிழமை இரவு ஒரு உலக சினிமா பார்த்துவிட்டு மொபைலை அணைக்காமல் படுத்திருந்தால் எவனாவது போன போட்டு வாழ்த்து சொல்லியிருப்பான். Sorry Friends... விடியற்காலை 9 மணிக்கு எழுந்திருந்து ஆன் செய்தேன். சரி இந்த கிழமைகள் எப்படி வந்தன. ஒரு சின்ன தகவல்.

முதலில் பாபிலோனியர்கள் ஒவ்வொரு ஏழாவது நாளும் எந்த பணியும் செய்யாமல் மத சம்பந்த நிக்ழ்ச்சிகளுக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக இருக்க வேண்டும் என்று முடிவு செய்தனர். {ரொம்ப நல்லவங்க} ஜீஸ் இனத்தவரும் இதையே பின் பற்றினர். ரோமானியர்கள் எகிப்தியர்கள் கொஞ்சம் மாறுதல் செய்து கிழமைகளுக்கு பெயர் வைத்தனர்.

ஆனால் ஆங்கிலேயர்களே இதற்கு முழு வடிவம் கொடுத்தனர். தாங்கள் வழிபடும் கடவுள்களின் பெயர்களை அடிப்படையாக கொண்டு பெயர்களை சூட்டினர்.

சூரியன் நாளான ஞாயிறை Sunday

திங்கள் நாளாகிய சந்திரன் நாளை மூன் டே { Moon Day } என்று வைத்தனர். இதுவே மருவி Monday ஆனது. அதாவது சந்திரன் நாள்.
போர் கடவுளின் பெயரால் “டிவ்” {Tiw} என்ற பெயரினை (மார்ஸ்) செவ்வாய் நாளே Tuesday ஆனது.
{மெர்குரி} புதன் நாளை தங்களின் கடவுளான ‘ஓடன்’ (Woden) என்ற பெயரால் Wednesday என்றாக்கினர்.

{ஜீபிட்டர்} வியாழன் நாளை இன்னொரு கடவுளான (Thor ) என்ற பெயரால் Thursday என்றாக்கினர்.

{வீனஸ்} வெள்ளி நாளைத் தங்கள் கடவுள் “ஓடியனின்” துணைவியார் ‘பிரிக்’ என்ற பெயரால் Friday என்று ஆக்கி விட்டு ரோமானியர்கள் பின் பற்றிய சனிக்கிழமையை மட்டும் (சாட்டரன்) Saturday என்று அப்படியே பின் பற்றினர். ஆனா இந்தியாவில் இந்த சந்திரன் நாளைதான் நிறைய பேருக்கு பிடிக்கறதேயில்லை. ரைட்டா..??+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

நம்பு... உன்னால் முடியும்.


என்னதான் வாய்ப்பு வசதிகள் இருந்தாலும் சதா அலுத்து கொள்பவர்களை அன்றாடம் சந்திக்கலாம். கடவுளால் நமக்கு எந்த குறையும் இல்லையென்றாலும் இருப்பதை வைத்து கொண்டு நிறைவுடன் வாழ இயலாதவர்கள் இந்த பெண்மணியை கண்டிப்பாக பார்க்க வேண்டும்.

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++


Mr.X தனது வீட்டின் கூரை மேல் ஏதோ ரிப்பேர் வேலை செய்து கொண்டிருந்தார் அப்போது ஒரு சாமியார் அவரை கீழே வருமாறு அழைத்தார் . Mr.X மிகவும் சிரமப்பட்டு கீழே வந்து அவரிடம் “ என்ன விஷயம் எதற்க்காக என்னை கீழே வருமாறு அழைத்தீர்கள் “ என்று கேட்டார்.


அந்த சாமியார் “ நான் உன்னிடம் ஏதாவது தானமாக பெற வந்துள்ளேன்! அதை சத்தமாக கேட்க வெட்கமாக இருந்தது! அதனால்தான் உன்னை கீழே அழைத்தேன், மன்னிக்கவும் “ என்றார்

உடனே Mr.X ” யோவ் எடுப்பது பிச்சை இதில் என்னய்யா ..? போலி கவுரவம்.. சரி பரவாயில்லை என்னுடன் வா” என்று சொல்லிவிட்டு மீண்டும் கூரை மேல் வேகமாக ஏறினார்.
அந்த சாமியாரும் தனது மிகவும் தடித்த உடலை கஷ்டப்பட்டு தூக்க முடியாமல் தூக்கிக் கொண்டு Mr.எக்ஸை தொடர்ந்தார் சாமியார் மேலே வந்து சேர்ந்ததும் , Mr. X மீண்டும் தனது வேலையை பார்க்கத் தொடங்கினார்.


சற்று நேரம் பொறுத்து விட்டு சாமியார் “ எனக்கு என்ன தருகிறீர்கள் ? “ எனக் கேட்டார் பொறுமை இழந்தவராக..

Mr.X “ என்னிடம் கொடுப்பதற்க்கு ஒன்றும் இல்லை” I am sorry ! என்றார்


சாமியார் “ முட்டாள் ! இதை கீழேயே சொல்லித் தொலைக்க வேண்டியதுதானே, ஏன் என்னை இவ்வளவு கஷ்ட்டப்பட வைத்து மேலே அழைத்தாய் !

Mr.X “ என் பக்கத்து வீட்டுக்காரன் கீழே இருந்தான் அவன் முன்னே ஒன்றும் இல்லை என சொல்ல எனக்கு வெட்கமாக இருந்தது அதனால் தான் மேலே வரச்சொன்னேன் மற்றும் நான் கீழே வரப் பட்ட அனுபவத்தையாவது (கஷ்டத்தையாவது) உங்களுக்கு தானமாக கொடுக்கலாம் என்று தான் தங்களை அழைத்தேன்! என்றார்..


+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
காமமா.. ஆமாம்..


வீழும் இருவர்க்கு இனிதே வளியிடை
போழப் படாஅ முயக்கு


காதலர்க்கு மிக இனிமை தருவது, காற்றுகூட இடையில் நுழைய முடியாத அளவுக்கு இருவரும் இறுகத் தழுவி மகிழ்வதாகும்.

Translation:
Sweet is the strict embrace of those whom fond affection binds, Where no dissevering breath of discord entrance finds.

Explanation:
To ardent lovers sweet is the embrace that cannot be penetrated even by a breath of breeze.

Sunday, July 26, 2009

ஜமாலுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்


கணினிக்கு வெளியே நட்புடன் கை நீட்டும் நண்பர் ஜமாலை பற்றி வலை நண்பர்களுக்கு அறிமுகம் தேவையில்லை என்று நினைக்கிறேன்.
மூத்த பதிவர், பிரபல பதிவர், புதிய பதிவர், பெண் பதிவர், மொக்கை பதிவர் என்று பேதமில்லாமல் எல்லோருடைய பதிவுகளையும் படித்து ரசித்து அயராமல் பின்னூட்டமிடும் இனிய மனிதர்.தன் வலையின் பெயரை போலவே அனைவரிடமும் நட்பு பாராட்டும் இணைய நண்பர். அதனால் இவரை “நட்புடன் ஜமால்” என்பது சாலவும் பொருந்தும்.ஜமாலுக்கு இன்று பிறந்தநாள். இந்த இனிய நாளில் வாழ்வில் எல்லா வளமும் பெற்று வாழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.மனதார வாழ்த்துகிறேன்.உங்களையும் வாழ்த்த அழைக்கிறேன்.Saturday, July 25, 2009

கிழக்கு பாட்காஸ்ட்


ஆட்டோ ஒட்டுநர் முதல் Ford Ikon ஒனர் வரை இன்று பயணங்களின் போது FM அலைவரிசைகளை கேட்டு கொண்டே செல்வதை காண முடிகிறது. அவசர யுகத்தில் பொறுமையாக உட்கார்ந்து கேட்க முடியாவிட்டாலும் மொபைல் போனில் பாட்டு கேட்டு கொண்டே வேலையில் ஈடுபடுவதை எங்கெங்கும் பார்க்க நேரிடுகிறது. இன்று சென்னை மட்டுமல்ல இந்தியா முழுவதும் FM ரேடியோ பலத்த வரவேற்பை பெற்றுள்ளது.

ஆனால் பொழுது போக்கான நிகழ்ச்சிகளே எல்லா அலைவரிசைகளிலும் முதலிடம் வகிக்கிறது.
நாளை முதல் ஒரு உபயோகமான நிகழ்ச்சியும் ஆஹா FMல் ஒலிபரப்பாகவுள்ளது.
அது தான் “கிழக்கு பாட்காஸ்ட்”

நாளை 26 ஜூலை 2009, ஞாயிறு முதல் வாராவாரம் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் கிழக்கு பதிப்பகம் வழங்கும் “கிழக்கு பாட்காஸ்ட்” என்ற நிகழ்ச்சி ஆஹா FM பண்பலை வானொலியில் மதியம் 12.00 மணியிலிருந்து 1.00 மணி வரை ஒலிபரப்பாக இருக்கிறது. இதற்காக முதலில் திரு. பத்ரிக்கும் கிழக்கு டீமுக்கும் வாழ்த்துகள்.


இணையத்தில் பாட்காஸ்ட் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். பல்வேறு தலைப்புகளில், பல்வேறு சுவாரசியமான விஷயங்கள் பற்றிய கலந்துரையாடலும் கேள்வி பதில்களும் தான்.


இது ரேடியோவுக்கு மிகவும் பொருத்தமான ஒரு விஷயம். அமெரிக்காவில் Talk Radio நிகழ்ச்சிகள் பல உள்ளன. ஆனால் இந்தியாவில் இதுபோன்ற நிகழ்ச்சிகள் ஏனோ தனியார் வானொலிகளில் கேட்கக் கிடைப்பதில்லை.ஆஹா FM 91.9 மெகாஹெர்ட்ஸில் சென்னையில் ஒலிக்க கேட்கிறது. சென்னையைச் சுற்றி சில கிலோமீட்டர் தூரத்திலும் கேட்கலாம். நாளை ஒலிப்பரப்பாகவுள்ள நிகழ்ச்சி “பங்கு சந்தை” பற்றியது.


இதில் திரு.பத்ரி அவர்களும் “அள்ள அள்ள பணம்” நூலாசிரியர் திரு. சோம வள்ளியப்பனும் பங்கு சந்தை முதலீடுகள் குறித்து உரையாடுகின்றனர். ஆன் லைன் வர்த்தகத்தின் பயன்கள் குறித்தும் நீண்ட நாள் பங்குகளை வைத்திருப்பது குறித்தும் நானும் சிறிது உரையாடினேன்.


இல்லதரசிகளும் வீட்டிலிருந்த படியே ஆன்லைனில் வர்த்தகம் செய்வதின் அனுபவங்கள் குறித்து திருமதி. V.Rajeswari அவர்களும் இரண்டு நிமிடம் Telephonic Interview கொடுத்துள்ளார்கள்.


பங்கு சந்தையில் ஆர்வமுள்ளவர்கள், முதலீடு செய்ய நினைத்து பயத்துடன் விலகி நிற்பவர்கள் அனைவரும் கேட்கலாம்.


சில மொக்கை பதிவுகள் போன்று பல மொக்கை நிகழ்ச்சிகள் FM அலைவரிசைகளில் தொடர்ந்து ஒலித்து கொண்டிருந்தாலும் இது போன்று இன்னும் சில உபயோகமான நிகழ்ச்சிகளும் நிறைய வர வேண்டும் என்பதே என் விருப்பம்.


உங்கள் விருப்பம் என்ன என்பதை பின்னூட்டத்தில் சொல்லுங்கள்.

அதன் ஒலி வடிவம் இங்கே

டிஸ்கி: V.Rajeswari எங்க வீட்டு எஜமானியம்மா

Thursday, July 23, 2009

உடற்பசியும்... அறிவு பசியும்...
அவசியமான அர்த்தங்கள் சூரியனைச் சுற்றிவரும் கோள்களில் பூமி மட்டும்தான் இயற்கையால் ஆசிர்வதிக்கப்பட்டு இருக்கிறது. மற்ற கோள்கள் எல்லாம் உயிர்ப்பு சக்தி அற்று மருகி நிற்க, பூமி மட்டும் உயிரினங்களைப் பிரசவித்து தாய்மைக்குரிய பூரிப்போடு தழைத்துச் செழித்திருக்கிறது. அந்த உயிரினங்களில் தனித்துவமுடையதாக, மற்ற எல்லா உயிரினங்களுக்கும் தலைமை தாங்கக்கூடிய ஆற்றலும் அறிவும் பெற்றதாக இருப்பதுதான் மனித இனத்தின் சிறப்பு.


இந்த ஆற்றலையும் அறிவையும் மனிதனுக்கு அவன் நினைத்த மாத்திரத்திலேயே இயற்கை வழங்கிவிடவில்லை. DNA என்ற புரதச் சுருளில் தோன்றிய உயிரின் தொடக்கம், மனிதன் என்ற உன்னத நிலை வரை பரிணாம வளர்ச்சி அடைந்திருக்கிறது. அப்படிப்பட்ட உயிரைத் தாங்கி இருக்கும் உயிரினங்களின் தலையான பணியே இனப்பெருக்கம்தான்.


இனப்பெருக்கத்தை ஊக்குவிப்பதையே குறியாகக் கொண்டு செயல்படுபவை ஜீன்கள். ஜீன்கள், தன் உயிர் தேவைக்கு ஏற்றவாறு உயிரினங்களில் ஏற்படுத்திய பரிணாம மாற்றங்கள் பல. படர்வன, பறப்பன, ஊர்வன, பாலூட்டிகள்... போன்றவை இவற்றில் அடங்கும். பாலூட்டிகளின் முதிர்ந்த பரிணாமம்தான் மனித இனம். இந்தப் பரிணாமங்களுக்கும், உயிரினங்களின் வாழ்வியல் மாற்றங்களுக்கும் அடிப்படையாக ஜீன்கள் கையில் எடுத்திருக்கும் யுக்திதான் காமம்.


'காமமா!' என அதிர்ச்சியடைந்தாலும், 'ஆமாம்!' என ஒத்துக்கொள்ள வேண்டிய பல அறிவியல் உண்மைகள் இருக்கின்றன. காமம் என்ற ஒன்று இல்லாவிட்டால் இனப்பெருக்கம் இருந்திருக்காது. உயிர்களும் தழைத்திருக்காது. ஆக, வாழ்வியல் தேவைக்கான முக்கிய அம்சமாகக் காமம் இருக்கிறது.


ஆனால், காம உணர்வில் வக்கிரம் நுழைகிறபோதுதான் அது உயிருக்கு எமனாக முடிகிறது. அதற்கும் உளநலவியல் ரீதியான அறிவியல் காரணங்கள் பல இருக்கின்றன. பன்னிரெண்டு வகையான மனித காமத்தையும், அதனால் மனித இனத்தில் ஏற்பட்ட வாழ்வியல் ஏற்ற இறக்கங்களையும் 'அர்த்தமுள்ள அந்தரங்கம்' என்ற இந்தப் புத்தகத்தில் விரிவாக விளக்கி இருக்கிறார் டாக்டர். ஷாலினி.


இந்தப் புத்தகத்தில் மனித இனத்தின் அந்தரங்கம் குறித்த ஆச்சரியமூட்டும் உண்மைகளும், அறிந்துகொள்ள வேண்டிய அடிப்படைத் தகவல்களும் நிரம்ப உள்ளன. காமத்தின் ஆதாரக் குணங்களோடு மனித இனத்தின் அந்தரங்கப் பிரச்னைகளை, உளநலவியல் பூர்வமாக அணுகி இருக்கிறார் நூலாசிரியர்.
இந்தப் புத்தகத்தைப் படியுங்கள் உங்கள் புரிதல்கள் மேலும் விரிவடையும்.


வெளீயீடு: விகடன் பிரசுரம்
பக்கம்: 192
விலை: Rs: 80/-
ஆன்லைனில் வாங்க இங்கே


டாக்டர் ஷாலினி

இவரை பற்றி நமது வலைபதிவர்களுக்கு ஒரளவு அறிமுகம் உண்டு. குழந்தைகளுக்கு ஏற்படும் பாலியல் தொந்திரவுகள் பற்றி சில மாதங்களுக்கு முன் வலை பதிவர்கள் ஏற்பாடு செய்த Good Touch Bad Touch என்ற கருத்துரையாடலில் கலந்து கொண்டு பல ஆலோசனைகளை வழங்கியவர்.


சென்னை மருத்துவ கல்லூரியில் இளங்கலை மருத்துவத்தை பயின்ற டாக்டர் ஷாலினி முதுகலையில் மன நல மருத்துவத்தை மதுரை மருத்துவ கல்லூரியில் முடித்தவர். தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலை கழகத்தில் “மகளிர் மனநலம்” குறித்த ஆராய்ச்சியில் முனைவர் பட்டம் பெற்றவர்.


தற்போது சென்னை மருத்துவ கல்லூரியின் மன நல பிரிவில் ஆராய்ச்சியாளராக பணி புரிந்து வருகிறார். மேலும் ‘உளநல சேவை மற்றும் ஆராய்ச்சி மையம்’ என்ற அமைப்பை நிறுவி அதன் இயக்குநராகவும் இருந்து வருகிறார். மனம் நலம் குறித்த பல தொலைகாட்சி நிகழ்ச்சிகளில் நீங்கள் டாக்டரை பார்த்திருக்கலாம்.


தமிழில் இதுவரை எழுதிய நூல்கள் டீன் ஏஜ் பிரச்ச்னைகள், ஆளை அசத்தும் 60 கலைகள், அந்தரங்கம் இனிமையானது, ஆண் பெண், பெண்கள் மனசு, பெண்ணின் மறுபக்கம்.


தமிழில் இவரது வலைப்பூ இங்கே

Tuesday, July 21, 2009

பாப்கார்ன் ஜீலை 16 - 30


மொபைல் பேசி கொண்டே காரும் இரண்டு சக்கர வாகனங்களும் ஒட்டும் போக்கு நாளுக்கு நாள் சென்னையில் மட்டுமல்ல தமிழகம் முழுவதும் அதிகரித்து கொண்டே வருகிறது. என்னதான் காவல்துறை தெருவோரங்களில் மறைந்திருந்து பிடித்தாலும் அவர்களுக்கும் டிமிக்கி கொடுத்து விட்டு என்னவோ கோட்டையை பிடிக்க பிளான் போடுவது போல சில அறிவு ஜீவிகள் பேசி கொண்டே போவதும் அரட்டை அடிப்பதும் கூட நடக்கிறது.
நடப்பாண்டில் தமிழகத்தில் மட்டும் சாலை விபத்தில் இறந்தோரின் எண்ணிக்கை 13 ஆயிரத்தை தொட்டுவிடும் என்பது அதிர்ச்சியான தகவல். குடித்து விட்டு வாகனம் ஓட்டுவதாலும் நெடுஞ்சாலைகளில் விபத்து அதிகரிக்கிறது.

ஆண்டு {உயிரிழப்புகள்}

2004 {9,507}
2005 {9,760}
2006 {11,009}
2007 {12,036}
2008 {12,784}

சாலை விதிகளை மீறுவது, சட்டத்தை மதிக்காதது போன்றவற்றை கண்டு கொள்ளாமல் வாகன சோதனை சாவடிகளில் “வசூல் வேட்டை”யில் குறியாய் இருக்கும் அதிகாரிகளின் அலட்சிய போக்கு மாற வேண்டும். மக்களும் திருந்த வேண்டும். திருந்தமாட்டேன் என்று அடம் பிடிப்பவர்கள் இந்த படத்தை பார்க்க வேண்டும்.


*********************************************************

தன்னம்பிக்கை ஓவியங்கள்
மேலே உள்ள இந்த அழகான பென்சில் ஓவியங்களில் அப்படி என்ன சிறப்பு..?
இங்கே பாருங்கள் தெரியும்.


****************************************************************


Mr.X கப்பலில் வேலை கேட்டு விண்ணப்பித்து இருந்தார்.

அவர் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டார்.

அவரிடம் நேர்முகத் தேர்வு நடத்தியவர் கேட்டார்


“புயல் வருமானால் என்ன செய்வீர் ?என்று .

அவர் சொன்னார் “நங்கூரத்தை நாட்டுவேன் “என்று

“முன்னைவிட பெரியதாய் இன்னொரு புயல் வருகிறது அப்போது நீர் என்ன செய்வீர் ?”

“நான் இன்னொரு நங்கூரத்தை நாட்டுவேன் “என்றார் அவர் .இப்படி அது சென்று கொண்டு இருந்தது .

“…பத்தாவது புயல் !”

Mr.X சொன்னார் “நான் இன்னொரு நங்கூரத்தை நாட்டுவேன் “

அந்த மனிதர் கேட்டார் .”ஆனால் இத்தனை நங்கூரத்தை நீர் எங்கிருந்து பெறுவீர் ?”என்று

அதற்கு Mr.X சொன்னார் .”தாங்கள் எங்கிருந்து புயல்களை பெறுவீர்களோ அங்கிருந்துதான் “


*******************************************************

காமமா..?? ஆமாம்...
தம்மில் இருந்து தமதுபாத்து உண்டற்றால்

அம்மா அரிவை முயக்கு. (1107)


தானே உழைத்துச் சேர்த்ததைப் பலருக்கும் பகுத்து வழங்கி உண்டு களிப்பதில் ஏற்படும் இன்பம், தனது அழகிய காதல் மனைவியைத் தழுவுகின்ற இன்பத்துக்கு ஒப்பானது.


Translation:
As when one eats from household store, with kindly grace
Sharing his meal: such is this golden maid's embrace.


Explanation:
The embraces of a gold-complexioned beautiful female are as pleasant as to dwell in one's own house and live by one's own (earnings) after distributing (a portion of it in charity).