






கோவில் நகரமான கும்பகோணத்தில் ஆர்யா, அவருடை ய அம்மா, அண்ணன், தங்கையுடன் வாழ்ந்து வருகிறார். ஆர்யாவின் அண்ணன் சரவணன் கால்நடை மருத்துவர்.
ஆர்யாவின் அண்ணனுக்கும் விஜயலட்சுமிக்கும் திருமணம் முடிவாகிறது. விஜயலட்சுமியின் தங்கைதான் நயன்தாரா என்று ஆர்யாவுக்கு தெரிய வர, சந்தோஷத்தில் குதிக்கிறார்.
நயன்தாராவை அடிக்கடி சந்தித்து பேசுகிறார். கனவு சீனில் பாட்டு பாடுகிறார். ஒரு சமயத்தில் அவரிடம் திருமணம் பற்றி பேசுகிறார். அதற்கு நயன்தாரா, என் அக்காவிடம் அதைப் பற்றி பேசு என்கிறார். ஆரியா அண்ணியான விஜயலட்சுமியிடம் நயன்தாரா மீதுள்ள காதலை பற்றி சொல்ல, விஜயலட்சுமி கோபமாகி, இது போன்று படிப்பை முடிக்காத வேலை வெட்டி இல்லாத ஒரு பையனுக்கு உன் தங்கையை திருமணம் செய்து கொடுப்பாயா.? என்று கேள்வி கேட்க வீட்டை விட்டு வெளியேறுகிறார்.வாழ்க்கையில் ஜெயித்து தன் காதலியை கைப்பிடிக்கிறாரா என்பதே மீதிக்கதை.!!!!
பாஸ் (எ) பாஸ்கரனாக,வரும் ஆர்யா வீட்டிலும் வெட்டி பையனாக பேர் எடுக்கும் கதாபாத்திரத்தில் கனக்கச்சிதமாக பொருந்தி நடித்திருக்கிறார். அவருடைய டைமிங் ரியாக்ஷன்ஸ் அருமையாக அமைந்திருக்கு... கைதட்டலை அள்ளுகிறார். அவர் கூலிங் கிளாஸ் மாட்டுவதும், கழட்டுவதும் என தன்னுடைய ஒவ்வொரு மேனரிசத்திலும் கதையின் நகைச்சுவை பாதிப்பு இருப்பதால். நல்ல முத்திரையான நடிப்பை கொடுத்திருக்கிறார் ஆர்யா. நான் கடவுள், மதராஸ பட்டிணம் என்று வித்தியாசமான கதைகளங்களில் நடிப்பில் மிளிர்ந்த ஆர்யா காமெடியிலும் கலக்குகிறார்.
நடிப்பிற்கு அவ்வளவாக வாய்ப்பு இல்லாவிட்டாலும் நயன்தாராவும் தன்னுடைய கதாபாத்திரத்தை ஒரளவுக்கு செய்திருக்கிறார்.அம்மணிக்கு தமிழில் இது கடைசி படம் என்று கோடம்பாகத்தில் பேச்சு.. Good decision...
ஆரியாவிடம் மாட்டிக்கொண்டு படாத பாடு படும் சந்தானத்தின் காமெடியில் தியேட்டரில் சிரிப்பு மழை. அவரின் டைமிங் சென்ஸ்க்கு ஒவ்வொரு முறையும் கைதட்டலால் தியேட்டர் அதிர்கிறது. படம் முழுக்க வரும் அவர் படத்தின் மிகப்பெரிய பலம் என்று அடித்து சொல்லலாம். தமிழில் சில நடிகர்கள் காமெடியன்களை படம் முழுக்க வருவதை விரும்புவார்களா தெரியவில்லை..? ஆரியா விட்டு கொடுத்து இருக்கிறார். Nice..
ஆர்யாவின் அண்ணன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சுப்பு (பஞ்சு அருணாசலத்தின் மகன்) நகைச்சுவையில் மிளிர்கிறார். அவருடைய எதார்த்த நடிப்புக்கு நல்ல ரெஸ்பான்ஸ். அவரது மனைவியாக விஜயலட்சுமி அழகாகவும் இருக்கிறார். அருமையாகவும் நடிக்கிறார். வட்டிக்கு விடும் நான் கடவுள் இராஜேந்திரன் இதில் காமெடியிலும் ஜொலிக்கிறார்.
கெளரவ கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் மனதில் நின்று விடுகிறார் ஜீவா. நயன்தாரா தந்தையாக வரும் சித்ரா லட்சுமணன், ஆர்யா தாயாக வரும் லஷ்மி ராமகிருஷ்ணன் என படத்தில் நடித்திருக்கும் அனைவரது கதாபாத்திரமும் இயல்பு. அனைவரும் தங்கள் கதாபாத்திரத்தை உணர்ந்து நிறைவாக செய்திருக்கின்றனர்.
அனைத்து பாடல்களையும் நா.முத்துகுமார் எழுதியிருந்தாலும் யுவன் சங்கர் ராஜா இசையில் யார் இந்த பெண்தான்… என்ற பாடல் மட்டும் சுமாராக இருக்கிறது. மற்ற பாடல்கள் மனதில் நிற்கவில்லை. பல இடங்களில் பழைய படத்தின இசையை காட்சிக்கு பொருத்தமாக தந்திருப்பது நல்ல ஐடியா.. பாடல்களை விட இதைதான் தியேட்டரில் ரசிகர்கள் மிகவும் ரசிக்கிறார்கள்..
கும்பகோணத்தை ஒரு முறை சுற்றி வந்த திருப்தியை சக்தி சரவணனின் ஒளிப்பதிவு உணர்த்துகிறது. ஆனால் ஒவ்வொரு பாடல் காட்சியிலும் ரசிக்க வைக்கின்ற பேக்ட்ராப் கலரில் பிரேம்களில் அசத்தல் என்று கண்டிப்பாக சொல்லியாக வேண்டும்..
குறைகளாக எனக்கு தெரிந்தது.. கதையில் எந்த லாஜிக்கும் சுத்தமாக இல்லை. ஆனால் அதையெல்லாம இனிமேல் தமிழ் சினிமாவில் எதிர்பார்க்க முடியுமா தெரியவில்லை.?? யுவனின் இசை ஈர்ப்பு இல்லை.. சில மிகைப்படுத்தபட்ட காட்சிகள் குறிப்பாக தேவையேயில்லாத ஷகிலா ...
ஒவ்வொரு இயக்குநருக்கும் இரண்டாவது படம் தான் ஆசிட் டெஸ்ட்...முழுக்க முழுக்க சிரிக்க வைக்க எடுத்திருக்கும் முயற்சியில் ஜெயித்திருக்கிறார் இயக்குநர் ராஜேஷ்.வாழ்த்துகள்..
ஆறடி தடித்த முரட்டு வில்லன்களோ, டாடா சுமோ சேஸிங்களோ,.வீச்சறுவா, வெட்டு குத்து காட்சிகளோ, இல்லாது உருவாகியிருப்பதால் குடும்பத்துடன் பார்க்கத் தகுதியான திரைப்படம்! ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’
Santhanam Rocks !!!! நண்பேன்டா...
20 comments:
Test..
I am back..
பதிவின் கடைசி மூனு வரி செம பஞ்ச்...
நன்றி ஜாக்கி..
நண்பேன்டா :) :)
யப்பா ரொம்ப நாள் கழிச்சு நந்தவனத்துல ஒரு பூ பூத்திருக்கு .. ரொம்ப சந்தோஷம்...
பாக்கலான்னு சொல்றீங்க. பார்த்துருவோம்.. சீக்கிரம் இன்னும் நிரைய உலக படங்கள பத்தி எழுதுங்க..
Butterfly Rocks !!!! நண்பேன்டா...
அண்ணே உடம்பு சரியில்லையா?. இல்ல புதுசா இடுகை போட்ருகீங்க.அதான் கேட்டேன்.
:)
அண்ணா நீங்க பதிவு போட்டிருக்கீங்க? அப்ப இது உலக திரைப்படமாண்ணா?
:-)
நண்பேண்டா... இது படத்துல ஒரு ஆறுமுறை வரும்ன்னு நினைக்கிறேன், அத்தனையும் செம்ம....:-)
எனக்கும் கடைசி மூனு வரி :)
pass பாஸ் pass
நண்பேண்டா
சூப்பர் மாம்ஸே
டைம்பாஸ்..ராஜேஷ் பாஸ்
நன்றி கண்ணன்.
விரைவில் போடுகிறேன்.
மரா. ராம ராம..
ராஜகோபால்.. மனசு சரியல்லை அதான் போட்டேன்.. போடக்கூடாதுன்னா சொல்லிடு..
நன்றி முரளி. அப்படியிருந்தா இங்கே எழுதியிருக்க மாட்டேன்.
தம்பி..டா..
நன்றி அசோக்..
நல்லாயிருக்கியா..??
மணிஜீ. உங்க மேல பயங்கர கோவத்தில இருக்கேன்..
Nalla vimarsanam.
ரொம்ப நாளாயிற்று சூரியா .. நலமா
என்ன ஆனது உங்களின் கம்ப்யூட்டர் ...
நானும் பார்த்தேன் செம ஜாலி படம்.
ராஜேஷ் பாஸ் தான்.
என்னது மணிஜி மேல கோபமா
நாங்க எல்லாம் நம்பிட்டோம்
அருமை
Post a Comment