Thursday, December 31, 2009

புத்தக கண்காட்சியும் பதிவர் சந்திப்பும்...


நேற்று புத்தக கண்காட்சி துவக்க விழாவிற்கு சென்று விட வேண்டும் என்று எண்ணியிருந்தேன். கூட்டம் அதிகமாக இருக்குமா என்று நினைத்து அதிஷாவுக்கு போன் போட்டேன். அவரோ அண்ணே.. அசைன்மெண்ட் விஷயாமாக திண்டுக்கல் அருகே இருக்கேன்ன்னு பல்பு போட்டார்.



இன்று எப்படியாவது போக வேண்டுமென்று எண்ணி சென்றும் விட்டேன். இந்த முறை புத்தக ஸ்டால்களின் அளவுகளை குறைத்து நடக்க நிறைய இடம் விட்டிருக்கிறார்கள்.



முதலில் ஈர்த்தது விகடன் தான். ஏற்கனவே குறித்து வைத்திருந்த நண்பர் ரவிபிரகாஷ் அவர்களின் மொழியாக்கத்தில் வெளியான இரண்டு நூல்களும் (Stay Hungry Stay Foolish & A Diplomat Reveals) நூல்களும் இன்ன பிற புதிய விகடன் வெளீயிடுகளையும் வாங்கி கொண்டு மேய்ந்து கொண்டிருந்தேன்.



பதிவர்களின் புத்தகங்களை வெளியிட்டுள்ள வம்சியை தேடினேன். அய்யனாரின் புத்தகங்களை வாங்க ஆவலாய் சென்றேன். சில இன்னும் வரவில்லையாம். ஸ்டால்காரர் சனிக்கிழமை அனைத்தும் கிடைக்கும் என்றார். விஸ்வாமித்திரன் மற்றும் கிடைத்த புத்தகங்களை வாங்கி கொண்டு கிழக்கு பக்கமாய் சென்றேன்.



பள்ளி கூட பருவத்தில் வரலாறு ரொம்ப பிடிக்கும். அது மீண்டும் சில மாதங்களாய் தொற்றி கொண்டு வருகிறது. முகிலின் செங்கிஸ்கான், யூதர்கள் மற்றும் மைசூர் மகாராஜா படித்ததிலிருந்து நிறைய வரலாறு படிக்க வேண்டும் என்று ஆவல் அதிகரித்திருக்கிறது. {அப்போ படிச்சிருந்தா மார்க்காவது வந்திருக்கும்}



புதிய வெளீயிடான முகலாயர்களை (விலை 250/-) வாங்கினேன். முகிலின் அடுத்த பிரம்மாண்டமான படைப்பு அகம் புறம் அந்தப்புரம் இன்னும் அரங்கேறவில்லையாம். புகைப்படத்திலேயே தலையணை சைஸில் தெரிகிறது. (1392 பக்கங்கள்) வாங்க வேண்டிய லிஸ்டில் இருக்கிறது.





கிழக்கில் இன்னும் நிறைய புத்தகங்கள் வெளியிட்டு இருக்கிறார்கள். கமலின் வாழ்க்கை வரலாறு அட்டை படமே அசத்தல். உடனே வாங்கி விட்டேன்.


பா. தீனதயாளன் எழுத்து நடை எனக்கு மிகவும் பிடிக்கும். சின்னப்பா தேவரின் வாழ்க்கை வரலாறு புத்தகத்தை விழுந்து விழுந்து சிரித்து படித்திருக்கிறேன்.



காலச்சுவடு பதிப்பகத்தில் சிலவற்றை வாங்கினேன். அடுத்து உயிர்மை பதிப்பகத்தில் எஸ்.ரா, சாருவின் புத்தங்கள் சிலவற்றை வாங்கி கொண்டு இருக்கும் போது இருவர் அருகில் வந்து நீங்கதானே butterfly Surya ..? என்றதும் ஒரு அளவில்லாத மகிழ்ச்சி.



ராஜகோபாலும் (எறும்பு) ஷங்கர் (பலாப்பட்டறை) யும் அறிமுகப்படுத்தி கொண்டவுடன் ஈரோடு சந்திப்பு பற்றி தொடங்கி பல விஷயங்களை பேசி கொண்டே சுற்றி திரிந்தோம். முருகன் சேதி சொல்லிட்டாரோ என்னவோ..?? திடீரென்று உண்மைதமிழன் வந்து சேர்ந்தார். சிறிது நேரத்தில் லக்கியும் வந்ததும் மகிழ்ச்சி அதிகரிக்க மீண்டும் ஒரு ரவுண்ட் அடித்து கொண்டிருந்தோம். எழுத்தாளர் பா.ராகவனை சந்தித்ததும் கால் வலி தீர ஒரிடத்தில் அமர்ந்து சில பயனுள்ள புத்தகங்கள் பற்றியும் பதிவர்கள் பற்றியும் ராகவனுடன் பேசி விட்டு அங்கிருந்து கிளம்பினோம்.


உண்மைதமிழன் திரு. முக்தா சீனிவாசனை அறிமுகம் செய்தார். நண்பர் கிருஷ்ண்பிரபு வின் பதிவுகளிலிருந்தும் அவரது மின்னஞ்சலில் அனுப்பிய புத்தக குறிப்புகளையும் எடுத்து செல்ல மறந்து விட்ட படியாலும் பர்ஸ் காலியானதாலும் நண்பர்களை சந்தித்த மனநிறைவோடு வீடு நோக்கி பயணமானேன்.



அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.




டிஸ்கி 1 : சில புகைப்படங்கள் துளசி டீச்சர் பதிவிலிருந்து சுட்டது.



டிஸ்கி2: பா.ராகவன் உண்மைதமிழனுக்கு அளித்த அட்வைஸ் இங்கே.

53 comments:

Anonymous said...

ம்ம்ம். நினைத்தவுடன் புத்தக கண்காட்சி... (கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்)
பொறாமையெல்லாம் இல்லை. :)

துளசி கோபால் said...

சுட்ட படம் நோ ப்ராப்ளம்.

எப்படியோ வாங்குன பட்டியல் தெரிஞ்சுருச்சு. நான் வரிசையில் முதல் ஆளா இருக்கேன். நீங்க படிச்சுமுடிச்சதும் இரவல் வாங்கிக்க:-)

கட்டாயம் திருப்பிக் கொடுத்துருவேன் என்று பாண்டுலே கையெழுத்துப் போட்டுத்தருவேனாக்கும்!

butterfly Surya said...

நன்றி மயில்.

butterfly Surya said...

வாங்கின பட்டியல் இன்னும் இருக்கு.

முதல் ஆளா உண்மைதமிழன் ரிசர்வ் பண்ணிட்டார். இருந்தாலும் பாண்ட் எல்லாம் வேண்டாம். உங்க வீட்டில் கோபால் சாருடன் ஒரு சூப்பர் லன்ச் வேண்டும்.

டீல் ok va..?

அண்ணாமலையான் said...

உங்க வாழ்த்துக்கு ரொம்ப சந்தோஷப்பட்டேன்.. உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்...

துளசி கோபால் said...

டீல் ட்ரிப்புள் ஓக்கே:-)

*இயற்கை ராஜி* said...

ம்ம்ம்.ம்ம்ம்.ம்ம்ம்.ம்ம்ம்.

கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

காதில புகை வருது

butterfly Surya said...

நன்றி அண்ணாமலையான்.

butterfly Surya said...

நன்றி டீச்சர்.

சிலவற்றை படித்து முடித்ததும் வருகிறேன்.

butterfly Surya said...

நன்றி இயற்கை. காதில் புகையா..??

hahahha.. cool.

விக்னேஷ்வரி said...

நம்ம ஊர்ல உக்காந்திட்டிருக்கீங்க நீங்கள்லாம். நடத்துங்க...

உண்மைத்தமிழன் said...

[[[பா.ராகவன் உண்மைதமிழனுக்கு அளித்த அட்வைஸ்]]]

அடுத்தவன் மிளகா கடிக்கிறான்னா பக்கத்து வீட்டுக்காரனுக்கு பரம சந்தோஷமாம்..! அப்படியிருக்கு இந்த லின்க் மேட்டரு..!

நல்லாயிருங்கண்ணே..!

க.பாலாசி said...

புத்தகத்திருவிழாவுக்கு போனதுமாதிரியும் ஆச்சு... பதிவுலக எழுத்தாளர்களை சந்தித்த மாதிரியும் ஆயிற்று. நல்ல அனுபவம். அகம், புறம், அந்தப்புரம் புத்தகத்தை பார்த்தாலே பயமா இருக்கே.

Ganesan said...

வலையுலகப்படைப்பாளிகள்—புத்தாண்டு தினமணி கட்டுரை

http://kaveriganesh.blogspot.com/2009/12/blog-post_31.html

Unknown said...

புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

ungalrasigan.blogspot.com said...

//நண்பர் ரவிபிரகாஷ் அவர்களின் மொழியாக்கத்தில் வெளியான இரண்டு நூல்களும் (Stay Hungry Stay Foolish & A Diplomat Reveals) நூல்களும் இன்ன பிற புதிய விகடன் வெளீயிடுகளையும் வாங்கி கொண்டு மேய்ந்து கொண்டிருந்தேன்.// ஐஸ்ஸ்ஸ்... அட, அதில்லீங்க! முதல்ல நம்ம புக்கை வாங்கினீங்கன்னு எழுதியிருந்ததைப் படிச்சவுடனே என் மனசு, உடம்பு எல்லாம் ஐஸ்ல வெச்சாப்ல சில்லுனு குளிர்ந்து போச்சுன்னு சொல்ல வரேன்!

Cable சங்கர் said...

புத்தாண்டு வாழ்த்துக்கள்.

butterfly Surya said...

நன்றி விக்னேஷ்வரி. நீங்களும் வந்திருக்கலாம்.

butterfly Surya said...

உண்மையாரே.. உங்களை இந்த வருடத்தின் கடைசி நாளி சந்தித்ததை விட சந்தோஷம் வேறு என்ன இருக்க முடியும்.

butterfly Surya said...

நன்றி பாலாசி. அகம் புறம் வாங்கி படிங்க. பயமெல்லாம் போயிடும்.

butterfly Surya said...

நன்றி கணேஷ். பார்த்தேன். பகிர்விற்கு நன்றி.

butterfly Surya said...

நன்றி சந்துரு. புத்தாண்டு வாழ்த்துகள்.

butterfly Surya said...

நன்றி ரவி பிரகாஷ் சார். மார்கழி மாசத்துல ஐஸ்ஸா..??

butterfly Surya said...

நன்றி கேபிளாரே..

ப்ரியா கதிரவன் said...

ஆளாளுக்கு புத்தக கண்காட்சி போயிட்டு வந்து வெறுப்பெத்தறீங்க. வெளியூர்காரங்க நாங்கல்லாம் இப்டி படிச்சு, வயித்தெரிச்சல் பட்டுக்க வேண்டியது தான்.நல்லா இருங்க.
:-)
Thanks for sharing.

butterfly Surya said...

ப்ரியா, உங்களை மாதிரி வர முடியாதவங்களுகாக தான் பதிவே.

Cool..

Anonymous said...

எப்படியோ வாங்குன பட்டியல் தெரிஞ்சுருச்சு. நான் வரிசையில் முதல் ஆளா இருக்கேன். நீங்க படிச்சுமுடிச்சதும் இரவல் வாங்கிக்க:-)

கட்டாயம் திருப்பிக் கொடுத்துருவேன் என்று பாண்டுலே கையெழுத்துப் போட்டுத்தருவேனாக்கும்!

லிஸ்டில் நானும் இருக்கேன்...:))

நட்புடன் ஜமால் said...

சில நிகழ்வுகளை இப்படி பதிவேற்றுகையில் படித்து சந்தோஷம் கொள்கிறோம்.

பா.ரா வை பார்க்கனும் நீண்ட நாள் அவா இருக்கு - எப்ப வாய்ப்பு கிடைக்குதுன்னு பார்ப்போம்.

நன்றி மாம்ஸ் ...

அகநாழிகை said...

புத்தாண்டு வாழ்த்துகள் சூர்யா.

உலக சினிமா பற்றிய பதிவுகளை உங்களிடம் மீண்டும் எதிர்பார்க்கிறேன்.

- பொன்.வாசுதேவன்

butterfly Surya said...

நன்றி ஜமால்.

சென்னை வரும் போது நிச்சயம் பார்க்கலாம்.

butterfly Surya said...

நன்றி வாசு.

முயற்ச்சிக்கிறேன்.

Thenammai Lakshmanan said...

Thanks for sharing surya
happy new year 2010

butterfly Surya said...

நன்றி தேனம்மை.

உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

Jerry Eshananda said...

புத்தாண்டு வாழ்த்து சூர்யா.

Jerry Eshananda said...

yesterday i telephoned you surya,unfortunately your mobile was switch off.

butterfly Surya said...

நன்றி ஜெரி. புத்தாண்டு வாழ்த்துகள்.

butterfly Surya said...

பெரும்பாலும் மொபைல் சுவிட்ச் ஆப் செய்வதில்லை. முந்தைய நாள் இரவு மூன்று படம் பார்த்து விட்டு அசதியால் தூங்கி விட்டேன்.

priyamudanprabu said...

பள்ளி கூட பருவத்தில் வரலாறு ரொம்ப பிடிக்கும். அது மீண்டும் சில மாதங்களாய் தொற்றி கொண்டு வருகிறது. முகிலின் செங்கிஸ்கான், யூதர்கள் மற்றும் மைசூர் மகாராஜா படித்ததிலிருந்து நிறைய வரலாறு படிக்க வேண்டும் என்று ஆவல் அதிகரித்திருக்கிறது. {அப்போ படிச்சிருந்தா மார்க்காவது வந்திருக்கும்}

....

ha haa
புத்தகங்களை நானும் குறித்து கொண்டேன்

பின்னோக்கி said...

நீங்க சொன்னது மாதிரி, 10 ஆம் வகுப்புல மொகலாயர் ஆட்சியின் வீழ்ச்சிக்கு காரணங்களை மனப்பாடம் செய்து மார்க் வாங்கி விட்டு, வந்தார்கள் வென்றார்கள் படித்தவுடன், ஏன் நம் பாட புத்தகங்கள் அந்த மாதிரி எழுதியிருக்கக் கூடாது என நினைத்தேன். அப்பொழுது படிக்க கசந்தது, இப்பொழுது காசு கொடுத்து வாங்கி படிக்கிறேன். பரீட்சை என்ற நிர்பந்தம் இல்லாததால் படிக்க விருப்பம் அதிகரிக்கிறது என நினைக்கிறேன்.

அகம்-புறம் எதைப் பற்றி ?. புத்தகம் பெரிய சைஸில் இருக்கிறது.

புத்தகத்தின் விலையும் அதிகரித்துள்ளது. கிழக்குப்பதிப்பகம் ஒரு பக்கம் 0.45 பைசா என்ற அளவில் விலை நிர்ணயம் செய்கிறது.

உயிர்மை பேப்பர் குவாலிட்டியினால் அதிக விலைக்கு விற்கிறது. திருமகள் பதிப்பகம் பரவாயில்லை.

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

Thanks for sharing Surya
happy new year 2010

Anonymous said...

புக் கடன் குடுக்கறதா புது வருட தீர்மானம் ஏதாவது எடுத்துருக்கீங்களா :)

புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!!!!

வெற்றி said...

நண்பா பாடங்களை சுவையாக அமைக்கவும்,சொல்லித்தரவும் இங்கே ஆசிரியர்கள் இல்லை..
வந்தார்கள் வென்றார்கள் படித்தவுடன் மிகுந்த கொதிப்பாய் இருந்தது பள்ளியில் ஏன் பாட அமைப்பு இதைப் போல இல்லையென...

பரிசல்காரன் said...

வயித்தெரிச்சலைக் கொட்டிக்கறீங்கய்யா..

நல்லா இருங்க!!!

butterfly Surya said...

நன்றி பிரபு.

butterfly Surya said...

நன்றி பின்னோக்கி. நீங்கள் சொல்வதும் சரிதான். மனப்பாடம் செய்யும் நோக்கில் படித்ததால் புத்திக்கு ஏறவில்லை. அது அந்த காலத்தின் கட்ட்யாம் போலும். இப்போதுதாவது படிக்க கிடைத்தது மகிழ்ச்சியே.

அகம் புறம் அந்தப்புரம் இந்திய சமஸ்தானங்களை பற்றியும் அரசர்கள் பற்றியும் முகிலின் கடுமையான உழைப்பு. குமுதம் ரிப்போர்டரில் தொடராக வந்தது. மேலும் பல சுவாரசியமான விஷயங்களுடன் முழு புத்தகமாக வந்திருப்பதாக கூறினார்.


முகில் எனது இனிய நண்பர். ஆழ்ந்த அவதானிப்பும் நேரில் பார்த்தால் நம்ப முடியாத எளிமையும் கொண்டவர்.

கண்டிப்பாக படியுங்கள்.

கிழக்கு மற்றும் உயிர்மையின் புத்தகங்கள் தரமானதாக இருப்பினும் சில புத்தகங்கள் விலை சற்று கூடுதலாகவே இருப்பதாகவே தோன்றுகிறது. என்ன செய்ய..??

ஊருக்கு இரண்டு டாஸ்மார்க்கும்
10 லேடிஸ் பியூட்டிபார்லரும் தான் நிச்சயம்.

நூலகங்கள் எங்கே..?? வாழ்க தமிழகம்..

butterfly Surya said...

நன்றி ஜெஸ்வந்தி..

butterfly Surya said...

நன்றி சின்ன அம்மணி. எந்த புது வருட தீர்மானமும் நான் எடுப்பதில்லை. அதில் நம்பிக்கையுமில்லை.

புக் கடன் கொடுப்பதில் விருப்பமே. (திரும்பி வருமாயின்)

butterfly Surya said...

நன்றி வெற்றி. அது அப்படிதான்.

butterfly Surya said...

நன்றி பரிசல். உங்களின் புத்தகம் வாசிக்கும் விருப்பமும் இசையின் அனுபவமும் அறிவேன்.

ஒரு விசிட் அடிக்கலாமே..?? இந்த வாரம் முயற்ச்சியுங்கள்.

Rajalakshmi Pakkirisamy said...

:) :) :)

நல்லா இருங்க

சு.செந்தில் குமரன் said...

அன்பு சூர்யா
நான் எனது வலைப்பூவில் நான் வாங்கிய புத்தகங்களை
வெளியிட்டிருந்தேன். நீங்கள் எழுதியுள்ள விதம் ஒரு அனுபவ பகிடர்வாக உள்ளது.
நன்றி

முத்துலெட்சுமி/muthuletchumi said...

இங்க நடந்துட்டிருக்க புக் டீல் நல்லா இருக்கே.. :)

இப்னு அப்துல் ரஜாக் said...

very intersting