Monday, December 7, 2009

இயக்குநர் சேரனுடன் ...நான்..

மூன்று வாரங்களுக்கு முன் இயக்குநர் சேரனிடமிருந்து ஒரு அலைபேசி அழைப்பு. எனது உலக சினிமா வலைப்பூ பற்றி ஆர்வமாக பேசி மகிழ்ச்சியும் வாழ்த்தும் தெரிவித்தார். எனக்கும் அளவற்ற மகிழ்ச்சி. பின்பு அடிக்கடி பேசியும் பகிர்ந்தும் கொண்டிருந்தார்.
இன்று நேரில் சந்திக்க அழைக்கவும் செய்தார். சந்தித்தேன். முதலில் கேரள உலக திரைப்பட விழாவில் தேர்வாளராக நியமிக்க பட்டுள்ளதற்கு வாழ்த்து தெரிவித்தேன். பின்னர் தமிழ் வணிக சினிமா, உலக சினிமா, இன்றைய சமூக சூழல், வலைப்பூக்கள், பிளாக்கர்ஸ் அவரது அடுத்த படைப்பு என்று ஒரு நீண்ட உரையாடல். அருமையான மாலை பொழுதாய் அமைந்தது.
தமிழ் சினிமாவின் அசுர வளர்ச்சியும் ஆனால் அது மொத்தம் வணிகம் சார்ந்ததாய் மாறி வருவதை குறிப்பிட்டார். உலக திரைப்படங்கள் மீதும் குறிப்பாக இரானிய திரைப்படங்கள் மீது அவருக்கு உள்ள ஆர்வமும் மதிப்பும் அளவற்றது. மஜித் மஜிதி, கிம் கி டக் பற்றி வியந்து பேசியதுடன் கொரிய திரைபப்டஙகளின் தொழி நுட்பங்களை சிலாகித்தார். கேரள திரைப்பட விழாவில் பங்கு பெறும் உலக படங்கள் குறித்து பல குறிப்புகளை கூறி அசத்தினார்.
பின்னர் வலைப்பூக்கள் பற்றி பேச ஆரம்பித்ததும் அவர் டென்ஷன் ஆகி விடுவாரோ..? என்று எனக்கு கொஞ்சம் உள்ளூற உதறல். ஆனால் மிக அமைதியாக அனைத்து வலைப்பூக்கள் பற்றி நிறைய பேசினார். எண்ணற்ற பிளாக்கர்கள் உருவாகி வருவது மகிழ்ச்சி என்றாலும் கட்டற்ற சுதந்திரத்தினால் சில வலைப்பூக்களால் சிலருக்கு வலிப்பூக்களாகியிருக்கிறது என்பது அவரது பேச்சில் தெரிந்தது. எப்படியிருந்தாலும் வலைப்பதிவர்களை சந்திக்க ஆர்வமாய் இருப்பதாக தெரிவித்தார்.
தற்போது கேரள திரைப்படவிழாவிற்கு செல்வதாக சொன்னதால் புது வருடத்தில் {ஜனவரியில்} நேரம் ஒதுக்குமாறும் நமது மாபெரும் தமிழ் வலைப்பதிவர்கள் மாநாட்டில் { பதிவர் சந்திப்பை தான் ஒரு பில்டப்பா மாநாடுன்னு சொல்றேன்} பங்கு கொள்ள வேண்டும என்று அனைத்து பதிவர்கள் சார்பாக அனுமதி கோரியுள்ளேன். விரைவில் நல்ல செய்தி வரும். காத்திருப்போம்.
அனைத்திற்கும் நன்றியும்
வாழ்த்தும் தெரிவித்து விடைபெற்றேன். பல நாள் பழகிய நண்பரை போல வாசல் வரை வந்து வழியனுப்பி மகிழவும் நெகிழவும் செய்து விட்டார்.


74 comments:

ஹேமா said...

மன நிறைவான பாராட்டுக்கள் சூர்யா.
வலைப்பதிவாளர்கள் பற்றிப் பேசுமளவிற்கு நேரமெடுத்துப் பேசியதே அவரது பெருந்தன்மையைக் காட்டுகிறதே !இன்னும் வளமபெற வாழ்த்துக்கள் உங்களுக்கு.

ஹாலிவுட் பாலா said...

கலக்குங்க பூச்சி!!! :) :)

ரொம்ப சந்தோஷம்!! வாவ்.. போன் பண்ணியதுமில்லாமல்... நேரில் வாழ்த்து சொல்ல அழைத்தது... பின்னீட்டீங்க!!! :)

அடுத்து மஜீத் கால் பண்ணுவார். :) :)

thenammailakshmanan said...

சூர்ய அருமை
சேரன் மிக அழகாக இருக்கிறார்
நீங்கள் அவருடன் சேர்ந்து ஒரு புகைப்ப்ட்ம் எடுத்துப் போட்டு இருக்காலாமே
ஜனவரியில் தமிழக வலைப்பதிவர்கள் மாநாடா
இந்தத் தகவல் எனக்குப் புதிது
மிக அழகாக இருந்தது உங்கள் சந்திப்பு

பிரபாகர் said...

சூர்யா...

தொலைபேசி அழைப்பு பற்றி சொன்னீர்கள், சந்தித்தும் விட்டீர்களா?. சந்திப்பினை மிக அழகாக சொல்லியிருக்கிரீர்கள். பதிவர் மாநாட்டுக்கும் வருகிறார் என்பது சகோதரி சொன்னதுபோல் அவரின் பெருந்தன்மையை காட்டுகிறது. அவரின் புதுப்படம் பற்றிய தகவல் அருமை.

பிரபாகர்.

geethasmbsvm6 said...

வாழ்த்துகள், சேரனின் துணையுடன் உங்கள் திரை உலகப்பயணமும் இனிதே தொடங்கி நீண்ட வெற்றிப் பயணமாக மாறவும் வாழ்த்துகள்

shortfilmindia.com said...

avar edutha mudivu correct

துளசி கோபால் said...

அந்த 'யூத்' சப்ஜெக்ட்டிலே உங்களுக்கு(ம்) ஒரு ரோல் இருக்குன்னு...'யாரோ' சொல்றாங்களே......:-)

இடுகை நல்லா இருக்கு.

நட்புடன் ஜமால் said...

உங்களுக்கு நன்றி சூர்யா.

தண்டோரா ...... said...

அது உங்கள் எழுத்துக்கு கிடைத்த வெற்றி சூர்யா.. வாழ்த்துக்கள்..

தருமி said...

புது வருடத்தில் {ஜனவரியில்} நேரம் ஒதுக்குமாறும் நமது மாபெரும் தமிழ் வலைப்பதிவர்கள் மாநாட்டில் பங்கு கொள்ள வேண்டும//

??????????

குசும்பன் said...

சூப்பரு, சேரனின் அடுத்தபடத்தில் ஹீரோவாயிடுங்க தல!

பூங்குன்றன்.வே said...

தமிழ் பதிவர் ஒருவரை கூப்பிட்டு திரைப்பட துறையை சேர்ந்த சேரன் பேசி மகிழ்ந்தது சக பதிவனாக எனக்கும் மகிழ்ச்சியே.
தொடரட்டும் இந்த நல்ல நட்பு.

சின்ன அம்மிணி said...

//குசும்பன் said...

சூப்பரு, சேரனின் அடுத்தபடத்தில் ஹீரோவாயிடுங்க தல!
//

காமெடி ட்ராக் மட்டும் குசும்பனுக்கு குடுத்துருங்க :)

தமயந்தி said...

வாழ்த்துக்க‌ள் சூர்யா..இதுவே ஒரு க‌லைஞ‌ருக்கு கிடைக்கும் க‌வுர‌வ‌ம்...

தமயந்தி said...

வாழ்த்துக்க‌ள் சூர்யா..இதுவே ஒரு க‌லைஞ‌ருக்கு கிடைக்கும் க‌வுர‌வ‌ம்...

தமயந்தி said...

வாழ்த்துக்க‌ள் சூர்யா..இதுவே ஒரு க‌லைஞ‌ருக்கு கிடைக்கும் க‌வுர‌வ‌ம்...

Rajeswari said...

congrates!!

mayil said...

நடத்துங்க!! வாழ்த்துக்கள் :)

ஊடகன் said...

நல்ல செய்தி .............

காத்திருக்கிறேன் நண்பரே.............

முரளிகுமார் பத்மநாபன் said...

vaalthukkal thailaivare, hollywood baalavail valimozhikeren. diski is intresting.....
:-)

எம்.ரிஷான் ஷெரீப் said...

வாழ்த்துக்கள் நண்பர் சூர்யா.

jackiesekar said...

வாழ்த்துக்கள்... கலக்கிட்டியே தலைவா... ரொம்ப சந்தோஷம் இது மிகப்பெரிய அங்கீகாரம்..

கிருபாநந்தினி said...

\\அவரது அடுத்த படைப்பு முழுக்க முழுக்க புது முகங்கள் நிறைந்த யூத் சப்ஜெக்ட். சேரன் இயக்கம் மட்டுமே.// யூத் சப்ஜெக்ட்னு சொல்லிட்டு அடுத்தாப்ல ‘சேரன் இயக்கம் மட்டுமே’ அப்படீங்கிறதில் ஒரு சந்தோஷம் தெரியறாப்ல இருக்குங்ளேண்ணா?!

butterfly Surya said...

நன்றி ஹேமா..

butterfly Surya said...

நன்றி பாலா. அந்த பாலா punch super..

butterfly Surya said...

நன்றி தேனம்மை. புகைப்படம் எடுக்க வேண்டும் என்று தோன்றவில்லை. அடுத்த சந்திப்பில் எடுத்து போடுகிறேன்.

பதிவர் சந்திப்பு சிறந்த நிகழ்வாக அமைய வேண்டும் என்று ஆவல்.

கேபிள், நர்சிம், தண்டோரா, முரளி கண்ணன், பொன். வாசு, சிவராமன் மற்றும் பெரிய தலைகள் முயற்ச்சி எடுத்தால் நிச்சயம் நடக்கும்.

butterfly Surya said...

நன்றி பிராபாகர். நடக்கட்டும் என்பதே ஆவல்.

butterfly Surya said...

நன்றி ஜமால்.

நன்றி மணிஜீ.

நன்றி கீதா மேடம்.

நன்றி கேபிள்ஜி.

நன்றி தருமி அய்யா.

butterfly Surya said...

நன்றி குசும்பன். ஏங்க.. இப்படியெல்லாம்... வேணா.. அழுதுடுவேன்..

butterfly Surya said...

நன்றி பூங்குன்றன்.

நன்றி சின்ன அம்மணி. நீங்கள் சொல்வது வேண்டுமானால் நடக்கலான்.

butterfly Surya said...

நன்றி தமய்ந்தி

நன்றி ராஜேஸ்வரி.

நன்றி மயில்.

நன்றி ஊடகன்.

நன்றி முரளி.

நன்றி ரிஷான்.

butterfly Surya said...

நன்றி ஜாக்கி. சென்னை வந்திட்டியா..? மகிழ்ச்சி.

butterfly Surya said...

நன்றி நந்தினி தங்கச்சி.. அதெல்லாம் கண்டுக்க கூடாது.

butterfly Surya said...

நன்றி துளசி டீச்சர். வதந்தியை நம்பாதீர்.. பரப்பாதீர்.

புலவன் புலிகேசி said...

வாழ்த்துக்கள் சூர்யா...நன்றிகளும் சேரனை வலைப்பதிவர் சந்திப்பிற்கு அழைத்தமைக்கு..

அமிர்தவர்ஷினி அம்மா said...

வாழ்த்துக்களும், பாராட்டும்.

நிலாரசிகன் said...

வாழ்த்துகள் சூர்யா.

butterfly Surya said...

நன்றி புலிகேசி.

butterfly Surya said...

நன்றி அமி அம்மா


நன்றி நிலா.

கானா பிரபா said...

அருமையான சந்திப்புப் பதிவு

நேசமித்ரன் said...

நிறைவான வாழ்த்துகள் நண்பர் சூர்யா.

akshy said...

so delighted.... no words to descride how proud i feel!!!! keep going,,,,is my only prayer for you.

butterfly Surya said...

நன்றி கானா பிரபா.

நன்றி நேசமித்ரன்.

butterfly Surya said...

Thanx Lax. Thanx a lot.

குப்பன்.யாஹூ said...

Better he should not act, he should direct only.

But he is a normal director only, we bloggers should not celebrate him as if he is Baalu mahendra or barathiraja or balachander.

வினோத்கெளதம் said...

Super Matter Thala..

கருந்தேள் கண்ணாயிரம் said...

சூப்பர் நியூஸ் இது !! பட்டைய கிளப்புங்க !!

butterfly Surya said...

Dear Kuppan, thanx for your comments. Every one is a celebrity. There is no comparison.

butterfly Surya said...

நன்றி வினோதகெளதம். நண்பா நலமா..??

வேலை பளுவால் தொடர்ந்து பதிவு எழுத முடியாததால் உங்களையெல்லாம் எவ்வளவு மிஸ் பண்றேன்னு இப்போ புரியுது.

butterfly Surya said...

நன்றி ராஜேஷ்.

DIRCHERAN BLOG said...

பார்த்தேன்
படித்தேன்
அறிந்தேன்
ரசித்தேன்
திகைத்தேன்
நகைத்தேன்
என்னை
இழைத்தேன்...
நன்றி சூர்யா..மற்றும் நண்பர்களுக்கு.
சேரன்.

butterfly Surya said...

நன்றி சேரன் சார்.

சந்திப்பு எனக்கு பெரு மகிழ்ச்சி.

அது மட்டுமல்ல எங்கள் சக வலைபதிவர்களின் மகிழ்ச்சியையும் மன நிலையும் அறிந்தீர்கள் என்றும் உங்கள் கவிதையான பின்னூட்டத்தில் இருந்து புரிகிறது.

உங்கள் அடுத்த படைப்பு வெற்றி பெற மீண்டும் வாழ்த்துகள்.

thamizhini said...

உங்களுடைய மகிழ்ச்சி என்னுடையதாகவும் ஆகிறது...surya..உங்கள் இருவரின் நட்பினால் நலம் பல விழைய வாழ்த்துக்கள்..சேரனுக்கும் நன்றி..
////Dear Kuppan, thanx for your comments. Every one is a celebrity. There is no comparison.///
i identify myself with this comment of urs..u know people..and it shows ur values..
தோழமையுடன்.....

butterfly Surya said...

நன்றி தமிழினி.

தொடர்ந்து வரும் உங்கள் ஊக்கமும் கருத்துகளும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி.

பவித்ரா said...

வாழ்த்துக்க‌ள் சூர்யா. sorry for the late visit

யுவகிருஷ்ணா said...

வாழ்த்துகள் அண்ணாச்சி!

butterfly Surya said...

வாங்க பவித்ரா. நலமா..? நன்றிகள் பல..

butterfly Surya said...

நன்றி யுவா. உங்க வருகையே மிகுந்த மகிழ்ச்சி.

அதி பிரதாபன் said...

வாழ்த்துக்கள். திரும்பவும் சொல்கிறேன்... கொஞ்சமாவது எழுதுங்கள்.

சேரனுடைய அடுத்த படத்தில் நீங்களும் நடிக்கிறீர்களாமே?

sridevi said...

Vazhthukal surya... cheran theriyum nu solli irukinga Indha alavukaa!!! Nandru...

butterfly Surya said...

வாழ்த்துக்கள். திரும்பவும் சொல்கிறேன்... கொஞ்சமாவது எழுதுங்கள்.///

நன்றி பெஸ்கி. கண்டிப்பாக புது வருடத்தில் (jan 2010 ) எத்தனை வேலை இருந்தாலும் தொடர்ச்சியாக எழுதுவேன். { bala.. be careful )

சேரனுடைய அடுத்த படத்தில் நீங்களும் நடிக்கிறீர்களாமே?////////////////

அப்படியா..? மகிழ்ச்சி.

butterfly Surya said...

வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி Sridevi.

Dyena Sathasakthynathan - டயானா சதா'சக்தி'நாதன் said...

weldone.... happy to hear that....

great on Mr. Seran and U too Surya...for making such opportunities... which lasts forever... by making others happy and providing a usefull thing...

all the best -the wish comes from deep of my heart...

rock on

priyamudan
Dyena

butterfly Surya said...

நன்றி டயானா.

Rajalakshmi Pakkirisamy said...

//சூப்பரு, சேரனின் அடுத்தபடத்தில் ஹீரோவாயிடுங்க தல!//

ha ha ha

வாழ்த்துகள் sir

butterfly Surya said...

நன்றி ராஜலஷ்மி.


ஏங்க நீங்களுமா..?

ராமலக்ஷ்மி said...

நல்வாழ்த்துக்கள்:)!

விக்னேஷ்வரி said...

ம்.

butterfly Surya said...

நன்றி ராமலஷ்மி.

butterfly Surya said...

நன்றி .. “ம்” விக்னேஷ்வரி..

மோனிபுவன் அம்மா said...

வாழ்த்துக்க‌ள் சூர்யா.

கூடிய சீக்கிரம் சேரன் தலைமை தாங்க வருவார் என்று சொல்லுங்கள்

எங்களுக்கும் செல்லி அனுப்புங்கள்

butterfly Surya said...

நன்றி மோனிபுவன் அம்மா.

கண்டிப்பாக சொல்வோம்.

அவசியம் வாருங்கள்.

Kolipaiyan said...

Congrats Surya! Its good time for you!

butterfly Surya said...

நன்றி கோழிப்பையன்.

பெயர் காரணம் என்னவோ நண்பரே..??