Monday, June 29, 2009

கோலிவுட்டின் இடி அமீன்!




இரண்டு வாரம் முன்பு நண்பர் முகிலை சந்திக்க கிழக்கு பதிப்பகம் போயிருந்தேன். அவர் எழுதிய மைசூர் மகாராஜா வெளியாகியது குறித்து நேரில் வாழ்த்தவும் அந்த புத்தகத்தை வாங்கவும் தான் சென்றிருந்தேன்.
அப்பதான் கண்ணில் பட்டது பா.தீனதயாளன் எழுதிய சாண்டோ சின்னப்பா தேவர் என்ற புத்தகம்.


டேய் முருகா ! கல்லால அடிப்பேன். உடனே சூரியனை வரச்சொல்லு...


அடே பொறுக்கி பையா ! வள்ளி தெய்வானையோட இருக்குற சந்தோஷத்துல என்னை மறந்துடாதே...


போடா மயிராண்டி. எனக்கு ஒண்ணும் நஷ்டமில்ல.. இனிமே பணம் வந்தாத்தானே உனக்கு ஊர் முழுக்க கோயில் கட்ட முடியும்...



என்ற தேவரின் வாக்கியங்களும் மூன்று சிங்கங்களுடன் அட்டகாசமாக போஸ் கொடுக்கும் படத்துடன் அட்டை படமே The Constant Gardner opening shot போல மிரட்டியது... இப்படியெல்லாம் தமிழ் கடவுளாம் முருக கடவுளை அர்ச்சனை செய்தவரின் வாழ்க்கை வரலாறு என்று அறிந்ததும் வாங்கியும் விட்டேன்.



படிக்க ஆரம்பித்தவுடன் விடாது பற்றி கொண்டது விறு விறு தகவல்கள். எத்தனையோ வாழ்க்கை வரலாறுகளை படித்திருக்கிறேன். யார் வாழ்க்கை வரலாற்றையும் இப்படி விழுந்து விழுந்து சிரித்து ரசித்து படித்ததில்லை.. அவ்வளவு சுவாரசியம்.





அவன் இன்றி ஒர் அணுவும் அசையாது என்று வாழ்ந்து காட்டிய தேவருக்கு அசாத்திய நம்பிக்கையும் அவர் பட்ட கஷ்டங்களும் கோர்வையாக சொல்லியிருக்கிறார் ஆசிரியர். மருதமலை மருதால மூர்த்தி அய்யாவு சின்னப்பா தேவர் ஆங்கிலத்தில் சுருக்கமாக எம்.எம்.ஏ என்று கடவுளின் பெயர் ஒன்றை தனக்கு இனிஷியலாகவே அமைத்து கொண்டது முதல் அத்தனையும் ஆச்சரியமான தகவல்கள்.


குழந்தை மனசு, அயாராத உழைப்பு, விடாத தன்னம்பிகை, அதீத தொழில் பக்தி, வாரி வழங்கும் வள்ளல் தன்மை, வியாபார நேர்மை என தான் வணங்கும் ஆறு முக கடவுள் போலவே ஆறு தனித்திறமையுடன் வாழ்ந்து காட்டிய தேவரின் வாழ்க்கை வரலாற்றை அள்ள அள்ள குறையாமல் அருமையான தந்திருக்கிறார் பா. தீனதயாளன். இந்த புத்தகத்திற்கு இவரின் உழைப்பு மிக அதிகமாக இருந்திருக்க வேண்டும். இல்லையென்றால் இவ்வளவு நிகழ்வுகளையும் கண்டிப்பாக பதிவு செய்திருக்க முடியாது.


ஜீலை 7, 1955 உருவான தேவர் பிலிம்ஸில், தேவர் மூன்றை மட்டுமே தன் சினிமா வாழ்க்கையில் முதலீடாக செய்தார் என்று உறுதியாக சொல்ல முடியும்.. அது... எம்.ஜி.ஆர், முருகன், விலங்குகள்..

எம்.ஜி,ஆரால் தேவர் வளர்ந்தாரா..?? தேவரால் எம்.ஜி.ஆர் திரையுலக வெற்றிகளை கண்டாரா.. ?? இரண்டும் நிகழ்ந்தன. யாருமே அருகில் செல்ல முடியாத எம்.ஜி.ஆரை தனது அன்பால் கட்டி போட்டவர் தேவர்.




MGR வேறு சில படங்களுக்காக பல நாள் ஷீட்டிங் முடித்து சென்னை திரும்பிய அன்றே ராமச்சந்திரா, இன்னும் நாள் கடத்தாதே... உடனே வந்திடு,, இல்லாட்டி ஒரு கழுதை வைத்து கூட என்னால படம் எடுக்க முடியும் என்று எம்.ஜி.ஆரை டெலிபோனிலேயே மிரட்டியும் இருக்கிறார்,அதே சமயம் ஒரு நாள் ஷீட்டிங்கில் தன்னை காண வந்த விருந்தினர்களுக்கு கூல்டிரிங்ஸ் எடுத்து வர சொல்ல, அங்கே பாய்ஸ் யாரும் இல்லாத்தால் தானே அவர்களுக்கு கூல்டிரிங்ஸ் எடுத்து வந்ததை பார்த்து அனைத்தும் ஆச்சரிய பட்டது என்றால் அவர்களுக்குள்ள நட்பும் அன்பும் வார்த்தகளால் விவரிக்க முடியாத விஷயங்கள்..




ஏழை மக்களுக்காகவும் குழந்தைகளுக்காகவுமே எனது படங்கள்.. கதைய எளிமையா சொல்லுங்கடா.. என்று தன் தேவர் கதை இலாகாவையே பாடாய் படுத்தியவர். நான் நம்புறேன் ஆடு, மாடு பேசும் என்று என் முருகன் என்னை கைவிட மாட்டான் என்று அசாத்திய நம்பிக்கையுடன் கோடம்பாக்கத்தையே கிடுகிடுக்க வைத்த கிம் கி டக்




எவ்வளவு சம்பளம் என்று எடுத்த எடுப்பிலேயே புல் மேமண்ட்.. டேட் இருக்கா.? இல்லையா? என்ன சொல்றே..?? என்று மிரட்டும் தயாரிப்பாளர் அவர். எவருக்காகவும் எதற்காகவும் காத்திராத தொழில் பக்தியும் முருக பக்தியும் கொண்ட அஞ்சா நெஞ்சன். முதல் அமாவாசை பூஜை மூணாவது அமாவசை படம் ரிலீஸ் என பூஜையன்றே ரிலீஸ் தேதியை கொடுக்கும் அவரது அசாத்திய நம்பிக்கை. அது நடந்தே தீர வேண்டும். இல்லாவிட்டால் அவ்வளவுதான். ரிப்பீட் ஷீட்டிங் என்பது தேவர் பிலிம்ஸ் அகராதியிலேயே கிடையாது.



கோலிவுட்டின் இடி அமீன் என்று வர்ணிக்கபட்ட தேவர், ஒரு ஒன் மேன் ஆர்மி. கத்தை கத்தையாய் மடியில் கட்டிய ரூபாய்களுடன் களத்தில் இறங்கி, வெற்றி.. வெற்றி தன் படத்தின் முதல் ஷாட் போல பல வெற்றிகளை குவித்த அசகாய சூரர். தோல்வியை கண்டு எள்ளளவும் மலைக்காது,, அடுத்து அடுத்து என்று ரிலே ரேஸ் போல ஒடி ஒடி படமெடுத்தவர். தேவர் படத்தில் நடிக்க புக் செய்பபட்டவர்களுக்கு படம் முடியும் வரை கொஞ்சம் ஃபீவர் ஓவரா இருந்த சீஸன் என்றால் அது மிகையில்லை...





லாஜிக்கா..?? இங்கே எல்லாம் மேஜிக்தான்டா... போட்ட பணத்தை எடுக்கணும் ஊரெங்கும் முருகனுக்கு கோயில் கட்டணும் அது மட்டும் தான் அவர் குறிக்கோள்.


ஒவ்வொரு பட வெற்றியிலும் பணத்தை அள்ளி அள்ளி தன் முருக பெருமானுக்காக ஆறு படை வீடுகளிலும் செலவு செயவதையே வழக்கமாக கொண்டவர். மருதமலையை ஏழாவது படையாக ஆக்கியே தீருவது என்று 1962 ம் ஆண்டு மருதமலை முழுவதும் மின்சார வசதி செய்து கொடுத்தார். அதுவும் தி.மு.க. வில் இருந்து கொண்டு சுவிட்ச் ஆன் செய்தவர் எம்.ஜி.ஆர் எல்லாமே தேவரின் நட்புக்காக.




கோவை பங்கஜா மில்லில் மாதம் ஒன்பது ரூபாய் சம்பளத்தில் சம்மட்டியால் இரும்பு அடிக்கும் வேலையில் வாழ்க்கையை தொடங்கி பணத்தை கத்தை கத்தையாய் மடியில் கட்டி கொண்டு சினிமா படம் எடுத்த கெட்ட வார்த்தை
முருக பக்தரின் வாழ்க்கை வரலாறு சிரித்து ரசித்து படிக்க வேண்டிய ஒரு தன்னம்பிக்கை டானிக்.




வடிவமைப்பும் அச்சும் அருமை. இன்னும் அதிக புகைப்படங்கள் இட்டிருந்தால் மேலும் சிறப்பாக இருந்திருக்கும்.





வெளீயீடு: கிழக்கு பதிப்பகம்

ஆசிரியர்:: பா. தீனதயாளன்.

பக்கங்கள்: 192

விலை: Rs:110/-





ஆன்லைனில் வாங்க இங்கே செல்லவும்.

41 comments:

பிரபாகர் said...

சூர்யா,

தேவரின் வரலாற்றை பற்றி படித்திருக்கிறேன், வேறொரு புத்தகத்தில். உங்களின் மூலமாக நிறைய புதிய தகவல்கள்... புத்தகத்தை வாங்க தூண்டுகிறது.

தலைப்பிலிருந்து எழுத கையாண்ட விதம் வரை புதுமை. கலக்குங்கள் சூர்யா... நிறைய எழுதுங்கள்....

பிரபாகர்.

butterfly Surya said...

நன்றி பிராபகர். இன்னும் சில நூல்களை பற்றி அறிமுகம் செய்ய ஆவல். உங்கள் கருத்துக்கும் நன்றிகள் பல...

Athisha said...

படிச்சிருவோம் தல.. ஆவலை தூண்டிட்டீங்க..

butterfly Surya said...

நன்றி அதிஷா.

King Viswa said...

அந்த புகழ் பெற்ற இந்திப் பட சம்பவத்தை பற்றி எழுதி இருக்கிறார்களா?

ராஜேஷ் கண்ணா ஆத்தி மேரா சாத்தி?

geethasmbsvm6 said...

வரேன், மெதுவா!

butterfly Surya said...

ஆமாம் விஸ்வா. ராஜேஷ் கண்ணாவை கதற விட்டவர் தேவர். படித்து பாருங்க...

butterfly Surya said...

வாங்க கீதா மேடம். வருகைக்கு நன்றி.

கலையரசன் said...

நல்ல புத்தகத்தை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி பூச்சியாரே!!

butterfly Surya said...

வருகைக்கு நன்றி கலையரசன்..

துபாய் ராஜா said...

உழைப்பினால் உயர்ந்த ஒரு உத்தமரது வரலாறு.

கண்டிப்பாக படிக்கவேண்டும்.

பகிர்வுகள் தொடரட்டும்.

butterfly Surya said...

நன்றி துபாய் ராஜா..

தொடரும்.

எம்.பி.உதயசூரியன் said...

//யாருமே அருகில் செல்ல முடியாத எம்.ஜி.ஆரை தனது அன்பால் ''கட்டி போட்டவர்'' தேவர்.//

பிரமாதமான வார்த்தைப் பிரயோகம் நண்பா! எம்.ஜி.ஆர். என்ற அந்த சிங்கம் தேவர் தவிர வேறு யாருக்குமே இந்த அளவுக்கு கட்டுப்பட்டதில்லை. அட்டைப்படத்தில் அஞ்சாவதாக ‘அஞ்சாத சிங்கம்’ எம்.ஜி.ஆர். இருந்திருந்தால்..அற்புதமாக ஜொலித்திருக்கும்!

தினேஷ் said...

ரொமப் நன்றி பூச்சியாரே அறிமுகம் செய்ததுக்கு ..

butterfly Surya said...

வாங்க உதயசூரியன்..

அதனால தானே தலைவர் “அன்புக்கு நான் அடிமை” அப்படின்னு பாடினார்...

இப்போ வந்து வாழ்த்திய உங்க அன்புக்கு நான் அடிமையாயிட்டேன்..

butterfly Surya said...

உதயசூரியனை தொடர்ந்து இன்னுமொரு சூரியனா..??

வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றிகள் பல நண்பரே...

pudugaithendral said...

தேவர் பிலிம்ஸ் படம் என்றால் யானை பிளிறிக்கொண்டு வரும் அந்த லோகோ தான் ஞாபகம் வரும்.

தேவர் பிலிம்ஸ் தயாரித்த படம் என்றால் நல்லா இருக்கும்னு அம்மா சொல்வார்.

அருமையான பகிர்வுக்கு நன்றி

butterfly Surya said...

வாங்க புதுகை தென்றல். ஆனா முதலில் காளையின் படம் தான் தேவர் லோகோவா இருந்துதாம். ஹாத்தி மேரா சாத்தியில் அடித்த ஜாக்பாட்டால் அதில் நடித்த யானையை லோகோவை மாத்திட்டாராம்...

ஷீட்டிங்கிற்கு லேட்டாக வந்த ராஜேஷ்கன்னாவை ரூம் வரைக்கும் துரத்தி போய் அடிக்க பார்த்திருக்கிறார் தேவர். இப்படி பல சுவாரசியங்கள். ஜாலியாக படிக்கலாம்.

பின் தொடர்வதற்க்கும் நன்றி புதுகை..

Muniappan Pakkangal said...

Nalla post with info Surya.Thevar was a tamilan with normal behaviour which is taken as Murattuthanam.

Muniappan Pakkangal said...

Elephant logo is not after Haathi Mera Saathi Surya,the logo change was after the first black & white elephant film with the same Nalla neram story.

அன்பேசிவம் said...

வணக்கம் நண்பா, நல்ல பதிவு, இந்த புத்தகத்தை வாங்க சொல்லுகின்றீர்களா? ........ம்ம்ம்......கிழக்கு பதிப்பகம் இங்கே?,......கோவையில் கிடைக்கும் படித்துவிட்டு சொல்கிறேன். நன்றி

butterfly Surya said...

நன்றி டாக்டர். ஹாத்தி மேரா சாத்தி வெளியானது மே 14, 1971. பிறகே தமிழில் நல்ல நேரம் வெளிவந்தது. யானை எம்ளத்துடன் முதலில் வெளிவந்த படம் நல்ல நேரம். ரிலீஸ்: மார்ச் 10, 1972.

butterfly Surya said...

நன்றி முரளி. இலக்கிய புத்தகங்கள் படிக்கும் உங்களுக்கு இந்த புத்தகம் ஒரு வித்தியாசமான வாசிப்பு அனுபவமாக இருக்கும்..

பின் தொடர்வதற்க்கும் நன்றி..

ப்ரியமுடன் வசந்த் said...

இவ்வண்ணத்துப்பூச்சி யின் உணவு புத்தகங்கள் எனும் மலர்கள் மீதோ.........

butterfly Surya said...

கவிதையாய் கருத்து சொன்ன வசந்திற்கு பிரியமுடன் நன்றி..

பானு said...

Nice to know about a legend.Wishes and Thanks to u.

butterfly Surya said...

வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி பானு..

நேசமித்ரன் said...

நல்ல அறிமுகம்
ஒரு விமர்சனம் போலவும்
நன்றி

butterfly Surya said...

நன்றி நேசமித்ரன்..

RV said...

சூர்யா,

அருமையான பதிவு. ஒரு ஆளுமையை நன்றாக புரிய வைத்திருக்கிறீர்கள். கீப் இட் அப்!

anujanya said...

சுவாரஸ்யமான பதிவு. நிறைய பக்திப் படங்களும் எடுத்தார் இல்ல?

அனுஜன்யா

butterfly Surya said...

நன்றி RV.

butterfly Surya said...

ஆமாம் அனுஜன்யா.

வெள்ளிக்கிழமை விரதம், துணைவன், தெய்வம், திருவருள் என்று சில பக்தி படங்களையும் எடுத்தார்.

butterfly Surya said...

வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி அனுஜன்யா.

காலப் பறவை said...

நல்ல விமர்சனம்... அதுவும் தலையில் பாட்டையை போட்டு கொண்டே முருகனை மிரட்டி எடுத்த வார்த்தைகள் A1...உடனே வாங்கி படிக்க தூண்டுகிறது... வாழ்த்துகள்

துபாய் ராஜா said...

நல்லதொரு அறிமுகம்.

வாங்கிப்படிக்க தூண்டும் வரிகள்.

வாழ்த்துக்கள்.

butterfly Surya said...

நன்றி காலப்பறவை.

நன்றி துபாய் ராஜா..

Anonymous said...

devar eduthu MGR naditha flop padangalum undu - eg. ther thiruvila

butterfly Surya said...

நன்றி அனானி.

நீங்கள் சொல்வது உண்மைதான். ஆனால் தோல்வியை கண்டு எள்ளளவும் மலைக்காது,, அடுத்து அடுத்து என்று ரிலே ரேஸ் போல ஒடி ஒடி படமெடுத்தவர். என்று தான் சொல்லியிருக்கிறேன்.

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

உண்மைத்தமிழன் said...

தலைப்புக்கு வன்மையான எனது கண்டனங்கள்..!

தேவருக்கு இடிஅமீன் தலைப்பு நெருடலாக உள்ளது..!

butterfly Surya said...

நண்பரே, புத்தகத்தில் இருந்து தான் அந்த தலைப்பை வைத்தேன்.

தலைப்பை மட்டும் பார்த்தீர்களா..??
பதிவை பற்றி ஒன்றும் சொல்லவில்லையே..??