இண்டர்வியூக்கு போயி ரொம்ம நாளாயிடுச்சு. ஆனால் பதிவுல சுத்தி வர இந்த இண்டவியூவை அன்பு தம்பி ஹாலிவுட் பாலாவும், அருமை நண்பன் ஜாக்கி சேகரும் நம்மையும் மதிச்சு கேட்டு விட்ட படியால் மிஸ் பண்ண முடியவில்லை.
Start, Camera, Action.
1. உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?
சும்மா நம்மளே வச்சிகிட்டதுதான். (பெரிய எழுத்தாளர்ன்னு நினைப்பு, ஆனா நினைப்பு தான் பொழப்ப கெடுக்கும்ன்னு அம்மா அடிக்கடி சொல்லுவாங்க) இருந்தாலும் ரொம்ப பிடிக்கும்.
2.கடைசியாக அழுதது எப்பொழுது?
கொத்து கொத்தாய் நம்மினம் மாண்டனர் என்ற செய்தியை வாசிக்கும் போது. நமது கையறு நிலையை நினைத்து.
3.உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?
பொறுமையா எழுதினா பிடிக்கும்.
4).பிடித்த மதிய உணவு என்ன?
நண்பர் உதய சூரியனின் பதிவு போல சுடச்சுட எது போட்டாலும் பிடிக்கும். But Pure Veg Only.
5.நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?
கண்டிப்பாக எல்லார்கிட்டேயும் நட்பா இருக்கணும் ரொம்ப ஆசை. இல்லாவிட்டால் பதிவுலகில் இத்தனை நண்பர்கள் கிடைத்திருப்பார்களா..??
6.கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?
அருவிதான் எப்பவும் பிடிக்கும். பத்து பதினைந்து முறை குற்றாலமும், ஒகனேக்கலும் போயிருக்கேன். போன மாதம் கூட வால்பாறை போனதே அருவியல ஜாலியா குளிக்கலாம்னுதான்.
7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?
கண்கள். அகத்தின் அழகு முகத்தில் தெரியும்ன்னு சும்மாவா சொல்லியிருக்காங்க....
8. உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?
பிடிச்ச விஷயம்: ஒரு வேலை செய்ய ஆரம்பிச்சா.. அதை முடிக்கிற வரைக்கும், தூங்காம கூட வேலை பார்ப்பேன். பிடிக்காத விஷயம் : அந்த வேலையை செய்ய ஆரம்பிக்கவே மாட்டேன். { அட... பாலாவும் இதையேதான் சொல்லியிருக்கார் }
9.உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?
பிடிச்ச விஷயம் : அளவுக்கு அதிகமான அன்பு.
பிடிக்காத விஷயம் : என்ன சொன்னாலும் என்னையே சார்ந்து இருப்பது.
10.யார் பக்கத்தில் இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள் ?.
அப்படின்னு யாரும் இல்லை.கண்டிப்பா சொல்லணும்னா சின்ன வயசுல வளர்த்த பாட்டின்னு வேணும்னா சொல்லலாம். அவள் அன்பு மட்டுமே அறிந்த ஒரு அற்புத கதை சொல்லி...
11.இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள் ?
கட்டம் போட்ட கைலி & டாப்லெஸ்
12.என்ன பாட்டு கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?
எந்த பாட்டும் இல்லை.
13.வர்ண பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?
கருப்பு { கருப்புதான் எனக்கு பிடிச்ச கலரு }
14.பிடித்த மணம்?
கிராமத்தில் பச்சை பயிர்களின் மணம். சென்னையில் பேக்கரிகளை கடந்து செல்லும் போது வரும் கேக் வாசனை.
15.நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன ?
ஷண்முகப்பிரியன் சார். இயக்குநர், கதையாசிரியர், திரைப்பட வல்லுநர், எப்போதும் சிரித்து கொண்டே பேசுபவர், குழந்தை உள்ளம் கொண்ட பெரிய மனிதர். என்னை போன்ற சின்னவர்களையும் சதா ஊக்கப்படுத்தி கொண்டே இருப்பவர். இன்னும் நிறைய சொல்லலாம்.
புதுகைதென்றல்: சின்ன சின்ன நிகழ்ச்சிகளையும் அழகாக பதிவிடுபவர். பதிவுலகில் அனைவரின் நன் மதிப்பை பெற்றவர்.
இன்னும் அழைக்க வேண்டுமென்றால் கிங்விஸ்வா, டாக்டர் முனியப்பன், தீபா, உண்மைதமிழன், டயானா சக்திதாசன், ஆ.முத்துராமலிங்கம், லிஸ்ட் கூடிக்கிட்டே போகும்.
16.உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு ?
ஹாலிவுட்பாலா : எல்லா பதிவுகளும் ரொம்ப பிடிக்கும். குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் Memento அல்லது கஜினி
ஜாக்கிசேகர் : ஈழம் குறித்த பதிவுகள்.
17. பிடித்த விளையாட்டு?
கல்லூரி நாட்கள் வரை கிரிக்கெட். இப்போ வாழ்க்கையே ஒட்டமா இருக்கு.. இதுல என்ன ஆட்டம்?
18.கண்ணாடி அணிபவரா?
இல்லை.
19.எப்படிப் பட்ட திரைப் படம் பிடிக்கும்?
எல்லா படங்களும் பார்ப்பேன். பிடித்தது மென்மையான உலக திரைப்ப்டங்கள்.
20.கடைசியாகப் பார்த்த படம்?
தியேட்டர்ல பசங்க. டிவிடியில தினமும் ஒண்ணு.
21.பிடித்த பருவ காலம் எது?
இயற்கைன்னா மழைக்காலம். வாழ்க்கைன்னா கல்லூரிக்காலம்.
22. இப்பொழுது படித்துக்கொண்டு இருக்கும் புத்தகம்?
ஓஷோவின் மருத்துவலிருந்து மனமற்ற நிலை
23.உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?
அடிக்கடி மாற்றுவதில்லை.
24.உங்களுக்கு பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?
பிடித்த சப்தம் : குழந்தையின் சிரிப்பு
பிடிக்காத சப்தம்: பக்கத்தில் உட்கார்ந்து இருப்பவரிடம் சப்தம் போட்டு பேசுவது.
25.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?
துபாய், ஈரான் & ஓமன் (எது அதிக தூரம்ன்னு தெரியலை )
26.உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?
இருக்குன்னு நினைச்சிகிட்டுதான் இவ்வளவு நாளா வண்டி ஒடிகிட்டு இருக்கு.. அது என்னன்னு கண்டுபிடிச்சிட்டா போதும்.
27.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?
கதையை நம்பாமல் சதையை நம்பும் சில தமிழ் சினிமாக்கள்.
28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?
பிடிவாதம்.
29.உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?
இதுவரை சென்றதில் கொச்சின். இனிமேல் செல்ல வேண்டியது மொரிஷீயஸ்.
30.எப்படி இருக்கணும்னு ஆசை?
அன்பு, அமைதி., ஆனந்தமா இருக்கணும். இப்ப இருப்பது போலவே...
31.கணவர்/மனைவி இல்லாம செய்ய விரும்பும் காரியம் ?
நண்பர்களுடன் தாய்லாந்து பயணம்.
32)வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க..?
வாழ்க்கை வாழ்வதற்கே.
டிஸ்கி: பாஸா இல்ல அப்பீட்டான்னு நீங்கதான் பின்னூட்டத்தில் சொல்லணும்.
19 comments:
நான் மிகவும் ரசித்த பதில்....
11.இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள் ?
கட்டம் போட்ட கைலி & டாப்லெஸ்
பதில்கள் அருமையா ஜோடனை இல்லாமத்தான் கொடுத்திருக்கீங்க. ஆனா என்னிய மாட்டிவிட்டுட்டீங்களே!!!
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்
//மனைவி இல்லாம செய்ய விரும்பும் காரியம் ?
நண்பர்களுடன் தாய்லாந்து பயணம்.//
தாய்லாந்து மனைவியோட போற இடமா அது?
போயிடுவோம்.
பிடிச்ச விஷயம்: ஒரு வேலை செய்ய ஆரம்பிச்சா.. அதை முடிக்கிற வரைக்கும், தூங்காம கூட வேலை பார்ப்பேன். பிடிக்காத விஷயம் : அந்த வேலையை செய்ய ஆரம்பிக்கவே மாட்டேன்
நல்லாயிருக்கு!
You are apppointed.
சரியாகச் சொன்னீர்கள் மனைவியை அழைத்துக் கொண்டு யாராவது தாய்-லாந்து போவார்களா.தனியாகப் போனால்தான் தாயிடம் தைரியமாய் பாசத்தை கொட்டலாம் காட்டலாம்.
நன்றி ஜாக்கி. இந்த வெயிலுக்கு டாப்லெஸ் தான் பெஸ்ட்.
வாங்க புதுகை தென்றல், நாங்க மட்டும் வெயில்ல வாடிக்கிட்டு இருக்கும் போது ஐதை ஜில்லுன்னு இருக்கு சொன்னா, அதான் மாட்டி விட்டேன். ஆனா சொன்ன உடனே பதிவிட்டு அசத்தி விட்டீர்கள். அருமை.
அகநாழிகை வாசு, கண்டிப்பா நாம போக வேண்டிய இடம் தான்.
நன்றி மாதங்கி வருகைக்கும் வாழ்த்திற்கும்.
கோமதி மேடம், இப்படியா சபிக்கிறது..??
கே.ரவிஷங்கர் . நன்றி. I assure I will discharge my duties properly.
இயல்பான பதில்கள் தங்களை அறிந்து கொள்ள பயனாக இருந்தது.
தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி முனைவர் குணசீலன்.
தாய்லாந்தா...???
மயாமி.. பக்கமா வாங்கோ.....!!!! :))
அப்படியே.. லாஸ் வேகஸ் போய்டுவோம்..!! ஹேங் ஓவர் கதை மாதிரி.. ஏதாவது ட்ரை பண்ணலாம்.!!
பாலா அடிக்கடி போகிற லாஸ்வேகஸா..??? கண்டிப்பாக ட்ரை பண்ண வேண்டும்.
எவ்வளவோ பண்ணிட்டோம்.. இத பண்ண மாட்டோமா..??
அட.. அப்படியா, தகவலுக்கு நன்றி கலையரசன். மகிழ்ச்சி.
ஏன் தாய்லாந்து..?
ஏதாவது விசேஷம் உண்டோ..?
ஏன் தாய்லாந்து..? ஏதாவது விசேஷம் உண்டோ..?///
அட, அதெல்லாம் சொல்ல முடியமாண்ணே.??
முருகா முருகா.. இவரை நீ தான் காப்பாத்தணும்.
Post a Comment