இன்று ஜெயா டிவியில் அருமை நண்பர் கேபிள் சங்கர் Dial Jaya Tv நேரடி நிகழ்ச்சியில் மதியம் 12 மணி முதல் 1 மணி வரை வலைப்பதிவு சம்மந்தமாக கேட்ட கேள்விகளுக்கு அற்புதமாக விடையளித்து அனைவரின் பாராட்டுதலையும் பெற்றுள்ளார். அவருக்கு மட்டற்ற மகிழ்ச்சியுடன் முதலில் வாழ்த்துகள்.
சுட்டெரிக்கும் சென்னை வெயிலில் வாடி கொண்டிருந்த நண்பருக்கு அலை பேசியில் வாழ்த்து மழை கொட்டியதாக அதிகாரபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. அனைவருக்கும் எனது நன்றிகள்.
நேரில் பார்த்து பேசினவங்களுக்குதான், அவரின் எழுத்தை விட அவருக்கு இன்னும் நிறைய தெரியுங்கறது புரியும். இசை, சினிமா, மீடியா, புத்தகம்ன்னு எல்லாவற்றிலும் அவரோட பலதரப்பட்ட அறிவும் ஆழ்ந்த அவதானிப்பும் எனக்கு ஆச்சரியம் கலந்த அற்புத விஷயங்கள்.
என்னதான் வேலை இருந்தாலும் எப்போது அலைபேசியில் அழைத்தாலும் சொல்லுங்க தலைவரே என்று உற்சாக குரல் கொடுக்கும் அவரது பேச்சை கேட்கவும் பலவற்றை பகிர்ந்து கொள்ளவும் அடிக்கடி அழைத்தும் விடுகிறேன்.
மூத்த வலைப்பதிவர் என்றோ தனக்கு மட்டும் தான் எல்லாம் தெரியும் என்று கிஞ்சித்தும் எண்ணாத அனைவரிடத்திலும் அன்புடன் பழகும் இனிய நண்பர். அவருக்கு இது தொடக்கம் மட்டுமே. மிகப்பெரிய அளவில் அவர் பேசப்படுவார். பேசப்படவேண்டும் என்பதே என் விருப்பம்.
இந்த நிகழ்ச்சியை நிறைய நண்பர்கள் பார்த்திருக்க மாட்டார்கள். ஒளிகாட்சிகளை அவர் வலையேற்ற முயற்ச்சி செய்து வருகிறார். எல்லோரும் கண்டு களிக்க விரைவில் ஆவன செய்வார் என்றும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
எனது இனிய நண்பர் கேபிள் ஷங்கருக்குக் கிடைத்த வெற்றி எனக்கே கிடைத்த வெற்றியாக கருதுகிறேன். இன்னும் பல பல வெற்றிகளையும் சாதனைகளையும் நிகழ்த்த எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
இது சம்பந்தமான அவரது பதிவு இங்கே
டிஸ்கி: நண்பரின் புகைப்படம் ஜாக்கியின் வலையிலிருந்து சுட்டது. நன்றி ஜாக்கி
18 comments:
TEST
நன்றி தலைவரே..
எனது இனிய நண்பர் கேபிள் ஷங்கருக்குக் கிடைத்த வெற்றி எனக்கே கிடைத்த வெற்றியாக கருதுகிறேன். இன்னும் பல பல வெற்றிகளையும் சாதனைகளையும் நிகழ்த்த எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். //
என்னுடைய சொற்களை அப்படியே எனக்கு முன்னரே பதிவு செய்து விட்டீர்கள்,சூர்யா.ஷங்கரின் சார்பில் எனது நன்றிகள்.
மூத்த வலைப்பதிவர் என்றோ தனக்கு மட்டும் தான் எல்லாம் தெரியும் என்று கிஞ்சித்தும் எண்ணாத அனைவரிடத்திலும் அன்புடன் பழகும் இனிய நண்பர். அவருக்கு இது தொடக்கம் மட்டுமே. மிகப்பெரிய அளவில் அவர் பேசப்படுவார். பேசப்படவேண்டும் என்பதே என் விருப்பம்.--//
சூர்யா அவர்கிட்ட எனக்கு பிடிச்ச விஷயமே நீங்க மேலே சொன்ன வரிகள்தான்....
படத்தை சுட்டு என் பெயரை போட்டதற்க்கு என் நன்றிகள் தலை...
வாழ்த்துக்கள் கேபிள் சங்கர்
தல கேபிள் சாருக்கு கிடைத்த வெற்றி எனக்கே கிடைத்த வெற்றி போல் நானும் உணர்கிறேன்... இதற்க்கு கரணம் அவரது எளிமை.....எளிதில் நண்பராகி விடும் நற்குணம்... அவர் மென்மேலும் வளர மனமார வாழ்த்துகிறேன்.... அவரது ஒட்டுமொத்த நண்பர்களின் மன நிலையை தன் நிலையாய் விவரித்து சிறப்பித்த வண்ணத்துபூச்சியார் அவர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்....
நன்றி கேபிளாரே. இன்னும் சாதிக்க போவது ஏராளம். பெரிய இயக்குநராயிட்ட அவர் என் அருமை நண்பர்ன்னு சொல்லிக்க இந்த பதிவும் உங்க பின்னூட்டமும் ஆதாரம்.
ஷண்முகப்பிரியன் சார். மிக்க நன்றி.
நன்றி ஜாக்கி.
நன்றி சுகுமார். அனைவரின் சார்பிலும் தான் இந்த பதிவு. நீங்கள் வடிவமைத்த படமும் அருமை.
உங்களையும் விரைவில் சந்திக்க வேண்டும். சந்தர்ப்பம் கிடைக்குமா..? காத்திருக்கிறேன்.
கேபிளாருக்கு வாழ்த்துக்கள்...விரைவில் அவர் ‘ஹாசினியின் பேசும் படம்’ நிகழ்ச்சியில் பங்கேற்க வாழ்த்துகிறேன்...
தலைவர் ஏ.வி.எம்.சரவணன் மாதிரி நிற்கிறாரு,,,,???!!!!
பறந்து வந்து வாழ்த்திய தமிழ்பறவைக்கு நன்றிகள் பல.
ஹாசினியின் பேசும் படம்’ நிகழ்ச்சியில் பங்கேற்க வாழ்த்துகிறேன்.../// நிச்சயம் நடக்கும்.
தலைவர் ஏ.வி.எம்.சரவணன் மாதிரி நிற்கிறாரு,,,,???!!!!///
அதான் தன்னடக்கம் நண்பரே.. நிறைகுடங்கள் தளும்பாது.
தல.. இன்னும் யூத்’தான் இருக்காரு..!!!
வாழ்த்துகள்... சங்கர்..!!! சீக்கிரம் வீடியோ பார்க்க ஏற்பாடு பண்ணுங்க...!!
நானும் உங்களை சந்திக்க ரொம்ப ஆவலா உள்ளேன் அய்யா...... உங்க நம்பர் கிடைக்குமா......என் மின்னஞ்சலுக்கு அனுப்புங்களேன்,,,, evergreenrose@gmail.com
மின்னஞ்சலுக்கு அனுப்புங்களேன்,,,, evergreenrose@gmail.com/// ஆஹா இந்த வண்ணத்துபூச்சி சந்திக்க வேண்டியது எவர் கீரின் ரோஸ்.. அட.. இது நல்லாயிருக்கே..
அனுப்பி விட்டேன்.
வாழ்த்துகள் கேபிள் சங்கர் சார்...!!!!
நன்றிவண்ணத்துபூச்சியாருக்கு ....
மென்மேலும் உயரங்கள் அவர் காலடிபட காத்திருக்கின்றன..
வண்ணதுபூச்சியாருக்கு நன்றி
அண்ணன் கேபிள் சங்கருக்கு வாழ்த்துக்கள்
" ஜெயமே விழைய ஜெயா ஒரு தொடக்கம்
காரணம் திறன் மட்டுமல்ல தன்னடக்கம்"
அப்டீன்னு சொல்லத்தோணுது....
;-)
நன்றி நேசமித்திரன்.
நன்றி.. நன்றி.
Post a Comment