Saturday, May 29, 2010

இயக்குநர் ஆக வேண்டுமா?

ஒரு நிகழ்வை மிக குறுகிய நேரத்தில் அழுத்தமாகவும் தொழில்நுட்ப நேர்த்தியுடன் வெளிப்படுத்துவதுதான் குறும்படம். உலகம் முழுக்க குறும்படங்களுக்கு இருக்கும் வரவேற்பு அளவிட முடியாத்து. உலகின் சிறந்த பல இயக்குநர்கள் குறும்படங்களை இயக்கியுள்ளார்கள். அந்த வகையில் சினிமா கனவுகளோடு குறும்படங்களை அளித்த சில இளம் படைப்பாளிகளை சூரிய கதிர் அறிமுகப்படுத்துகிறது.

அதிர்ஷ்டம் ஐந்து கிலோமீட்டரில்....





வைத்தீஸ்வரனுக்கு படிப்பு சரியா வராது. எட்டாம் வகுப்பு வரை வாத்தியாருக்கு கறிகுழம்பு வைத்து கொடுத்து கரெக்ட் செய்து பாசாகிவிடுகிறான். ஒன்பதாம் வகுப்பில் வந்தது பிரச்சினை. ஐயர் வாத்தியார். தட்டு தடுமாறி பள்ளி முடித்து கல்லூரியில் சரித்திரம் படிக்கிறான். மளிகை கடையில் பொட்டலம் கட்டுற வேலை. அதற்குள் கல்யாணம் வேறு. மனைவியோ இவனை செல்லாக்காசாக நினைக்கிறாள். சதா தனது அதிர்ஷ்டத்தை நினைத்து புலம்பியபடியே சைக்கிளில் இழுத்து இழுத்து மிதித்து கொண்டே பயணிக்கிறான். எதற்கு.. ? ஒரு லெட்டரை போஸ்ட் செய்ய...


மனைவி இவனுக்கு துரோகம் இழைக்கிறாள். பக்கத்து வீட்டு தண்டபாணி தன் மனைவிக்கு சைகை காண்பிப்பதையும் அதை அவள் ரசிப்பதையும் மீசையை நறுக்கியபடி முகக்கண்ணாடியில் கவனிக்கிறான் வைத்தீஸ்வரன். மனைவியை கொல்ல முடிவு செய்கிறான். அதற்கு தான் அந்த லெட்டர். என் மனைவியை கொலை செய்ய போகிறேன். நாளை காலை வந்து என்னை கைது செய்யுங்க.. என்று கடிதம் எழுதி அதை போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு தபாலில் சேர்த்து விட்டு மாலை முழுவதும் ஊர் சுற்றி அலைகிறான். இரவு வீடு வந்து சேருகிறான். காலை விடிகிறது. மனைவியை கொல்ல தருணம் பார்த்து காத்திருக்கிறான்.





அவள் வழக்கம் போல காலையில் கணவனை மதிக்காமலே நடந்து கொள்கிறாள். இவனோ மறைத்து வைத்த கத்தியுடன் காத்திருக்கிறான். குளிக்க போகிறாள். வைத்தீஸ்வரனும் பின்னாலேயே போகிறான். குளியறையில் நுழையும் முன் திடீரென்று திரும்பி துண்டை மற்ந்து வைத்து விட்டேன் .. எடுத்துட்டு வா என்று ஆணையிடுகிறாள்.அதிர்ச்சியில் சரி என்று கூனிக்குறுகி சென்று துண்டை எடுக்க போகிறான்.


வீல் என அலறல் சத்தம் கேட்டு ஓடி வருகிறான். பாத்ரூமில் சுவிட்சை போட்ட மனைவி மின்சாரம் பாய்ந்து இறந்து போய் கிடக்கிறாள். இப்போது அவனது அதிர்ஷடம் என்ன..?? கொலை செய்ய போவதாய் வாக்கு மூலமாக பதியபட்டு தபாலில் கிடக்கிறது. இயற்கையான மரணம் ஒரு கொலைப்பழியாக வைத்தீஸ்வரன் மீது உள்ளது. அந்த தபாலை கைப்பற்ற வேண்டும். அதற்கு ஐந்து கிலோமீட்டர் சைக்கிளில் செல்ல ஆயத்தமாகிறான். என் அதிர்ஷ்டம் எப்படி இருக்கு பாருங்க.. என்று பொறுமியபடியே கதை முடிகிறது. அவனது வாழ்வே அந்த ஐந்து கிலோமீட்டரில் தான் உள்ளது..



கணவன் மனைவியாக நடித்த இருவரின் நடிப்பும் அருமை. மிகவும் யதார்த்தமாக சித்தரித்துள்ளார் இயக்குநர் ஸ்ரீராம் பத்மநாபன். முறையாக திரைப்பட கல்லூரியில் சினிமா தொழில் நுட்பம் படித்தவர்.


சைக்கிளை ஒட்டியபடி வைத்தீஸ்வரன் நம்மிடம் பேசுவது போல நகைச்சுவை துள்ளலுடன் வசனங்கள் சிரிக்கவும் ரசிக்கவும் வைக்கிறது. அறிமுக காட்சியிலேயே என் பெயர் வைத்தீஸ்வரன்.. வைத்தின்னு சுருக்கமாக கூப்பிட கூட எனக்கு நண்பர்கள் யாரும் இல்லீங்க... என்று சொல்லும் போதே வைத்தீஸ்வரனிடம் பார்வையாளர்களுக்கு ஒரு ஈர்ப்பு வந்து விடுகிறது. மனைவியை பற்றி சொல்லும் போது அவள் பெயர் பாரதி. அவளுக்கு இந்த பெயரை வைத்திருக்கவே கூடாது. எட்டாவது பெயில் அதுவும் தமிழ்ல.. படிப்பில் அவள் படி தாண்டா பத்தினி என்ற வசனங்கள் ஆற்றலுடன் அருமை. ஒளிப்பதிவும் இசையும் நன்று கை கோர்த்து செல்கிறது. திரைக்கல்லூரியில் ஒன்றாக படித்த நண்பர்கள் சேர்ந்து உருவாக்கிய குறும்படம் இது. இந்த டீம் நிச்சயம் சினிமாவிலும் ஜெயிக்க வாய்ப்பிருக்கிறது.




டிஸ்கி1: ஒரு மாதத்திற்கும் மேலாக வீட்டு கணனியும் அதை சரி செய்ய வந்தவரும் என்னை பாடாய் படுத்தி விட மானிட்டர் தவிர அனைத்தையும் மாற்றிவிட்டேன். இனி தொடர்ந்து எழுத முயற்சி செய்கிறேன்.

டிஸ்கி 2 : சூரிய கதிரில் வெளிவந்த கட்டுரையின் ஒரு பகுதி. மற்றொரு குறும்படபார்வையை நாளை பதிவிடுகிறேன்.


18 comments:

மணிஜி said...

keep rocking surya

துளசி கோபால் said...

அஞ்சு கிலோமீட்டர் போனாலும் தபாலில் போட்ட கடிதத்தை எடுப்பது ரொம்ப கஷ்டமாச்சே

எறும்பு said...

வாசகர் விருப்பம்... வசந்தபாலன் பேட்டி

க ரா said...

எறும்பு said...

வாசகர் விருப்பம்... வசந்தபாலன் பேட்டி

-- அதே என்னோட விருப்பமும்னா.

butterfly Surya said...

அதான் அவன் அதிர்ஷ்டம் துளசி டீச்சர்..

butterfly Surya said...

Thanx Mani Ji..

butterfly Surya said...

ராஜகோபால்.. வாசகர் விருப்பம் விரைவில்...

ராமலக்ஷ்மி said...

தலைப்பும் கதை சொல்லப்பட்ட விதமும் அருமை. பகிர்வுக்கு நன்றி.

butterfly Surya said...

நன்றி மேடம்..

நேசமித்ரன் said...

இந்தக் கதைகள் எங்களுக்கு பார்க்க கிடைக்குமா சூர்யா சார் ?

அன்பேசிவம் said...

naan pakkathula illaam apoytitten, na.
computerr issue-kku sonnen. :-)

waiting for your reviews. vaanga vaanga

Sukumar said...

ஹையா.. அண்ணன் பதிவு எழுத வந்துட்டாக.. வாங்க வாங்க..

butterfly Surya said...

நன்றி நேசமித்திரன். யூடிப்பில் இல்லை. டிவிடி என்னிடம் இருக்கிறது.. தருகிறேன்.

butterfly Surya said...

நன்றி முரளி. தம்பியுடையான் எதற்கும் அஞ்சான்.

butterfly Surya said...

சுகுமார் வந்துட்டோம்ல..போட்டோ சூப்பரு..

geethasmbsvm6 said...

தபால் பெட்டியில் போடப் பட்ட கடிதத்தை எடுக்கும் நேரம் தெரிஞ்சா, சரியா அந்த நேரம் அங்கே போய் அதை எடுப்பவரிடம் கேட்டு வாங்கி வரலாம். சொந்த அநுபவம் உண்டு இந்த விஷயத்தில்.

ரொம்ப நாட்களாக் காணோமேனு நினைச்சேன். சரிதான், உங்களையும் இணையம் பாடாய்ப் படுத்தி இருக்கா? :)))))))))

உண்மைத்தமிழன் said...

தலைவரே..

இந்தக் கதையை நான் ஏற்கெனவே படிச்சிருக்கேன்..!

குமுதத்துல ஒரு தடவை சுஜாதா குறிப்பிட்டுச் சொல்லியிருந்தாரு..

கொலை, லெட்டர், போலீஸ்.. எல்லாஞ்சரி..

ஆனா மனைவி இறப்பது மட்டும் வேறு மாதிரி..!

Cable சங்கர் said...

நல்ல அறிமுகம்.. நான் வேற ஒரு விஷயத்தை பார்த்துக்கணுமா../:)