Friday, March 26, 2010

அங்காடித் தெரு.....


படம் முடிந்துவிட்டாலும், மிஷ்கினின் நந்தலாலாவை கிடப்பில் போட்ட மாதிரிதான், இந்தப் படத்தையும் மூலையில் போட்டு வைத்திருந்தார்கள ஐங்கரன் தயாரிப்பாளர்கள். காரணம் வரிசையாக அவர்களுக்கு விழுந்த அடி அப்படி..நல்லவேளை பல மாதங்களாக எதிர்பார்த்த திரைப்படம் இப்போதுதாவது வெளியானது.வெயில் பட இயக்குநர் என்பதாலும் வித்தியாசமான கதையை சொல்லுவார் என்ற நம்பிக்கையுடன் சென்றேன். வசனம் ஜெயமோகன் Additional advantage. நம்பிக்கை வீண் போகவில்லை.


மனிதர்களை உள்ளிழுக்கும் வசீகரத்துடன் எப்போதும் பரப்பரப்பாகவும் பகட்டாகவும் இயங்கி கொண்டிருக்கும் ரங்கநாதன் தெரு. அதில் உள்ள மிரும்மாண்ட ஜவுளி மாளிகை செந்தில் முருகன் ஸ்டோர் என்று பெயர் பலகையுடன் காட்சியளிக்கும் சென்னை தி.நகர் ரங்கநாதன் தெருவே கதைக்களம்.


ஆனால் அண்ணாச்சிகளின் மறு பக்கத்தை உரித்து ரங்கநாதன் தெருவிலேயே தொங்கவிட்டிருக்கிறார் இயக்குநர் வசந்த பாலன். அதற்கே முதலில் ராயல் சல்யூட்.பள்ளியில் முதல் மாணவனாய் தேர்ச்சி பெற்றிருந்தாலும் தந்தையின் அகால ம்ரணமும் குடும்ப சூழ்நிலையால் சென்னையில் வேலைக்கு வருகிறான் நாயகன். அவனுடன் சேர்ந்து கொண்டு கூடவே வரும் இன்னொரு நண்பன் (கனாகாலங்கள் தொலைகாட்சி தொடரில் நடித்த பாண்டி)


ஆடையில் படிந்த கறை போல கனவுகளை சுமந்து வரும் நாயகனுக்கு அங்கு வேலை பார்க்கும் பெண்ணுடன் காதல். அவர்கள் இருவரின் சிநேகம், காதல், இன்பம், சோகம், என்று ஒவ்வொரு பரிமாணத்தையும் அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார் இயக்குநர்.


விடாது விரட்டும் வறுமையும் அன்றாட வாழ்வியலுக்கான பணத்தேவையும் எப்படியெல்லாம் சென்னையை நோக்கி ஒடி வரும் கிராமத்தவர்களின் வாழ்க்கையில் அதிர்வை ஏற்படுத்துகிறது என்பதுடன் இருவரும் காதலிலும் வாழ்க்கையிலும் ஜெயித்தார்களே எனபதே மீதி கதை..


உடன் வேலை பார்க்கும் ஆண்களும் பெண்களும் சிநேகமாய் பேசினாலே அடி என்று கொத்தடிமைகளாய் நடத்தாத குறையாய் முதலாளியும் மானேஜரும்.


கடுமையான வேலை நேரமில்லாத உழைப்பு சரியான உணவோ கழிப்பிட வசதிகள் கூட இல்லாத அறைகள் என்று மிக துல்லியமாக பதிவாக்கியிருக்கிறார்.


ஒரு காட்சியில் பாண்டி Dubai என்று போட்ட டி. ஷர்ட் அணிந்து வருகிறான். கட்டிட வேலைக்காக செல்லும் கடல் கடந்து செல்லும் அமீரக இந்தியர்களின் வாழ்வின் இன்னொரு பரிமாணமாக எனக்கு தோன்றியது. அமீரக நண்பர்களுக்கு இது நன்கு புரியும்.மானேஜராக நடித்திருப்பது இயக்குநர் வெங்கடேஷ். அற்புதமான நடிப்பு. செவத்த மூதிகளாக என்று திட்டி கொண்டே வரும் ஒவ்வொரு காட்சியிலும் தன் நடிப்பை பலப்படுத்துகிறார்.


முதலாளியாக பழ.கருப்பையா.. இயக்குநர் மணிரத்னம் அக்னி நட்சத்திரத்தில் உமாபதியை தேர்ந்தெடுத்தது போன்று மிகச்சிறந்த தேர்வு.


நாயகன் அறிமுகம் மகேஷ். பாதி காதல் பரத் போலவும் கொஞ்சம் கல்லூரி திரைப்படத்தில் நடித்த பையனையும் போலவும் இருக்கிறார். நடிப்பு அருமை. கதாநாயகியாக அஞ்சலி மற்றும் உடன் நடிக்கும் சிறு சிறு பாத்திரங்கள் அனைவரும் யதார்த்தமான நடிப்பால் கவருகின்றனர். இயக்குநர் நன்கு வேலை வாங்கி இருப்பது தெரிகிறது.


அஞ்சலி உடம்பால் நடிக்காமல் கண்களாலேயே நடித்து கவருகிறார். நல்ல கதாபாத்திரங்கள் அமைந்தால் ரேவதி, நதியா வரிசையில் நிச்சயம் இடமுண்டு.


ஒளிப்பதிவு ரிச்சர்ட். அமைதியான கிராமிய சூழ்நிலையிலிருந்து படபடக்கும் ரங்கநாதன் தெருவரை அற்புதமாக படமெடுத்து தந்திருக்கிறார்.


விஜய் ஆண்டனியின் இசையில் பாடல்கள அருமை. அவள் அப்படி ஒன்றும் அழகில்லை மட்டுமே மனதில் நிற்கிறது.


வசனம் ஜெயமோகன். சில இடங்களில் கைதட்டல் பெறுகிறார். வியாபாரம் நடத்த என்னென்னவோ பண்றேன்டா.. சி. எம் பி.ஏ வரை கொட்டி அழறேன்டா என்று முதலாளி சொல்வதாகட்டும்.. அண்ணாச்சி ஏகப்பட்ட கேஸ் ஏற்கனவே பெண்டிங்ல இருக்கு என்று காவலதிகாரி சொல்வதாகட்டும். ஜெமோ டச் தெரிகிறது. மற்ற காட்சிகளின் வசனங்களில் இன்னும் கொஞ்சம் அழுத்தமாக சொல்லியிருந்தால் பலம் சேர்ந்திருக்கும்.


மனித நேயமே இல்லாத முதலாளி மொபைலின் ரிங்டோன் கந்த சஷ்டி கவசம். அறையின் சுவரில் கிருபான்ந்த வாரியார் புகைப்படம். அவரிடம் மாதந்தோறும் வரிசையாக வந்து கையூட்டு பெறும் காவல், மாநகராட்சி அதிகாரிகள் என்று ஒவ்வொரு காட்சியமைப்பும் வீணாகாமல் மிளிர்கிறது.


குறைகளே இல்லையா என்று கேட்கலாம்..? முதல் பாதி கொஞ்சம் நீளுவது போல தெரிகிறது. வேறு சில பாத்திரங்களுக்கான கதையையும் சேர்த்திருக்கலாம். பாடல்களை குறைத்திருக்கலாம். But everything is negligible


வாழ்க்கையின் கன பரிமாணத்தில் சந்தோஷம், வலி, அன்பு, காதல், சகிப்புதன்மை, தியாகம், என்று அனைத்தையும் அதன் அழுத்தம் குறையாமல் யதார்த்தமாகவும் எளிமையாகவும் இதுவரை தொட்டு பார்த்திராத கதைகளத்தில் படைத்திருப்பது ஒரு அனுபவமாய் அமைந்த நல்ல திரைப்படம்.கண்டிப்பாக பாருங்கள். Please don't miss.அங்காடித் தெரு = அருமை + அற்புதம் + அனுபவம்.


44 comments:

butterfly Surya said...

TEST..

T.V.ராதாகிருஷ்ணன் said...

பார்த்துடுவோம்

Sangkavi said...

அற்புதமான விமர்ச்சனம்.....

//ஆனால் அண்ணாச்சிகளின் மறு பக்கத்தை உரித்து ரங்கநாதன் தெருவிலேயே தொங்கவிட்டிருக்கிறார் இயக்குநர் வசந்த பாலன். //


இதற்காகவே படம் பார்க்கனும்.............

மணிஜீ...... said...

சூர்யா நான் இன்னொருமுறை பார்க்கலாம்..

vijayan said...

உங்கள் தூக்கத்தை கெடுக்கும் படம்.கண்டிப்பாக பாருங்கள்.

ஸ்ரீ.கிருஷ்ணா said...

பாத்துடலாம் surya sir..

நட்புடன் ஜமால் said...

அஞ்சலி உடம்பால் நடிக்காமல் கண்களாலேயே நடித்து கவருகிறார். நல்ல கதாபாத்திரங்கள் அமைந்தால் ரேவதி, நதியா வரிசையில் நிச்சயம் இடமுண்டு.

]]

இது தான் ரொம்ப பிடிச்சிருக்கு

அவசியம் பார்த்திடுவோம்

நன்றி நல்ல விதமான பகிர்தலுக்கு

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...

தமிழ் படத்துக்கு அப்புறம் ஒருமித்த பாசிடிவ் விமர்சனம் இந்த படத்துக்குத்தான் போல,
கண்டிப்பா தியேட்டர்ல பார்த்துடலாம் ஜி.:)

முரளி said...

படம் பார்க்கும் ஆவலை துண்டியிருக்கிறது உங்களின் விமர்சனம்
நன்றி
முரளி

butterfly Surya said...

நன்றி ராதாகிருஷ்ணன்.

butterfly Surya said...

நன்றி சங்கவி.

பார்க்க வேண்டிய திரைப்படம்.

butterfly Surya said...

மணிஜீ, உங்களுடன் கண்டிப்பாக இன்னொருமுறை பார்க்க வேண்டும்.

உங்களுடன் திரைப்படம் பார்த்தல் ஒரு அலாதி அனுபவம்.

butterfly Surya said...

நன்றி விஜய்.

நன்றி கிருஷ்ணா.

butterfly Surya said...

வாழ்த்திற்கு நன்றி ஜமால்.

butterfly Surya said...

நன்றி ஷங்கர். தியேட்டரிலேயே பாருங்கள்.

butterfly Surya said...

நன்றி முரளி. கண்டிப்பாக இந்த படம் உனக்கு பிடிக்கும்.

திங்கள் சத்யா said...

தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம். டாக்குமென்ட்ரிபோல் தோன்றுகிறது. இன்னும் விருவிறுப்பாய் எழுதியிருக்கலாம்.

சு.செந்தில் குமரன் said...

அருமை சூர்யா

Sukumar Swaminathan said...

அண்ணா ... அட்டகாசம் போங்க...

மயில்ராவணன் said...

பரவாயில்லை...ஏமாற்றவில்லை வசந்தபாலனும் நீங்களும்...

சத்ரியன் said...

இதோ புறப்படறேன்.

துபாய் ராஜா said...

பார்த்திடுவோம்...

butterfly Surya said...

கருத்துக்கு நன்றி பாலா. படத்தை பார்க்க தூண்டும் முயற்சியே. படம் பாருங்கள். புரியும்.

butterfly Surya said...

நன்றி செந்தில். கண்டிப்பாக உங்களுக்கும் பிடிக்கும். உங்க ரசனை அறிந்தவன் என்ற முறையில் கூறுகிறேன்.

butterfly Surya said...

நன்றி சுகுமார்.

butterfly Surya said...

நன்றி கோபால்.

நன்றி துபாய் ராஜா.

Kolipaiyan said...

கண்டிப்பா தியேட்டர்ல பார்த்துடுவோம்.

முரளிகுமார் பத்மநாபன் said...

அண்ணா நானும் பார்த்துவிட்டேன், காட்சிகளின் பின்புலங்கள் தனியாக கதை சொல்லிக்கொண்டே வருவது, அருமை. கதாநாயகன் ஏழைன்னு சொல்லிட்டா அவன் வீட்டு நாய் கூட நொண்டியாத்ததான் இருக்கும்ன்னு தல சொன்னதபோல, சோகம் வலிய திணிக்கப்பட்டதாகவே உணர்கிரேன். அதனால் எதார்த்தமாக சொல்லவேண்டிய சில காட்சிகளில்கூட சினிமா எட்டிப்பார்க்கிறது.

அடுத்த படத்துல வசந்தபாலன் இந்த சின்ன சின்ன காம்ரமைஸைகூட செய்துக்கமாட்டார் என்று நம்புகிறேன் (விரைவில் ஒரு உலகதிரைப்படம் இவரிடமிருந்து வரும் என்ற நம்பிக்கையில்)
முரளி

Rajeswari said...

நல்ல விமர்சனம்.

கண்டிப்பாய் பார்க்க வேண்டும்

Anonymous said...

Ji,

Arumai sudachuda vimarsanama...attakasam ponga...Romba ethir partha padam...thayaripalara vida enakku thaan romba santhosam :)

butterfly Surya said...

நன்றி கோழிப்பையன்.

butterfly Surya said...

நன்றி முரளி. புரிகிறது. இப்போதுதான் இயக்குநரிடம் வசந்த பால்ன் அவர்களிடம் பேசி கொண்டிருந்தேன்.

அனைத்து கருத்துகளையும் அவர் கேட்ட ஆவலாக இருக்கிறார். நேரில் சந்திக்கும் போது கூறுகிறேன்.

♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

விமர்சனம் கலக்கல் நண்பரே !
இன்னும் அமீரகத்திற்கு வரவில்லை .வந்ததும் பார்த்துவிடுகிறேன் .
பகிர்வுக்கு நன்றி !

அகல்விளக்கு said...

இன்றுதான் பார்த்தேன்...

அருமையான அனுபவம் இந்த படம்...

:-)

அணிமா said...

உங்களின் விமர்சனம் படம் பார்க்கும் ஆவலை துண்டியிருக்கிறது....

கண்டிப்பாக பார்க்கவேண்டும்!! ( இனையத்தில் தான் பார்ககனும்)

இய‌ற்கை said...

mm..sollitenga illa.. parthudalam..:-)

துளசி கோபால் said...

உங்க விமர்சனமே பார்க்கணும் என்ற ஆவலைத் தூண்டுது.

அங்காடித் தெரு என்ற பெயர் எப்பவும் எனக்கு வசீகரமாத் தோணும்.

ரதிப்பெண்கள் திரியும் அங்காடித்தெரு....(எழில்வரதன்)ஆஹான்னு அந்தத் தலைப்புக்காகவே வாங்குன புத்தகம்!

திஉ. நகரின் 'சில கடைகளில்' பெண்கள் சலிப்போடு வாடிக்கையாளர்களுக்கு சேவை புரிவதை பலசமயங்களில் பார்த்துருக்கேன். அதே சமயம் அந்தப் பெண்கள் ஒருவருக்கொருவர் எவ்வளவு ஆறுதலாகப் பேசறாங்கன்னும் கவனிச்சு இருக்கேன். அநேகமா எல்லாம் பதின்மவயசுப் பெண்கள்தான். அந்தந்த வயசுக்குரிய எண்ணங்கள் இல்லாம இருக்குமா? இயற்கைதானே?

shankar said...

Exellent movie ,i saw now only ....,

காவேரி கணேஷ் said...

மணிஜீ, உங்களுடன் கண்டிப்பாக இன்னொருமுறை பார்க்க வேண்டும்.

உங்களுடன் திரைப்படம் பார்த்தல் ஒரு அலாதி அனுபவம்.

அப்படியா, சூர்யா. மணிஜியுடன் ஒரு படம் பார்க்கணுமே

thenammailakshmanan said...

அட ...அவ்வளவு நல்லா இருக்குதா
பார்த்துடலாம் சூர்யா..வசந்த பாலனுக்கும் வாழ்த்துக்கள்

மன்னார்குடி said...

நல்ல விமர்சனம். படத்தின் வசூல் நன்றாக இருப்பதாக கேள்வி. ஐங்கரன் தொடர்ந்து இதுபோன்ற படங்களுக்கு ஆதரவளிக்க வேண்டும்.

தீபிகா சரவணன் said...

தமது இணையதளத்தினை அனைவருக்கும் அறிமுகப்படுத்தும் விதமாகவும் வலைப்பதிவாளர்களை ஊக்குவிக்கும் முகமாகவும் போட்டியொன்று நடாத்த திட்டமிட்டு உள்ளது. போட்டியில் வெற்றிபெறும் 10 பதிவர்களுக்கு 25 GB's of Space மற்றும் 1 Domain Name இலவசமாக வழங்கப்படும். மேலதிக விபரங்களுக்கு

http://www.tamilarkalblogs.com/page.php?page=அன்னௌன்செமென்ட் இந்த இணைப்பினை பார்க்கவும்.

ஜாக்கி சேகர் said...

இன்னைக்கு 3 மணி ஷோ கமலாவுல புக் பண்ணி இருக்கேன் பார்த்துட்டு வந்து நம்மை கருத்தை டைப்புறேன்..

ஜெரி ஈசானந்தன். said...

மனம் திறந்த விமர்சனம் சூர்யா.