Sunday, February 7, 2010
மைத்ரி
நம் நாட்டில் ஏறக்குறைய 3 கோடி மக்கள் மனவளர்ச்சி குன்றியோர் என்று சொல்லப்படுகிறது. ஆனால் இவர்களுள் ஐந்து சதவிகிதத்தினர்தான் தேவையான கல்வி, பயிற்ச்சி மற்றும் வசதிகள் பெற்றிருப்பதாகவும் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.
பயன் வேண்டுவோருக்கும் பயன் பெறுவோருக்கும் இடையே உள்ள இவ்வளவு பெரிய இடைவெளியை சிறிதேனும் குறைக்கும் நோக்கத்துடன் மனவள்ர்ச்சி குன்றியோரின் பெற்றோர்களால் 1994ல் சென்னையில் துவங்கப்பட்ட சேவை நிறுவனம் தான் “மைத்ரி”
மூன்றே குழந்தைகளுடன் துவங்கப்பட்ட மையம் இன்று 300 குழந்தைகளை பயிற்றுவிக்கும் நிறுவனமாக வளர்ந்து நிற்கிறது. சென்னையில் பெரம்பூர், தாம்பரம், மேற்கு மாம்பலம், கொளத்தூர், கே.கே. நகர், உள்ளகரம் ஆகிய 6 இடங்களில் 70க்கும் மேற்பட்ட ஆசிரியர்களுடனும் திறன் ஊக்க வல்லுநர்களுடனும் {Occupational & Physico Therapists} பணி புரிகிறார்கள்.
மனவள்ர்ச்சி குன்றியிருந்தாலும் இவர்களிடம் உள்ள சில திறமைகளை கண்டெடுத்து, வளர்த்து அவர்கள் தங்களுக்கும் பிறர்க்கும் பயனுள்ள வாழ்க்கை வாழ வழிகாட்டும் மைத்ரி, நலன் விரும்பும் பெற்றொரும், நல்மனமுள்ள பல்ரின் ஆதரவோடு தற்போது வளர்ந்து வருகிறது.
வளர்ச்சியடைந்த அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் அரசு பள்ளிகளிலேயே இம்மாதிரி சிறப்புக் குழந்தைகளின் கல்விக்கும் இடம் ஒதுக்கி உதவுகிறார்கள். நம் நாட்டில் இது போன்ற சமூக நிறுவனங்களால் மட்டுமே செய்ய இயலுகிறது. இதற்கு தேவையான உதவிகளுக்கும் சமூகத்திடம்தான் பெற்று செயல்படவும் முடிகிறது.
இலாப நோக்கில்லாமல் அன்பளிப்புகளால் மட்டுமே நடக்கும் நிறுவனம் என்பதை கடந்த சில மாதங்களாக நானும் இணைந்து பணியாற்றுவதால் நன்கறிவேன். இந்நிறுவனத்தின் கூட்டங்களில் கலந்து கொண்டு என்னால் இயன்ற சிறு உதவிகளையும் செய்து வருகிறேன். அதனால் வலைப்பூவிலும் அதிகம் நேரம் ஒதுக்க முடியவில்லை.
இன்னும் பல பள்ளிகளை தொடங்கவும் இருக்கும் பள்ளிகளை மேம்படுத்தவும் இவர்கள் ஒரு இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளார்கள்.
சென்னை நேரு உள்விளையாட்டஙகில் (பிப் - 28 ஞாயிறு மாலை 6.05 pm) நடைபெற இருக்கும் இக்கலை நிகழ்ச்சிக்கு டிக்கெட் வாங்குவதன் மூலம் நீங்களும் ஒரு சிறு பங்களிப்பை செய்ய முடியும்.
ஆன்லைனில் வாங்க இங்கே கிளிக்கவும்.
நிதியுதவி செய்ய விரும்பும் வெளியூர் / வெளிநாடு நண்பர்கள் இங்கே செலுத்தலாம்.
இன்றைய சமுதாய ஓட்டத்தில் இது போன்ற பணிகளில் நம்மால் முழு நேரமும் ஈடுபட முடியுமாதென்பது ஒப்பு கொள்ள வேண்டியதே எனினும் இதை முழுமூச்சுடன் முனையும் இவர்களுக்கு தோள் கொடுக்கவும் இயன்ற உதவியை செய்யவும் வாருங்கள் என சக பதிவர்கள், நண்பர்கள் அனைவரையும் அன்புடனும் உரிமையுடனும் வேண்டுகிறேன்.
Subscribe to:
Post Comments (Atom)
51 comments:
அற்புதமான பதிவு நண்பரே . அனைவரையும் சிந்திக்க தூண்டும் வகையில் அமைத்து இருக்கிறீர்கள் . வாழ்த்துக்கள் !
நல்ல முயற்சி.. வாழ்த்துகள் தலைவரே.. சென்னையில் இருக்கும் என் நண்பர்களிடமும சொல்கிறேன்..
நன்றி கார்த்திகைப் பாண்டியன.
நல்ல முயற்சிக்கு வாழ்த்துகள் நண்பா!
It is a very good idea to promote through blogs too. I wish I could attend the musical nite.
இலாப நோக்கில்லாமல் அன்பளிப்புகளால் மட்டுமே நடக்கும் நிறுவனம் என்பதை கடந்த சில மாதங்களாக நானும் இணைந்து பணியாற்றுவதால் நன்கறிவேன். இந்நிறுவனத்தின் கூட்டங்களில் கலந்து கொண்டு என்னால் இயன்ற சிறு உதவிகளையும் செய்து வருகிறேன். அதனால் வலைப்பூவிலும் அதிகம் நேரம் ஒதுக்க முடியவில்லை. ///
வாழ்த்துக்கள் நண்பரே!!
உங்கள் முயற்சிக்கும் செயலுக்கும் பாராட்டுக்கள் தல... கண்டிப்பாக வாங்கிடுவோம்...
நேர் பேச்சில் நிறைய முறை இந்த அமைப்பு குறித்து சொல்லியிருக்கிறீர்கள். நிச்சயம் இயன்றதை செய்வோம்.
தோழமையுடன்
பைத்தியக்காரன்
Im really very proud to see this blog-post by u....
all the best....i will share this in my FB account..
நல்ல முயற்சி... சூரியா.என்னால் முடிந்ததை செய்கிறேன். எனக்கு
தெரிந்தவர்களுக்கும் இந்த தகவலை சொல்கிறேன்.. வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் ஜி,
என்னுடைய பக்கத்திலும் உங்கள் பக்கத்துக்கு இணைப்பு கொடுத்துவிட்டேன் .
அற்புதமான பதிவு நண்பரே....
வாழ்கையில் கொண்டாட்டங்கள் என்பது போதை சார்ந்ததாக மட்டும்தான் என்றில்லை, இதுவும் கொண்டாட்டம்தான் . பாக்யா வார இதழில் பாக்யராஜ் தலைப்பில் போட்டிருப்பாரே அதுதான் இந்த பதிவுக்கு பொருத்தமான வாக்கியம் ( சந்தோசத்துல பெரிய சந்தோசம் அடுத்தவங்கள சந்தோசம் செய்வித்து சந்தோசம் அடைவது,) வாங்க சந்தோசம் அடைவோம்.
நல்ல விஷயம். நாமும் கைகொடுப்போம்.
நன்றி பழைபேசி. இணைப்புக்கும் நன்றிகள் பல.
நன்றி சித்ரா.
நன்றி Dr. Devan
முயற்சிக்கு வாழ்த்துக்கள்...
அவசியமான தகவல்..
பகிர்ந்தமைக்கு நன்றி நண்பரே
வாழ்த்துகள்
அவசியமான தகவல்..
பகிர்ந்தமைக்கு நன்றி நண்பரே
வாழ்த்துகள்
பயனுள்ள பதிவு. உங்களை பாராட்டுகிறேன். சூர்யா..
நல்ல பதிவு, பகிர்வு....பூங்கொத்து!
அன்பின் சூர்யா
தகவல் பகிர்ந்தமைக்கு நன்றி
ஆன்லைனில் பணம் அனுப்புவதில் சிக்கல் இருக்கிறது
கிரெடிட் கார்டில் மாஸ்டர் கார்டு வாங்க மறுக்கிறது
டெபிட் கார்டில் விசா எலெக்ட்ரான் மட்டும் தான் ஏற்றுக் கொள்கிறது
ஆன்லைனில் ட்ரான்ஸ்பர் பண்ணலாம் என்றால் ஐஓபிவங்கி லிஸ்ட்டில் இல்லை
வெறுத்துப் போய் வந்து விட்டேன்
நல்வாழ்த்துகள் சூர்யா
முயற்சிக்கு பாராட்டுக்கள் தல..
நல்ல முயற்சி பாராட்டுக்கள் சூர்யா
அருமையான பதிவு சேவைகள் மென்மேலும் வளர எங்களாலான உதவிகளை செய்வோம்...
வாழ்த்துக்கள்
வாழ்த்திய நண்பர்கள் அனைவருக்கும் நன்றி.
தங்கள் பதிவில் இணைப்பு கொடுத்த நண்பர்களுக்கும் நன்றி என்பது சிறிய வார்த்தை. வேறு என்ன சொல்ல முடியும்..? மிக்க மகிழ்ச்சி.
மரியாதைக்குரிய சீனா அய்யா, வணக்கம். உங்கள் ஆதரவுக்கு நன்றிகள் பல.
தளம் குறித்து மிகவும் வருந்துகிறேன். சம்மந்த நபர்களிடம் உடனே தெரிவித்து விட்டேன். இன்றே சரி செய்வதாய் சொல்லியிருக்கிறார்கள்.
மீண்டும் வருத்தம். விரைவில் ஆவன் செய்வோம்.
இன்னிக்குத்தான் படிச்சேன். செஞ்சிடுவோம்! நன்றி!
நன்றி மணிஜீ
நல்ல முயற்சி.. வாழ்த்துகள்
மிகவும் நல்ல பதிவு தோழரே.. நான் சென்னையில் இல்லையென்றாலும் எமது தோழர்களுக்கு தெரியப்படுத்தியிருக்கிறேன்.... உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்....
நல்ல முயற்சி அண்ணா. டொனேட் பண்ணியாச்சு.
எண்னமும்...எழுத்தும் நல்லதை சுட்டுகிறது..... உங்க முயற்சிக்கு வாழ்த்துக்கள்.
சிலரால் இணையம் மூலம் பணம் அனுப்ப முடியவில்லை. இதற்கு பொதுவான நபர் ஒருவருக்கு மொத்தமாக அனுப்பி, அவரை அனுப்பச் செய்யலாம்.
அருமையான விஷயம். நிச்சயம் எதாச்சும் செய்யலாம். :) நன்றி.
டிக்கெட் எல்லாம் விற்று விடும் கவலைபடாதீர்கள்
நெஞ்சார வாழ்த்துக்கள்
இனியன் பாலாஜி
ஆஹா.. சூர்யா சார், நான் அந்த இன்னொரு ப்ளாக்குக்கு போயிட்டு பயந்துட்டேன்.. :))) இந்த ப்ளாக் நல்லா நந்தவனமாட்ட இருக்கு..!
தன்னார்வலரா உங்க பங்கை செய்யறீங்க, சந்தோஷமா இருக்கு. நாங்களும் கொஞ்ச காலமா நேரம் ஒதுக்கி செய்ய ஆரம்பிச்சுருக்கோம், இதன் மூலமா ஒரு திருப்தி இருக்க தான் செய்யுது!
நன்றி அமுதா.
நன்றி தோழர் மோகன். உங்களை போன்ற நல்ல உள்ளங்களால் பாதி கிணறு தாண்டி விட்டோம். முடிச்சிடுவோம் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறோம்.
மிக்க நன்றி.
நன்றி இராமசாமி. மிக்க நன்றி.
நன்றி கருணா.
நன்றி விதூஷ்.
தங்களுக்கு மடல் அனுப்பியுள்ளேன்.
உங்கள் அன்புக்கு மிக்க நன்றி பாலாஜி.
நன்றி பொற்கொடி. பயப்பட அளவுக்கு அதுல ஒண்ணும் இருக்காது. பொறுமையா பாருங்க.
என்னால் முடிந்ததை செய்கிறேன். உங்களை போன்ற நண்பர்கள் நல்ல உள்ளங்களின் உதவியால் இது போன்று செய்ய முடிகிறது. அரசு உதவி மிகவும் குறைவானது என்பதே வலியான தகவல்.
இன்னும் சிறப்ப செயல்பட என் மனமார்ந்த வாழ்துக்கள்
ஒரு வலைப்பூ பதிவை வெறும் பொழுதுபோக்கா இல்லாம, சமுதாயத்துக்கு எப்படிப் பயனுள்ளதா மாத்த முடியும்னு நிரூபிக்கிற அர்த்தமுள்ள பதிவுங்ணா! கங்கிராட்ஸ்!
நன்றி கார்த்திக்.
நன்றி நந்தினி. என்னால் முடிந்ததை செய்கிறேன். அன்புக்கு நன்றிகள் பல.
தங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள் நண்பா..
தகவல் பகிர்வுக்கு நன்றி சார்.
நல்ல பணி. பகிர்வுக்கு நன்றி. இதே போல் கோவையிலும் சில நிறுவனங்கள் உள்ளன. ஒன்று Families for Children போத்தனூர் - கோவையில் உள்ளது.
http://www.familiesforchildren.ca/
Post a Comment