Thursday, December 17, 2009

உலகெங்கும் தெரியப்போகும் வார்த்தை




டைடானிக் படத்தின் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூனின் அடுத்த பிரமாண்டமான படம் தயாராகிவிட்டது.12 ஆண்டுகள் ஜேம்ஸ் கேமரூன் பெரும் பொருட்செலவு மற்றும் ஆராய்ச்சி செய்து உருவாக்கியுள்ள படம் 'அவதார்'.


நாளை உலகமெங்கும் வெளியாகிறது.இந்தப் படம் இந்தியாவில் மட்டும் 700 பிரிண்டுகளுடன், தமிழ், இந்தி, தெலுங்கு மற்றும் ஆங்கிலத்தில் வெளியாகிறது.ரூ. 1200 கோடி செலவில் தயாராகியுள்ள இந்த அவதார், இதுவரை உலகில் வெளியான அனைத்து கிராபிக்ஸ் படங்களையும் விட மிகச் சிறந்த படம் என்று 'டைம்' பத்திரிகை பாராட்டியுள்ளது.



இந்தப் படத்துக்காக தனி கிரகம் ஒன்றையே உருவாக்கினார்களாம் கேமரூன் மற்றும் குழுவினர். அதில் வித்தியாசமான விலங்குகள், மரங்கள் போன்ற தோற்றங்களை உருவாக்கி அவற்றைத்தான் முப்பரிமாணத்தில் அவதாரமடுக்க வைத்துள்ளனர்.உயிரற்ற பொருட்களையும், அசைவுகளுடன் உயிரோட்டமாகக் காட்டும் புதிய தொழில்நுட்பத்தின் துணையுடன் உருவாக்கப்பட்டுள்ளது.



ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் நிறுவனத்தினர் இந்தப் படத்தை இந்தியாவில் வெளியிடுகின்றனர். இதுகுறித்து அந்நிறுவனத்தின் சிஇஓ விஜய் சிங் கூறுகையில், "அவதார் படத்துக்கு இந்தியாவில் பெரும் எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. இந்தியாவில் இதுவரை எந்த ஹாலிவுட் படத்துக்கும் இந்த அளவு கிராண்டான ரிலீஸ் இருந்ததில்லை என்று வியக்கும் வகையில் அவதார் படத்தை வெளியிடப் போகிறோம்" என்றார்.




தமிழில் நேரடியாக வெளியாகும் முதல் ஹாலிவுட் '3 டி' படம் என்ற பெருமையைப் பெறுகிறது அவதார்.உலகம் முழுக்க வரும் டிசம்பர் 18ம் தேதி 2 டி மற்றும் 3 டி வடிவங்களில் வெளியாகும் அவதார், தமிழில் மட்டும் 100 பிரிண்டுகளுடன் வருகிறது.


தமிழகம் முழுக்க சத்யம் சினிமா வெளியிடுகிறது. இதுகுறித்து அதன் இயக்குநர் ஸ்வரூப் ரெட்டி கூறுகையில்,இந்த பத்தாண்டு காலத்தில் உலகம் பெரிதும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்தது இந்தப் படத்துக்காகத்தான்.


டிஜிட்டல் '3 டி' வடிவத்தில் வெளியாகும் இந்தப் படம் பெரிய வரலாறு படைக்கும் என நம்புகிறோம்" என்றார்.இந்தப் படத்தின் மூலம் 'அவதார்' என்ற இந்திய வார்த்தை உலகெங்கும் தெரிந்த வார்த்தையாகப் போகிறது.
டிஸ்கி: நாளை தமிழ் சினிமா உலகில் வேறு ஒரு அதிர்வும் நிகழ போகிறது. புயல் அபாயம் காரணமாக விபரம் தெரிந்தவர்கள் பின்னூட்டத்தில் சொல்லலாம்.
செய்தி நன்றி: தட்ஸ் தமிழ்.

21 comments:

Anonymous said...

அவதார் ப்ரீவ்யூ பாத்தவங்க எல்லாம் நல்லா இருக்குன்னு சொல்றாங்க. படம் வந்ததும் கண்டிப்பா பாக்கணும் லிஸ்ட்ல இருக்கு அவதார்.

butterfly Surya said...

நன்றி சின்ன அம்மணி..

அண்ணாமலையான் said...

நாலு பேர் பாத்ததுக்கு அப்புறம்தான் பாக்கலாம்னு இருக்கேன்.நம்ம பக்கம் எட்டிப்பாருங்களேன்..

jagagadeeswaran said...

நன்றி!!

எறும்பு said...

My choice is "Avatar" not that film...

:-))

butterfly Surya said...

நன்றி அண்ணாமலையான்.


நன்றி ஜெகதீஸ்வரன்.

butterfly Surya said...

கண்டிப்பாக வரேன் அண்ணாமலையார் அவர்களே.

விக்னேஷ்வரி said...

நானும் காத்திருக்கேன் Avatarக்காக.

ராமலக்ஷ்மி said...

பார்த்திட வேண்டியதுதான். படம் வந்ததும் உங்கள் பார்வையில் விமர்சனமும் தருவீர்கள்தானே:)?

Cable சங்கர் said...

thalaivare.. படம் பார்த்துட்டேன் http://cablesankar.blogspot.com/2009/12/avatar-2009.html

ungalrasigan.blogspot.com said...

’அவதார்’ பார்த்துட்டு உங்க இன்னொரு வலைப்பூவுல விமர்சனம் எழுதுங்க. அதைப் படிச்ச பிறகு நான் ‘அவதார்’ பார்க்கறேன்! :)

பாலா said...

இப்படியே.. எல்லோரும்.. எங்க ஏரியாவில் கை வச்சீங்கன்னா.. அப்புறம் நாங்களும் உலகப் படத்தை பார்த்து எழுத ஆரம்பிச்சிடுவோம் சொல்லிபுட்டேன் ஜாக்கிரதை! :)

butterfly Surya said...

நன்றி விக்னேஷ்வரி..

butterfly Surya said...

நன்றி ராமல்ஷ்மி.

கேபிள் போட்டு விட்டாரே...??

butterfly Surya said...

நன்றி ஜெகதீஸ்வரன்..

butterfly Surya said...

கேபிள்.. உங்க பேச்சு “கா”

butterfly Surya said...

நன்றி ரவி பிராகாஷ் சார்.

butterfly Surya said...

நன்றி பாலா. கேபிள் போட்டு தாக்கி விட்டார். கலக்கல் விமர்சனம்.

I was expecting yours review a lot.

நட்புடன் ஜமால் said...

"ஓடு”
"ஓடு”
"ஓடு”
"ஓடு”
"ஓடு”

அவதார் பார்க ஓடு

அன்பேசிவம் said...

புயல் சின்னத்தைப் பற்றித்தான் ஒருவர் விவரமாக பதிவே போட்டிருக்கிறாரே! பிறகு பின்னூட்டமென்ன?

கேபிள் மற்றும் கருந்தேளின் விமர்சனம் படித்தவுடன் படம் பார்க்கு ஆசை அதிகமாகிவிட்டது. ஓடு, ஒடு, ஒடு,......

RJ Dyena said...

அருமை சூர்யா ....

படத்தை பார்த்த பின் விமர்சனத்தையும் எதிர்பார்க்கிறேன்..