Monday, November 23, 2009

வாழ்த்துகள் பாண்டிராஜ்
"பசங்க' திரைப்படத்துக்காக சர்வதேச அளவிலான சிறந்த இயக்குநருக்கான (தங்க யானை விருது) விருதை பெற்றார் இயக்குநர் பாண்டிராஜ்.ஹைதராபாத்தில் கடந்த வாரம் தொடங்கி நடைபெற்ற சர்வதேச குழந்தைகள் திரைப்பட விழாவில் 20 நாடுகளைச் சேர்ந்த 70 திரைப்படங்கள் திரையிடப்பட்டன. இந்த பட விழாவில் தமிழில் உருவாகி பெரும் வெற்றி பெற்ற "பசங்க' திரைப்படம் "கிட்ஸ்' என்ற பெயரில் திரையிடப்பட்டது.


இயக்குநர் சசிகுமாரின் தயாரிப்பில், இயக்குநர் சேரனின் உதவியாளர் பாண்டிராஜ் இப்படத்தை இயக்கி இருந்தார். இப்படம் குழந்தைகளின் உலகத்தை தனி பாணியில் படம் பிடித்துக் காட்டியிருந்தது. திரைப்பட விழாவின் இறுதி நாளான வெள்ளிக்கிழமை (அக்-20) விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது இதில் சிறந்த குழந்தைகள் பட இயக்குநராக பாண்டிராஜ் தேர்வு செய்யப்பட்டார்.


அவருக்கான விருதை (தங்க யானை விருது) பிரபல இந்தி நடிகை ஜூகி சாவ்லா வழங்கினார்.
விழாவில் படத்தைப் பார்த்த பார்வையாளர்கள் மட்டுமல்ல, நடுவர்களும் பாராட்டினார்களாம். சிறந்த ஆசியப் படங்கள் பிரிவில் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.


"முதல் படத்திலேயே சர்வதேச விருது வாங்கிய அனுபவம் மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. இதற்கு காரணமாக இருந்த சசிகுமாருக்குதான் முதல் நன்றி. இந்தப் படத்தின் உருவாக்கத்துக்கு காரணமாக இருந்த அவருக்கும் இந்த விருதில் பங்குண்டு. சர்வதேச சினிமா ஜாம்பவான்கள் இருந்த அந்த சினிமா மேடையில் சிறந்த இயக்குநருக்கான விருது பெற்றதை எனக்கு கிடைத்த பெரிய கௌரவமாக நினைக்கிறேன்.'' என்றார் இயக்குநர் பாண்டிராஜ்.இயக்குநர் நண்பர் பாண்டிராஜ் இன்னும் பல சாதனைகள் படைக்க வாழ்த்துக்கள்...

26 comments:

இராகவன் நைஜிரியா said...

வாழ்த்துகள் பாண்டியராஜ்.

மேன் மேலும் நல்ல படங்கள் கொடுக்க வாழ்த்துகள்.

நிலாரசிகன் said...

பசங்க உலகத்திரைப்பட வரிசைகளில் இடம்பெறும் என்பதற்கு மற்றொறு சான்று.

இயக்குனருக்கு பாராட்டுகள் :)

butterfly Surya said...

நன்றி நிலா..

butterfly Surya said...

நன்றி ராகவன் அண்ணே.. அரவிந்த் நலமா..??

தியாவின் பேனா said...

வாழ்த்துகள் பாண்டியராஜ்

புதுகைத் தென்றல் said...

எங்க ஊரு டைரக்டருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். ரொம்ப பெருமையா இருக்கு.


குழந்தைகளுக்கான திரைப்படங்கள் இன்னமும் வரவேண்டும்.

சென்ஷி said...

சிறப்பான படத்திற்கு வெகு சிறப்பான அங்கீகாரம்.. வாழ்த்துகள் பாண்டிராஜ்

cheena (சீனா) said...

அன்பின் சூர்யா

பசஙக் படம் எனக்குப் பிடித்த படம் - நல்வாழ்த்துகள் இயக்குனர் பாண்டிராஜுக்கு

செய்தி பகிர்வினிற்கு நன்றி

butterfly Surya said...

நன்றி சீனா...

butterfly Surya said...

நன்றி தியா..

நன்றி சென்ஷி...

Rajeswari said...

அருமையான பசங்க படத்திற்காகவும், விருதிற்க்கும் வாழ்த்துக்கள் பாண்டிராஜ்...

வெண்ணிற இரவுகள்....! said...

வாழ்த்துக்கள் பாண்டியராஜ் ..........சேரனிடம் படித்தவர் சோடை போவரா .....எனக்கு எதோ உலகத் திரைப்படம் பார்த்தது போல் இருந்தது.....குழந்தையை அதி மேதாவியாய் காட்டாமல் எதார்த்தமாய் காட்டியதே வெற்றி .....விருது வாங்க வேண்டிய இயக்குனரே

butterfly Surya said...

நன்றி கார்த்திக்... நிச்சயம்..

நன்றி ராஜேஸ்வரி.. வருகைக்கும் வாழ்த்துக்கும்..

துளசி கோபால் said...

யானை....அதுவும் தங்க யானை!!!!1

வாவ்.

இனிய பாராட்டுகள் இயக்குனருக்கு.

Cable Sankar said...

நல்ல இன்பர்மேஷன்..

thamizhini said...

VAAZHTHTHUKKAL pandiraajukkum ungalukkum...meendum siru idaivaelaikkup pirahu vandhirukkireerhal....thodarattum ungal pani... x-pecting more from you... regards..

முனைவர்.இரா.குணசீலன் said...

இயக்குநருக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள்..

நல்லதொரு படம்..

butterfly Surya said...

நன்றி தமிழினி.. கண்டிப்பாக முயற்ச்சிக்கிறேன்..

butterfly Surya said...

நன்றி முனைவரே...

butterfly Surya said...

நன்றி துளசி மேடம்...

butterfly Surya said...

நன்றி கேபிள்ஜி... இதே மாதிரி நீங்க இயக்க போகிற படத்திற்கும் நான் பதிவிட வேண்டும். அன்றைய மகிழ்ச்சி தான் எனக்கு எல்லையில்லா மகிழ்ச்சி.. அந்த இன்பர்மேஷனுக்காக காத்திருக்கிறேன்.

அதிஷா said...

பாண்டிராஜூக்கு வாழ்த்துக்கள்ங்க.. பகிர்ந்தமைக்கு நன்றிங்க

அதி பிரதாபன் said...

உண்மையிலேயே பசங்க - ஒரு சிறந்த படம்.

பாண்டிராஜூக்கு வாழ்த்துக்கள்.

Kirubanandhini said...

பாண்டிராஜுக்கு வாழ்த்துக்கள் சொன்ன உங்களுக்கு என் வாழ்த்துக்கள்! எங்கே ரொம்ப நாளா காணோம்?

Shubashree said...

வாழ்த்துக்கள் - செய்திகளை உடனுக்குடன் தெரிவித்த நல்ல வலைப்பதிவு...

butterfly Surya said...

நன்றி வினோத்

நன்றி பெஸ்கி

நனறி கிருபாநந்தினி.. //// வேறன்ன.. வேலை தான்..

நன்றி சுபஸ்ரீ