கன்னிமேரா நூலகத்தில் பல வருடம் முன்பு உறுப்பினராய் இருந்த அடையாள அட்டை தொலைந்து போய் வருடம் பல இருக்கும். புது உறுப்பினர் அட்டை எடுக்கலாம்னு கன்னிமாரா போயிருந்தேன். அழகாக ஏசி ஹாலில் உட்கார்ந்து அமர்களமாய் தூங்க இது நல்ல இடம் போலும்.பலர் அருமையாக தூங்கி கொண்டிருக்கின்றனர். ஆனால் ஒரு நல்ல விஷயமும் நடந்து கொண்டு இருக்கிறது. நிரந்தர புத்தக கண்காட்சி கீழ் தளத்தில் இயங்குகிறது. அனைத்து புத்தகங்களுக்கும் வருடம் முழுவதும் 10% தள்ளுபடி. விகடன், கிழக்கு உட்பட பல பதிப்பக புத்தகங்கள் உள்ளது. ஞாயிறும் விற்பனை உண்டு. சென்னை வரும் புத்தக பிரியர்கள் ஒரு விசிட் அடிக்கலாம்.
பொதுவாக நாம எல்லோரும் எதுக்கெடுத்தாலும் தேடுவது கூகிளாண்டவர் கிட்ட தான். ஆனால் அதுல தேடி அந்த பக்கம் ஓப்பனாக சிறிது லேட்டாகும். குறிப்பாக அந்த பக்கத்தில் அதுக்கு சம்மந்தம் இல்லாத சேதிகளும் வந்து எரிச்சலூட்டும். ஆனால் இந்த பக்கத்தில் நீங்க கேட்கிற எல்லா கேள்விக்கும் விடையிருக்கு. எது தேவையோ அதை எடுத்துக்கலாம். வலையின் பெயரே பதில்கள் தான். Just try பண்ணி பாருங்க.
தன் உடல் நிலையில் ஏதோ கோளாறு என்று நினைத்த Mr.X டாக்டரை பார்க்க போனார்.
“எனக்கு உன் வியாதிக்கான காரணம் தெரியவில்லை” என்று கூறிய டாக்டர் தப்பா நினைச்சுக்க கூடாது, வெளிப்படையாக கூற வேண்டுமானல், குடி போதைதான் காரணம் என்று நினைக்கிறேன் என்றார்.
உடனே Mr.X வெளியேறியபடியே “ அப்படி என்றால் உங்கள் போதை தெளிந்த பின் திரும்பி வருகிறேன்” என்றார்.
காமமா...? ஆமாம்..
நீங்கின் தெறூஉம் குறுகும் கால் தண்ணென்னும்
தீ யாண்டுப் பெற்றாள் இவள்
இந்த குறளில் வள்ளுவர் பெண்ணின் புணர்ச்சியை தீயென்று சொல்கிறார். இந்த தீ உண்மையான தீயிலிருந்து வேறுப்பட்டது. அவளை விட்டு விலகினால் சுடுகிறது. அவளை அணுகினால் தண்ணென்று இருக்கிறது. இப்படிப்பட்டப் புதுமையானத் தீ இந்த உலகில் இல்லை; எந்த உலகிலிருந்து இவள் பெற்றாள்..?
தீ யாண்டுப் பெற்றாள் இவள்
இந்த குறளில் வள்ளுவர் பெண்ணின் புணர்ச்சியை தீயென்று சொல்கிறார். இந்த தீ உண்மையான தீயிலிருந்து வேறுப்பட்டது. அவளை விட்டு விலகினால் சுடுகிறது. அவளை அணுகினால் தண்ணென்று இருக்கிறது. இப்படிப்பட்டப் புதுமையானத் தீ இந்த உலகில் இல்லை; எந்த உலகிலிருந்து இவள் பெற்றாள்..?
Translation:
Withdraw, it burns; approach, it soothes the pain; Whence did the maid this wondrous fire obtain?.
Withdraw, it burns; approach, it soothes the pain; Whence did the maid this wondrous fire obtain?.
Explanation:
From whence has she got this fire that burns when I withdraw and cools when I approach ?.
From whence has she got this fire that burns when I withdraw and cools when I approach ?.
20 comments:
அன்பு சூர்யா,
சினிமாவோடு பாப்கார்ன் போல சினிமா சூர்யாவின் பாப்கார்ன் அருமை.
http://www.answers.com/ உண்மையில் வலையிலேயே உழலும் எனக்கு புது தகவல்.
X ஜோக் C ஆக இருக்கிறது(பரவாயில்லை ரகம்னு சொல்றேன்)
இப்பொழுது இருக்கிற கன்னிமாராவை விட மிகவும் நவீனமான லைப்ரரிகளுக்கு செல்லுவதால், நம்மூரிலும் என எண்ணும்போது சந்தோஷமாக இருக்கிறது.
நிறைய பாப்கார்ன்... சாரி தகவல்கள் தொடர்ந்து தாருங்கள் சூர்யா...
பிரபாகர்.
நன்றி பிராபாகர். X ஜோக் xx ஆக இருக்க வேண்டாம் என்று தான் எண்ணம்.
தொடர்ந்து ஊக்கப்படுத்துவதிற்கும் வாசிப்புக்கும் நன்றிகள் பல..
சூர்யா,
கன்னிமரா நூலகம் போனதை சொன்னீங்க, அதை வெச்சே ஒரு பதிவு. நல்ல விஷயம்தான். தொடர்ந்து பாப்கார்ன் பதிவுகளை எதிர்பார்க்கிறேன்.
‘அகநாழிகை‘
பொன்.வாசுதேவன்
நன்றி வாசு.
கொஞ்சம் தயக்கத்துடன் தான் எழுத ஆரம்பித்தேன். வரவேற்பு இருந்தால் தொடர எண்ணம். ஒரு சிறந்த இலக்கிய வாசிப்பாளரும் கவிஞரும் சொல்லிட்டாரே.. பிறகென்ன..?
தொடரும்..
நூலகம் பற்றிய தகவல் - சந்தோஷம்
எக்ஸ் - சிரிப்பு
காமம் - ஆமாம்
போச்சுடா நீங்களும் ஆரம்பிச்சிட்டீங்களா..?
இதுக்குத்தான் கேபிளு, ஜாக்கி மாதிரி விடலைப் பசங்களோட சகவாசம் வைச்சுக்காதீங்கன்னு சொன்னேன்..
கேட்டாத்தானே..?!!!
நன்றி ஜமால். உங்க பாணியிலேயே கருத்தும் சொன்னதற்கு நன்றி.
நட்பு = ஜமால்.
என்ன உ.த.. இப்படி சொல்லீடிங்க.. இட்லி வடை பொங்கல் அளவுக்கு இல்லதான் ஒத்துகுறேன். பாப்கார்ன் மாதிரி சின்ன பதிவு தான்.
கேபிளு, ஜாக்கி மேல (Mineral water matter) உள்ள கோவம் இன்னும் போகலியா..??
பாப்கார்ன் சுவையா இருந்தது.
சுவையான பாப்கார்ன்..இன்னும் மசாலாவைத் தெளியுங்கள்...
x joke நல்லா இருந்தது...
அல்டிமேட், நம்ம வள்ளுவர்தான்.. இப்பல்லாம் என்ன கவிதை எழுதுறாய்ங்க...அவர் லெவலே தனிதான்....
குறள் சேவை தொடருங்கள்(காமத்துப் பாலாயின் நலம்)
தொடர்ந்து உற்சாகப்படுத்தும் புதுகை தென்றலுக்கு நன்றிகள் பல...
நன்றி தமிழ் பறவை.. என்ன அழகான பெயர்.
நிறைய மசாலாவுடன் குறள் சேவையும் தொடரும்.. ( நிச்சயமா அது தான் )
யப்பா.. இடைவெளி அதிகம்தான்!
இருந்தாலும் நல்ல சுவையான
பாப்கார்ன்னோடு வந்துயிருக்கீங்க...
மாதம் இருமுறை பாப்கார்ன் வேனும் எனக்கு!!
Nice info on cannemara.Kamathupaal padicha kaamam pathi muzhusaa therinchikkalaam. Thee enum Valluvar sol niyayamanathe.Popcorn pathivukku nandri Surya.Now you have improved,keep it up surya.
நன்றி கலையரசன்.
ஆமாம் நீங்கள் சொல்வது போல இடைவெளி அதிகம். வேலைப்பளுவும் அதிகம். படிக்கும் நேரமும் குறைந்து விட்டது. அதான் முதல்ல கன்னிமாரா வேலையை முடித்தேன். சில புத்தகங்களும் வாங்கி வந்தேன்.அதையே துவக்கமாக வைத்து பாப்கார்னும் ரெடி..
பாப்கார்ன் கண்டிப்பாக தொடரும்.
நன்றி நண்பா..
Thanx Doctor for your visit and wishes.
நீங்கள் சினிமா பற்றி எழுதினீர்கள் பாப்கார்ன் அதுவும் சினிமா அய்ட்டமாஅக்வே உள்ளது இருந்தாலும் கொரிக்க சூப்பர்
ஆமாம் அக்னி. கொத்துபரோட்டா, காக்டெயில், மானிட்டர், சாண்ட்விச்ன்னு நண்பர்கள் எல்லோரும் கலக்கிட்டு இருக்காங்க..
அதனால சினிமா அயிட்டமான cheap & best பாப்கார்ன்..உலக சினிமா "இடைவேளை "யில எழுதலாம்னு இருக்கேன்..
வாழ்த்திற்கு நன்றி வினோத்.
அவனவன் டைட்டில் பிடிக்க அலைஞ்சிட்டிருக்கிறப்ப.. பாப்கார்ன் சூப்பர் டைட்டில் தலைவரே..
அந்த திருக்குற்ள் உரை ஐடியா நல்லாருக்கு..
ஆனா நீங்க சமீபத்தில தியேட்டருக்கு போகலியா..? இப்பல்லாம் டிக்கெட் விலைய விட பாப்கார்ன் விலைதான் ஜாஸ்தியா இருக்கு
வாழ்த்துக்கள் :)
கேபிளாரே.. நன்றி. ஆமாம் நீங்க வழக்கமா படம் பார்க்கிற சத்யம் சினிமாவில் பாப்கார்ன் 50 ரூபா அதை சொல்றீங்களா..??
உண்மைதான் அதிகம் தியேட்டருக்கு போவதில்லை. தமிழ் படங்களை பார்க்க பயமாயிருக்கு. ஆனால் "உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு..."
அதான் சமீபத்தில் பார்த்த படம்..
Post a Comment