ஆட்டோ ஒட்டுநர் முதல் Ford Ikon ஒனர் வரை இன்று பயணங்களின் போது FM அலைவரிசைகளை கேட்டு கொண்டே செல்வதை காண முடிகிறது. அவசர யுகத்தில் பொறுமையாக உட்கார்ந்து கேட்க முடியாவிட்டாலும் மொபைல் போனில் பாட்டு கேட்டு கொண்டே வேலையில் ஈடுபடுவதை எங்கெங்கும் பார்க்க நேரிடுகிறது. இன்று சென்னை மட்டுமல்ல இந்தியா முழுவதும் FM ரேடியோ பலத்த வரவேற்பை பெற்றுள்ளது.
ஆனால் பொழுது போக்கான நிகழ்ச்சிகளே எல்லா அலைவரிசைகளிலும் முதலிடம் வகிக்கிறது.
நாளை முதல் ஒரு உபயோகமான நிகழ்ச்சியும் ஆஹா FMல் ஒலிபரப்பாகவுள்ளது. அது தான் “கிழக்கு பாட்காஸ்ட்”
நாளை 26 ஜூலை 2009, ஞாயிறு முதல் வாராவாரம் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் கிழக்கு பதிப்பகம் வழங்கும் “கிழக்கு பாட்காஸ்ட்” என்ற நிகழ்ச்சி ஆஹா FM பண்பலை வானொலியில் மதியம் 12.00 மணியிலிருந்து 1.00 மணி வரை ஒலிபரப்பாக இருக்கிறது. இதற்காக முதலில் திரு. பத்ரிக்கும் கிழக்கு டீமுக்கும் வாழ்த்துகள்.
இணையத்தில் பாட்காஸ்ட் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். பல்வேறு தலைப்புகளில், பல்வேறு சுவாரசியமான விஷயங்கள் பற்றிய கலந்துரையாடலும் கேள்வி பதில்களும் தான்.
இது ரேடியோவுக்கு மிகவும் பொருத்தமான ஒரு விஷயம். அமெரிக்காவில் Talk Radio நிகழ்ச்சிகள் பல உள்ளன. ஆனால் இந்தியாவில் இதுபோன்ற நிகழ்ச்சிகள் ஏனோ தனியார் வானொலிகளில் கேட்கக் கிடைப்பதில்லை.
ஆஹா FM 91.9 மெகாஹெர்ட்ஸில் சென்னையில் ஒலிக்க கேட்கிறது. சென்னையைச் சுற்றி சில கிலோமீட்டர் தூரத்திலும் கேட்கலாம். நாளை ஒலிப்பரப்பாகவுள்ள நிகழ்ச்சி “பங்கு சந்தை” பற்றியது.
இதில் திரு.பத்ரி அவர்களும் “அள்ள அள்ள பணம்” நூலாசிரியர் திரு. சோம வள்ளியப்பனும் பங்கு சந்தை முதலீடுகள் குறித்து உரையாடுகின்றனர். ஆன் லைன் வர்த்தகத்தின் பயன்கள் குறித்தும் நீண்ட நாள் பங்குகளை வைத்திருப்பது குறித்தும் நானும் சிறிது உரையாடினேன்.
இல்லதரசிகளும் வீட்டிலிருந்த படியே ஆன்லைனில் வர்த்தகம் செய்வதின் அனுபவங்கள் குறித்து திருமதி. V.Rajeswari அவர்களும் இரண்டு நிமிடம் Telephonic Interview கொடுத்துள்ளார்கள்.
பங்கு சந்தையில் ஆர்வமுள்ளவர்கள், முதலீடு செய்ய நினைத்து பயத்துடன் விலகி நிற்பவர்கள் அனைவரும் கேட்கலாம்.
சில மொக்கை பதிவுகள் போன்று பல மொக்கை நிகழ்ச்சிகள் FM அலைவரிசைகளில் தொடர்ந்து ஒலித்து கொண்டிருந்தாலும் இது போன்று இன்னும் சில உபயோகமான நிகழ்ச்சிகளும் நிறைய வர வேண்டும் என்பதே என் விருப்பம்.
உங்கள் விருப்பம் என்ன என்பதை பின்னூட்டத்தில் சொல்லுங்கள்.
அதன் ஒலி வடிவம் இங்கே
டிஸ்கி: V.Rajeswari எங்க வீட்டு எஜமானியம்மா
12 comments:
TEST...
நல்ல முயற்சி! கிழக்குக்கு வாழ்த்துக்கள்!
///டிஸ்கி: V.Rajeswari எங்க வீட்டு எஜமானியம்மா///
நல்ல விளம்பரம்.. ஹிஹிஹி
நன்றி தமிழ்பிரியன்..
விளம்பரமா..?? பயம்.. ஹிஹிஹி..
வண்ணத்துபூச்சியார் வேறு அந்த நிகழ்ச்சியில் பேசியிருக்கிறார். வாழ்த்துக்கள்
cablesankar
Nalla thahaval Surya,Nandri.
இது வேறையா? ரைட்டு...
பல தள மன்னனா இருப்பீங்க போல?
நன்றி கேபிளாரே..
நன்றி டாக்டர்.
நன்றி கலயரசன்... ஏதோ எனக்கு தெரிந்ததை சொன்னேங்க..
can we have this broadcast in internet
நிறைய மாற்றங்கள் பார்க்க முடிகிறது உங்கள் நடையில்... விதி விலக்கல்ல இந்தக் கட்டுரையும்
குப்பன். ஒலி வடிவமும் இங்கே கேட்கலாம்.
பத்ரிக்கு நன்றி.
Post a Comment