Thursday, July 23, 2009

உடற்பசியும்... அறிவு பசியும்...




அவசியமான அர்த்தங்கள் சூரியனைச் சுற்றிவரும் கோள்களில் பூமி மட்டும்தான் இயற்கையால் ஆசிர்வதிக்கப்பட்டு இருக்கிறது. மற்ற கோள்கள் எல்லாம் உயிர்ப்பு சக்தி அற்று மருகி நிற்க, பூமி மட்டும் உயிரினங்களைப் பிரசவித்து தாய்மைக்குரிய பூரிப்போடு தழைத்துச் செழித்திருக்கிறது. அந்த உயிரினங்களில் தனித்துவமுடையதாக, மற்ற எல்லா உயிரினங்களுக்கும் தலைமை தாங்கக்கூடிய ஆற்றலும் அறிவும் பெற்றதாக இருப்பதுதான் மனித இனத்தின் சிறப்பு.


இந்த ஆற்றலையும் அறிவையும் மனிதனுக்கு அவன் நினைத்த மாத்திரத்திலேயே இயற்கை வழங்கிவிடவில்லை. DNA என்ற புரதச் சுருளில் தோன்றிய உயிரின் தொடக்கம், மனிதன் என்ற உன்னத நிலை வரை பரிணாம வளர்ச்சி அடைந்திருக்கிறது. அப்படிப்பட்ட உயிரைத் தாங்கி இருக்கும் உயிரினங்களின் தலையான பணியே இனப்பெருக்கம்தான்.


இனப்பெருக்கத்தை ஊக்குவிப்பதையே குறியாகக் கொண்டு செயல்படுபவை ஜீன்கள். ஜீன்கள், தன் உயிர் தேவைக்கு ஏற்றவாறு உயிரினங்களில் ஏற்படுத்திய பரிணாம மாற்றங்கள் பல. படர்வன, பறப்பன, ஊர்வன, பாலூட்டிகள்... போன்றவை இவற்றில் அடங்கும். பாலூட்டிகளின் முதிர்ந்த பரிணாமம்தான் மனித இனம். இந்தப் பரிணாமங்களுக்கும், உயிரினங்களின் வாழ்வியல் மாற்றங்களுக்கும் அடிப்படையாக ஜீன்கள் கையில் எடுத்திருக்கும் யுக்திதான் காமம்.


'காமமா!' என அதிர்ச்சியடைந்தாலும், 'ஆமாம்!' என ஒத்துக்கொள்ள வேண்டிய பல அறிவியல் உண்மைகள் இருக்கின்றன. காமம் என்ற ஒன்று இல்லாவிட்டால் இனப்பெருக்கம் இருந்திருக்காது. உயிர்களும் தழைத்திருக்காது. ஆக, வாழ்வியல் தேவைக்கான முக்கிய அம்சமாகக் காமம் இருக்கிறது.


ஆனால், காம உணர்வில் வக்கிரம் நுழைகிறபோதுதான் அது உயிருக்கு எமனாக முடிகிறது. அதற்கும் உளநலவியல் ரீதியான அறிவியல் காரணங்கள் பல இருக்கின்றன. பன்னிரெண்டு வகையான மனித காமத்தையும், அதனால் மனித இனத்தில் ஏற்பட்ட வாழ்வியல் ஏற்ற இறக்கங்களையும் 'அர்த்தமுள்ள அந்தரங்கம்' என்ற இந்தப் புத்தகத்தில் விரிவாக விளக்கி இருக்கிறார் டாக்டர். ஷாலினி.


இந்தப் புத்தகத்தில் மனித இனத்தின் அந்தரங்கம் குறித்த ஆச்சரியமூட்டும் உண்மைகளும், அறிந்துகொள்ள வேண்டிய அடிப்படைத் தகவல்களும் நிரம்ப உள்ளன. காமத்தின் ஆதாரக் குணங்களோடு மனித இனத்தின் அந்தரங்கப் பிரச்னைகளை, உளநலவியல் பூர்வமாக அணுகி இருக்கிறார் நூலாசிரியர்.




இந்தப் புத்தகத்தைப் படியுங்கள் உங்கள் புரிதல்கள் மேலும் விரிவடையும்.


வெளீயீடு: விகடன் பிரசுரம்
பக்கம்: 192
விலை: Rs: 80/-
ஆன்லைனில் வாங்க இங்கே


டாக்டர் ஷாலினி





இவரை பற்றி நமது வலைபதிவர்களுக்கு ஒரளவு அறிமுகம் உண்டு. குழந்தைகளுக்கு ஏற்படும் பாலியல் தொந்திரவுகள் பற்றி சில மாதங்களுக்கு முன் வலை பதிவர்கள் ஏற்பாடு செய்த Good Touch Bad Touch என்ற கருத்துரையாடலில் கலந்து கொண்டு பல ஆலோசனைகளை வழங்கியவர்.


சென்னை மருத்துவ கல்லூரியில் இளங்கலை மருத்துவத்தை பயின்ற டாக்டர் ஷாலினி முதுகலையில் மன நல மருத்துவத்தை மதுரை மருத்துவ கல்லூரியில் முடித்தவர். தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலை கழகத்தில் “மகளிர் மனநலம்” குறித்த ஆராய்ச்சியில் முனைவர் பட்டம் பெற்றவர்.


தற்போது சென்னை மருத்துவ கல்லூரியின் மன நல பிரிவில் ஆராய்ச்சியாளராக பணி புரிந்து வருகிறார். மேலும் ‘உளநல சேவை மற்றும் ஆராய்ச்சி மையம்’ என்ற அமைப்பை நிறுவி அதன் இயக்குநராகவும் இருந்து வருகிறார். மனம் நலம் குறித்த பல தொலைகாட்சி நிகழ்ச்சிகளில் நீங்கள் டாக்டரை பார்த்திருக்கலாம்.


தமிழில் இதுவரை எழுதிய நூல்கள் டீன் ஏஜ் பிரச்ச்னைகள், ஆளை அசத்தும் 60 கலைகள், அந்தரங்கம் இனிமையானது, ஆண் பெண், பெண்கள் மனசு, பெண்ணின் மறுபக்கம்.


தமிழில் இவரது வலைப்பூ இங்கே

8 comments:

butterfly Surya said...

TEST..

நேசமித்ரன் said...

மிகத் தெளிவான பதிவு

:)
அவரின் வலைத்தளம் எப்போதோ என் தொடரும் பட்டியலில் ..

butterfly Surya said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நேசமித்ரன்.

நட்புடன் ஜமால் said...

நல்ல பகிர்வு நண்பரே!

butterfly Surya said...

நன்றி ஜமால்.

தேவன் மாயம் said...

நல்ல பகிர்வு!!1

தேவன் மாயம் said...

பாலியலில் இன்னும் களைய வேண்டிய பயங்கள் அறிய வேண்டிய விசயங்கள் நிறைய உள்ளன!! வாழ்த்துக்கள்!!

butterfly Surya said...

வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி டாக்டர்.