Sunday, July 12, 2009

ரேஷ்மிக்கு கல்யாணம்

" வந்துட்டீங்களா?.." ஆவலுடன் வரவேற்றாள் அம்மா...

" காபி கொண்டு வரவா சக்கர இல்லாம..?"

" இன்னிக்கு சக்கர போட்டே கொண்டுவாயேன்.." அப்பா சிரித்துக்கொண்டே சொன்னதை கேட்டதும் ரேஷ்மா உள்ளேயிருந்து எட்டி பார்த்து காதை தீட்டிக்கொண்டாள்..

அம்மா சமையலறைக்குள் நுழைந்த பரபரப்பிலிருந்தே ஓரளவு புரிந்தும் கொண்டாள்...

" அவங்க ரொம்ப இஷ்டமாத்தான் இருக்காங்க நம்ம பொண்ண கட்டிக்க.."

அம்மா திரும்பி பார்த்து புன்னகையோடு இரு கரம் கூப்பி அங்கிருந்தபடியே ஆண்டவனை தொழுதாள்..

" இந்த இடம் முடிஞ்சாக்க நான் திருப்பதி வருவதா வேண்டிக்கிட்டேங்க.."

" ஆனா ஒரு விஷயம் பங்கஜம்...அந்த ஜோசியருக்குத்தான் நன்றி சொல்லணும்.. நாம படுற பாட்ட அவர் நல்லா புரிஞ்சுட்டார்.."

" என்னமோ போங்க இவ கல்யாணம் முடிஞ்சா நாம ஜோடியா போய் சேர்ந்திடலாம்..


5 வருசமா எத்தனை வரன்கள்.. அத்தனையும் ஏமாற்றங்கள்..?"

அலுத்துக்கொண்டதை பார்க்கவே பாவமாயிருந்தது ரேஷ்மிக்கு.. உள்ளே சென்று கதவை தாளிட்டுக்கொண்டாள்... ஆனால் அவள் மனம் மிகவும் கனத்தது. இதை இப்படியே விட்டுவிடலாமா? வேண்டாமா என்று குழம்பிதான் போனாள்.

ஒரு வழியாக தைரியத்தை வரவழைத்து பிரபாகரனுக்கு போன் செய்ய முடிவெடுத்தாள்.

”பொத்தி வச்ச மல்லிக மொட்டு’ என்று நோக்கியா சிணுங்கியது...


பிராபா ஸ்பிகிங் என்றான்.. சிறிது நேர மவுனத்துக்கு பிறகு நான் ரேஷ்மி பேசறேன். உங்க கிட்ட பர்சனலா பேசணும். நாளைக்கு உங்க ஆபிஸிக்கு வரலாமா? என்றாள்.

எனி பிராப்ளம்..? என்றான் பிரபா..


நேரிலேயே பேசலாமே என்றாள் ரேஷ்மி..

ஒ.கே.. யூ ஆர் மோஸ்ட் வெல்கம் என்று பிரபா சொல்லிய மறு நிமிடம் போனை துண்டித்தாள்.

லேண்ட்லைன் நம்பரா இருக்கே..?? பி.சி.ஒ விலிருந்து பேசியிருப்பாள் என்று நினைத்து கொண்டான்.

வயசு 32ஆகி விட்டது. ஆறு வருடம் டெல்லி வாசம். அடுத்தடுத்து இரண்டு தங்கைகளின் கல்யாணம் என்று ஒருவழியாய் எல்லாவற்றையும் செட்டில் பண்ணி விட்டதாலேயே திருமணத்திற்கு ஒப்பு கொண்டு முதல் வரனையே ஒ.கே சொல்லிவிட்ட அவனுக்கு இரவெல்லாம் எதுவும் ஒடவில்லை.

அவன் ஆவலாய் பார்க்கும் நீயா நானா கூட இன்று போரடித்தது.. தனது அறைக்கு சென்று புத்தகம் எடுத்தான். பிரித்தான். படிக்கவில்லை.

மீண்டும் மீண்டும் போன் வருமா என்று மொபைலை எடுத்து பார்த்தான்..

மறு நாள் திங்கட்கிழமை..

என்னடா சீக்கிரமே கிளம்பிட்ட..?? மத்யான சாப்பாடும் வேண்டாமா என்றாள் அம்மா?

வெளியில பாத்துகுறேன்மா என்று சொல்லி விட்டு காரை கிளப்பி கொண்டு சின்மயா நகரிலிருந்து 20 நிமிடத்தில் ஆபிஸையும் அடைந்து விட்டான்.

ரிவூ மீட்டிங்கை நாளைக்கு வச்சுக்கலாம் சார் என்றான் வி.பியிடம்.

ஒ.கே நோ பிராப்ஸ் என்று கூலாய் கூறி விட்டு அவரது அறைக்குள் சென்றுவிட்டார் வி.பி.


சற்றே கலக்கத்துடன் புதுப்பட ரிலீஸான தயாரிப்பாளர் போல இறுக்கத்துடன் அமர்திருந்தான்.







" Mr.பிரபாகரனை ..... பாக்கணும்...கொஞ்சம் கூப்பிட முடியுமா?.."
" யார் நீங்க..? உங்க டீடெய்ல்ஸ் சொல்லுங்க பிளீஸ்.." என்றாள் ரிசப்ஷனிஸ்ட்..
" ம். நான் வந்து.. ம். என் பேர் ரேஷ்மி.. ரேஷ்மின்னு சொல்லுங்க என்றாள் சற்று பயம் கலந்த குரலில்..


" ஹை. பிரபா.. சம் ஒன் இஸ் ஹியர் டு மீட் யு... ஹோல்ட் ஆன் அ செக்.."
" மிஸ். .. ரேஷ்மி ஹி இஸ் ஆன் த லைன்.. ப்ளீஸ்.." என தொலைபேசியை கொடுக்கிறாள்..
" ஹலோ மிஸ்டர்.பிரபாகரன்..."
"ம். யா ஸ்பீக்கிங்..நீங்க.."
" ம். நான் ரேஷ்மி.. ரிசப்ஷன்ல இருக்கேன் என்றாள்..
" அங்கேயே இருங்க.. இதோ வருகிறேன் ஒரு நிமிஷத்துல.."

"ம். காஃபி சாப்பிட்டுட்டே பேசலாமா..?.. இல்ல லஞ்சா..? "

சாப்பிடுறீங்களான்னு கேக்காம ஆப்ஷன்லா கொடுக்கிறான்... தவிர்க்க முடியலை..

" காபி போதும்.." வெட்கப்படுகிறாள்..

" ஒகே.. இன்னிக்கு காஃபி வித் ரேஷ்மி யோ.." ஏதோ பெரிய ஜோக் அடித்தவன் போல் சிரிக்க முயற்ச்சித்தான் , முக்கியமாக தயக்கத்துடன் இருக்கும் அவளுக்கு லேசான ஒரு சூழ்நிலையை ஏற்படுத்த விரும்புகிறான்...


இவனை அடையப்போறவள் நிச்சயம் கொடுத்து வைத்தவள்தான் என மனதுள் எண்ணிக்கொள்கிறாள்..

" ம். சரி இப்ப சொல்லுங்க. என்ன விஷயம்.. அன்னிக்கு உங்களை கோவிலில் பார்த்ததுன்னு நினக்கிறேன்..."

"ம்."

" ஏன் என்னை பிடிக்கலைன்னு சொல்ல வந்தீங்களா... ?. என்னோட முன்நெற்றியில் முடி கொஞ்சம் கம்மிதான்.." அசடு வழிந்தான்..


" ஆனா எங்க வீட்டுல உங்களை எல்லோருக்கும் பிடிசுடுச்சு.."

சரியான லொட லொடதான்...என்னை பேசவே விடமாட்டேங்குறானே அப்படின்னு எண்ணிக்கொண்டிருக்கும்போதே ,

" சாரி, நீங்க பேசுங்க.. நான் பாட்டுக்கு லொட லொடன்னு.."

அட நான் மனதில் நினைத்ததை அப்படியே...????.. ஆச்சர்யப்படுகிறாள்..
அவனோ கதை கேட்கும் குழந்தை போல கன்னத்தில்கைவைத்து அவளையே பார்த்துக்கொண்டு மறு கையில் காபியை உறிஞ்சுக்கொண்டு கேஷுவலாய்..


" இல்ல.. அதான்.. வந்து..."

"3 வார்த்தை போட்டியா... சொல்லுங்க...அதுக்கு மேல.."

" அப்பா சொன்னார் உங்க வீட்டுல சம்மதம் னு...ஆனா எனக்கு திருமணம் ஆகணும்னு எங்க வீட்டுல எனக்கு ஜாதகத்துல ஏதோ தோஷம் இருக்கு. ஆனா அதை மறைச்சுட்டாங்க."
அதை சொல்லி முடிப்பதற்குள் ஏசி ரூமிலும் வேர்த்தது..


"ம்."

" அதான் உங்க கிட்ட நிஜத்தை சொல்லிடலாம்னு...." பேச முடியாமல் வார்த்தை வராமல்..தவித்தாள்


"ம்.."

பயந்தாள்..அவன் மெளனத்தை கண்டு...

பெருமூச்சு விட்டான்...


" காஃபி ஆறிட போகுது சாப்பிடுங்க முதலில்..." எடுத்து கொடுத்தான்.. பயத்தோடு கட்டளைபோல் வாங்கினாள்..

" ரேஷ்மி..."


"ம்.."

" ரேஷ்மி , " உங்க நேர்மை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு" , உங்களை விட..."

"இன் ஃபேக்ட் எனக்கு இந்த ஜாதகம் ஜோஸியத்துல எல்லம் துளியும் நம்பிக்கை இல்லை.."
" நீங்க நம்புறீங்களா.?"


" இல்லை " என தலையாட்டினாள்...

"ம்."
" என்ன பிடிச்சிருகா உங்களுக்கு.."?? என்று பணிவாகத்தான் கேட்டான்.


"ம்."
" ஆமா இல்லன்னு வாய தொறந்து சொல்ல மாட்டீங்களா.?" சிரித்துக்கொண்டே..
" ம். பிடிச்சுருக்கு.."
" ம். அப்புற்ம் என்ன... பொய் பொய்யாவே இருக்கட்டும்...நாம மெய்யான ஒரு வாழ்க்கையை தொடங்குவோம் சரியா..?"


"ம்."

" என்ன அதுக்கும் 'ம்' தானா.. ?.. இப்ப பேசாம கல்யாணத்துக்கு அப்புறமா மொத்தமா பேசலாம்னு ஐடியாவா..?"

மனதை கலக்கிய பாரம் உடைந்து கலகலவென சிரித்தாள்..

" சரி இன்னிக்கு லஞ்ச் என்கூடதான்..." என சொலிவிட்டு அவளை கேட்காமலே ஆர்டர் பண்ண சென்றான் பொக்கேவுக்கு...:)



டிஸ்கி: இது என் முதல் முயற்சி. உங்கள் பின்னூட்டதிற்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்.


34 comments:

butterfly Surya said...

TEST..

பரத் said...

கதை நல்லாயிருக்கு!

பிரபாகர் said...

சூர்யா...

அசத்தலாய் இருக்கிறது. டச்சிங்...

படித்து முடித்ததும் மனதிற்குள் ஏதோதொ செய்கிறது, தற்சமயம் எனக்கு நடந்த ஒரு நிகழ்வினை அப்படியே ஒத்திருப்பதால்...

அலுவலகம் என்றும் பாராமல், உடனே உங்களுக்கு பின்னூட்டம் எழுதுகிறேன் மன நிறைவுடன்...

நந்தவனத்தில் நீங்கள் நிறைய உலவ வேண்டும் என்பது எனது விருப்பம்.

பிரபாகர்....

butterfly Surya said...

நன்றி பரத்...

butterfly Surya said...

நன்றி பிராபாகர். இது என் முதல் முயற்ச்சி.
ஒவ்வொரு முறையும் உங்களின் உற்சாகம் என்ன்னை மேலும் ஊக்குவிக்கிறது.

நன்றிகள் பல..

Cable சங்கர் said...

தலைவரே.. வாழ்த்துக்கள்.. உங்க முதல் சிறுகதை முயற்சிக்கு.. முதல் கதை மாதிரி தெரியலையே..

உண்மைத்தமிழன் said...

முதல் முயற்சியா..?

நம்பலாமா..?

ஏகப்பட்ட ட்விஸ்ட்டுகளைக் கொட்டிட்டு என்ன ஊக்குவிப்பு வேண்டிக்கிடக்கு..?

வாரத்துக்கு ஒண்ணு எழுதுங்கண்ணே..!

pudugaithendral said...

முதல் முயற்சி மாதிரியே தெரியவில்லை.

மனமார்ந்த பாராட்டுக்கள்

butterfly Surya said...

நன்றி கேபிளாரே..

butterfly Surya said...

தலைவா.. நம்பிக்கையே வாழ்க்கை..

நம்பிதான் ஆகணும்..

butterfly Surya said...

மனமார்ந்த நன்றிகள் புதுகை..

கலையரசன் said...

கதை கூட எழுதுவீங்களா? எல்லா தலைப்புகளிலும் புகுந்து விளையாடுறீங்க, வாழ்த்துகள்!!

butterfly Surya said...

நன்றி கலையரசன்.. சில நாட்கள் முன்பு ஒண்ணு இரண்டு எழுதினேன்.எனக்கே திருப்தியில்லை. அதனால் வலையேற்றவில்லை. இது கொஞ்சம் பரவாயில்லை என்று தோன்றியது. அதான். நன்றி நண்பா..

Jackiesekar said...

முதல் முறை போல் தெரியவில்லை...நல்ல நடை வாழ்த்துக்கள் சூர்யா...

butterfly Surya said...

நன்றி ஜாக்கி...

Unknown said...

நல்ல twist களுடன் ரொம்ப நன்றாக இருக்கிறது. வாழ்த்துக்கள்.

butterfly Surya said...

முதல் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி நளினா.

உயிரோடை said...

அண்ணா க‌தை ந‌ன்னா இருக்கு. வாழ்த்துக‌ள். மேலும் எழுதுங்கோ.

butterfly Surya said...

வாழ்த்துக்கு நன்றி லா. எப்படி இருக்கிறாய்..?

Muniappan Pakkangal said...

Starting with a bang,Nice Surya,you have started in dimensions.

கிள்ளிவளவன் said...

nandru. vazhthukal.

butterfly Surya said...

Thanx Dr.

butterfly Surya said...

நன்றி கிள்ளிவளவன்.

ungalrasigan.blogspot.com said...

" ஆனா ஒரு விஷயம் பங்கஜம்...அந்த ஜோசியருக்குத்தான் நன்றி சொல்லணும்.. நாம படுற பாட்ட அவர் நல்லா புரிஞ்சுட்டார்.."
இந்த வரி அங்கே படிக்கும்போது பூடகமாக இருந்தது. கதை முடிந்ததும் புரிகிறது. ஆனாலும், அதை நீங்கள் விவரித்துச் சொல்லவில்லை. இதுதான் ஒரு நல்ல சிறுகதைக்கான அடையாளம். முதல் முயற்சியிலேயே அதை நீங்கள் அடைந்திருப்பது நிச்சயம் பாராட்டுக்குரியது!வெல்டன்!

goma said...

முதல் முயற்சியே இப்படி என்றால்....வாஹ்!சல சலவென நிதானமாக ஓடும் நீரோடை போல் எழுத்து நடை போட்டது
வாழ்த்துக்கள்.

butterfly Surya said...

நன்றி ரவி சார்.

ஆத்தா... நான் பாஸாயிட்டேன்...

butterfly Surya said...

நன்றி கோமதி மேடம்.

உங்கள் ஆசியுடன் முயற்ச்சிகள் தொடரும்..

Viji said...

Good Attempt! Do keep writing:-).

Krishna said...

Butterfly Rocks! Keep it going.

First short story is very impressive.

Could see a micro level mix of Merina and Kalki.

Krishna

butterfly Surya said...

Thanx Viji. Sure will try...

butterfly Surya said...

Hey Krishna.. Thanx for your visit and wishes.. But this is too much...

ISR Selvakumar said...

நிறைய எழுதுங்க..நடை நல்லா இருக்கு.

அப்புறம் . . .
அந்த போட்டோவில இருக்கற பொண்ணு யாரு? இப்பதான் இந்த முகத்தை ஜெயா டிவியில பார்த்த மாதிரி இருக்கு

Chitravenkateswaran said...

எழுத்தளர் சுஜாதவின் ரசிகரா? நடை அவர் பாணியில் இருக்கு...

Thenammai Lakshmanan said...

TEST DRIVE...

SUPERB SURYA

aduthu enna cinemavukku story aa