Tuesday, July 21, 2009

பாப்கார்ன் ஜீலை 16 - 30


மொபைல் பேசி கொண்டே காரும் இரண்டு சக்கர வாகனங்களும் ஒட்டும் போக்கு நாளுக்கு நாள் சென்னையில் மட்டுமல்ல தமிழகம் முழுவதும் அதிகரித்து கொண்டே வருகிறது. என்னதான் காவல்துறை தெருவோரங்களில் மறைந்திருந்து பிடித்தாலும் அவர்களுக்கும் டிமிக்கி கொடுத்து விட்டு என்னவோ கோட்டையை பிடிக்க பிளான் போடுவது போல சில அறிவு ஜீவிகள் பேசி கொண்டே போவதும் அரட்டை அடிப்பதும் கூட நடக்கிறது.
நடப்பாண்டில் தமிழகத்தில் மட்டும் சாலை விபத்தில் இறந்தோரின் எண்ணிக்கை 13 ஆயிரத்தை தொட்டுவிடும் என்பது அதிர்ச்சியான தகவல். குடித்து விட்டு வாகனம் ஓட்டுவதாலும் நெடுஞ்சாலைகளில் விபத்து அதிகரிக்கிறது.

ஆண்டு {உயிரிழப்புகள்}

2004 {9,507}
2005 {9,760}
2006 {11,009}
2007 {12,036}
2008 {12,784}

சாலை விதிகளை மீறுவது, சட்டத்தை மதிக்காதது போன்றவற்றை கண்டு கொள்ளாமல் வாகன சோதனை சாவடிகளில் “வசூல் வேட்டை”யில் குறியாய் இருக்கும் அதிகாரிகளின் அலட்சிய போக்கு மாற வேண்டும். மக்களும் திருந்த வேண்டும். திருந்தமாட்டேன் என்று அடம் பிடிப்பவர்கள் இந்த படத்தை பார்க்க வேண்டும்.


*********************************************************

தன்னம்பிக்கை ஓவியங்கள்








மேலே உள்ள இந்த அழகான பென்சில் ஓவியங்களில் அப்படி என்ன சிறப்பு..?
இங்கே பாருங்கள் தெரியும்.


****************************************************************


Mr.X கப்பலில் வேலை கேட்டு விண்ணப்பித்து இருந்தார்.

அவர் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டார்.

அவரிடம் நேர்முகத் தேர்வு நடத்தியவர் கேட்டார்


“புயல் வருமானால் என்ன செய்வீர் ?என்று .

அவர் சொன்னார் “நங்கூரத்தை நாட்டுவேன் “என்று

“முன்னைவிட பெரியதாய் இன்னொரு புயல் வருகிறது அப்போது நீர் என்ன செய்வீர் ?”

“நான் இன்னொரு நங்கூரத்தை நாட்டுவேன் “என்றார் அவர் .இப்படி அது சென்று கொண்டு இருந்தது .

“…பத்தாவது புயல் !”

Mr.X சொன்னார் “நான் இன்னொரு நங்கூரத்தை நாட்டுவேன் “

அந்த மனிதர் கேட்டார் .”ஆனால் இத்தனை நங்கூரத்தை நீர் எங்கிருந்து பெறுவீர் ?”என்று

அதற்கு Mr.X சொன்னார் .”தாங்கள் எங்கிருந்து புயல்களை பெறுவீர்களோ அங்கிருந்துதான் “


*******************************************************

காமமா..?? ஆமாம்...




தம்மில் இருந்து தமதுபாத்து உண்டற்றால்

அம்மா அரிவை முயக்கு. (1107)


தானே உழைத்துச் சேர்த்ததைப் பலருக்கும் பகுத்து வழங்கி உண்டு களிப்பதில் ஏற்படும் இன்பம், தனது அழகிய காதல் மனைவியைத் தழுவுகின்ற இன்பத்துக்கு ஒப்பானது.


Translation:
As when one eats from household store, with kindly grace
Sharing his meal: such is this golden maid's embrace.


Explanation:
The embraces of a gold-complexioned beautiful female are as pleasant as to dwell in one's own house and live by one's own (earnings) after distributing (a portion of it in charity).

13 comments:

butterfly Surya said...

TEST...

பிரபாகர் said...

சூர்யா,

வித்தியாசமான தகவல்களை கொடுத்து அசத்துகிறீர்கள்.

போக்குவரத்து அவலங்கள் நமது நாட்டினை மிகக் கேவலப்படுத்தும் விஷயங்களில் தலையாய ஒன்று. இது பற்றி விழிப்புணர்வு கண்டிப்பாய் வேண்டும்.

நன்றி சூர்யா...

பிரபாகர்.

butterfly Surya said...

நன்றி பிராபாகர்..

Anonymous said...

walk when you talk விளம்பரத்தை விமர்சனம் செய்து ஒரு பதிவு போடுங்கள்.

pudugaithendral said...

பிரசண்ட் போட்டுக்கோங்க. காதுல போன் பத்தி ரங்கா எழுதின கதையும், நான் எழுதின பதிவும் படிச்சிருக்கீஙளா???

butterfly Surya said...

நன்றி சாய்தாசன். நிச்சயம் போடுகிறேன்.

கடற்கரை பதிவர் சந்திப்பில் பார்த்தது. நலமா நண்பரே..??

butterfly Surya said...

வருகைக்கு நன்றி புதுகை. படிக்கிறேன்..

கலையரசன் said...

பொரி பறக்குது!!

butterfly Surya said...

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி கலையரசன்..

Geetha Sambasivam said...

பென்சில் ஓவியங்கள் அருமை!

butterfly Surya said...

நன்றி கீதா மேடம்..

நேசமித்ரன் said...

ஒரு பெஞ்ச்மார்க் போல இருக்கிறது உங்கள் பதிவுகள்
நீங்கள் தொடும் தளங்கள் ஒவ்வொரு படைப்பாளியும் எழுதவேண்டிய சமூக கடமைகளை கொண்டிருக்கிறது

butterfly Surya said...

நன்றி நேசமித்ரன். திரட்டிகளில் இதையெல்லாம் கண்டு கொள்வதாகவே தெரியவில்லை. ஆனால் அதை பற்றியெல்லாம் எனக்கு கவலையுமில்லை.

தங்களை போன்ற ஒன்று இரண்டு நடு நிலையான ஊக்குவிப்புகளே எனக்கு பலமும் புத்துணர்ச்சியும். நன்றிகள் பல..