
சமீபத்தில் வெளியான திரைப்படங்களில் அதிகம் பாராட்டப்பட்ட திரைப்படம் அங்காடித்தெரு. ஒரு சில விமர்சனங்களும் உண்டு. ஆனால் ஒரு படைப்பை உருவாக்க்க அதுவும் முற்றிலும் வணிகம் சார்ந்த தமிழ் சினிமாவில் இப்படி ஒரு திரைப்ப்டத்தை தந்த வசந்த பாலனை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்ததுடன் சூரிய கதிருக்காக பேட்டியும் எடுத்ததில் மகிழ்ச்சியே. மிக மிக இயல்பாகவும் யதார்த்தமாகவும் பேசினார்.
ஒரு படைப்பாளிக்குரிய தன்னம்பிக்கையும் விடா முயற்சியும் அவர் பேச்சில் மிளிர்ந்தாலும் மூன்று வருட போராட்டத்தில் அங்காடித்தெரு திரைப்படம் வெளிவரும் வரை அவர் பட்ட வேதனைகளும் வலிகளும் சொல்லில் அடங்காது என்பதை பேட்டியுனுடே அறிய முடிந்தது. மகிழ்ச்சியாய் ஆரம்பித்து நெகிழ்சியாய் முடிந்த இனிய சந்திப்பு.
சூரிய கதிர் ஏப் 16-30 இதழில் வசந்தபாலனின் பேட்டி வெளியாகியுள்ளது.
நண்பர்களுடன் பகிர்வதில் அளவற்ற மகிழ்ச்சி. விரைவில் பதிவேற்றுகிறேன்.