நர்சிம்:
ஒரு நாள் கம்பரும் சோழ மன்னரும் மாலை நேரத்தில் சோலையில் உலாவி கொண்டிருந்தார்கள்.
ஒடிக்கொண்டிருந்த ஆற்றுநீர் காலில் படும்படியாக இருவரும் நீரின் ஓரமாகவே நடந்து செல்லும் போது கம்பருக்கு தாகம் எடுத்தது. உடனே அவர் குனிந்து அந்த தெள்ளிய நீரை அள்ளி இரண்டு வாய் குடித்தார். இதை கண்டதும் மன்னருக்கு குஷி வந்து விட்டது. கம்பரை மட்டம் தட்ட சரியான சந்தர்ப்பம் என எண்ணி “ கம்பரே ! என் காலில் விழுந்த நீரைத்தானே உண்டீர்’? என்றார்.
உடன் சற்றும் யோசிக்காத கம்பர் பட்டென்று “நீரே வந்து காலில் விழுந்தால் நான் என்ன செய்வது”? என்றார்.
மன்னர்.. அமைதியாக வெட்கப்பட்டு தலை குனிந்தார்.
=========================================================
லக்கிலுக் & அதிஷா
ஒரு நாள் கம்பரும் சோழ மன்னரும் மாலை நேரத்தில் சோலையில் உலாவி கொண்டிருந்தார்கள்.
ஒடிக்கொண்டிருந்த ஆற்றுநீர் காலில் படும்படியாக இருவரும் நீரின் ஓரமாகவே நடந்து செல்லும் போது கம்பருக்கு தாகம் எடுத்தது. உடனே அவர் குனிந்து அந்த தெள்ளிய நீரை அள்ளி இரண்டு வாய் குடித்தார். இதை கண்டதும் மன்னருக்கு குஷி வந்து விட்டது. கம்பரை மட்டம் தட்ட சரியான சந்தர்ப்பம் என எண்ணி “ கம்பரே ! என் காலில் விழுந்த நீரைத்தானே உண்டீர்’? என்றார்.
உடன் சற்றும் யோசிக்காத கம்பர் பட்டென்று “நீரே வந்து காலில் விழுந்தால் நான் என்ன செய்வது”? என்றார்.
மன்னர்.. அமைதியாக வெட்கப்பட்டு தலை குனிந்தார்.
=========================================================
லக்கிலுக் & அதிஷா
பத்திரிகையுலகில் புதிய அடி எடுத்து வைத்திருக்கும் நண்பர்கள் அதிஷாவுக்கும் லக்கிக்கும் அனைத்து பதிவர்கள் சார்பிலும் என் மனதார வாழ்த்துகள். இந்த புதிய தலைமுறை ஜெயிக்கட்டும்.
என்னதான் பதிவுலகில் சில அறிவு ஜீவிகள் கமலை தீட்டி தீர்தாலும் அவரது ஐம்பது ஆண்டு கால சாதனைகளை வியந்து “தி சண்டே இந்தியன்” கமலின் பிரத்யேக பேட்டி 50 Q + 50 A பாணியில் கொடுத்திருக்கிறது.
10 ரூபாய்தான். நிறைய செய்திகள். நல்லாயிருக்கு. வாங்கி படியுங்கள்.
வாங்க முடியாத வெளியூர் / வெளிநாடு நண்பர்கள் இங்கே கிளிக்குங்க.
மவுஸால பக்கத்தை திருப்பி படிக்கலாம். அழகா இருக்கு.
10 ரூபாய்தான். நிறைய செய்திகள். நல்லாயிருக்கு. வாங்கி படியுங்கள்.
வாங்க முடியாத வெளியூர் / வெளிநாடு நண்பர்கள் இங்கே கிளிக்குங்க.
மவுஸால பக்கத்தை திருப்பி படிக்கலாம். அழகா இருக்கு.
=============================================================
கேபிள் சங்கர்:
தொலைதூர கப்பலில் பயணிக்கும் பிரிட்டீஷ் மாலுமிகளுக்கு தினமும் காலை உணவு மதிய உணவு இரண்டுமே பழைய ரொட்டியும் தண்ணீரும் தான். சில சமயம் மட்டுமே ஒயின் அளிக்கப்படும்.
அதிர்ஷ்டம் இருந்தால் சில நாட்களில் மட்டும் மூன்றாவது தடவையாக சிறிது மாமிசத்துடன் சதுரமான தட்டில் வைத்து உணவு அளிக்கப்படும். தட்டின் வடிவத்தால் அதை ஸ்கொயர் மீல் என்றார்கள். அதுவும் ஒருவருக்கு தேவையான அளவில் போதுமானதாக இருக்கும். Three squares என்பது தினமும் மூன்று வேளை கலந்து கட்டி அடிப்பது. அதை நணபர் நல்லா செய்வார். அந்த நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு.
==================================
உண்மைத்தமிழன்
பல நூறு ஆண்டுகளுக்கு முன் செயின்ட் அகஸ்டின் ரோமுக்கு மத விஷயமாக செயிண்ட் அம்ப்ரோஸ் என்பவரை அனுப்பினார். அவருடைய பழக்கம் வாரத்தில் சில நாட்கள் உபவாசம் இருப்பது. ஆனால் ரோமிலோ வேறு நாட்களில் உபவாசம் இருந்தனர். அம்ப்ரோஸ் குழப்பமானார். உடனே செயிண்ட் அகஸ்டினை தொடர்பு கொண்டார். அகஸ்டின் கூறிய அறிவுரை தான் “ரோமில் இருக்கும் போது ரோமாபுரியினர் செய்வது போல் செய்” என்பது இன்றும் வழக்கத்தில் இருக்கும் சொல்லாகும். அண்ணன் உண்மைதமிழனும் அடிக்கடி சரியாக சாப்பிடுவதில்லை. ஊரோடு ஒத்துபோவதுமில்லை சின்ன பதிவும் எழுதுவதில்லை என்பது தான் என் சிறிய வருத்தம்.
=====================================================
தண்டோரா:
காக்டெயில் என்பது அண்ணன் தண்டோராவிற்கு மட்டுமல்ல நம் அனைவருக்கும் தெரியும். ஆனால் இந்த பெயர் என்படி வந்தது. கி.மு 3000 ஆண்டிலேயே காக்டெயில் இருந்திருக்கிறது. ஈராக்கிற்கும் ஈரானிற்கும் இடையில் டைக்ரீஸ் ஆற்றின் கரைக்கு அடியில் டெர்ரகோடா பானைகள் அகழ்வாய்ச்சியாளர்களால் ஒரு சமயம் கண்டுபிடிக்கபட்டது. அப்பானைகளில் புளிக்கவைத்த பார்லி, தேன், ஆப்பிள்களின் சுவடுகளும் கண்டெடுக்கப்பது. So, பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மனிதன் சும்மா கலக்கி அடித்திருக்கிறான். டாஸ்மாக்கெல்லாம் சும்மா ஜீஜிபி தான்.
===============================================
டாக்டர் தேவன்மாயம்:
===============================================
டாக்டர் தேவன்மாயம்:
டாக்டர் தேவன் மட்டுமல்ல அனைத்து மருத்துவர்களும் எழுத படும் மருந்து சீட்டில் Rx என்று பார்த்திருப்பீர்கள். இது என்ன Rx..??
உயிர் காக்கும் மருத்துவம் தொழில் மட்டுமல்லாது கடவுளுக்கு நிகரானவர்களாக மருத்துவர்களை ஜீபிடர் கடவுளுக்கு பாவித்தனர் பண்டைய ரோமானியர்கள்.
R என்பது லத்தீன் சொல்லான recipre என்பதிலிருந்து வருகிறது. அதாவது இதை பரிந்துரைக்கிறேன் எடுத்து கொள்ளலாம் எனபதாகும். சின்ன x கடவுளின் அரசர் அதை ஏற்பதற்கான குறீயீடு. அதாவது அந்த ஜீபிடர் கடவுளே மருத்து சீட்டை எழுதுவதாகும் அவரின் கருணையோடு நோய் குணமாகும் என்பது அவர்களது ஐதீகம்.இது இன்று வரை தொடர்ந்தும் வருகிறது.
மதுரையில் சந்தித்த டாக்டர் தேவன் பழகுவதற்கும் இனிமையானவர். தொலைபேசியிலும் அடிக்கடி பேசுவார். ஆனால் டாக்டர் தேவன் பின்னூட்டத்தை மருத்து சீட்டில் எழுதாமல் இருக்கணும் அதுதான் என் பயம்.
43 comments:
அப்பனே முருகா..!
இதுக்கும் யாராச்சும் டால்டா பாப்கார்ன்னு எதிர்ப்பதிவு போடாம இருக்கணுமே..?
அண்ணன் சூர்யா செய்திருக்கும் பதிவர்களுக்கான செய்தித் தொகுப்பின் கடின உழைப்பிற்கும், தேடுதல் வேட்டைக்கும் எனது நன்றிகள்..
ம்ம் கலக்குங்க.... (கண்டிப்பா நான் காக்டெயிலை சொல்லலை)
எப்படியே அவரவர் பாணியிலும் எழுதலாமே! அவசியம் தொடருங்கள், இண்ட்ரெஸ்டிங்..:-)
ம்... தலைப்புக்கேற்ற தகவல்கள்...
உண்மைத்தமிழன் அண்ணனை கொஞ்சம் கவனியுங்கள்... ரொம்ப வீக்காக இருப்பாக போலிருக்கு...
வித்தியாசமாய் இருக்கிறது சூர்யா... கலக்குங்கள்.
பிரபாகர்.
வித்தியாசமா இருக்கு தொடருங்கள்
////////
அவரவர் பாணியிலும் எழுதலாமே!
////////
அதானே.. பூச்சி.! :) :)
கலக்குங்க..! நாங்க இருக்கோம். எங்க மொக்கையை நீங்க படிக்கும் போது.... பதிலுக்கு.. அதையே நாங்க திருப்பி பண்ண வேணாமா சொல்லுங்க! :) :)
சினிமாவும் இப்போ பாப் கோர்னுமா? நல்லா இருக்கு combination சூரியா.
தொடருங்கள்.
உ.த அண்ணே. நம்ம் பின்னூட்டத்திற்கே பதில் சொல்ல மாட்டாங்க சில அறிவு ஜீவிகள். இதற்கெல்லாம் யாரு பதில் பதிவு போடுவாங்க? நீங்க போட்டாதான் உண்டு..
முரளி .. அவரவர் நடையில் எழுதியவர்களுக்கு ஆன கதி தெரியும். நம்க்கு எதுக்கு அந்த வம்பெல்லாம்.
ஆமாம் பிரபா. உ த ரொம்ம வீக்காதான் இருக்கார். ஆஸ்பத்ரியிலிருந்து வீட்டுக்கு வந்து வீட்டார்.
நன்றி.
நன்றி கானா பிரபா.
பாலா, கரெக்டா சொல்லிட்ட. ஆனா அடுத்த பதிவுல் உனக்கும் இடம் உண்டு.
நன்றி ஜெஸ்வந்தி.
எங்க ஆதரவு எப்பவுமே உங்களுக்கு உண்டு தல... நீங்க தொடருங்க....
/////
ஆனா அடுத்த பதிவுல் உனக்கும் இடம் உண்டு
///////
ஹி.. ஹி.., நான் தான் எனக்குத் தேவையான மேட்டரை, Rated X பதிவிலேயே.. ஆராய்ஞ்சி எழுதிட்டனே! :) :) :)
Why Popcorn is delayed ?
அலோ.. நல்லா ஆரம்பிச்சிடீங்கய்யா.. :)
ஆஹ்ஹ்ஹா........ஜூப்பரு!!!!
வித்தியாசமா இருக்கு....கலக்குங்க
பாப்கார்ன் உண்மையிலேயே மொறுமொறுவென்று இருக்கிறது. தொடருங்கள்!
ம்ம் கலக்குங்க.... ரொம்ப சுவாரஸ்யமா சொலிட்டு போறீங்க பாஸ் !
நன்றி சுகுமார். பதிவர் சந்திப்புக்கு ஆதரவு தரவில்லையே..??
பாலா, ஆனா இந்த மேட்டர் வேற...
Dear Dr. Sorry for the delay, due to hectic work. Will try to continue regularly.
நன்றி கேபிள்ஜி.
நன்றி துளசி டீச்சர்.
நன்றி இயற்கை.
நன்றி ரவி பிரகாஷ் சார்.
நன்றி நேசமித்ரன். தொடர்ந்து வரும் உங்கள் ஊக்கத்திற்கு மிக்க நன்றியும் மகிழ்ச்சியும்.
தொடரட்டும்.
கலக்கல் பதிவில் என்னையும் சேர்த்துவிட்டீர்கள்!!!
ஆனால் டாக்டர் தேவன் பின்னூட்டத்தை மருத்து சீட்டில் எழுதாமல் இருக்கணும் அதுதான் என் பயம்.
///
ஹ! ஹ! ஹா!
கம்பரில் ஆரம்பித்து டாக்டரில் முடித்து ஊடாக சொல்லப்பட்ட விஷயங்களும் / விதமும் நன்றாக இருந்தது.
நன்றி புதுகை.
நன்றி டாக்டர். நீங்கள் இல்லாமலா..??
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி அமித்து அம்மா..
அருமை சூர்யா..இன்பர்மேடிவான பதிவு..இன்னும் நிறைய எழுதுங்க..அன்னிக்கு சினிமாவுக்கு கூட்டிகிட்டு போனிங்க..இன்னிக்கு பாப்கார்ன் வாங்கி கொடுத்திட்டீங்க..நன்றி
நன்றி மணிஜீ.
கலக்கல் தல.
உண்மைத்தமிழன் மேட்டரும்,டாக்டர் மேட்டரும் சூப்பர்
நன்றி நர்சிம்.
கம்பர் மேட்டர் ரசிக்கவில்லையா..?
நல்லா இருக்கு சூர்யா. தொடருங்கள், தொடர்கிறோம்.
naan attathil illaiyaa
உங்களின் உழைப்பை பற்றி நாங்கள் அறிந்ததே.
அதற்கு மற்றுமொரு சான்று இந்த பதிவு.
தொடருங்கள் சூர்யா ... நல்ல இருக்கு
நல்லா இருக்குங்க.சூப்பர்.முன்னேயே படிச்சேன்.ஆனா பின்னூட்டம் போடவில்லை.ஏன் தெரியவில்லை.
Post a Comment