20 வருடமாக விடாது கடைபிடித்து வரும் First Day.. First Show.. விரதம் கலைந்து விடுமோ என்று பயந்திருந்தேன். நல்ல வேளை ரசிகர் மன்ற சிறப்பு காட்சியில் பார்க்கும் வாய்ப்பு முதல் நாள் இரவே கிடைத்தது. நானும் நண்பர் தண்டோராவும் சென்றிருந்தோம்.
வெட்னஸ்டே இந்தி படத்தின் ரீமேக் என்றாலும் என் மதிப்பிற்குரிய கமல் + மோகன்லால் என்ற புதிய கூட்டணியால் ஆவல் அதிகமாகியது.
தீவிரவாதத்தை ஒரு சாதாரண குடிமகன் எப்படி எதிர்க்க முடியும் என்ற கருத்தை முன்னிறுத்தி படம் நகர ஆரம்பிக்கிறது.
“உங்க சிட்டியில ஆறு இடத்தில RDX வெடிகுண்டு வெச்சிருக்கேன்” என்ற போன் கால் வந்ததும் நகர கமிஷனரான மோகன்லால் என்ற அற்புத நடிகரின் நடிப்பும் படம் பார்ப்பவர்களுக்கு விறு விறுப்பும் ஆரம்பமாகிறது.
குண்டு வெடித்ததா..?? எதற்காக ஒருவன் குண்டு வைக்கிறான்..?? அவன் தீவிரவாதியா..?? அவன் பெயரென்ன..?? அவனது கோரிக்கைகள் என்ன..? அவை நிறைவேறியதா..?? என்பதற்கு தியேட்டரில் படத்தை கண்டிப்பாக பாருங்கள்.
Quick points (In nutshell)
- மோகன்லாலின் அற்புத நடிப்பு
- இரா.முருகன் வசனம்
- துணை நடிகர்கள் தேர்வு (குறிப்பாக இரண்டு காவல் துறை அதிகாரிகள்)
- ஓளிப்பதிவு
- ரொம்ப அலட்டாத ஆனால் ஆழமான நடிப்பில் கமல்
- விறுவிறுப்பான திரைக்கதை
- படத்தின் நீளம் (மொத்தம் 50 +50 நிமிடங்கள் மட்டுமே.. அப்பாடா இதை தான் ரொம்ப நாளா எதிர்பார்திருந்தேன்)
எனக்கு பட்ட குறைகள்:
- பாடல்கள் இல்லை (வெச்சிருந்தாலும் மோசமாயிருக்கும்)
- பின்னணி இசையில் ஸ்ருதி இன்னும் கொஞ்சம் மிரட்டியிருக்காலாம்.
- முதல்வர் என்றால் நமது முதல்வர் குரலாகத்தான் இருக்க வேண்டுமா.?
இவையெல்லாம் Trifling தான். (அதுக்கு தான் சின்ன font)
உன்னை போல் ஒருவன் = Just watch and simply enjoy..
32 comments:
TEST..
படம் பார்த்த அனுபவத்தை நீங்கள் பகிர்ந்துகொண்டீர்கள் எங்களிடம்
ஆனால் படம் பார்த்தது போன்றே இருந்தது எங்களுக்கு.
” நீங்கள் சொன்ன கதை அப்படி”
இந்த படம் பார்த்துட்டு எழுதறவங்களுக்கு.., ரெண்டு நாளுக்கு சாப்பாடு கிடைக்காம போகக் கடவ..!!
இந்த இத்துப்போன ஃப்ளோரிடால... படம் ரிலீஸ் இல்லை..! :( :( :(
ஹாலிவுட் முனியின் சாபத்திற்கு நன்றி..
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி மோனி புவன் அம்மா..?? நான் கதையே சொல்ல வில்லையே..??
வெட்நெஸ்டே பார்த்து அசந்துட்டேன்
தமிழ்ல்ல இப்படியெல்லாம் படம் வராதான்னு ஏக்கம் அதிகம் உண்டு.
இப்பவும் கூட இது தமிழ்ல்ல யோசிக்க படவில்லையே என்ற வருத்தமும் உண்டு ...
நன்றி ஜமால்.
தூள் தல விமர்சனம்
நந்தவனம் நன்றாகவே இருக்கிறது.
exact விமர்சனம்.
//முதல்வர் என்றால் நமது முதல்வர் குரலாகத்தான் இருக்க வேண்டுமா.?//
ஏன் இருக்கக் கூடாது? :-)
//பாடல்கள் இல்லை//
இது நிறை. குறையல்ல.
நல்ல விமர்சனம்
பிறருக்கு வாய்ப்பு கொடுத்து அடக்கி வாசிக்கிறார் உலக நாயகன் தன்னை முன்னிறுத்துவதை விட படைப்பிற்கு முக்கியதுவம்
கொடுத்து இருக்கிறார் முதன் முறையாக. computer engineer என்றால் பார்ப்பானாக தான்
இருக்க வேண்டுமா உலக நாயகனே அந்த ABHIVATHAYE வசனம் மனதை நெருடியது
"உன்னை போல் ஒருவன்" பாடலில் எதற்கு PAVITHRANAYA SATHURNAAM மந்திரம்.
மந்திரம் சொல்லட்டும் தவறில்லை "நாத்திகம்" பேச வேண்டாம் உலக நாயகனே.இந்த நெருடல்களை தவிர உலக நாயகன் உலக நாயகன் தான்

படம் மிக நன்றாக இருந்தது .ஆனால் ஒரு மென் பொருள் பொறியாளர் பார்பனாக தான் இருக்க வேண்டுமா ஏன் அந்த network engineer abivathaye சொல்கிறார் .Pavithranaya sadhurnam என்ற வரி பாடலில் தேவையா நாத்திகம் பேசினால் மட்டும் போதாது உலக நாயகனே
நல்ல பதிவு வண்ணத்து பூச்சி

நன்றி சுகுமார்.
நன்றி ஜெரி சார்.
கருத்திற்கு மிக்க நன்றி அப்துல்லா. இனிய ரமலான் வாழ்த்துகள்.
நல்ல பதிவு அருமையான படத்திற்கு
அருமையான விமர்சனம்.
//ரொம்ப அலட்டாத ஆனால் ஆழமான நடிப்பில் கமல்//
இளம்(?!) தலைமுறை கவனிக்க வேண்டும்.
முதல் பின்னூட்டதிற்கு நன்றி லக்கி. பாடல்கள் வைத்திருந்தாலும் பொருந்தியிருக்காது என்று தான் சொன்னேன்.
முதல்வர் வசனம் பேசும் காட்சிகள் அது சீரியசாக எடுத்து கொள்ளாமல் தியேட்டரில் சிரிப்பலையே ஒலிக்கிறது. அது காமெடி டிராக் போல ஆகி விட கூடாது.
நன்றி வெண்ணிற இரவுகள். நியாமான கேள்வி தான். ஆனால் ஏன் இருக்க கூடாது..?? IIT Drop out என்றும் சொல்வதை கேட்கவில்லையா..??
நன்றி வேல் கண்ணன்.
இன்னும் நாராச பன்ச் டயலாக் பேசுவதை எத்தனை நாள் கேட்டு கொண்டிருக்க போகிறாம்.
இரா. முருகன் ஒவ்வொரு வசனமும் நடையில் துள்ளல் + மின்னல்.
படத்தைப் பார்த்த பின்னர் இந்தப் பதிவுக்குக் கருத்துப் போடுவோம் என்று நினைத்தேன். படம் பார்க்க நேரம் அமையவில்லை. ஒரு காலத்தில் நானும் கமல் ரசிகையாக இருந்தவள் தான். இப்போ கமல் என்றாலே ஏனோ பிடிக்க வில்லை. குப்பைப் படங்களில் நடித்து தன் தரத்தைக் குறைத்துவிட்டார் என்பது என் அபிப்பிராயம்.
உங்கள் பதிவைப் பார்த்த பின் படத்தைப் பார்க்க வேண்டும் என்று நினைக்கிறேன்.
உங்களைப் போல் முதல் நாள் முதல் ஷோ பார்க்கும் கொடுப்பினை எங்களுக்கில்லை நண்பரே.
நன்றி ஜெஸ்வந்தி. படத்தை பார்த்து விட்டு சொல்லுங்கள்.
எது குப்பை என்று சொல்கிறீர்கள்..??
அன்பே சிவமா/ தசாவதாரமா??
இணைய ரவுடிகளால் பரிதாபமாக பறிபோன உயிர் http://a1realism.blogspot.com/2009/09/blog-post_20.html
IIT Drop அவுட் என்றால் ஐயர் தான் இருக்க வேண்டுமா. அவர் அபிவாதயே சொல்ல தேவையே இல்லையே சாதரணமாக வந்திருந்தாலே போதுமே.அந்த இடத்தில என்ன அந்த வசன திணிப்பு.கமல் இப்படி செய்கிறாரே என்ற ஆதங்கம் தான்.IIT student வேலையே பார்பான் தவிர
அபிவாதயே சொல்லி கொண்டிருக்க மாட்டான்.
miga nalla vimarsanam
//பாடல்கள் இல்லை (வெச்சிருந்தாலும் மோசமாயிருக்கும்)//
அப்போ அது நிறைகள் கீழே வந்திருக்கணும்
//முதல்வர் என்றால் நமது முதல்வர் குரலாகத்தான் இருக்க வேண்டுமா.?//
என்னைய்யா இது அநியாயமா இருக்கு .. பக்கத்து மாநில முதல்வரின் குரலையா வைக்க முடியும் ? வச்சிருந்தா ..ஏன் அது நம்ம மாநில முதல்வரின் குரலாக இருக்க முடியாதா? -ன்னு ஒரு கேள்வி .. ஆந்திர மாநில முதல்வர் ஏன் தமிழில் பேசுவார் ? என இரண்டாவது கேள்வி என ஒரு கேள்வி அதிகம் கேட்கும் வாய்ப்பு போய் விட்டது என்பது தான் உங்க வருத்தமா? :)
நன்றி ராஜி.
நன்றி ஜோ. முதல்வர் வசனம் பேசும் காட்சிகள் அது சீரியசாக எடுத்து கொள்ளாமல் தியேட்டரில் சிரிப்பலையே ஒலிக்கிறது. அது காமெடி டிராக் போல ஆகி விட கூடாது.../// unfortunately ஆகி விட்டது... அதையும் மனதில் வைத்து தான் கமல் வைத்தாரோ என்னவோ..??
Post a Comment