அமெரிக்காவுக்கு உண்டு..இந்தியாவுக்கு இல்லை..
வரி ஏய்ப்பு செய்து சுவிஸ் வங்கிகளில் கறுப்பு பணம் போட்டு வைத்துள்ள அமெரிக்கர்களின் பட்டியலை அந்த நாட்டிடம் தர சுவிஸ் நாட்டின் முன்னணி வங்கியான யுபிஎஸ் ஒப்புக்கொண்டுள்ளது.
சுவிஸ் வங்கிகளில் கறுப்பு பணத்தை முடக்கி வைத்துள்ள இந்தியர்களின் பெயர் விவரத்தை வெளியிட முடியாது என்று அந் நாட்டு வங்கிகள் கூட்டமைப்பு திட்டவட்டமாகக் மறுத்து விட்டது. இந்திய அரசு தனது நாட்டு டெலிபோன் டைரக்டரியை எங்களிடம் தந்து, அதில் உள்ளவர்களின் பெயரில் ரகசிய கணக்கு இருக்கிறதா என்று கேட்கலாம் என்று நினைத்தால், அது நடக்காது. அதை சுவிஸ் நாட்டு சட்டமும் அனுமதிக்காது.எனவே, ரகசிய கணக்கு வைத்துள்ளவர்களின் பட்டியலை கேட்டு இந்தியா எங்களை அணுக வேண்டாம் என்று முகத்தில் அடித்தார்போலக் கூறியுள்ளது சுவிஸ்.
எனக்கென்னவோ அவங்களே இப்படி சொன்னாங்களா..?? இல்ல இதுல வேற எதுவும் உள்குத்து இருக்குமோன்னு தோணுது.. உங்களுக்கு என்ன தோணுதுன்னு சொல்லுங்க....
*********************************************************************
இசையில் தொடங்குதம்மா..
மேஸ்ட்ரோவின் அற்புதை இசையில் உருவான பண்டிட் அஜய் சக்ரவர்த்தியின் இனிமையான குரலில் பல முறை கேட்டு சிலாகித்திருக்கிறேன். நேற்று எதோ ஒரு டிவி சேனலில் ஹே ராம் படத்தின் இந்த பாடலை கேட்டதும் பாடும் ஆபிஸில் கலக்கிய திவ்யாவின் நினைப்பு வந்து விட்டது. யூடியுப்பில் தேடி திவ்யாவின் குரலில் அந்த மெலோடியை பல முறை கேட்டேன். கேட்காதவர்கள் கேட்டு பாருங்கள்..
இந்த போட்டிக்கு பிறகு திவ்யாவின் குரலை வேறெங்கும் கேட்க முடியவில்லை..?? எங்கே திவ்யா...???
********************************************************************
இன்று ஒரு தகவல்
பதிவர் மோகன் என்பவரது மோகனச்சாரல் என்ற வலைப்பூவில் பார்த்தேன். இது முக்கியமான மற்றும் மிகவும் பயனுள்ள தகவல். இப்பொழுது இரத்தம் பெறுவது மிகவும் எளிது, இதற்க்கு நீங்கள் செய்யவேண்டியது என்னவெனில் உங்கள் அலைபெசியிலிருந்து "BLOOD" டைப் செய்து 96000 97000 என்ற எண்ணுக்கு அனுப்பவும்.
உதாரணமாக "BLOOD B+" .
உடனே ஒரு இரத்த கொடையாளர் உங்களை தொடர்பு கொள்வார்.
********************************************************************
ஈ மெயிலில் வந்த SMS Jokes.
புது செல்லு...
புது நம்பரு...
கொழப்பறே சந்துரு!
அடிக்கடி நம்பர் மாத்தி, இம்சை கொடுக்கறதை நிறுத்துடா!
=========================
அவுட்கோயிங் போகல...
இன்கமிங் வரல...
மெஸேஜும் கிடக்கல...
செல்போன் சரியில்லனு புலம்பறத நிறுத்திட்டு..
ரீசார்ஜ் பண்ணு பேபி
========================
கசட தபற வல்லினம்.
ஙஞண நமன மெல்லினம்.
யரல வழள இடையினம்.
நீ போதையில் பேசும் "போழாழேய்" எந்த மொழியினம்?
==========================
ராம்: நான் கலெக்டர் ஆகணும்!
சீதா: நான் டாக்டர் ஆவேன்!
ப்ரீத்தி: நான் நல்ல அம்மா ஆவேன்!
கார்த்தி: ப்ரீத்திக்கு நான் கியாரண்டி
=================================
தீவிரவாதி: உன் பெயர் என்ன?
விஜயகாந்த்: சிம்மா! நரசிம்மா!
தீவிரவாதி: ப்ரீபெய்டு சிம்மா? போஸ்ட் பெய்டு சிம்மா?
****************************************************************************
அடேங்கப்பா... அமி மைக்கேல்..
இங்கிலாந்தில் உள்ள ரியல் எஸ்டேட் நிறுவனம் ஒன்றில் ஏஜெண்டாக பணிபுரிபவர் அமி மைக்கேல் இவரது தற்போதைய வயது 32 இவர் தனது பதினேழாவது வயதில் தொடங்கி இது வரை ஆயிரம் ஆண்களுடன் `செக்ஸ்' வேலையில் ஈடுபட்டுள்ளார்.
Over To Ami
நான் 17-வது வயதில் கல்லூரியில் தொழில் நுட்ப படிப்பு படித்துக் கொண்டிருக்கும் போது `மெக் டொனால்டு' என்ற நிறுவனத்திற்கு வேலைக்கு சென்றேன். அங்குள்ள ஊழியர்கள் என் அழகை பார்த்து கிறங்கினர். எல்லோருமே என்னை அடைய துடித்தார்கள். என்னால் வேலை செய்யவே முடிய வில்லை. இதனால் அவர்களை சமாதானப்படுத்துவது என்று முடிவெடுத்தேன். முதலில் நிறுவன மானேஜரை அழைத்து அவருடன் உல்லாசமாக இருந்தேன். நான் சந்தித்த முதல் அந்தரங்க ஆள் அவர்தான். இதன் பிறகு பல ஊழியர்களுடனும் உல்லாச மாக இருந்தேன்.
அங்குள்ள பியூனுக்கு கூட என்னை விட்டு வைக்க மனமில்லை. அந்த ஆளையும் திருப்தி செய்தேன். இதன் பிறகு நான் ஏராளமான ஆண்களை வேலை நிமித்தமாக சந்திக்க வேண்டியது இருந்தது.
ரியல் எஸ்டேட் நிறுவன ஏஜெண்டான நான் வாடிக்கையாளர்களை அழைத்துக்கொண்டு வீடு, மற்றும் நிலங்களை காட்ட செல்வேன். எனது காரியங்களை எளிதாக சாதித்துக்கொள்ள அவர்களை `செக்ஸ்'க்கு அழைப்பேன்.
என் அழகில் மயங்கி யாரும் `நோ' சொன்னதில்லை. விலைக்கு வாங்க இருக்கும் வீட்டில் கூட நான் அவர் களுடன் உல்லாசமாக இருந்துள்ளேன்.
இதற்கெல்லாம் பகல், இரவு தனி இடம் என்று நான் பார்த்ததில்லை. எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் நான் தயாராக இருப்பேன்.
எனக்கு துணைக்காக ஒரு பாய் பிரண்ட் வைத்துள்ளேன். திட காத்திரமாக இருக்கும் அவன் பிரச்சினை வந்தால் அடித்து, தூக்கி விடுவான்.
இதுவரை ஆயிரம் பேரை கண்டதால் இது பற்றி வெளியே சொல்லியுள்ளேன். என் பணி தொடர்ந்து நடக்கும். இந்த விஷயத்தில் நான் புதிய சாதனை படைக்க போகிறேன் என்று கூறியுள்ளார்.
என்ன சாதனை...??????
டிஸ்கி: அமி மைக்கேலை பற்றி ஒரு கவிதை எழுதுமாறு அண்ணன் தண்டோரா என்ற மணிஜியை அன்புடன் கேட்டு கொள்கிறேன்.
29 comments:
TEST...
பாடும் ஆபிஸ் திவ்யா குரலை இப்போதான் கேக்கறீகளா... டூ லேட்!
இப்போ ஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜுனியர் 2ல பல (பெண்) குழந்தைங்க கலக்கறாங்க. குறிப்பா அல்கா அஜித்னு ஒரு பொண்ணு. கண்டிப்பா அல்கா ஃபைனல் வரை போகும்னு உங்க தலைல அடிச்சு சத்தியம் செய்யறேன்.
நன்றி முகில். பல தடவை கேட்டிருக்கேன். இப்போவும் கேட்டேன்னு சொல்றேன். அல்கா ரசிகரா..?? அட.. அதுக்கு என் தலையில அடிக்கணுமா..??
நல்லாயிருங்க...
ஆயிரம் பேர் கண்ட
அம்மணி..உன்
அடிமடி என்ன
அயர்னினால் ஆனதா?
வரிசை உன்னை பார்க்க
பெரிசு என்று
எதை சொல்வாய்?
எனக்கொரு ஆசை
நீ கால் தூக்காமல்
ஒரு நாளும்
படுத்திருப்பதை பார்க்க..
//ராம்: நான் கலெக்டர் ஆகணும்!
சீதா: நான் டாக்டர் ஆவேன்!
ப்ரீத்தி: நான் நல்ல அம்மா ஆவேன்!
கார்த்தி: ப்ரீத்திக்கு நான் கியாரண்டி//
எந்த கார்த்தி?
கலக்கல் பாப்கார்ன்
தண்டோராவின் கவிதை சூப்பர்
poora போக்க பாத்தா.. தண்டோரா.. ஒரு மா”பெரும்” கவிஞனாகிவிடுவார் போலிருக்கிறதே..பின்னே கால் தூக்கறதுக்கெல்லாம்கவிதை எழுதிடறாரு.. இந்த கவிஞர்கள் தொல்லை தாங்கலப்பா.
தண்டோராவின் கவிதை அசிங்கம்.. கேவலமா இருக்கு..!
அப்படியொரு கவிதையை எழுதச் சொன்ன பூச்சியாருக்கு கருட புராணத்தில் என்ன தண்டனையோ..?
அமெரிக்காவால் முடிந்ததை இந்தியாவால் வாங்க முடியாதா என்ன..?
எல்லாம் ஒரு செட்டப்புங்க நைனா..!
ஜிவுஸுக்கும் அமெளண்ட் குடுத்துட்டாய்ங்களோ..
-------------
ரீச்சார்ஜ் செய் பேபி - இந்த ஜோக் ரொம்ப பிடிச்சிருக்கு
Nalla popcorn immurai.Jokes fantastic,news abt Ami also an info unknown.Kalakka aarambichuteenga Surya.P,z come to my side for my 100 th post.
கவிதை படைத்த அண்ணன் மணி பாரதி.. வாழ்க.. வாழ்க..
கார்த்திக் தான் அந்த கார்த்தி..
கேபிள்ஜி.. இந்த கவிதைக்கு போய் இப்படியா..?? இன்னும் மணிஜீ வலையில நிறைய வரப்போகுது..
நன்றி வருங்கால டாக்டர். முரளி கண்ணன்..
அப்படியொரு கவிதையை எழுதச் சொன்ன பூச்சியாருக்கு கருட புராணத்தில் என்ன தண்டனையோ..?
////
அண்ணே.. என்ன தண்டனை வேண்டுமானாலும் கொடுங்க. ஆனா உங்க மொத்த பதிவுகளையும் மூன்று முறை படிக்கணும்னு மட்டும் சொல்லிடாதீங்கோ..... Plzzzzzz
வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி ஜமால்..
Thanx Dr. You post on college drama so much funny.. Super..
திவ்யாவின் பாடல் ரொம்ப அருமை. முன்பு ஒரு நண்பர் youtube லிங்க் தந்தார். அடிக்கடி பார்க்க, கேட்க வைத்த performance.
Thanks for bringing it back.
நன்றி ப்ரியா..
Your posts are really informative entertaining and purposeful
:)
சோலப்பொறி அருமை..
இரத்த கொடையாளர் சென்னையில் உள்ளவங்களை மட்டும்தான் தொடர்பு கொள்வாரா? அல்லது மற்ற ஊர்களுக்கும் உண்டா?
நன்றி நேசமித்ரன்..
Mr Surya!
you must listen to the performance of vijay narain in airtel supersinger 2008 (isail thodangudhamma)..
divya's singing is mediocre.
listen to roopa's singing..
http://www.youtube.com/watch?v=RDbyZ1Md1tE&feature=related
http://www.youtube.com/watch?v=iMacLF4RnTo&feature=related
idhayum paarkkavum.
நன்றி அனானி. பெயர் சொல்வதில் ஏன் தயக்கம்..?? அவரவர் ரசனை மாறும். பகிர்தலுக்கு நன்றி.
//இப்பொழுது இரத்தம் பெறுவது மிகவும் எளிது, இதற்க்கு நீங்கள் செய்யவேண்டியது என்னவெனில் உங்கள் அலைபெசியிலிருந்து "BLOOD" டைப் செய்து 96000 97000 என்ற எண்ணுக்கு அனுப்பவும்.
உதாரணமாக "BLOOD B+" .
உடனே ஒரு இரத்த கொடையாளர் உங்களை தொடர்பு கொள்வார்.
//
ரொம்ப நல்லா தகவல்.இது இந்தியா முழுவதிலுமா இல்லை தமிழ்நாட்டில் மட்டுமா?
அன்புடன்,
அம்மு.
பாடும் ஆஃபிஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு திவ்யா பெரிய சிங்கராயிடுவார்னுதான் நானும் நினைத்தேன் ஆனால் என்ன ஆனார்?.
பாப்கார்ன் அருமை.
---
தண்டோரா கவிதை சூப்பரு.
Post a Comment