Monday, August 3, 2009

பாப்கார்ன் ஆகஸ்டு 1 - 15


ஆகஸ்டு மாதத்தின் முதல் ஞாயிறு Friendship Day எக்கசக்க SMS கள், ஈமெயில்கள் வந்து மொபைலும் ஜி மெயிலும் ஆக்கிரமித்துள்ளன. நல்லவேளை சனிக்கிழமை இரவு ஒரு உலக சினிமா பார்த்துவிட்டு மொபைலை அணைக்காமல் படுத்திருந்தால் எவனாவது போன போட்டு வாழ்த்து சொல்லியிருப்பான். Sorry Friends... விடியற்காலை 9 மணிக்கு எழுந்திருந்து ஆன் செய்தேன். சரி இந்த கிழமைகள் எப்படி வந்தன. ஒரு சின்ன தகவல்.

முதலில் பாபிலோனியர்கள் ஒவ்வொரு ஏழாவது நாளும் எந்த பணியும் செய்யாமல் மத சம்பந்த நிக்ழ்ச்சிகளுக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக இருக்க வேண்டும் என்று முடிவு செய்தனர். {ரொம்ப நல்லவங்க} ஜீஸ் இனத்தவரும் இதையே பின் பற்றினர். ரோமானியர்கள் எகிப்தியர்கள் கொஞ்சம் மாறுதல் செய்து கிழமைகளுக்கு பெயர் வைத்தனர்.

ஆனால் ஆங்கிலேயர்களே இதற்கு முழு வடிவம் கொடுத்தனர். தாங்கள் வழிபடும் கடவுள்களின் பெயர்களை அடிப்படையாக கொண்டு பெயர்களை சூட்டினர்.

சூரியன் நாளான ஞாயிறை Sunday

திங்கள் நாளாகிய சந்திரன் நாளை மூன் டே { Moon Day } என்று வைத்தனர். இதுவே மருவி Monday ஆனது. அதாவது சந்திரன் நாள்.
போர் கடவுளின் பெயரால் “டிவ்” {Tiw} என்ற பெயரினை (மார்ஸ்) செவ்வாய் நாளே Tuesday ஆனது.
{மெர்குரி} புதன் நாளை தங்களின் கடவுளான ‘ஓடன்’ (Woden) என்ற பெயரால் Wednesday என்றாக்கினர்.

{ஜீபிட்டர்} வியாழன் நாளை இன்னொரு கடவுளான (Thor ) என்ற பெயரால் Thursday என்றாக்கினர்.

{வீனஸ்} வெள்ளி நாளைத் தங்கள் கடவுள் “ஓடியனின்” துணைவியார் ‘பிரிக்’ என்ற பெயரால் Friday என்று ஆக்கி விட்டு ரோமானியர்கள் பின் பற்றிய சனிக்கிழமையை மட்டும் (சாட்டரன்) Saturday என்று அப்படியே பின் பற்றினர். ஆனா இந்தியாவில் இந்த சந்திரன் நாளைதான் நிறைய பேருக்கு பிடிக்கறதேயில்லை. ரைட்டா..??



+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

நம்பு... உன்னால் முடியும்.


என்னதான் வாய்ப்பு வசதிகள் இருந்தாலும் சதா அலுத்து கொள்பவர்களை அன்றாடம் சந்திக்கலாம். கடவுளால் நமக்கு எந்த குறையும் இல்லையென்றாலும் இருப்பதை வைத்து கொண்டு நிறைவுடன் வாழ இயலாதவர்கள் இந்த பெண்மணியை கண்டிப்பாக பார்க்க வேண்டும்.

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++


Mr.X தனது வீட்டின் கூரை மேல் ஏதோ ரிப்பேர் வேலை செய்து கொண்டிருந்தார் அப்போது ஒரு சாமியார் அவரை கீழே வருமாறு அழைத்தார் . Mr.X மிகவும் சிரமப்பட்டு கீழே வந்து அவரிடம் “ என்ன விஷயம் எதற்க்காக என்னை கீழே வருமாறு அழைத்தீர்கள் “ என்று கேட்டார்.


அந்த சாமியார் “ நான் உன்னிடம் ஏதாவது தானமாக பெற வந்துள்ளேன்! அதை சத்தமாக கேட்க வெட்கமாக இருந்தது! அதனால்தான் உன்னை கீழே அழைத்தேன், மன்னிக்கவும் “ என்றார்

உடனே Mr.X ” யோவ் எடுப்பது பிச்சை இதில் என்னய்யா ..? போலி கவுரவம்.. சரி பரவாயில்லை என்னுடன் வா” என்று சொல்லிவிட்டு மீண்டும் கூரை மேல் வேகமாக ஏறினார்.
அந்த சாமியாரும் தனது மிகவும் தடித்த உடலை கஷ்டப்பட்டு தூக்க முடியாமல் தூக்கிக் கொண்டு Mr.எக்ஸை தொடர்ந்தார் சாமியார் மேலே வந்து சேர்ந்ததும் , Mr. X மீண்டும் தனது வேலையை பார்க்கத் தொடங்கினார்.


சற்று நேரம் பொறுத்து விட்டு சாமியார் “ எனக்கு என்ன தருகிறீர்கள் ? “ எனக் கேட்டார் பொறுமை இழந்தவராக..

Mr.X “ என்னிடம் கொடுப்பதற்க்கு ஒன்றும் இல்லை” I am sorry ! என்றார்


சாமியார் “ முட்டாள் ! இதை கீழேயே சொல்லித் தொலைக்க வேண்டியதுதானே, ஏன் என்னை இவ்வளவு கஷ்ட்டப்பட வைத்து மேலே அழைத்தாய் !

Mr.X “ என் பக்கத்து வீட்டுக்காரன் கீழே இருந்தான் அவன் முன்னே ஒன்றும் இல்லை என சொல்ல எனக்கு வெட்கமாக இருந்தது அதனால் தான் மேலே வரச்சொன்னேன் மற்றும் நான் கீழே வரப் பட்ட அனுபவத்தையாவது (கஷ்டத்தையாவது) உங்களுக்கு தானமாக கொடுக்கலாம் என்று தான் தங்களை அழைத்தேன்! என்றார்..


+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
காமமா.. ஆமாம்..


வீழும் இருவர்க்கு இனிதே வளியிடை
போழப் படாஅ முயக்கு


காதலர்க்கு மிக இனிமை தருவது, காற்றுகூட இடையில் நுழைய முடியாத அளவுக்கு இருவரும் இறுகத் தழுவி மகிழ்வதாகும்.

Translation:
Sweet is the strict embrace of those whom fond affection binds, Where no dissevering breath of discord entrance finds.

Explanation:
To ardent lovers sweet is the embrace that cannot be penetrated even by a breath of breeze.

32 comments:

butterfly Surya said...

TEST..

பிரபாகர் said...

சூர்யா,

கிழமைகளை பற்றிய தகவல் உங்களின் சுவராஸ்ய நடையில் இனிமையாக இருந்தது.

X ஜோக், சிரிக்கும் படியாகவும், காமம் பற்றிய குறள் விளக்கம் பெருமூச்சு விடும்படியாவும் இருந்ததது.


நன்றி சூர்யா... சுதந்திரம் பற்றிய ஒரு பதிவை எதிர்பார்க்கிறேன்...

பிரபாகர்...

Cable சங்கர் said...

thalaivaree,, uஉஙக் பாப்கார்ன் வர வர.. ரொம்ப இன்பர்மேடிவா இருக்கு.. அந்த் பெண்ணின் வீடியோ.. டிரான்ஸலேஷன்.. எல்லாமே சூப்பர்..

butterfly Surya said...

நன்றி பிராபாகர். கண்டிப்பாக செய்கிறேன்.

butterfly Surya said...

நன்றி தலை.

ஆதவன் said...

nice surya.. keep it up.

butterfly Surya said...

நன்றி ஆதவன்.

ungalrasigan.blogspot.com said...

தகவல்கள் அருமை! அதைவிட அதற்குத் தேடி எடுத்து வைத்திருக்கும் விஷுவல் மிக அருமை!

குடந்தை அன்புமணி said...

கிழமைகள் பற்றிய தகவல் சுவாரசியமாக இருந்தது. அந்த மிஸ்டர் எக்ஸ்- ம்... சூப்பர்.

butterfly Surya said...

நன்றி ரவி சார்.

butterfly Surya said...

நன்றி அன்பு மணி.

நட்புடன் ஜமால் said...

கிழமைகள் பற்றிய தகவலுக்கு நன்றி.

அமிர்தவர்ஷினி அம்மா said...

கிழமைகள் பற்றிய தகவலும், நம்பு உன்னால் முடியும் இரண்டும் மிகவும் கவர்ந்தது. அருமை.

butterfly Surya said...

நன்றி ஜமால்.

butterfly Surya said...

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி அமி அம்மா

Jazeela said...

தகவல் நிறைந்த பதிவு. பகிர்வுக்கு நன்றி.

butterfly Surya said...

நன்றி ஜெஸிலா.

தேவன் மாயம் said...

தகவல் நிறைந்த அருமையான பதிவு.நம்பு உன்னால் முடியும் சூப்பர்!!.

தேவன் மாயம் said...

என்னுடைய Blog HTML லும் பிரச்சினைகள் உள்ளது. வழி உண்டா சரி செய்ய!!

துபாய் ராஜா said...

அனத்தும் அருமை.

கிழமைகள் குறித்த தகவல் புதுமை.

Mr.X ஜோக் இனிமை.

Muniappan Pakkangal said...

Popcorn good,nice info on Days Surya.Thideernu enna thirukkural pakkam ?

நேசமித்ரன் said...

பதிவர் பட்டறை என்று ஒன்று வந்தால் உங்களின்
பதிவுகள் நீங்கள் மெனக்கெடும் படங்களின் நேர்த்தி உங்களின் தகவல் பகிரும் பிரயத்தனங்கள் இதெல்லாம் மேற்கோள் காட்டப்பட வேண்டும் என்று தோன்றுகிறது..
அவ்வளவு நேர்த்தி ..!

pudugaithendral said...

impossible என்பதை i m possible
என்றும் பொருள் கொள்ளலாம்.

உன்னால் முடியும் வீடியோ சூப்பர்
பாராட்டுக்கள்

butterfly Surya said...

நன்றி தேவன்.

butterfly Surya said...

நன்றி துபாய் ராஜா.

butterfly Surya said...

நன்றி டாக்டர். பல வருடமாக திறக்காத வள்ளுவர் சிலையை பெங்களூரில் திறந்து விட்டார்கள். அந்த சந்தோஷம் தான்.

butterfly Surya said...

நன்றி நேசமித்ரன்.

தொடர்ந்து உங்களின் ஊக்கம் என்னை இன்னும் பொறுப்புடன் இருக்க செய்கிறது. மிக்க மகிழ்ச்சி.

butterfly Surya said...

நன்றி புதுகை.

உண்மைத்தமிழன் said...

தலைவா..

எப்ப இருந்து இந்த பாப்கார்ன்..?

நீங்களாவது சரிப்படுவீங்கன்னு நினைச்சேன்..

காமம்ன்னு டைட்டில பார்த்தவுடனேயே மாத்திக்கிட்டேன்..!

butterfly Surya said...

நண்பரே.. ஹாத்வே கடுப்பு இன்னும் தீரலியா..??

புது நெட் கனெக்‌ஷன் வாங்கிட்டீங்க..

இனி ஒருத்தரையும் விட மாட்டீங்க..


போட்டு தாக்குங்க..

வருகைக்கு நன்றி.

முரளிகண்ணன் said...

சுவையான பாப்கார்ன்.

எக்ஸ் ஜோக்கும் குறளும் நல்ல காம்பினேசன்

butterfly Surya said...

நன்றி முரளி.