பொதுவாக ஒவ்வொரு தேர்தலின் போதும் வாக்குப் பதிவு துவங்கிய சிலமணி நேரங்களுக்குள் வாக்களித்துவிடுவது ரஜினிகாந்த் வழக்கம்.
இன்று காலை வாக்குப் பதிவு துவங்கியதும், சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரி வளாகத்தி்ல் உள்ள வாக்குச் சாவடியில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று காலை வாக்களித்தார். அவருடன் மனைவி லதா ரஜினிகாந்த் மற்றும் மகள் சவுந்தர்யா ரஜினிகாந்த் ஆகியோரும் வந்து ஓட்டுப் போட்டு ஜனநாயக கடமையை ஆற்றினர்.
ஆனால் உன்னைப்போல் ஒருவன் படப்பிடிப்பிடிப்பைக் கூட ரத்து செய்துவிட்டு வாக்களிப்பதற்காகவே ஹைதராபாதிலிருந்து சென்னை வந்த உலக நாயகன் கமல்ஹாசனுக்கு ஒட்டு இல்லை. வாக்காளர் பட்டியலில் அவரது பெயர் விடுபட்டு போனதால் வாக்களிக்க இயலவில்லை..
இதனால் பெரும் அதிர்ச்சி அடைந்தார். வாக்களிக்க முடியாமல் போனது பெரும் வருத்தம் அளிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
நான் வீட்டு வரி, மின்சார வரி கட்டிக் கொண்டு இருக்கிறேன். இந்த கம்ப்யூட்டர் யுகத்தில் மனித தவறு நிகழ்வதற்கு வாய்ப்பு இல்லை என்று நொந்து கொண்டார்.
4 comments:
TEST..
enna koduma sir ethu
அதிகாரிகளின் அலட்சியம் தான் நண்பரே...
thitta mitta sathi
Post a Comment