Thursday, February 26, 2009

திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா...









ٌ திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா...
வாழ்வின் அர்த்தம் புரிந்து வாழலாம்!

ٌ சத்தமில்லாமல் சமையலறை நுழைந்து முத்தம் கொடுத்துவிட்டு ஓடுகிறாய்!
ٌ என் பசி மறந்து உனக்காக காத்திருக்கும்பொழுது காத்திருக்கவேண்டாமென கண்டித்து விட்டு.. ஒரு கையால் இரு இதழுக்கு ஊட்டுகிறாய்!

ٌ சாதிச்சான்றிதழுக்காக லஞ்சம் கொடுத்துவிட்டு கெஞ்சுபவனைப்போல... மல்லிகைப்பூ தந்துவிட்டு மன்றாடுகிறாய்!
ٌ பள்ளிக்கு செல்லமறுத்து தூங்குவதாய் நடிக்கும் சின்னப்பையனைபோல... மடியில் படுத்துக்கொண்டு எழ மறுக்கிறாய்!

ٌ அம்மா வருவதாக பாசாங்கு செய்யும்பொழுது...

பதறி எழுந்து நிலை உணர்ந்து சிரிக்கிறாய் !
ٌ கை இழுத்து வைத்து குளிக்க வைக்க முயலும்போது
குளிரடிப்பதாய் கூறி - ஒரு குழந்தையை போல அழுகிறாய் !


ٌ மறைந்திருந்து கட்டிப்பிடிப்பாய்... கையிலிருப்பதை தட்டிப்பறிப்பாய்
கெஞ்சுவதும்... மிஞ்சுவதும்...
அழுவதும்... அணைப்பதும்...
கண்டிப்பதும்... கண்ணடிப்பதும்...
இடைகிள்ளி... நகை சொல்லி...
அந்நேரம் சொல்வாயடா "அடி கள்ளி "
ٌ இவையெல்லாம் இரண்டே மாதம் தந்துவிட்டு...
எனை தீ தள்ளி வாழ்வள்ளி சென்றுவிட்டாய்... என் துபாய் கணவா!
ٌ கணவா... - எல்லாமே கனவா.......?

கணவனோடு இரண்டு மாதம்... கனவுகளோடு இருபத்தி இரண்டு மாதமா...?
ٌ 12 வருடமொருமுறை குறிஞ்சிப்பூ ... 5 வருடமொருமுறை ஒலிம்பிக்....

4 வருடமொருமுறை உலககோப்பை கிரிக்கெட்... ...

2 வருடமொருமுறை கணவன் ...

நீளும் பட்டியலோடு நீயும் இணைந்துகொண்டாய்!
ٌ இது வரமா ..? சாபமா..?

அழகுக்காய் பிணத்தின் சாம்பலில்... முகம் பூசுவோர் உண்டோ ?
ٌ கண்களின் அழுகையை... கண்ணாடி தடுக்குமா கணவா?

நான் தாகத்தில் நிற்கிறேன் - நீ கிணறு வெட்டுகிறாய்
நான் மோகத்தில் நிற்கிறேன் - நீ விசாவை காட்டுகிறாய்

திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா... வாழ்வின் அர்த்தம் புரிந்து வாழலாம்
ٌ விட்டுகொடுத்து... தொட்டு பிடித்து...
தேவை அறிந்து... சேவை புரிந்து...
உனக்காய் நான் விழித்து... எனக்காக நீ உழைத்து...
தாமதத்தில் வரும் தவிப்பு... தூங்குவதாய் உன் நடிப்பு...

வாரவிடுமுறையில் பிரியாணி... காசில்லா நேரத்தில் பட்டினி...
ٌ இப்படி காமம் மட்டுமன்றி எல்லா உணர்ச்சிகளையும் நாம் பரிமாறிக்கொள்ளவேண்டும்

ٌ இரண்டு மாதம்மட்டும் ஆடம்பரம் உறவு உல்லாச பயணம்..
பாசாங்கு வாழ்க்கை புளித்துவிட்டது கணவா!

ٌ தவணைமுறையில் வாழ்வதற்கு வாழ்க்கை என்ன வட்டிக்கடையா?
எப்பொழுதாவது வருவதற்கு நீ என்ன பாலை மழையா ?
இல்லை ஓட்டு வாங்கிய அரசியல்வாதியா ?

ٌ விரைவுத்தபாலில் காசோலை வரும் காதல் வருமா ?
பணத்தை தரும்... பாரத வங்கி ! பாசம் தருமா?

ٌ நீ இழுத்து செல்கின்ற பெட்டியோடு ஒட்டியிருக்கிறது என் இதயம்
அனுமதிக்கப்பட்ட எடையோடு அதிகமாகிவிட்டதால் விமான நிலையத்திலேயே விட்டுவிட்டாயோ என் இதயத்தை?

பித்தளையை எனக்கு பரிசளித்துவிட்டு... நீ தங்கம் தேடி துபாய் சென்றாயே?
ٌ பாலையில் நீ வறண்டது என் வாழ்வு!

வாழ்க்கை பட்டமரமாய் போன... பரிதாபம் புரியாமல் ஈச்சமரம் பக்கம் நின்று எடுத்த புகைப்படம் அனுப்புகிறாய்!


உன் துபாய் தேடுதலில்... தொலைந்து போனது - என் வாழ்க்கையல்லவா..?
ٌ விழித்துவிடு கணவா! விழித்து விடு - அந்த கடவுச்சீட்டு வேண்டாம்... கிழித்துவிடு!

விசாரித்து விட்டு போகாதே கணவா விசா ரத்து செய்துவிட்டு வா! (இல்லையேல் விவாக ரத்து செய்துவிட்டுப்போ )

திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா... வாழ்வின் அர்த்தம் புரிந்து வாழலாம்
டிஸ்கி: எனக்கு பல வருடங்கள் முன்பு மின் அஞ்சலில் வந்த கவிதை.

64 comments:

butterfly Surya said...

TEST..

valu said...

nice

Unknown said...

அருமையான கவிதை நடை
நெஞ்சத்தை சுடும் உண்மை

** வாழ்க்கை பட்டமரமாய் போன... பரிதாபம் புரியாமல் ஈச்சமரம் பக்கம் நின்று எடுத்த புகைப்படம் அனுப்புகிறாய்! ** அருமை

சரவணகுமரன் said...

அருமை...

பட்டாம்பூச்சி said...

அருமை.

Maayavan said...

nice....

யாழிபாபா said...

really nice one

ஷாஜி said...

/வாழ்க்கை பட்டமரமாய் போன... பரிதாபம் புரியாமல் ஈச்சமரம் பக்கம் நின்று எடுத்த புகைப்படம் அனுப்புகிறாய்! //

---நெஞ்சத்தை சுடும் உண்மை !!!!

இந்த கொடுமையய் நானும் என் மனைவியும் 3 ஆண்டுகலுக்கு முன்பு அனுபவித்தோம்.

//விசாரித்து விட்டு போகாதே கணவா விசா ரத்து செய்துவிட்டு வா! (இல்லையேல் விவாக ரத்து செய்துவிட்டுப்போ )//

என்று அவல் சொல்லியதால் இன்று நான் அவலோடு...அன்போடு... வாழ்கிறேன்

மிக்க நன்றி நன்பரே...

Unknown said...

Exelent

butterfly Surya said...

இந்த வலையில் இது என் முதல் பதிவு. வந்து வாழ்த்திய வாலு, பழனிவேல், சரவணகுமரன், பட்டாம்பூச்சி(அட.. நம்பாளு} அனைவருக்கும் நன்றி.

butterfly Surya said...

நன்றி மாயன்.. எனது மற்றொரு பதிவுகளான உலக சினிமா பற்றியும் பாருங்கள்.

butterfly Surya said...

நன்றி ஷாஜி. சகோதரியின் வலி உணர்ந்து குடும்பத்துடன் இணைந்தது எத்தனை மகிழ்ச்சி.

தற்போது அமீரக சூழ்நிலை மிகவும் கவலைகிடமாக உள்ளது. வரும் தகவல்கள் நிலைமை சீராக ஒரிரு வருடங்களாகும். உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் வாழ்த்துகள்.

butterfly Surya said...

நன்றி ரமேஷ். வாழ்த்துகள்.

Anonymous said...

Vanakkam.

Kavalai Pada venda Thangai.

Dubai irukkum nilamaiyai parthal ellorum kudiya sekiram vettu vanthu serthu veduvom pol than irukku.

Thinam oru seithi varukirathu. daily 1000 visa cancel. Antha company project stop pannittanga, entha company stop pannitta entru.

Anbudan
Tamil Mahan

வடுவூர் குமார் said...

அருமை அருமை.
நன்றாக வந்திருக்கு.

butterfly Surya said...

நன்றி அனானி.

butterfly Surya said...

நன்றி வடுவூர் குமார். சுகம்தானே..??

Anonymous said...

very nice marvelous

butterfly Surya said...

Thanx Syed

அஜீம்பாஷா said...

very nice to read, difficult to take sudden decision, why, we dont want our kids suffer what we have suffer in our earlier days, for their breight future we have to be here. Those who are supporting these version will not pay your kids school bill, they will not come to help when your kids cry for food.

this is our fate, we will fight till last end to survive for our famliy's well being.

Inshall allah pray for good things to happen.

நட்புடன் ஜமால் said...

மிகவும் அருமைங்க ...

வெளிநாட்டு வாழ் மக்களின் உணர்வுகளை அருமையா ...

butterfly Surya said...

நன்றி பாஷா.

butterfly Surya said...

நன்றி ஜமால்.

Anonymous said...

Romba yadarthamana pudukavidai/Unmai,
ennoda karuthu ennanna, atleast kalyanam mudinchi oru 5 varudam manaiviudan iruppadu mikka nalam. Pillaigal vanthutta thanimai theriyathu.

ஆர்.வேணுகோபாலன் said...

வண்ணத்துப்பூச்சியாரே,
கண்களில் நீர் தளும்ப வைத்த ஒரு படைப்பு. இதை ஒரு சில வார்த்தைகளில் எப்படிப் பாராட்டுவது என்று புரியவில்லை. இதை எனது வலைப்பதிவில் உங்களது வலைப்பதிவின் முகவரியையும், உங்கள் பெயரையும் குறிப்பிட்டு, எனது நண்பர்களையும் வாசிக்க வைக்க வேண்டும் என்று விரும்புகிறேன். தங்களது மேலான பதிலுக்காகக் காத்திருக்கிறேன். பாராட்டுக்கள்! வேணு, சென்னை, த.நா. இந்தியா

butterfly Surya said...

நன்றி ஷாகுல்.

அஜீம்பாஷா said...

Yes, we have uncertain future here, but we are happy, why we are facing alone our life struggle, if we survive we can teach our kids survive like this situation. pray for us.

குடந்தை அன்புமணி said...

பணம் பணம் என்று அழைபவர்களுக்கு உறவின் அர்த்தம் உணர முடியுமா? ('நந்தவனம்' எனக்கு பிடித்த பெயர். நான் பள்ளி பருவத்தில் நடத்திய சிற்றிதழின் பெயர்.)

boopathiraja said...

very very nice & true..

goma said...

வாழ்க்கை படகு, தத்தளிக்காமல் செல்ல, அனேகம் பேர் பாலைவனத்தில் படகை இறக்கி விடுகின்றனர்.
அதைத்தான் அழகாகச் சொல்லியிருக்கின்றீர்
வாழ்த்தும் பாராட்டும் உரித்தாகுக

butterfly Surya said...

நன்றி அன்புமணி.

நந்தவனம் வண்ணத்துபூச்சியின் புகலிடம். அனைவரும் விரும்பும் இடமாக செய்யவே விருப்பம். தங்களை போன்றவர்களின் ஊக்கத்தால் நிறைவேறும் என்று நம்பிக்கை.

என் பள்ளி பருவத்தின் கையெழுத்து பிரதியின் பெயர் "ஸ்வரங்கள்"..

மலரும் நினைவூகளாக்கிய உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

உலக திரைப்படம் பற்றிய எனது வலையினையும் பாருங்கள். நிறை / குறை சொல்லுங்கள்.

butterfly Surya said...

நன்றி பூபதிராஜா.

வாழ்த்துகள்.

butterfly Surya said...

வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றிகள் கோமதி.

அஜீம்பாஷா said...

uravugal needikka uyir devai, uyir needikka unavu devai, unavukku panam devai, panattuku yeena devai, arisi aalakkule alandu potta kalathule thirakadalaodium thiraviam thedunnu sollitanga, aana ippo arisi yeppadi varudnu ketta nadar malikadiyelennu pasanga solra kaalam, veetila urava pattu okkarnda, atutha naal dinamalarle kudambathudan tharkolaihtan parkalam.

கீழை ராஸா said...

இந்தப்பதிவு எனக்கு மின் அஞ்சலில் வந்தது...முடிவில் சிலவருடங்களுக்கு முன்னால் வண்ணத்துப்பூச்சியார் எழுதியது என்று இருந்தது...வந்து பார்த்தால் இப்போது தான் பதிவு செய்யப்பட்டுள்ளது...

பதிவு மிக அருமை நண்பரே...தொடருங்கள்

சுரேகா.. said...

//விழித்துவிடு கணவா! விழித்து விடு - அந்த கடவுச்சீட்டு வேண்டாம்... கிழித்துவிடு!//

எல்லா வரிகளுமே அருமை! இந்த வரிகள் மேலும் அருமை!

வளைகுடா நாடுகளில் இத்தகைய கவிதைகள் மிகுந்த பாராட்டுக்களுடன் படிக்கப்படும்.1999ல்..
யாரும் அதைப்படித்து திரும்ப வந்ததாகத் தெரியவில்லை!

என்ன செய்வது? SURVIVAL தான் காரணம் போல!

butterfly Surya said...

நன்றி கீழை ராஸா.

butterfly Surya said...

நன்றி சுரேகா. தங்கள் வரவும் வாழ்த்தும் எனக்கு மிக்க மகிழ்ச்சி.

நானும் அமீரகத்தில் நான்கு ஆண்டு வனவாசம் இருந்தவந்தான்.

வளைகுடா நாடுகள் ஒரு மின்சார வேலி.. உள்ளே safe ஆக இருப்பதாக ஒரு உணர்வு மட்டுமே.வெளியே வருவது மிகவும் கடினம்.

Not only survival, a bit of commitment and many factors.

எனது மற்றொரு பதிவுகளான உலக சினிமா பற்றியும் பாருங்கள்.Very sincerly waiting for your comments there.

Anonymous said...

en manthai thota kavithi

Gopal said...

I have a lot of interest in both tamil & english litt.But i have never come accross such a beautiful "Kavithai" with lot of meaning & feeling.Good work pl continue.

Anonymous said...

வண்ணத்துப்பூச்சியாரே,

இது கவிஞர் ரசிகவ் ஞானியார் எழுதிய கவிதை.
கவிதையை எடுத்துப் போட்டது போல கவிஞர் அவர் பெயரையும் நீங்கள் குறிப்பிட்டிருக்கலாமே..

Anonymous said...

இந்த கவிதை வரிகள் ”கணவன்மார்கள்” தாமாகவே இங்கு வந்து விருப்பத்துடன் இருப்பது போல பொருள் படுகிறது. நிஜம் அதுவல்ல.

மனைவிமார்களின் பொருளாதார ”புலம்பல்களினால் தான் இங்கு வாழ்க்கை முழுமையும் தியாகம் செய்ய வேண்டி இருக்கிறது என்பதை மறுப்பதற்கு யாரும் இல்லை என்பது தான் உண்மை.

Unknown said...

To be honest,
this poem is apart from critics as its a personal feel of the poet,but as it is exihibited it comes for critics.
But some of the critics seems baseless and utter stupidity....
for example future of kids.....Money alone cant decide politics...guys/gals who were son/daughter of NRI fathers...how they are shapen up in behaviour,attitude etc etc its become biggest question.....take the maximum percentage....amma,appa aravaianapula oru kala kattam varai ilatha pulainga nalla valanthatha sarithiram illa...udanae u can ask abt kids whose parents are died...what to do....yah they will be brought up by elders with OTHERS money etc......kandippu jasthi freedom koraichu
Well all of us have come with some unavaidable situation,commitment etc....for example v are with a mood to earn 5laks and pay the loan...but howmany of us finish it to that point...athiavasiya thevaigalngra perla aadambara thevaigal athiga paduthuringa....
ANY how for the poet u r simple awesome...becos u have wrote the poem in a wife's perspective...thats gr8...a man who understand others feel is the perfect human!
NO.1 Marriage munnadi (23-30 max) gulf vanthutu poidalam....intha 7 varusham,sister mrg,loan,brother study,future save panna mudiyatha?!
NO.2 If v again faced to bad financial situ,come to gulf atleast after ur child grownup.....ex:5th std to9th std(4varusham pothatha)

Dont think like he is talking too much,becos iam ur brother who misses u,iam ur son missing u dad,chitappa,periappa....iam one among u...

Unknown said...

really its very true and nice also. now am on same position only

Unknown said...

its realy true , very very very very nice & beautiful

தமிழர் நேசன் said...

//நீ இழுத்து செல்கின்ற பெட்டியோடு ஒட்டியிருக்கிறது என் இதயம்//
கண்களை பனிக்க வைத்த கவிதை. படிக்கும்போது குரல் தளுதளுத்தது.. அருமையிலும் அருமை.

Unknown said...

asdasdsa

Unknown said...

This Pudhukavithai is realy very
is nice

butterfly Surya said...

நன்றி வீரா..

Anonymous said...

enaku en manaiviyae neril vandhu naakae pudngikramadhri keta maadhri thonudu.but oorku povadharku vali teriavillai.

butterfly Surya said...

நன்றி உண்மை.. தங்கள் வலையின் முகவரி இல்லையே..??

Joe said...

//
அனுமதிக்கப்பட்ட எடையோடு அதிகமாகிவிட்டதால் விமான நிலையத்திலேயே விட்டுவிட்டாயோ என் இதயத்தை?
//
அற்புதம்!

butterfly Surya said...

நன்றி ஜோ.

Shubashree said...

It's a poem that has touched and stirred upany people and their responses... Good posting! I liked this.

butterfly Surya said...

Thanx Shuba.

Unknown said...

ROMBA NALLA IRUKU EN VALKAYI IN ARTHAM PURITHADU
ORU MANYAVI IN EKKAM ENNA VANRU PURINTHU KONDAM.
நீ இழுத்து செல்கின்ற பெட்டியோடு ஒட்டியிருக்கிறது என் இதயம்
அனுமதிக்கப்பட்ட எடையோடு அதிகமாகிவிட்டதால் விமான நிலையத்திலேயே விட்டுவிட்டாயோ என் இதயத்தை?(ITS POEM WORDS IS TRUE ITS IS A LIFE.)
WONDERFUL (HADSOFT).

butterfly Surya said...

நன்றி ராஜா.

SRS said...

rommba nalla irukku
-jhanani

Anonymous said...

Now i am in the same situation dilsha from thanjavur

butterfly Surya said...

நன்றி ஜனனி.

butterfly Surya said...

தில்ஷா. நானும் துபையில் 4 வருடம் இருந்தவன் தான். என் மனைவியின் குழந்தைகளின் அந்த வலியும் வேதனையும் அறிந்து தான் இப்போது சென்னையில்.


ஆனால் எல்லோருக்கும் அது சாத்தியபடுமா..??

விரைவில் அவர் தஞ்சை வந்து சேர இறைவனை பிரார்த்திக்கிறேன்.

Ananya Mahadevan said...

very touching.. thalaiezutthu inge vandhu maattindrukkom. ovvoru variyum nidharsanamanaa unmai. beautifully written.

Jesi said...
This comment has been removed by a blog administrator.
butterfly Surya said...
This comment has been removed by the author.