Wednesday, February 24, 2010

தண்டோரா மணிஜிக்கு வாழ்த்துகள்


தண்டோரா மணிஜியின் Cheers குறும்படம் பற்றி பலர் அறிந்திருப்பீர்கள். பார்க்காதவர்களுக்காக லிங்க் இங்கே. வேறு லிங்க் கிடைக்கவில்லை ஆனால் மிகுந்த நேரமெடுக்கிறது. பின்னூட்டத்தில் திட்ட கூடாது ஆமா சொல்லிபுட்டேன்.


Cheers பல குறும்பட போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகளையும் வென்றுள்ளது.சென்ற ஆண்டு தழிழ்ஸ்டுடியோ நடத்திய போட்டியிலும் பரிசை பெற்றது.


சில நாட்கள் முன் திருவாரூர் அரிமா சங்கமும் கிழக்கு வாசல் சிற்றிதழும் இணைந்து நடத்திய குறும்படம் போட்டியிலும் வென்று முதல் பரிசை தட்டி சென்றுள்ளது. மணிஜிக்கு அனைத்து பதிவர்கள் சார்பில் வாழ்த்துகள்.


அந்த பரிசை பெறவும் நண்பர்களை சந்திக்கவும் அண்ணன் மணிஜியும் அன்பு நண்பன் அகநாழிகை வாசுதேவனும் இன்று இரவு திருச்சியில் தங்குகிறார்கள். நானும் செல்வதாக தான் இருந்தேன். ஆனால் வேலைப்பளு காரணமாக இயலாதது வருத்தமே.




வாசுவையும் மணிஜி அவர்களையும் திருச்சி/ தஞ்சாவூர் முகாமில் சந்திக்க விரும்பும் நபர்கள், மணிஜியின் அர்த்தமில்லாத கதைகளுக்கு அர்த்தம் கேட்கலாம். அவரும் கொஞ்சம் பேசுவார்.


நிகழ்ச்சி விபரம்


குறும்பட போட்டி பரிசு வழங்கும் விழா

அமைப்பு: திருவாரூர் அரிமா சங்கம் + கிழக்குவாசல் சிற்றிதழ்

இடம்: திருச்சி அருண் ஹோட்டல் (மத்திய பேருந்து நிலையம் அருகில்)

நாள்: 26/2/2010 (வெள்ளி கிழமை)

நேரம்: காலை 10.00 மணி

அலைபேசி: மணிஜி ( 9340089989)
அகநாழிகை வாசுதேவன் (9994541010)



வாருங்கள். வாழ்த்துங்கள்.




டிஸ்கி:
மைத்ரி தொடர்பான இடுகைக்கு ஆதரவும் நிதி திரட்டுவதில் உதவியும் அளித்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் அருமை சக பதிவர்களுக்கும் மிக்க நன்றி.


Sunday, February 7, 2010

மைத்ரி







நம் நாட்டில் ஏறக்குறைய 3 கோடி மக்கள் மனவளர்ச்சி குன்றியோர் என்று சொல்லப்படுகிறது. ஆனால் இவர்களுள் ஐந்து சதவிகிதத்தினர்தான் தேவையான கல்வி, பயிற்ச்சி மற்றும் வசதிகள் பெற்றிருப்பதாகவும் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.


பயன் வேண்டுவோருக்கும் பயன் பெறுவோருக்கும் இடையே உள்ள இவ்வளவு பெரிய இடைவெளியை சிறிதேனும் குறைக்கும் நோக்கத்துடன் மனவள்ர்ச்சி குன்றியோரின் பெற்றோர்களால் 1994ல் சென்னையில் துவங்கப்பட்ட சேவை நிறுவனம் தான் “மைத்ரி”


மூன்றே குழந்தைகளுடன் துவங்கப்பட்ட மையம் இன்று 300 குழந்தைகளை பயிற்றுவிக்கும் நிறுவனமாக வளர்ந்து நிற்கிறது. சென்னையில் பெரம்பூர், தாம்பரம், மேற்கு மாம்பலம், கொளத்தூர், கே.கே. நகர், உள்ளகரம் ஆகிய 6 இடங்களில் 70க்கும் மேற்பட்ட ஆசிரியர்களுடனும் திறன் ஊக்க வல்லுநர்களுடனும் {Occupational & Physico Therapists} பணி புரிகிறார்கள்.


மனவள்ர்ச்சி குன்றியிருந்தாலும் இவர்களிடம் உள்ள சில திறமைகளை கண்டெடுத்து, வளர்த்து அவர்கள் தங்களுக்கும் பிறர்க்கும் பயனுள்ள வாழ்க்கை வாழ வழிகாட்டும் மைத்ரி, நலன் விரும்பும் பெற்றொரும், நல்மனமுள்ள பல்ரின் ஆதரவோடு தற்போது வளர்ந்து வருகிறது.




வளர்ச்சியடைந்த அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் அரசு பள்ளிகளிலேயே இம்மாதிரி சிறப்புக் குழந்தைகளின் கல்விக்கும் இடம் ஒதுக்கி உதவுகிறார்கள். நம் நாட்டில் இது போன்ற சமூக நிறுவனங்களால் மட்டுமே செய்ய இயலுகிறது. இதற்கு தேவையான உதவிகளுக்கும் சமூகத்திடம்தான் பெற்று செயல்படவும் முடிகிறது.




இலாப நோக்கில்லாமல் அன்பளிப்புகளால் மட்டுமே நடக்கும் நிறுவனம் என்பதை கடந்த சில மாதங்களாக நானும் இணைந்து பணியாற்றுவதால் நன்கறிவேன். இந்நிறுவனத்தின் கூட்டங்களில் கலந்து கொண்டு என்னால் இயன்ற சிறு உதவிகளையும் செய்து வருகிறேன். அதனால் வலைப்பூவிலும் அதிகம் நேரம் ஒதுக்க முடியவில்லை.




இன்னும் பல பள்ளிகளை தொடங்கவும் இருக்கும் பள்ளிகளை மேம்படுத்தவும் இவர்கள் ஒரு இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளார்கள்.







சென்னை நேரு உள்விளையாட்டஙகில்
(பிப் - 28 ஞாயிறு மாலை 6.05 pm) நடைபெற இருக்கும் இக்கலை நிகழ்ச்சிக்கு டிக்கெட் வாங்குவதன் மூலம் நீங்களும் ஒரு சிறு பங்களிப்பை செய்ய முடியும்.




ஆன்லைனில் வாங்க
இங்கே கிளிக்கவும்.




நிதியுதவி செய்ய விரும்பும் வெளியூர் / வெளிநாடு நண்பர்கள்
இங்கே செலுத்தலாம்.


இன்றைய சமுதாய ஓட்டத்தில் இது போன்ற பணிகளில் நம்மால் முழு நேரமும் ஈடுபட முடியுமாதென்பது ஒப்பு கொள்ள வேண்டியதே எனினும் இதை முழுமூச்சுடன் முனையும் இவர்களுக்கு தோள் கொடுக்கவும் இயன்ற உதவியை செய்யவும் வாருங்கள் என சக பதிவர்கள், நண்பர்கள் அனைவரையும் அன்புடனும் உரிமையுடனும் வேண்டுகிறேன்.

Wednesday, January 13, 2010

சூரிய கதிர்




சில தினங்களுக்கு முன் சூரிய கதிர் இதழின் அலுவலகத்திலிருந்து ஒர் அவசர அழைப்பு. சினிமா சிறப்பிதழுக்காக உலக சினிமா பற்றி ஏதேனும் கட்டுரை எழுத முடியுமா என்றும் நேரில் வரும் படியும் அழைப்பு விடுத்தார்கள்.




நேரில் சென்று பத்திரிகையுலக ஜாம்பவான் திரு. ராவ் அவர்களை சந்தித்தேன். எத்தனை பெரிய மனிதர் அத்தனை எளிமையாய் பேசி உங்கள் மனதுக்கு பிடித்ததை முதலில் செய்யுங்கள் என்றார்.




உலக சினிமா என்றாலே என்றும் என் மனம் கவர்ந்த ஈரானிய இயக்குநர் மஜித் மஜிதியை பற்றி ஒரு முன்னோட்டமாக எழுதலாமா என்று கேட்டதற்கு உடனே சம்மதம் சொன்னார்.




அன்றே இரவோடு இரவாக எழுதியும் அனுப்பினேன்.



சூரிய கதிர் (ஜன 16 -31 ) இதழில் அச்சேறியிருக்கிறது. நண்பர்களுடன் பகிர்வதில் அளவற்ற மகிழ்ச்சி.



காலையில் முதன் முதலில் பார்த்து விட்டு அலைபேசியில் வாழ்த்து சொன்ன உண்மைதமிழனுக்கும் குறுஞ்செய்தி அனுப்பிய அனைத்து நண்பர்களுக்கும் நன்றிகள் பல.





வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்த நண்பர் மரக்காணம் பாலாவுக்கும் நன்றிகள்.




அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள்.




டிஸ்கி: திரு. மதன் அவர்களும் எழுத்து சித்தர் பாலகுமாரனும் தொடர் எழுதும் பத்திரிகையில் அடியேனும் கட்டுரை எழுதியிருப்பது எனக்கு நிஜமாகவே Happy Pongal தான். இணையத்தில் படிக்க இங்கே

Thursday, December 31, 2009

புத்தக கண்காட்சியும் பதிவர் சந்திப்பும்...


நேற்று புத்தக கண்காட்சி துவக்க விழாவிற்கு சென்று விட வேண்டும் என்று எண்ணியிருந்தேன். கூட்டம் அதிகமாக இருக்குமா என்று நினைத்து அதிஷாவுக்கு போன் போட்டேன். அவரோ அண்ணே.. அசைன்மெண்ட் விஷயாமாக திண்டுக்கல் அருகே இருக்கேன்ன்னு பல்பு போட்டார்.



இன்று எப்படியாவது போக வேண்டுமென்று எண்ணி சென்றும் விட்டேன். இந்த முறை புத்தக ஸ்டால்களின் அளவுகளை குறைத்து நடக்க நிறைய இடம் விட்டிருக்கிறார்கள்.



முதலில் ஈர்த்தது விகடன் தான். ஏற்கனவே குறித்து வைத்திருந்த நண்பர் ரவிபிரகாஷ் அவர்களின் மொழியாக்கத்தில் வெளியான இரண்டு நூல்களும் (Stay Hungry Stay Foolish & A Diplomat Reveals) நூல்களும் இன்ன பிற புதிய விகடன் வெளீயிடுகளையும் வாங்கி கொண்டு மேய்ந்து கொண்டிருந்தேன்.



பதிவர்களின் புத்தகங்களை வெளியிட்டுள்ள வம்சியை தேடினேன். அய்யனாரின் புத்தகங்களை வாங்க ஆவலாய் சென்றேன். சில இன்னும் வரவில்லையாம். ஸ்டால்காரர் சனிக்கிழமை அனைத்தும் கிடைக்கும் என்றார். விஸ்வாமித்திரன் மற்றும் கிடைத்த புத்தகங்களை வாங்கி கொண்டு கிழக்கு பக்கமாய் சென்றேன்.



பள்ளி கூட பருவத்தில் வரலாறு ரொம்ப பிடிக்கும். அது மீண்டும் சில மாதங்களாய் தொற்றி கொண்டு வருகிறது. முகிலின் செங்கிஸ்கான், யூதர்கள் மற்றும் மைசூர் மகாராஜா படித்ததிலிருந்து நிறைய வரலாறு படிக்க வேண்டும் என்று ஆவல் அதிகரித்திருக்கிறது. {அப்போ படிச்சிருந்தா மார்க்காவது வந்திருக்கும்}



புதிய வெளீயிடான முகலாயர்களை (விலை 250/-) வாங்கினேன். முகிலின் அடுத்த பிரம்மாண்டமான படைப்பு அகம் புறம் அந்தப்புரம் இன்னும் அரங்கேறவில்லையாம். புகைப்படத்திலேயே தலையணை சைஸில் தெரிகிறது. (1392 பக்கங்கள்) வாங்க வேண்டிய லிஸ்டில் இருக்கிறது.





கிழக்கில் இன்னும் நிறைய புத்தகங்கள் வெளியிட்டு இருக்கிறார்கள். கமலின் வாழ்க்கை வரலாறு அட்டை படமே அசத்தல். உடனே வாங்கி விட்டேன்.


பா. தீனதயாளன் எழுத்து நடை எனக்கு மிகவும் பிடிக்கும். சின்னப்பா தேவரின் வாழ்க்கை வரலாறு புத்தகத்தை விழுந்து விழுந்து சிரித்து படித்திருக்கிறேன்.



காலச்சுவடு பதிப்பகத்தில் சிலவற்றை வாங்கினேன். அடுத்து உயிர்மை பதிப்பகத்தில் எஸ்.ரா, சாருவின் புத்தங்கள் சிலவற்றை வாங்கி கொண்டு இருக்கும் போது இருவர் அருகில் வந்து நீங்கதானே butterfly Surya ..? என்றதும் ஒரு அளவில்லாத மகிழ்ச்சி.



ராஜகோபாலும் (எறும்பு) ஷங்கர் (பலாப்பட்டறை) யும் அறிமுகப்படுத்தி கொண்டவுடன் ஈரோடு சந்திப்பு பற்றி தொடங்கி பல விஷயங்களை பேசி கொண்டே சுற்றி திரிந்தோம். முருகன் சேதி சொல்லிட்டாரோ என்னவோ..?? திடீரென்று உண்மைதமிழன் வந்து சேர்ந்தார். சிறிது நேரத்தில் லக்கியும் வந்ததும் மகிழ்ச்சி அதிகரிக்க மீண்டும் ஒரு ரவுண்ட் அடித்து கொண்டிருந்தோம். எழுத்தாளர் பா.ராகவனை சந்தித்ததும் கால் வலி தீர ஒரிடத்தில் அமர்ந்து சில பயனுள்ள புத்தகங்கள் பற்றியும் பதிவர்கள் பற்றியும் ராகவனுடன் பேசி விட்டு அங்கிருந்து கிளம்பினோம்.


உண்மைதமிழன் திரு. முக்தா சீனிவாசனை அறிமுகம் செய்தார். நண்பர் கிருஷ்ண்பிரபு வின் பதிவுகளிலிருந்தும் அவரது மின்னஞ்சலில் அனுப்பிய புத்தக குறிப்புகளையும் எடுத்து செல்ல மறந்து விட்ட படியாலும் பர்ஸ் காலியானதாலும் நண்பர்களை சந்தித்த மனநிறைவோடு வீடு நோக்கி பயணமானேன்.



அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.




டிஸ்கி 1 : சில புகைப்படங்கள் துளசி டீச்சர் பதிவிலிருந்து சுட்டது.



டிஸ்கி2: பா.ராகவன் உண்மைதமிழனுக்கு அளித்த அட்வைஸ் இங்கே.

Thursday, December 24, 2009

நத்தார் வாழ்த்துகள்








பகைவரையும் நேசி என்றுரைத்த


எங்கள் பரமபிதாவே ..


நீ பிறந்த நாளில்


பக்கத்து வீட்டுகாரரையாவது


நேசிக்க முயற்ச்சிக்கிறோம்!

Monday, December 21, 2009

ஈரோடு சங்கமம் தொகுப்பு

ஈரோடு சங்கமம் பற்றி சென்னை வந்ததும் கடுமையான வேலைப்பளுவால் எழுத முடியவில்லை. சங்கமம் ஒரு திருவிழா என்று ஆரம்பித்து நடந்தது என்ன..? நான் அடிச்சா தாங்கமாட்ட,யாரோ சூனியம் வைச்சிட்டாங்கன்னு பல தலைப்புல எழுதி அசத்திடாங்க.



தனிப்பதிவுகளை மட்டும் எடுத்து அனைத்து இடுகைக்களின் லிங்க் கொடுத்துள்ளேன். நண்பர்களுக்கு படிக்க உதவியாய் இருக்கும் என்று நினைக்கிறேன். யாருடைய பதிவாது விடுபட்டிருந்தால் பின்னூட்டத்தில் கூறுங்கள். இணைத்து விடலாம்.



















விழாவில் பேச வாய்ப்பளித்த கதிர் அவர்களுக்கும் மற்றும் விழா ஏற்பாடு செய்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றி.. நன்றி.. நன்றி..


நிகழ்வுக்கு அழைத்து சென்ற அப்துல்லா அண்ணனிற்கும் சக பயணிகள் அண்ணன் தண்டோரோ, அருமை நண்பர் கேபிள்ஜி, my dear அகநாழிகை வாசு தேவனுக்கும் நன்றிகள் பல.



பல வருடங்க்ள் கழித்து கல்லூரி நண்பர்க்ளை சந்தித்ததை போன்று என்றும் நினைவில் நிற்கும் அற்புத நிகழ்வாய் அமைந்தது.




பதிவுகளின் சுட்டி பட்டியல்





ஈரோடு கதிர்
நன்றி! நன்றி!! நன்றி!!!



சி @ பாலாசி நன்றி நவிலல்



மைக் முனுசாமி நான் அடிச்ச தாங்கமாட்ட



பாமரன் பக்கங்கள் ஒரு சாதனை தொகுப்பு



பாமரன் பக்கங்கள் சில ஒலித்தொகுப்புகள்



பழமைபேசி குறுந்தகவல்



பழமைபேசி நன்றியுடன்



பழமைபேசி மேலதிகப்படங்கள்



வால்பையன் வாழ்த்துவனங்களுக்கும் திட்டுனவுங்களுக்கும்



வால்பையன் எனக்கு யாரோ சூனியம் வச்சிடாங்க




செந்தில் வேலன்
நடந்தது என்ன..??



செந்தில் வேலன் அனானிகள், அட்சென்ஸ், கருத்து சுதந்திரம்



கார்த்திகை பாண்டியன் இனிதே நடைபெற்ற ஈரோடு சங்கமம்



சங்கவி அட்டகாசமான ஆரம்பம்



சஞ்சய்காந்தி சந்திப்பு இட்லிவடை போட்டோ



பரிசல்காரன் சபாஷ் ஈரோடு



T.V. ராதாகிருஷ்ணன்
ஈரோடு திருவிழா



வி. என். தங்கமணி
பதிவர்களின் கடமைகளும் பொறுப்புகளும்



Will To Live ரம்யா
டிசம்பர் 20 - ஈரோட்டில் பதிவர் - வாசகர் சந்திப்பு



சுமஜ்லா
பதிவர் சந்திப்பில் நான் பேசியவை



லதானந்த்
ஈரோடு பதிவர் சங்கமம் சில விமர்சனங்கள்



ஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம்
பதிவர் லதானந்த் கவனத்திற்கு




ஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம்
சண்முகராஜ் அவர்களிடமிருந்து வந்த மின்மடல்...


Friday, December 18, 2009

வேட்டைக்காரன் - திரை விமர்சனம்




மாஸ் மசாலா என்ற வட்டத்தை விட்டு வெளியில் வர முடியாத அல்லது விருப்பமில்லாத விஜய்யின் மற்றுமொரு வழக்கமான மசாலா வேட்டை இந்த வேட்டைக்காரன்.



கதைப்படி ரவி என்கிற போலீஸ் ரவி (விஜய்) ஒரு தூத்துக்குடி பையன். ப்ளஸ்டூவை நான்காவது அட்டம்டில் தாண்டும் சராசரி மாணவரான அவருக்கு, பெரிய லட்சியம் ஒன்று உண்டு. அது தனது ஆதர்ஸ நாயகனான தேவராஜ் ஐபிஎஸ் (ஸ்ரீஹரி) மாதிரி பெரிய போலீஸ் ஆ...பீஸர் ஆவது.




தன் முயற்சியில் சற்றும் மனம் தளராமல் சென்னையில் கல்லூரியில் சேர்ந்து படிக்க ரயிலேறுகிறார். அப்போதுதான் அனுஷ்காவைச் சந்திக்கிறார்.
வழக்கம்போல அந்தக் கணத்திலேயே விஜய்யின் கனவு நாயகியாகி விடும் அனுஷ்கா, வழக்கம் போல டூயட்டெல்லாம் பாடி ஓய்கிறார்.



அப்போதுதான், செல்லா என்ற மோசமான வில்லனைச் சந்திக்கிறார் விஜய். அழகான பெண்ணைப் பார்த்த கணத்தில் படுக்கைக்குத் தூக்கிச் செல்லும் சைக்கோ கேரக்டர் இந்த செல்லா. தன் வகுப்புத் தோழி ஒருத்திக்கு இந்த சோகம் நிகழ, நாயகன் விஜய் பொங்கியெழுந்து போட்டுப் புரட்டியெடுத்து கொன்று விடுகிறார் செல்லாவை.



இந்த செல்லாவின் அப்பா வேதநாயகம் (சலீம் கவுஸ்) பெரிய டான். மகனைக் கொன்ற விஜய்யை போட்டுத் தள்ள போலீஸ் அதிகாரி சாயாஜி ஷிண்டேக்கு அஸைன்மெண்ட் தருகிறார். ஆனால் அதை உதாசீனப்படுத்தும் சாயாஜி, 'நீயென்ன பெரிய மந்திரியா, எனக்கு உத்தரவு போட' என திருப்பிக் கேட்க, அப்போதே மகன் கொலையை மறந்து, மந்திரியாகும் வெறியில் அரசியல் காய் நகர்த்துகிறார் வேதநாயகம்.



ஒரு கட்டத்தில் விஜய்யின் ஆதர்ச நாயகனான தேவராஜ் ஐபிஎஸ், இந்த வேதநாயகத்தால் பாதிக்கப்பட்டு கண் பார்வை போய், வேலையையும் இழக்கிறார். விஜய்யின் கோபம் இப்போது இன்னும் பல மடங்கு பெருக, வில்லனை வேட்டையாட புறப்படுகிறார்... (ஹை... டைட்டிலுக்கு காரணம் கண்டுபிடிச்சிட்டோம்)வேதநாயகத்தை அழிக்கிறார்...



இதிலென்ன புதுசா இருக்கு என்கிறீர்களா... இந்தக் கேள்வி விஜய் அண்ட் கோவுக்கு போக வேண்டியது. எனவே படத்தில் கலைஞர்களின் பங்களிப்பைப் பார்க்கலாம். கஷ்டப்பட்டு நடிக்க விஜய்க்கு இதில் ஒன்றுமில்லை. காமெடி என்ற பெயரில் ஏதோ செய்கிறார். சத்தியமாக சிரிப்பு வரவில்லை. அதுக்குதான் வடிவேலு, சந்தானம் போல நிறை இருக்கிறார்களே... இவருக்கு ஏன் இந்த வேலை என்று தெரியவில்லை.



கவுண்டரை காப்பியடித்தார் சந்தானம். இப்போது சந்தானத்தை காப்பியடிக்கிறார் இந்தப் படத்தில் விஜய்யுடன் ஒட்டிக் கொண்டே வரும் ஸ்ரீநாத். சகிக்கலை!


படத்தில் அட பரவாயில்லையே என்று சொல்ல வைப்பவர் ஸ்ரீஹரி என்ற தெலுங்கு பார்ட்டி. இவர்தான் தேவராஜ் எனும் நல்ல போலீசாக வருகிறார். ஆனால் கொடுமை என்னவெனில், இதே கேரக்டரை நாம் தரணியின் தில் படத்தில் பார்த்து விட்டோம் (இயக்குநர் தரணியின் உதவியாளர்தான் வேட்டைக்காரன் இயக்குநர் பாபு சிவன்!). அனுஷ்கா அம்சமாக இருக்கிறார். அவரிடமிருந்து நமது ரசிகர்கள் எதிர்ப்பார்ப்பது நிச்சயம் நடிப்பை அல்ல என்று நன்றாகத் தெரிந்து கொண்டு, தனது அழகால் அசரடித்து விட்டுப் போகிறார்.



முதல் பாதியில் காட்சிகள் பழசாக இருந்தாலும் உட்கார்ந்து பார்க்க முடிகிறது. இரண்டாம் பாதியில் ரொம்ப்பக் கஷ்டம்! கோபிநாத்தின் ஒளிப்பதிவில் பெரிய சாகஸங்கள் எதுவும் இல்லை. விஜய் ஆண்டனி... பாடல்களைக் கேட்ட பிறகு, அவரிடம் 'ஏன் இந்த கொல வெறி' என்றுதான் கேட்கத் தோன்றுகிறது. அப்படி ஒரு அதிவேகம்.



நல்ல ஸ்கிரிப்ட் என்றால், ஏற்கெனவே ஹிட்டான படங்களின் சீன்களை உருவி புதுசாக உருவாக்குவதுதான் என யாரோ தவறாக சொல்லிவைத்திருக்கிறார்கள் போல, இயக்குநர் பாபு சிவனிடம்.


படத்தில் விஜய் ஆண்டனியின் பாடலில் நிக்காம ஓடு ஓடு ஓடு என்று ஒரு வரி அடிக்கடி வருகிறது. அனேகமாக படத்தைப் பார்த்து விட்டு வரும் ரசிகர்கள் இந்த வரியை தங்கள் நண்பர்களிடம் சொல்லக் கூடும்!!



டிஸ்கி: சத்தியமா படம் பார்க்கவில்லை. அவ்வளவு தைரியமும் இல்லை.


விமர்சனம் நன்றி: தட்ஸ்தமிழ்.காம்.