Wednesday, February 24, 2010
தண்டோரா மணிஜிக்கு வாழ்த்துகள்
தண்டோரா மணிஜியின் Cheers குறும்படம் பற்றி பலர் அறிந்திருப்பீர்கள். பார்க்காதவர்களுக்காக லிங்க் இங்கே. வேறு லிங்க் கிடைக்கவில்லை ஆனால் மிகுந்த நேரமெடுக்கிறது. பின்னூட்டத்தில் திட்ட கூடாது ஆமா சொல்லிபுட்டேன்.
Cheers பல குறும்பட போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகளையும் வென்றுள்ளது.சென்ற ஆண்டு தழிழ்ஸ்டுடியோ நடத்திய போட்டியிலும் பரிசை பெற்றது.
சில நாட்கள் முன் திருவாரூர் அரிமா சங்கமும் கிழக்கு வாசல் சிற்றிதழும் இணைந்து நடத்திய குறும்படம் போட்டியிலும் வென்று முதல் பரிசை தட்டி சென்றுள்ளது. மணிஜிக்கு அனைத்து பதிவர்கள் சார்பில் வாழ்த்துகள்.
அந்த பரிசை பெறவும் நண்பர்களை சந்திக்கவும் அண்ணன் மணிஜியும் அன்பு நண்பன் அகநாழிகை வாசுதேவனும் இன்று இரவு திருச்சியில் தங்குகிறார்கள். நானும் செல்வதாக தான் இருந்தேன். ஆனால் வேலைப்பளு காரணமாக இயலாதது வருத்தமே.
வாசுவையும் மணிஜி அவர்களையும் திருச்சி/ தஞ்சாவூர் முகாமில் சந்திக்க விரும்பும் நபர்கள், மணிஜியின் அர்த்தமில்லாத கதைகளுக்கு அர்த்தம் கேட்கலாம். அவரும் கொஞ்சம் பேசுவார்.
நிகழ்ச்சி விபரம்
குறும்பட போட்டி பரிசு வழங்கும் விழா
அமைப்பு: திருவாரூர் அரிமா சங்கம் + கிழக்குவாசல் சிற்றிதழ்
இடம்: திருச்சி அருண் ஹோட்டல் (மத்திய பேருந்து நிலையம் அருகில்)
நாள்: 26/2/2010 (வெள்ளி கிழமை)
நேரம்: காலை 10.00 மணி
அலைபேசி: மணிஜி ( 9340089989)
அகநாழிகை வாசுதேவன் (9994541010)
வாருங்கள். வாழ்த்துங்கள்.
டிஸ்கி: மைத்ரி தொடர்பான இடுகைக்கு ஆதரவும் நிதி திரட்டுவதில் உதவியும் அளித்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் அருமை சக பதிவர்களுக்கும் மிக்க நன்றி.
Sunday, February 7, 2010
மைத்ரி
நம் நாட்டில் ஏறக்குறைய 3 கோடி மக்கள் மனவளர்ச்சி குன்றியோர் என்று சொல்லப்படுகிறது. ஆனால் இவர்களுள் ஐந்து சதவிகிதத்தினர்தான் தேவையான கல்வி, பயிற்ச்சி மற்றும் வசதிகள் பெற்றிருப்பதாகவும் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.
பயன் வேண்டுவோருக்கும் பயன் பெறுவோருக்கும் இடையே உள்ள இவ்வளவு பெரிய இடைவெளியை சிறிதேனும் குறைக்கும் நோக்கத்துடன் மனவள்ர்ச்சி குன்றியோரின் பெற்றோர்களால் 1994ல் சென்னையில் துவங்கப்பட்ட சேவை நிறுவனம் தான் “மைத்ரி”
மூன்றே குழந்தைகளுடன் துவங்கப்பட்ட மையம் இன்று 300 குழந்தைகளை பயிற்றுவிக்கும் நிறுவனமாக வளர்ந்து நிற்கிறது. சென்னையில் பெரம்பூர், தாம்பரம், மேற்கு மாம்பலம், கொளத்தூர், கே.கே. நகர், உள்ளகரம் ஆகிய 6 இடங்களில் 70க்கும் மேற்பட்ட ஆசிரியர்களுடனும் திறன் ஊக்க வல்லுநர்களுடனும் {Occupational & Physico Therapists} பணி புரிகிறார்கள்.
மனவள்ர்ச்சி குன்றியிருந்தாலும் இவர்களிடம் உள்ள சில திறமைகளை கண்டெடுத்து, வளர்த்து அவர்கள் தங்களுக்கும் பிறர்க்கும் பயனுள்ள வாழ்க்கை வாழ வழிகாட்டும் மைத்ரி, நலன் விரும்பும் பெற்றொரும், நல்மனமுள்ள பல்ரின் ஆதரவோடு தற்போது வளர்ந்து வருகிறது.
வளர்ச்சியடைந்த அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் அரசு பள்ளிகளிலேயே இம்மாதிரி சிறப்புக் குழந்தைகளின் கல்விக்கும் இடம் ஒதுக்கி உதவுகிறார்கள். நம் நாட்டில் இது போன்ற சமூக நிறுவனங்களால் மட்டுமே செய்ய இயலுகிறது. இதற்கு தேவையான உதவிகளுக்கும் சமூகத்திடம்தான் பெற்று செயல்படவும் முடிகிறது.
இலாப நோக்கில்லாமல் அன்பளிப்புகளால் மட்டுமே நடக்கும் நிறுவனம் என்பதை கடந்த சில மாதங்களாக நானும் இணைந்து பணியாற்றுவதால் நன்கறிவேன். இந்நிறுவனத்தின் கூட்டங்களில் கலந்து கொண்டு என்னால் இயன்ற சிறு உதவிகளையும் செய்து வருகிறேன். அதனால் வலைப்பூவிலும் அதிகம் நேரம் ஒதுக்க முடியவில்லை.
இன்னும் பல பள்ளிகளை தொடங்கவும் இருக்கும் பள்ளிகளை மேம்படுத்தவும் இவர்கள் ஒரு இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளார்கள்.
சென்னை நேரு உள்விளையாட்டஙகில் (பிப் - 28 ஞாயிறு மாலை 6.05 pm) நடைபெற இருக்கும் இக்கலை நிகழ்ச்சிக்கு டிக்கெட் வாங்குவதன் மூலம் நீங்களும் ஒரு சிறு பங்களிப்பை செய்ய முடியும்.
ஆன்லைனில் வாங்க இங்கே கிளிக்கவும்.
நிதியுதவி செய்ய விரும்பும் வெளியூர் / வெளிநாடு நண்பர்கள் இங்கே செலுத்தலாம்.
இன்றைய சமுதாய ஓட்டத்தில் இது போன்ற பணிகளில் நம்மால் முழு நேரமும் ஈடுபட முடியுமாதென்பது ஒப்பு கொள்ள வேண்டியதே எனினும் இதை முழுமூச்சுடன் முனையும் இவர்களுக்கு தோள் கொடுக்கவும் இயன்ற உதவியை செய்யவும் வாருங்கள் என சக பதிவர்கள், நண்பர்கள் அனைவரையும் அன்புடனும் உரிமையுடனும் வேண்டுகிறேன்.
Labels:
Bloggers,
Help the Needy,
Maithree,
Special Children
Subscribe to:
Posts (Atom)