Thursday, December 23, 2010
மன்மதன் அம்பு - திரை விமர்சனம்.
நிஷா (அம்புஜம்) பிரபல நடிகை. அவரை மாதவன் (மதனகோபால்) என்கிற பணக்கார வாலிபர் காதலிக்கிறார். நடிகையானதால் மதனுக்கு சந்தேகம். காதல் ஒரிடத்தில் ஊடலாக நிஷா பாரீஸ் பயணம். நிஷாவை வேவு பார்க்க ரிடையர்டு மேஜர் மன்னார் (கமல்) பாரிஸ் செல்கிறார்.
நிஷா தனது டென்ஷனை குறைக்கவும் கவலையை மறக்கவும் பாரீஸில் ஒரு சொகுசு கப்பல் பயணம். கதை அங்கேயே ஆரம்பித்து உட்கார்ந்து, நகர்ந்து ஓடி களைத்து மறுபடியும் ஓடி சுபத்தில் முடிகிறது.
பிரும்மாண்ட கப்பலில் உடன் பயணிக்கும் சங்கீதா அவருடன் இரண்டு சுட்டிகள், ஒரு மலையாள தம்பதியினர் என்று குறைந்த பாத்திரங்கள் அவர்களையே சுற்றி சுற்றி வருவதால் முதல் பாதி கொஞ்சம் சோர்வு. இடைவேளைக்கு பிறகு ஆங்காங்கே பளிச் சிரிப்புகள், வசன வெடிகள், இன்டலெக்சுவல் டயலாக்குகள் என்று கமல் தானே முயன்று அடித்திருக்கிறார்.
மிகையில்லாத மாதவன் நடிப்பு, சங்கீதாவின் துள்ளலான வசனங்கள் ப்ள்ஸ். ஆனால் டீமில் கிரேஸி மோகன் இல்லாதிருப்பது பெரிய மைனஸ்.
ஒளிப்பதிவு மனுஷ்நந்தன். {எழுத்தாளர் ஞானி அவர்களின் மகன்} அருமையான ஒளிப்பதிவு. கொடைக்கானல் அழகையும் பாரீஸின் தெருக்களையும் கப்பலின் மிரும்மாண்டத்தையும் அழகாக காட்டுகிறார். பல ஷாட்டுகள் கண்களை கவருகின்றன.
இசை தேவிஸ்ரீ பிரசாத். ஒரு பாட்டுடன் அந்த BGM மட்டுமே எனக்கு பிடித்திருந்தது.
வெட்டு குத்து, கார் சேஸிங், பரட்டை தலை, அழுக்கு லுங்கி (கிராமத்து படத்துக்கு அது ரொம்ப முக்கியம்) என்று வித்தியாசமான படமில்லை.
மிகப்பெரிய எதிர்பார்ப்பு, ஒவர் பில்ட் அப், மூளைச்சலவை விளம்பரம் இல்லாத ஒரு ரொமான்டிக் காமெடி படம் என்று சொல்லலாம். ஆனால் அம்பின் வேகத்தை கூட்டியிருந்தால் இலக்கை அடைந்திருக்கும்.
Tuesday, December 7, 2010
சிக்கு புக்கு - தமிழ் சினிமா
"தி கிளாசிக்" கொரிய படத்திலிருந்து கொஞ்சம் சுட்டு “சிக்குபுக்கு” வை உருவாக்கியிருக்கிறார்கள். அப்பாவின் நிறைவேறாத காதல் மகனுக்கு நிறைவேறியதா என்பதை அரத பழசான டைரியின் பிளாஷ்பேக் துணையோடு கதையை நகர்த்த எப்படியோ பாடுபட்டிருக்கிறார் இயக்குநர்..
1985 காரைக்குடி, 2010 லண்டன்னு மாறி மாறி காட்சியமைப்புகள். இரண்டிலும் ஆர்யாவேதான். (கைவச்ச சட்டை போட்டு கிராப் வச்சா டபுள் ஆக்ஷனாம்!!! நம்புங்கப்பா) லண்டனில் பிற்ந்து வளர்ந்த ஜீனியர் ஆர்யா ஜப்தி செய்யப்போற தன் அப்பாவின் சொத்தான சொந்த வீட்டை மீட்டெடுக்க காரைக்குடிக்கும் சொந்த வேலையா ஷ்ரேயா மதுரைக்கும் லண்டனிலிருந்து ஒரே விமானத்தில் வருகிறார்கள். பெங்களுர் (பெங்களூரூன்னு சொல்லணுமா? சரி ரைட்டு ) விமான நிலையத்தில் விமான ஊழியர்கள் ஸ்டிரைக்கால் ஊர் போய் செல்ல முடியவில்லை. இருவரும் கணவன் மனைவியாக வேற யாருக்காகவோ பதியப்பட்ட டிக்கெட்டில் பயணிக்கிறார்கள். இடையில் டிக்கெட் செக்கிங்.. கெட் அவுட்.. அப்புறம் லாரி, கார், சைக்கிள் என்று பயணத்தை தொடருகிறார்கள். பயணம் முடிவதற்குள் காதலிப்பார்கள் என்று மூணாம் கிளாஸ் படிக்கும் என் தம்பி மகளுக்கே புரிந்து விட்டது. உஙகளுக்கு புரியாதா..? ஆனால் அந்த காதல் நிறைவேறியதா என்பதே மீதிக்கதை. நடுநடுவே பல நாடுகளில் டூயட் வேறு. தமிழ் படமாச்சே சத்தியமா லாஜிக்கெல்லாம் பார்க்க கூடாது.
சரி கதைக்கு வருவோம்.
1985 கதை:
ஆர்யாவின் தாத்தா ஜாதி காரணமாக காதலுக்கு தடை விதிக்கிறார். ஆனால் ஆர்யா காதலியை ஸ்டேஷனுக்கு வரசொல்லி விட்டு காத்திருக்கிறார். ஆனால் காதலி வரவில்லை. போலிஸ் டிரைனிங் போகிறார். டிரெனிங்கில் ஒரு நண்பன். அவன் வேறுயாருமல்ல. ஆர்யாவின் காதலியின் மாமன் மகன். அவளை பத்து வய்திலிருந்தே காதலிக்கிறானாம். (பத்து வயசிலியே காதலிக்க சொல்லி கொடுத்துங்க!!!!!!! ) அவன் தற்கொலைக்கு முயற்சிக்க (ஆமாம். காதல் இல்லாட்டி தற்கொலைதானே தீர்வு - உபயம் தினத்தந்தி செய்தியா :( :( முடியலை) நண்பனுக்காக காதலை விட்டு கொடுக்கிறார் சீனியர் ஆர்யா.
ரவிச்சந்திரன் (சீனியர் ஆர்யாவின் தாத்தா) சுகுமாரி, பட்டாபி, பாண்டு, மனோபாலா இவர்கள் எல்லாம் பிளாஷ்பேக் கதையில் வந்து போகிறார்கள். 1985 கதையானாலும் சந்தானம் லேட்டஸ்ட் ஸ்டைலில் காமெடி பண்ண முயற்சித்திருக்கிறார். Again No Logic Plz.. அதுவும் எடுபடவில்லை.
2010 கதை: மேலே சொன்னதே போதும். இது கூட ஜீன்ஸ் போட்ட ஆர்யா, ஷர்ட் போட்ட ஷ்ரேயான்னு சொல்றதை தவிர வேற எதுவுமில்லை.
புதுமுக நடிகையாம் பிரீத்திகாவை விட ஒரே ஒரு டிரெயின் சீனில் வந்து போகும் “சன் டிவி” அம்முவே தேவலாம். மருந்து கூட உணர்வுகள் காட்டாமல் நடித்திருக்கிறார். வெள்ளை தோல் மட்டுமே நடிகையின் இலக்கணம்ன்னு தமிழ் பட இயக்குநர்கள் ஏன் தான் முடிவு பண்றாங்கன்னு இத்தனை சினிமா பார்த்த எனக்கு தான் இன்னும் புரியவே மாட்டேங்கிறது.
சரியான திரைக்கதையும் நல்ல காமெடி டிராக்கும் இருந்திருந்தால் கலகலப்பான குடும்ப படமாக இருந்திருக்கும் ஆனால் உயிரோட்டமில்லாத ஹீரோயின்கள் நடிப்பு, டிராவல் இல்லாத திரைக்கதை, ஒட்டாத இசை என்று பட்டியல் நீளுகிறது. ஒளிப்பதிவாளர் ஆர்.பி. குருதேவ் மட்டுமே தன் பணியை சிறப்பாக செய்திருக்கிறார்.
சிக்கு புக்கு - Sorry to say பஞ்சரான வண்டி
Saturday, September 11, 2010
பாஸ் (எ) பாஸ்கரன்
கோவில் நகரமான கும்பகோணத்தில் ஆர்யா, அவருடை ய அம்மா, அண்ணன், தங்கையுடன் வாழ்ந்து வருகிறார். ஆர்யாவின் அண்ணன் சரவணன் கால்நடை மருத்துவர்.
ஆர்யாவின் அண்ணனுக்கும் விஜயலட்சுமிக்கும் திருமணம் முடிவாகிறது. விஜயலட்சுமியின் தங்கைதான் நயன்தாரா என்று ஆர்யாவுக்கு தெரிய வர, சந்தோஷத்தில் குதிக்கிறார்.
நயன்தாராவை அடிக்கடி சந்தித்து பேசுகிறார். கனவு சீனில் பாட்டு பாடுகிறார். ஒரு சமயத்தில் அவரிடம் திருமணம் பற்றி பேசுகிறார். அதற்கு நயன்தாரா, என் அக்காவிடம் அதைப் பற்றி பேசு என்கிறார். ஆரியா அண்ணியான விஜயலட்சுமியிடம் நயன்தாரா மீதுள்ள காதலை பற்றி சொல்ல, விஜயலட்சுமி கோபமாகி, இது போன்று படிப்பை முடிக்காத வேலை வெட்டி இல்லாத ஒரு பையனுக்கு உன் தங்கையை திருமணம் செய்து கொடுப்பாயா.? என்று கேள்வி கேட்க வீட்டை விட்டு வெளியேறுகிறார்.வாழ்க்கையில் ஜெயித்து தன் காதலியை கைப்பிடிக்கிறாரா என்பதே மீதிக்கதை.!!!!
பாஸ் (எ) பாஸ்கரனாக,வரும் ஆர்யா வீட்டிலும் வெட்டி பையனாக பேர் எடுக்கும் கதாபாத்திரத்தில் கனக்கச்சிதமாக பொருந்தி நடித்திருக்கிறார். அவருடைய டைமிங் ரியாக்ஷன்ஸ் அருமையாக அமைந்திருக்கு... கைதட்டலை அள்ளுகிறார். அவர் கூலிங் கிளாஸ் மாட்டுவதும், கழட்டுவதும் என தன்னுடைய ஒவ்வொரு மேனரிசத்திலும் கதையின் நகைச்சுவை பாதிப்பு இருப்பதால். நல்ல முத்திரையான நடிப்பை கொடுத்திருக்கிறார் ஆர்யா. நான் கடவுள், மதராஸ பட்டிணம் என்று வித்தியாசமான கதைகளங்களில் நடிப்பில் மிளிர்ந்த ஆர்யா காமெடியிலும் கலக்குகிறார்.
நடிப்பிற்கு அவ்வளவாக வாய்ப்பு இல்லாவிட்டாலும் நயன்தாராவும் தன்னுடைய கதாபாத்திரத்தை ஒரளவுக்கு செய்திருக்கிறார்.அம்மணிக்கு தமிழில் இது கடைசி படம் என்று கோடம்பாகத்தில் பேச்சு.. Good decision...
ஆரியாவிடம் மாட்டிக்கொண்டு படாத பாடு படும் சந்தானத்தின் காமெடியில் தியேட்டரில் சிரிப்பு மழை. அவரின் டைமிங் சென்ஸ்க்கு ஒவ்வொரு முறையும் கைதட்டலால் தியேட்டர் அதிர்கிறது. படம் முழுக்க வரும் அவர் படத்தின் மிகப்பெரிய பலம் என்று அடித்து சொல்லலாம். தமிழில் சில நடிகர்கள் காமெடியன்களை படம் முழுக்க வருவதை விரும்புவார்களா தெரியவில்லை..? ஆரியா விட்டு கொடுத்து இருக்கிறார். Nice..
ஆர்யாவின் அண்ணன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சுப்பு (பஞ்சு அருணாசலத்தின் மகன்) நகைச்சுவையில் மிளிர்கிறார். அவருடைய எதார்த்த நடிப்புக்கு நல்ல ரெஸ்பான்ஸ். அவரது மனைவியாக விஜயலட்சுமி அழகாகவும் இருக்கிறார். அருமையாகவும் நடிக்கிறார். வட்டிக்கு விடும் நான் கடவுள் இராஜேந்திரன் இதில் காமெடியிலும் ஜொலிக்கிறார்.
கெளரவ கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் மனதில் நின்று விடுகிறார் ஜீவா. நயன்தாரா தந்தையாக வரும் சித்ரா லட்சுமணன், ஆர்யா தாயாக வரும் லஷ்மி ராமகிருஷ்ணன் என படத்தில் நடித்திருக்கும் அனைவரது கதாபாத்திரமும் இயல்பு. அனைவரும் தங்கள் கதாபாத்திரத்தை உணர்ந்து நிறைவாக செய்திருக்கின்றனர்.
அனைத்து பாடல்களையும் நா.முத்துகுமார் எழுதியிருந்தாலும் யுவன் சங்கர் ராஜா இசையில் யார் இந்த பெண்தான்… என்ற பாடல் மட்டும் சுமாராக இருக்கிறது. மற்ற பாடல்கள் மனதில் நிற்கவில்லை. பல இடங்களில் பழைய படத்தின இசையை காட்சிக்கு பொருத்தமாக தந்திருப்பது நல்ல ஐடியா.. பாடல்களை விட இதைதான் தியேட்டரில் ரசிகர்கள் மிகவும் ரசிக்கிறார்கள்..
கும்பகோணத்தை ஒரு முறை சுற்றி வந்த திருப்தியை சக்தி சரவணனின் ஒளிப்பதிவு உணர்த்துகிறது. ஆனால் ஒவ்வொரு பாடல் காட்சியிலும் ரசிக்க வைக்கின்ற பேக்ட்ராப் கலரில் பிரேம்களில் அசத்தல் என்று கண்டிப்பாக சொல்லியாக வேண்டும்..
குறைகளாக எனக்கு தெரிந்தது.. கதையில் எந்த லாஜிக்கும் சுத்தமாக இல்லை. ஆனால் அதையெல்லாம இனிமேல் தமிழ் சினிமாவில் எதிர்பார்க்க முடியுமா தெரியவில்லை.?? யுவனின் இசை ஈர்ப்பு இல்லை.. சில மிகைப்படுத்தபட்ட காட்சிகள் குறிப்பாக தேவையேயில்லாத ஷகிலா ...
ஒவ்வொரு இயக்குநருக்கும் இரண்டாவது படம் தான் ஆசிட் டெஸ்ட்...முழுக்க முழுக்க சிரிக்க வைக்க எடுத்திருக்கும் முயற்சியில் ஜெயித்திருக்கிறார் இயக்குநர் ராஜேஷ்.வாழ்த்துகள்..
ஆறடி தடித்த முரட்டு வில்லன்களோ, டாடா சுமோ சேஸிங்களோ,.வீச்சறுவா, வெட்டு குத்து காட்சிகளோ, இல்லாது உருவாகியிருப்பதால் குடும்பத்துடன் பார்க்கத் தகுதியான திரைப்படம்! ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’
Santhanam Rocks !!!! நண்பேன்டா...
Wednesday, June 23, 2010
செம்மொழி மாநாட்டு ஊர்வல காட்சிகள்..
வலையுலக நண்பர்களுக்காக....
புகைப்படங்களை பெரிதாக காண படத்தின் மேல் சொடுக்கவும்...
புகைப்படங்களின் அணிவகுப்பு...
தொடரும்...
செம்மொழி மாநாடு துவக்க விழா புகைப்படங்கள்..
கோவையிலிருந்து சற்று நேரம் முன் கிடைத்தது.
வலையுலக நண்பர்களுக்காக..
(கிடைக்கும் வரை அப்டேட் தொடரும்)
Friday, June 18, 2010
நறுமணப்பொருள்களின் அரசன்
பன்ச் டயலாக் இல்லாத விஜய் படமா..? அது போல மிளகில்லாத ரசமா? அதிலும் மிளகு ரசம் என்ற சிறப்பு ரசமும் கூட இருக்கிறதே..! அப்படி, மருத்துவ குணம் வாய்ந்த மிளகை தினமும் நாம் பயன்படுத்துகிறோம். உடல் ஆரோக்கியத்துக்கும், சீரணத்துக்கும் மிளகு பெரிதும் உதவுகிறது.அது மட்டுமல்ல. சிவப்பு மிளகாய் மெக்சிகோ நாட்டிலிருந்து நமக்கு இறக்குமதியான பொருள். இதன் பிறப்பிடம் அமெரிக்கா.
மிளகு..! நம் அன்றாட சமையலில் பயன்படுத்தும் ஒரு முக்கியமான பொருள். நம் சமையலில் மட்டுமல்ல,இன்று உலகம் முழுவதும், காரத்துக்கும், மணத்துக்கும், சுவைக்கும் மிளகு பயன்படுத்தப் படுகின்றது.மிளகின் தாயகம் கேரளத்துமண்தான். அதானல்தான் மிளகிற்கு மலையாளி, குறுமிளகு மற்றும் கோளகம் என்ற வேறு பெயர்களும் உண்டு. ஆனால் அதிகம் மிளகைப் பயன்படுத்துவது அமெரிக்கர்கள்தான்.
நறுமணப் பொருள் வாணிகத்தில், மிகவும் தொன்மையான பொருட்களில் ஒன்றுதான்மிளகு .நறுமணப் பொருள்களின் ராஜா மிளகு தான் சதையால் மூடப்பட்ட கனி என்ற பொருள் கொண்ட சமஸ்கிருத வார்த்தையிலிருந்து உருவானதுதான். இதன் சரித்திரம் மிக நீண்டது. சுமார் 5 ,000ஆண்டுகளுக்கு முன்பு ,இஞ்சியுடன் சேர்த்து, மிளகும் தெற்கு ஆசியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்டதாம்.கருப்பு குறுமிளகு ஏற்றுமதி செய்யும் துறைமுகங்களும், வணிக சந்தைகளும் தென்மேற்கு இந்தியாவிலேதான் இருந்தன. கருப்பு மிளகு வாணிக சந்தையில், மதிப்பு மிக்க பொருளாக, கறுப்புத் தங்கமாகவே கருதப்பட்டது.மிளகு, மக்கள் பயன்படுத்தும் பணமாகவும், பண்டமாற்றுப் பொருளாகவும், உபயோகப்பட்டது.
உலகிலுள்ள நறுமணப் பொருள்களின் வாணிபத்தில், மிளகின் ஆதிக்கம் மட்டுமே, 25%ஆக உள்ளது. மேலும் இது மிகக் குறைந்த நாடுகளிலேயே விளைவிக்கப் படுகிறது இன்று உலகில் அதிகமாக மிளகு இறக்குமதி செய்யும் நாடு அமெரிக்கா. அதே போல உலகின் அதிகமாக மிளகை ஏற்றுமதி செய்யும் நாடு இந்தியாதான். இன்று புதிதாக மிளகு ஏற்றுமதியில் களத்தில் இறங்கியிருக்கும் நாடு பிரேசில்.இந்தியாவின் புராதன இதிகாசமான மகாபாரதத்தில், மிளகு போட்டு கறி விருந்து சமைத்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. சுஸ்ருத சம்ஹிதா என்ற மருத்துவ ஆவணத்தில் , மிளகு மதிப்பு வாய்ந்த பாரம்பரிய மருந்தாக கூறப்படுகிறது.
ரோமானியர்கள் காரம் மிகுந்த மிளகை மிகவும் மதித்தனர். ஐரோப்பாவில் பேரரசர் மார்கஸ் அரேலியஸ், அலேசாண்டிரியாவுக்கு வந்த வெள்ளை மிளகுக்கு, வணிக வரி விதித்தாராம். ஆனால் கருப்பு மிளகை விதிவிலக்காக விட்டுவிட்டாராம். ரோமப்பேரரசின் வீழ்ச்சிக்குப் பின்னரும், ஐரோப்பியர்கள் மிளகை மிகவும் மரியாதையுடன் நடத்தினர். மிளகு சமையலில் முக்கிய வாசனை மற்றும் காரத்திற்கு மட்டும் பயன்படாமல், உணவை பதப்படுத்தவும் இது பயன்பட்டது.மிளகு விலை உயர்ந்த பொருளாக கருதப்பட்டதால் இதனை பணமாகவும், வரதட்சிணைப் பொருளாகவும் வரி கொடுக்கவும் , வாடகை கொடுக்கவும்,பயன் படுத்தினர்.இன்றும் கூட இது மிளகு வாடகை என்று சொல்லப்படுகிறது . . மிளகு, பூத்து காய்த்து படர்ந்து வளரும் கொடிவகையை சார்ந்தது. மிளகு பூக்கும் கொடி வகையில் பெப்பர்சினியே குடும்பத்தைச் சேர்ந்தது. இதன் பழத்துக்காகவே இது வளர்க்கப் படுகிறது.நறுமணப் பொருளாகவும், உணவுக்கு சுவையூட்டும் பொருளாகவும், பயன்படுகிறது பொதுவாக 4 மீ உயர மரத்திலோ, குச்சியிலோ கம்பிலோ படர்ந்து, ஆதாரத்துடன் வளரும்.
இதன் இலைகள் வெற்றிலை இலைபோல 5 -10 செ. மீ நீளத்தில் இருக்கும் இதன் பழத்தில் ஒரேஒரு விதை தான் இருக்கும். பழம் சிவப்பாகவும், உலர்ந்தபின் கருப்பாகவும் காணப்படும்மிளகு அதன் பொடி போன்றவை பொதுவாக கருப்பாகவே இருக்கும். இதனை கருப்பு மிளகு என்கின்றனர்.
இதைத தவிர, பச்சைமிளகு, வெள்ளை மிளகு, சிவப்பு மிளகு, பழுப்பு மிளகு போன்றவையும் உண்டு. பச்சை மற்றும் சிவப்பு மிளகு போன்றவை வேறு செடியிலிருந்து கிடைக்கின்றன இவை கடல் மட்டத்திலிருந்து 3000 அடி உயரத்திற்கு மேல் வளராது.
நிலநடுக்கோட்டிலி
பண்டை காலங்களில் எகிப்து மற்றும் ரோம் நாட்டில் பயன்படுத்தப்பட்ட மிளகு, அரேபியர் மூலமாக ரகசிய வழிகளில் வந்து சேர்ந்தது.பின்னர் கிரேக்கர்களும், ரோமானியர்களும் இதன் மூல இடத்தை அறிந்தனர். இந்த மதிப்பு மிக்க நறுமணப் பொருளுக்கான போட்டி என்பது,கிறிஸ்டோபர் கொலம்பஸ் புதிய உலகம் தேடி,அதனை கண்டுபிடிக்கும் வரை.சுமார் 2000 ஆண்டுகள் வரை தொடர்ந்தது. அங்கு மிளகு இல்லை என்றதும் கதை சப்பென்று ஆகிவிட்டது.
மத்திய காலங்களில் போர்த்துகீசும், பின்னர் டச்சும் மிளகின் வாணிபத்தை ஏகபோக முதலாளியாகவே நடத்தினர் அப்போது மிளகு எடையிலும் கூட, தங்கத்தை விட மதிப்பு வாய்ந்ததாக கருதப் பட்டது. மேலும் அதுவே உடனடி பணமாகவும் பயன்பட்டது.ஒரு மிளகைக் கூட பணமாக பயன்படுத்தினர் என்றால், அதற்கு இருந்த மதிப்பை, மரியாதையை கற்பனை செய்து பாருங்கள்.அதிலுள்ள முக்கியமான அம்சம் என்றவென்றால், மிகை வாணிபத்தின் போது கையாளும் தொழிலாளிகள், அதனை கையாளும்போது, பை (Pocket) வைத்த சட்டையோ, கையை மடித்து அழகு படுத்துவதோ கூடாது . ஏன் தெரியுமா.அங்கே, மிளகை மறைத்து வைத்து, கொண்டுபோய் விடுவார்கள் என்ற பயம்தான். ஆச்சரியாமாக இருக்கிறாதா. உண்மைதான்.
இது தவிர பண்டைய காலங்களில் கெட்டுப்போன மாமிசத்தை மறைக்கவும் , நல்ல சுவையை நாக்குக்கு தரவும், மிளகை கேட்டு வாங்கி பயன்படுத்தினர். மத்திய காலங்களில் வசதி படைத்த பணக்காரர்கள் மட்டுமே பயன் படுத்தும் பொருளாகவே மிளகு இருந்தது. உலகிலேயே அமெரிக்கர்கள்தான் அதிக அளவு மிளகு உண்பவர்கள்.அதில் கார நெடியின் காரணி, அதன் நடுவிலுள்ள காப்சாய்சின் என்ற வேதிப் பொருளே. அது இதய நோய்களை கட்டுப் படுத்துகிறது: இரத்தக் குழாய்களை தூண்டிவிடுகிறது.
கொழுப்பையும், மிகை இரத்த அழுத்தத்தையும் குறைக்கிறது.இரத்தக் குழாய்கள் கடினமாவதையும், இரத்தத்தை கட்டியையும் குறைக்கிறது.உடலின் செல்களை பாதுகாத்து, வயதாவதைக் குறைக்கிறது. சீரணத்தை கட்டுப் படுத்துகிறது. வாயுத் தொல்லை மற்றும் வயிற்று பொருமலை குறைக்கிறது.
காவிரியில் இருந்து தண்ணீர் தர மறுக்கிறார்கள் ஒரு மாநிலத்தவர். முல்லைப்பெரியாறில் இருந்து தண்ணீர் தர மறுக்கிறார்கள் இன்னொரு மாநிலத்தவர். ஒரே தேசத்துக்குள் இப்படி ஒரு கருத்து வேறுபாடு. ஆனால், கர்நாடகாவில் இருந்து வந்த ஒரு பெயர் தெரியாத இளைஞன், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் மலையாள மன்னரிடம் உதவி பெற்று, தமிழ்நாட்டில் கால்வாய் தோண்டிக் கொடுத்திருக்கிறான். இதனால் இந்தக் கால்வாய்க்கே "கன்னடியன் கால்வாய்' என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.
மழை இல்லாத காலங்களில், இங்குள்ள விநாயகரது உடலில் மிளகை அரைத்து தேய்த்து, அபிஷேகம் செய்து, அந்த புனிதநீர் கால்வாய்க்குள் விழும்படி செய்தால் மழை வரும் என்று நம்பிக்கை.
அது தவிர 1916ம் ஆண்டில் வெளியிடப்பட்ட அரசு கெஜட்டின், 367 வது பக்கத்தில் மிளகு பிள்ளையார் வழிபாடு பற்றி சொல்லப்பட்டுள்ளது.
பத்து மிளகு இருந்தால் பகைவர் வீட்டிலும் உண்ணலாம் என்று சொல்வடை உண்டு. அட்லீஸ்ட் இல்லதரசிகள் நாலு மிளகு போட்டு ரசம் வச்சா போதும் நம்ம வீட்டிலேயே பயமில்லாமல் உண்ணலாம்.
நன்றி:
தகவல்கள் : பேராசிரியர் மோகனா & தினமலர்.
படங்கள் : கூகிளாண்டவர்.
Saturday, May 29, 2010
வருங்கால இயக்குநர்களே !
இயக்குநர் ஆக வேண்டுமா..? என்ற பதிவின் தொடர்ச்சி..
ராஜா ராணி
செய்வதறியாது மிரண்டு போகிறான் சதீஷ். காதலி கீதா தன்னிடம் ஒரு லட்சம் தேறும் என்கிறாள். நகைகளை விற்றால் இன்னும் ஒன்றரை லட்சம் சேர்க்க முடியும் என்கிறாள். ஆனால் அதெல்லாம் இந்த கடனை அடைக்க போதாது ஒரே வழிதான் இருக்கு என்கிறான். வாழ்வோ சாவோ மீண்டும் ஒரே முறை சூதாட்டம், ஜெயித்தால் மொத்த கடனையும் அடைத்து விட்டு இனிமேல் அதை நினைத்து கூட பார்க்காமல் இனிமையாய் வாழ்வை தொடங்கலாம் என்று யோசனை கூறுகிறான். வேண்டுமானால் நீயும் கூட வா .. என் அருகே அமர்ந்து கொள். என்கிறான். கதை சூடு பிடிக்கிறது. கிளப்பில் ராஜா ராணி ஆட்டமும் ஆரம்பாகிறது.
முதல் ஆட்டத்தில் கணிசமான தொகையை இழக்கிறான். இன்னும் இருப்பது சில ஆயிரங்கள் மட்டுமே. காட்சிகளுடன் இசையும் அதிர வைக்கிறது. கடைசி ஆட்டத்தில் விட்ட பணத்தை அனைத்தையும் ஜெயித்து அளவில்லா சந்தோஷத்துடன் இருவரும் காரில் கிளம்புகின்றனர்.
இதற்கிடையே நாயனுக்கு சில நாட்களாக சூதாட்ட ஆர்வத்தால் மன நிம்மதியை இழந்து மருத்துவரை ஆலோசிக்கிறான். அவரும் இது கட்டு படுத்த படவேண்டும் இல்லாவிட்டால் Pathological gambling என்ற மனநோயாக மாற வாய்புண்டு என்கிறார். சூதாட்டத்தில் பணம் இரண்டாம் பட்சம் என்றும் எதிர்பாராமல் கிடைக்கும் வெற்றி அதில் வரும் த்ரில் அதனால் ஏற்படும் மகிழ்ச்சியே போதையாக மாறி என்ன வேண்டுமானாலும் செய்ய தூண்டும் என்று கூறுவதை நினைவு படுத்தி கொண்டே காரை ஓட்டி வருகிறான்.
வரும் வழியில் வெயிலின் மிகுதியால் தர்பூசணி சாப்பிட காரை நிறுத்துகின்றனர். காதலி தனக்கு இரண்டு பீஸ் வேண்டும் என்கிறாள். இறங்கி போய் தர்பூசணியுடன் வந்து பார்த்தால் காதலி கீதாவை காரில் காணவில்லை. சற்று பயந்து போகிறான். தெருவோரம் வீலை சுழற்றி விட்டு காசு போட்டு சூதாட்டம நடக்க அங்கு பத்து ரூபாய் பெட்டிங் கட்டி கமான் கமான் என்று பதட்டத்தோடு நின்று இருப்பதை பார்த்து அதிர்ச்சியில் உறைகிறான் சதீஷ். இத்துடன் ஒரு முழூநீள சஸ்பென்ஸ் திரைப்படத்தை பார்த்ததை போன்ற உணர்வுடன் பனிரெண்டு நிமிட குறும்படம் நிறைவடைகிறது.
பத்து பதினைந்து நிமிடங்களுக்குள் உருவாக்கபட்ட இந்தப் குறும்படங்கள் அனைத்தும் ஆழமாகவும் அழகாகவும் சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் சிலர் எந்த பயிற்சியும் இல்லாமல் வெறும் கருத்தை வைத்து கொண்டு டைரக்டராக வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள்.
பாரதிராஜா காலம் போல கிழக்கே போகும் ரயிலை பிடித்து சென்னை வந்து சேர்ந்து சேவல் பண்ணைகளில் தங்குவது டீ காபி சிகரெட் வாங்கி கொடுத்து உதவி இயக்குனராவது என்பதெல்லாம் அந்த காலம்.
இப்போது நாம் மூன்றாவது தலைமுறையில் இருக்கிறோம். எனவே, சினிமாவுக்கு வர ஆசைப்படுபவர்கள் அதற்கென்று இருக்கும் கல்லூரிகளில் சேருங்கள். தொழில் நுட்பங்களை தெரிந்து கொள்ளுங்கள். அதன் பிறகு கருத்தை சொல்லுங்கள். அதற்கு இத்தகைய குறும்படங்கள் உங்களுக்கு நல்லதொரு விசிட்டிங் கார்டாக அமையும். வருங்கால இயக்குநர்களே ! கிளம்பும் முன் ஒரு நிமிடம் யோசியுங்கள்.
டிஸ்கி: சூரிய கதிர் மே 16-31ல் வெளியான கட்டுரை.